Thursday, 11 February 2016

பேராவூரணி வட்டத்தில் ஆண்டிக்காட்டில் வரும் 13ஆம் தேதி பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் :: பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தல்.


வருகிற 13ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோக  திட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின்
குறைகளைக்  கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய மாதந்தோறும் அனைத்து வட்டங்களில் குறிப்பிட்ட
கிராமத்தில் குறைத்தீர் கூட்டம் நடைபெறும்.
அதன்படி, இம்மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ம் தேதி பட்டுக்கோட்டையில்
கொள்ளுக்காடு, பேராவூரணியில் ஆணைக்காடு ஆகிய கிராமங்களில் நடைபெறஉள்ளது.
பொதுமக்கள் அந்தந்த நியாய  விலைக்கடைகளுக்கு சென்று தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம்  மனுக்களை அளித்து தீர்வு கண்டு பயன்பெறுமாறு கலெக்டர்
அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment