Sunday, 7 February 2016

எண்ணெய் குளியலால் ஏற்படும் மகத்துவங்கள்:



எண்ணெய் குளியலால் ஏற்படும் மகத்துவங்கள்:
இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.
எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:
இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.
ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும்.
தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும், உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். சுவையின்மை நீங்கும்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:
நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.
காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்; அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி. நல்லெண்ணெய் தேவைப்படும்.
எண்ணெய் குளியலன்று செய்ய வேண்டியவை:
நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.
வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
எண்ணெய் குளியலன்று செய்யக்கூடாதவை:
அதிக வெயிலில் அலையக்கூடாது. குளிர்ந்த உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுறவு கொள்ளக் கூடாது. நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

55–வது முறையாக சம்பவம் சென்னை விமான நிலையத்தில் தடுப்பு கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு



ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 55–வது முறையாக தடுப்பு கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்படுகின்றன.விமான நிலையத்தில் இதுவரை 14 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 19 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 15 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து விழுந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளன. ஒரு முறை விளக்கு கண்ணாடி நொறுங்கி உள்ளது.இதுவரை 54 முறை நடைபெற்று உள்ள இந்த சம்பவங்களில் 11 பேர் காயம் அடைந்து உள்ளனர்.தடுப்பு கண்ணாடி உடைந்தது
இந்தநிலையில் 55–வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் மேலாளர் அறை அருகே உள்ள 8 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுவர் தடுப்பு கண்ணாடி ஒன்று திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.அப்போது அங்கிருந்த ஊழியர்களும், பாதுகாப்பு வீரர்களும் அலறியடித்து ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதிகாரிகள் விசாரணை
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். பின்னர் தரையில் நொறுங்கி கிடந்த கண்ணாடி கழிவுகளை அகற்றினார்கள். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘விமான நிலையத்தில் பழுதடைந்த கண்ணாடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கண்ணாடியை அகற்ற இருந்தோம். ஆனால் அதற்குள் கண்ணாடியே உடைந்து விழுந்து விட்டது. பழுதடைந்த கண்ணாடிகள் விரைவில் மாற்றப்படும்’’ என்றனர்.

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களே உஷார்...



புதுடில்லி : வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் ஏமாற்று பேர்வழிகள் மோசடி செய்யது வருகிறார்கள். வாட்ஸ்அப் மூலம் தனிநபர் பற்றிய வங்கி கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உங்கள் நண்பரில் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க்(link)" அனுப்பப்படும். அதில் சென்றால் உங்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்படும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. போலி இணையதளங்களை பயன்படுத்தி, உங்கள் போனில் மார்வேர் மூலம் ஊடுருவி, உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து மோசடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலக அளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பா நாடுகள் மற்றும் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் அதிகம். உலகம் முழுவதிலும் சுமார் ஒரு பில்லியன் நபர்கள் வாட்ஸ்அப்.,ஐ பயன்படுத்துகிறார்கள். அதிகரித்து வரும் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களை குறிவைத்தே இந்த மோசடி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சில சமயம், பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களிடம் பேசியும் அவர்களை கவர்ந்து, அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றனவாம். அல்லது, ஏதாவது ஒரு தகவலை அனுப்பி, அதனை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சலுகை கிடைக்கும் எனவும் பயன்பாட்களை சூழ்ச்சி வலையில் சிக்கி வைக்கிறார்களாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் வங்கி கணக்கு அப்ளிகேஷன்களை இயக்கும் வசதி வந்து விட்டதால், வாட்ஸ்அப் மோசடி நபர்கள் எளிதில் உங்கள் மொபைல் போனிற்குள் ஊடுரு, உங்கள் வங்கி கணக்கில் மோசடி செய்யும் வாய்ப்பு அதிகம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களே உஷார்...
http://newshunt.com/share/49366347
via NewsHunt.com

அரசியலுக்கு வாங்க... ரஜினி, சகாயத்திற்கு பழ.கருப்பையா அழைப்பு

Sunday, 07 Feb, 5.57 pm

திருப்பூர்: ரஜினி, சகாயம் போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.
துறைமுகம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ. கருப்பையா. இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார் கருப்பையா.
அதனைத் தொடர்ந்து சிலர் பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ரஜினி போனில் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற 13-வது புத்தக திருவிழா கருத்தரங்கில் கலந்து கொண்டு 'அரசியல் அறம்' என்ற தலைப்பில் பேசினார் பழ.கருப்பையா.
அப்போது அவர், 'இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக ஆக்கியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாக உருவாக்கி இருக்கிறோம்.
இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகி விட்டது. அரசியலுக்கு வரும் போது, பதவியை பிடிக்க வேண்டும் என்று தான் வருகிறார்கள்.
லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாக மாறி விட்டது. காமராஜர் இறந்த போதே மரணம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்.
நேர்மையாக நடக்கிற ஒருவன் ஒதுக்கப்படுகிறான். சட்டத்தை சார்ந்து இருக்கும் அரசியல் தோற்கும்.
ஆனால் அறத்தை தாங்கி நிற்கும் அரசியல் தோற்காது. அரசியல்வாதிகள் எதையும் மக்களுக்கு உணர்த்துவதில்லை. இதனால் மக்கள் அரசியலை வெறுக்கிறார்கள். தமிழுக்கு ஒலிக்கற்பு இருப்பதால் மொழி சிதையாமல் இருக்கிறது' என இவ்வாறு பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பழ.கருப்பையாவிடம், 'நீங்கள் எந்த கட்சியில் சேர இருக்கிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'தேர்தலுக்கு முன்பு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் யோசித்து முடிவு செய்வேன். என் வீடு மீது நடந்த தாக்குதலில் குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டனர்' என்றார்.
மேலும், 'ரஜினிகாந்த், சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை. மையப்படுத்தி ஊழல் செய்வது என்ற முறையை கண்டறிந்தது அ.தி.மு.க. தான்' என இவ்வாறு பழ.கருப்பையா தெரிவித்தார்.
Source: tamil.oneindia.com

Saturday, 6 February 2016

பாஜகவுடன் இணையத் தயார் ! -முஸ்லிம் லீக் அதிரடி



திமுக வின் சிறும்பான்மை கட்சியாக செயல்படும் முஸ்லிம் லீக் கட்சி தற்போது பாஜகவுடன் இணையத் தயார் என்று கூறியுள்ளது.
முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மைதின் பேட்டி அளிக்கையில் பாஜக தனது கொள்கையை மாற்றிக்கொண்டால் பாஜகவுடன் கூட்டுவைக்கத் தயார் என்று கூறியிருப்பது முஸ்லிம்களிடம் மிகப்பெரும் கேவலத்தையும் கோப அலையையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் லீக்குக்கு இருக்கும் மிச்ச சொச்ச மானத்தையும் இந்த தேர்தலில் அடமானம் வைத்துவிடுவார்களோ என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில் கருனாநிதியின் கைப்பிள்ளை கட்டதுரையாக காதர்மைய்தின் செயல்படுகிறார்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி




நீர்வழி மற்றும் ஆகாய வழிகள் மூலம் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வரும் கடலோரக் காவல் படையின் (இந்தியன் கோஸ்ட் கார்டு) யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், டெலி கம்யூனிகேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உடல் தகுதி: உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் குறைந்த பட்சம் 5 செ.மீட்டர் மார்பளவும், உயரத்திற்கு நிகரான எடையும் கொண்டிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும், கேட்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப்பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை நடைபெறும். நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மிகவும் அவசரம் இரத்தம் தேவை ;


திருநெல்வேலி மாவட்டம் (களக்காடு) நவ்பல் ரிஸ்வான் என்கிற சகோதரருக்கு  பைக்கில் சென்றபோது விபத்து ஏர்பட்டது இதனால் அந்த சகேதரனின் நுரைஇரல் மிகவும் பாதிக்கப்பட்டது.இதனால்  அவருக்கு அவசரமாக அறுவைச் சிகிச்சை நடைப்பெறுகிறது
இரத்தம் மிக அவசரமாக தேவைப்படுகிறது.
இரத்தம் பிரிவு
- A1negative or Anegative  (3UNIT)
இரத்தம் கிடைக்காததால் அவருடைய  சிகிச்சை தள்ளி போகிறது. எனவே இந்த செய்தியை ஒவ்வொரு ஊரிலும் தெரியப்படுத்தி அந்த சகோதரர் உயிர் காக்க உதவிடுவோம் குமரிமாவட்டம் நாகர்கோவில் செய்சேகரன் மருத்துவயில் அட்மிட் செயப்பட்டுள்ளது
தயவு செய்து இந்த பதிவை அதிகமாக ஷேர் செய்து உயிர் காக்க உதவுங்கள்
தொடர்புக்கு 📞contact:
9095204041,
9751975949,
9751965182.
S.ஷபீக்
தேதி: 06/02/2016, சனிக்கிழமை🔴🔴🔴🔴

Friday, 5 February 2016

சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாத்தின் 4 அதிரடி முடிவு


எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 தவ்ஹீத் ஜமாத் யாரை ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்துவிட்டதாக  ஊடகங்கள் பரப்புகின்றனர்.
ஆனால் முஸ்லிம்கள் எத்தகைய தேர்தல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் பின்வருமாறு தெள்ளத் தளிவான முடிவை அறிவித்துள்ளது.
முடிவு 1:
பாஜகவுக்கு ஒரு போதும் வாக்களிக்கக்கூடாது.
முடிவு:2 
பாஜக உடன் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது.
முடிவு :3
NOTO வைப் பயன்படுத்தி வோட்டுக்களை வீனாக்கிவிடக்கூடாது.
முடிவு : 4
மீதமுள்ளக் கட்சிகளில் யாருக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்கள் வாக்களிக்கலாம்.குறிப்பிட்டு இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கருத்து தெரிவிக்காது.
இதுவே தவ்ஹீத் ஜ்மாஅத்தின் தேர்தல் நிலைப்பாடாகும்.

Thursday, 4 February 2016

ஹிந்து நாளிதழ் ஆசிரியர் சமஸ் தவ்ஹீத் ஜமாத்தை சாடுகிறாரா


இவரை புரிந்து கொள்ள வேண்டும்
தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை பிடிக்காதவர்கள் தான் இந்த அமைப்பை வஹ்ஹாபிகள் என்று அழைக்கின்றனர்.
இப்படி யாரெல்லாம் அழைக்கிறார்களோ அவர்களுடன் நல் உறவு வைத்திருக்கும் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் சமஸ் நடுநிலையாக இல்லாமல் அவர்கள் சார்பாகவே இந்த கட்டுரை எழுதியிருக்கிறார் என்று மக்கள் சந்தேக கேள்வியை எழுப்புகின்றனர்.
இது சம்பந்தமாக ஒரு இஸ்லாமிய தோழன்
இவையெல்லாம் சமஸுக்குத் தெரியுமா? என்ற ஒரு ஆக்கத்தை தருகிறார் கேளுங்கள்,
இவையெல்லாம் சமஸுக்குத் தெரியுமா?
“இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால்  வஹ்ஹாபி யிசத்துக்கு என்ன பெயர்?”
எனும் தலைப்பில் பத்திரிகையாளர் சமஸ்  ஒரு நீ………………..ண்ட கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கு
“சமஸ் இசம்” என்று வேண்டுமானால் பெயர் வைத்துக்கொள்ளலாம். “வஹ்ஹாபியிசம் இன்று தர்காவை இடித்துத் தள்ளும் எனில், நாளை சிவனையும் பெருமாளையும் முனியாண்டியையும் சுடலைமாடனையும் எப்படி விட்டுவைக்கும்?” என்று இந்துத்துவவாதிகள் கேட்பது போலவே ஒரு கேள்வியை இவராகவே எழுப்பிக்கொண்டு, அதற்கு ஏற்றாற்போலவே அவ்வளவு நீண்ட கட்டுரையையும் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தர்கா கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாய் விளங்கும் சுன்னத் வல் ஜமாஅத்தைச்  சேர்ந்தவர்களால் பொதுவாக “வஹ்ஹாபி அமைப்புகள்” என்றுஅழைக்கப்படும் இயக்கங்கள் எவை எவை என்று  தோழர் சமஸுக்குத் தெரியுமா?
அந்த இயக்கங்கள் “வஹ்ஹாபி அமைப்புகள்” என்று அழைக்கப்படுவதிலுள்ள அரசியல் என்னவென்றாவது சமஸுக்குத் தெரியுமா? சேறும் சகதியும் அப்பிக்கிடந்த கோவிலை முஸ்லிம் இளைஞர்கள் தூய்மை செய்த படம் ஒன்று இந்து நாளிதழில் வெளியாகி, அது இந்தியா முழுக்க பிரபலம் ஆகியது. கோவிலைத் தூய்மை செய்த அந்த முஸ்லிம் இளைஞர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சமஸுக்குத் தெரியுமா? தர்கா கலாச்சாரத்தைப் பாதுகாப்பவர்களால்  அந்த இளைஞர்களின் அமைப்புக்கு என்ன முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாவது சமஸுக்குத் தெரியுமா?
வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வெறும் தாயத்து கட்டுவதையும் மந்திரிப்பதையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களா? அவர்கள் வேறு எதையெல்லாம் எதிர்க்கிறார்கள் என்றாவது சமஸுக்குத் தெரியுமா?
சமஸ் அவர்கள் இதற்கு முந்தைய ஒரு கட்டுரையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் கப்பார் கானை தங்களின் வழிகாட்டியாக இந்திய முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தார். இப்போது எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், இன்னொரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.
முஸ்லிம்கள் பின்பற்ற விரும்புவது இஸ்லாமிய வாழ்வியலைத்தானே தவிர சமஸ்இசத்தை அல்ல.
இப்படியா ஆக்கம் முடிவுற்றது.
இப்படிபட்ட கட்டுரை எழுத முற்படும்போதே இதை பற்றிய முழு விபரங்களை ஹிந்து ஆசிரியர் தெரிந்து தெளிவு பெற்றிருந்தால் விமர்சனம் வர வாய்ப்பு இருக்காது என்பது நடுநிலையாளர்கள் கருத்து

Wednesday, 3 February 2016

ஹிந்துத்துவமும் வஹ்ஹாபிஸமும் ஒன்றா ? தமிழ் ஹிந்து நாளேட்டுக்கு பதிலடி


தமிழ் ஹிந்து நாளேட்டில் இன்று 04.02.16ல் வெளியான செய்தியின் சுருக்கம்
ஹிந்துத்துவா அடிப்படைவாதம் என்றால் வஹ்ஹாபிஸாத்தின் பெயர் என்ன?
திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”
என்ற கேள்விகளுடன்
வஹாபிஸ அச்சுறுத்தல்
இஸ்லாமிய ஆட்சி
இந்திய முஸ்லிம்களின் படையெடுப்பு
பிளவுகள் குடும்பத்தில் தொடங்குகின்றன
புனிதம் எனும் கொடுஞ்சொல்!
ஐ.எஸ் பயங்கரவாதம் என இறுதியாக
ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!
என்று கட்டுரையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
பொதுவாக பத்திரிக்கை என்றாலே பரபரப்பு இருக்கத்தானே செய்யும்,அதுவும் முஸ்லிம்கள் ஒன்று கூடிவிட்டால் பதட்டமும் கலந்தே இருக்கும்.அதன் வெளிப்பாடுதான் தமிழ் இந்து பத்திர்க்கையின் பொய்ப் படலம்.
எப்படியும் முஸ்லிம்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டார்கள் .இனி கொஞ்ச காலத்தில் தர்கா காணாமல் போகிவிடும்.பிறகு கோவில் காணாமல் போகிவிடும் பிறகு கிருத்துவ தேவாலயங்கள் காணாமல் போகிவிடும் என்று இந்துத்துவாவை கலக்கத்தில் ஆள்த்தி எதிர்வரும் தேர்தலில் பாஜகவை முன்னுக்குக் கொண்டு வர அழகான யுத்தியே இந்த கட்டுரை என்பதை இக்கட்டுரைக்கு பதிலளிக்கும் முன் ஒரு தகவலை பதிவு செய்கிறோம்.
கட்டுரைக்கு மறுப்பு
இந்துத்துவாவை அடிப்படைவாதம் என்றால் வஹ்ஹாபிஸத்தின் பெயர் என்ன எனக் கேள்விக்கணையுடன் துவங்கியுள்ளதாக அதற்கான விளக்கம்.
இந்துத்துவா அடிப்படைவாதமே அல்ல ! அது பயங்கரவாதம் !!
இந்து மதங்களில் பூர்வீகமாக சொல்லப்பட்ட ஒரு கடவுள் கொள்கையை கைவிட்ட பல கடவுள் கொள்கையைப் புகுத்தியவர்களே இந்துத்துவாவினர்.அந்தப் பல கடவுள் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் எனவும் கூறுகிறது இந்துத்துவா.
ஏகத்துவம் அடிப்படைவாதமே! ஆனால் பயங்கரவாதமல்ல?
அபதுல் வஹ்ஹாப் உடைய மகன் முஹம்மத் என்பவர் புதுப்பித்த ஓர் இறைப் பிரச்சாரத்திற்கே வஹ்ஹாபிஸம் என எதிரிகள் பெயர் சூட்டினர். இதுவே தவறு. ஓர் இறையை புதுப்பித்தவர் முஹம்மத் தான் அவர் தந்தை வஹ்ஹாப் அல்ல.முஹம்மதிஸம் என பெயரிட ஜீரனிக்காத சமாதி வணங்கிகள் முஹம்மதின் கொள்கையை அவரது தந்தைக்கு சேர்த்து விட்டனர்.அது வேறு கதை.
வஹ்ஹாபிஸம் என்று சொல்லப்பட்டு வரும் ஏகத்துவப் பிரச்சாரம் எந்த வகையில் பயங்கரவாதத்தைக் கையிலெடுத்துள்ளது என்பதை ஹிந்து நாளேடு சொல்லத்தவறியதும் சொல்லமுடியாமல் திணறியதையும் பார்க்கிறோம்.
வஹ்ஹாபிகள் இடித்த கோயில்
ஹிந்து நாளேடு கூற்றுப்படி தவ்ஹீத் வஹ்ஹாபிகள்
எத்தனை தர்காவை தகர்த்தார்கள் ?
எத்தனை கோயிலை இடித்தார்கள் ?
எத்தனை தேவாலயைத்தை உடைத்தார்கள் ?
பதில் சொல்வார்களா?
தர்கா , கோவில், சர்ச் இவற்றை உடைக்க நினைப்பவர்கள்
இரத்ததானம் செய்வதில் முதலிடம் பிடிக்க வேண்டிய அவசியமில்லையே!
மனிதநேயப்பணிகளில் மூழ்க வேண்டிய அவசியமில்லையே !
வெள்ள நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லையே !
எதற்குச் செய்தார்கள் ? ஆட்சிக்காகவா ? இறைவனின் அருளுக்காகவா ?
ஆட்சியைப் பிடிக்கவா ?
ஓர் இறை , ஓர் மறை என்று சொல்லி கடைசியில் ஓர் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற கூற்றுப்படி
தவ்ஹீத் காரர்கள் தேர்தலில் நின்றார்களா?
ஓட்டு கேட்டார்களா?
ஓட்டும் , சீட்டும் , நோட்டும் வேண்டாம் என்று கூறியதில் ஆட்சியை எப்படி பிடிக்கப்போகிறார்கள் என ஹிந்து நாளே கூறினால் சிறப்பாக இருக்கும்.
தமிழகத்தின் ISIS தவ்ஹீதா ?
இவர்கள் ஐஎஸ் ஐஎஸ் என்று விஷமத்தை கக்கிய நாளேடே
இந்த தவ்ஹீத் காரர்கள்
தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தது?
ஐஎஸ்.ஐஎஸை திட்டியது ?
அல்காயிதாவுக்கு எதிராகவும் தாலிபானுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தது எதற்கு என பதில் சொல்.
வஹ்ஹாபிகள் தீவிரவாதிகளே !
இந்து நாளேட்டுக்கு ஒன்றை சொல்கிறோம்.
உங்கள் ஆசை கோவில்கள் ,தேவாலயங்கள் , தர்காக்கள் ஆகியவை இடிக்கப்படக்கூடாது.கவலைப்படாதீர்கள் தமிழகத்தில் தவ்ஹீத் வஹ்ஹாபிகள் இருக்கும் காலம் வரை கோவில்களோ , சர்சுகளோ , தர்காக்களோ இடிக்கப்படாது.மாராக கோவில் இருக்கும் அங்கே வழிபாடு செய்ய ஆள் இருக்காது. தேவாலையம் இருக்கும் அதில் ஜெபித்த ஆள் இருக்காது. தர்காக்கள் இருக்கும் அதில் பூஜிக்க ஆள் இருக்காது.மதுக் கடைகள் இருக்கு அங்கே குடிக்க ஆள் வராது.சினிமாதியேட்டர்கள் இருக்கும் அங்கே படம் பார்க்க ஆள் இருக்காது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
வஹ்ஹாபிகள் மனமாற்றம் செய்வதிலும் மனிதநேயத்தை போதிப்பதிலும் மிகப்பெரிய தீவிரவாதிகளே.
ஹிந்துத்துவாவின் பயங்கரவாதம் !
 இந்து மதங்களில் பூர்வீகமாக சொல்லப்பட்ட ஒரு கடவுள் கொள்கையை கைவிட்ட பல கடவுள் கொள்கையைப் புகுத்தியவர்களே இந்துத்துவாவினர்.அந்தப் பல கடவுள் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும் இல்லையேல் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் எனவும் கூறுகிறது இந்துத்துவா.இதன் விளைவு என்ன என்பதை கிழ்க்கண்ட வீடியோக்கள் மூலம் தெரிவிக்கிறோம்.
 காந்தியைக் கொன்ற ஹிந்துத்துவக் கொள்கை.







முஸ்லிம் மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல்! – பெங்களூருவில் கொடூரம்


பெங்களூரு: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவியை நிர்வாணமாக்கி பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்ற சபானா தாஜ் என்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்த நபர், சூடான் நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற மாணவர் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தான்சானியாவைச் சேர்ந்த இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வரும் மாணவி உட்பட சிலர், விபத்து ஏற்பட்ட இடம் வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், காரை மடக்கி அவர்களை தாக்கியுள்ளது. இதில், காரில் இருந்த மாணவி ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மாணவியை கடுமையாக தாக்கியதோடு, நிர்வாணமாக்கி போலீசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அப்போது, கிழிந்த ஆடையுடன் தன் மானத்தை காப்பாறிக்கொள்ள அந்த மாணவி, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.
அதேநேரத்தில், விபத்து ஏற்படுத்திய காரையும், தான்சானியா மாணவியின் காரையும் அந்த கும்பல் தீ வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய நபருக்கும், அந்த மாணவிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் மெகாரிக் கூறும்போது, ”மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது” என்றார்.
இதனிடையே, தான்சானியா அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தச் சம்பவம் மிகவும் வெட்ககேடானது. இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்டு, தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:


1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்

4. சுருண்டு படுக்காதீர்கள்।

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்

பித்தம் தணிக்கும் பழைய சோறு!


