Monday, 15 February 2016

புதுப்பட்டினம் ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு ₹5 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட விடுதியை திறந்துவைத்தார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா :: கல்லூரி மாணவர்கள் நன்றி.


புதுப்பட்டினம் அடுத்த ராஜாமடத்தில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்திற்காக ₹5 கோடி செலவில் தமிழக அரசால் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விடுதிக்கட்டிடத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து திறந்துவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்படி புதுப்பட்டினம் அடுத்த ராஜாமடம் அண்ணா பல்கலைகழகத்திற்க்கு ஆண்கள் தங்கும் விடுதி வசதிக்காக கட்டிடம் கட்டுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ₹ 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த
கட்டிட பணிகள் விரைவாக நடைபெற்று சகல வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டதையடுத்து, மாண்புமிகு  தமிழக
முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால்
காணொளி முலம் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியானது  சுமார் 700 பேர் தங்கும் வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 36 அறைகள்  கொண்ட இக்கட்டிடம்  சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக  சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவின் போது கல்லூரி வளாகத்தில் ராஜாமடம் அண்ணாபல்கலைக்கழக கல்லூரி முதல்வர் திரு.இளங்கோவன்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இது போன்ற பிரம்மாண்ட கட்டிடத்தை ₹5 கோடி செலவில் கட்டிக்கொடுத்த தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மனமார்நத நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment