சென்னை: கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (தொழில்நுட்பம்) காலியாக உள்ள காவலர் பணியிடம், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடம் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 01.01.2016 அன்று 30 வயதிற்கு உட்பட்ட தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் 35 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவர்கள் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில்நுட்பம்), கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் அறிவித்துள்ளார்

No comments:
Post a Comment