அதிக உஷ்ண உடம்புக்காரர்கள் வெயிலை சமாளிப்பது கஷ்டம். இரவு எட்டு மணிக்கு மண் பானையில் கைகுத்தல் அரிசியை சாதமாக வடித்து ஆறியவுடன் சாதம் முழ்கும் அளவுக்கு தண்ணிரை ஊற்றி வைக்கலாம் காலையில் வெங்காயம்,  மோருடன் சேர்த்துச் சாப்பிட உடல் உஷ்ணம் குறையும் வயிற்று புண்,  அல்சர் சீக்கிரம் குணமாகும். ( இதில் எக்கசக்கமான லாக்டோபாசில்லஸ் எனும் நலன் தரும்  பாக்டீரியாக்கள் உருவாகின்றன )

மல்லிபட்டினம் தாஜுதீன் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்கு !



தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஏ.கே.தாஜூத்தீன் (வயது 53). விசைப்படகு உரிமையாளரான இவர் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளராக உள்ளார். மேலும் மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க கௌரவ தலைவராகவும் இருந்து வருகிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வாக்கில் கடைவீதியில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது மோட்டார் பைக்குகளில் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த மர்ம கும்பல் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த தாஜூத்தீனை வழிமறித்து திடீரென தாக்கியதில் உடலில் காயம் ஏற்பட்டது. தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக தாஜூத்தீன் தாக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறை விசாரித்து வருகிறது. 

வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடந்திருந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்


சென்னை: தமாகா தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தொண்டரணி மாநில தலைவர் அயோத்தி தலைமை வகித்தார். மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், ஞானசேகரன், கார்வேந்தன், விடியல் சேகர், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தின் போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் தமாகா சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். வரும் பிப்ரவரி மாதம் 10 முதல் 12ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம்.
பொது தொகுதிக்கு ₹5ஆயிரம், தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு ₹2,500 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், அதிகாரபூர்வமான கூட்டணி குறித்த அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிடுவேன். தமாகா இந்த தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில், அந்த சின்னத்தை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் ஊழல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், கத்திப்பாரா ஜனார்தனன், ஆர்.எஸ்.முத்து, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், முனவர் பாட்ஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.எம்.பிரபாகரன், சைதை மனோகரன், அனுராதா அபி, ரவிராஜ், தொண்டரணி நிர்வாகிகள் மாரி வசந்தகுமார், செந்தில் குமார், மோகன் சவுத்ரி, மயிலை பீட்டர் செல்வகுமார், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீடு, வாகன கடன் இஎம்ஐ குறையாது:வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.



மும்பை: கடன் வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து, அதற்கேற்ப அடுத்த நிதிக்கொள்கை அறிக்கையில் வட்டி குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகியகால கடன் வட்டி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இறுதியாக நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. இதில் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால ரெப்போ வட்டி 6.
75 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல் சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவே உள்ளது.நிதிக்கொள்கை அறிக்கைைய வெளியிட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், ''வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மத்திய அரசு இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை பொறுத்து அடுத்த நிதிக்கொள்கை அறிக்கையில் வட்டி விகிதம் முடிவு செய்யப்படும். 2017ம் ஆண்டுக்குள் பண வீக்கம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல், பொருளாதார வளர்ச்சி 2016 நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், 2017 நிதியாண்டில் 7.6 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரபி பருவ அறுவடை மெதுவாக முன்னேற்றம் அடையும்'' என்றார்.ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் வட்டி விகிதத்தை 1.25 சதவீதம் குறைத்தது. தற்போது ரெப்போ வட்டி 6.75 சதவீதமாக இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கான வியூகங்களை மத்திய அரசு வகுத்துவரும் நிலையில், இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என தொழில்துறையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பாராத நேரத்தில் வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி தற்போது எந்த மாற்றமும் செய்யாததால் தொழில்துறையினர் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இருப்பினும் மத்திய அரசு பட்ஜெட்டில் வெளியிடும் அறிவிப்புகளை பொறுத்து அடுத்ததாக ஏப்ரல் 5ம் தேதி வெளியிடும் நிதிக்கொள்கை அறிக்கையில், வரும் நிதியாண்டின் முதல் அறிக்கை என்பதால் வட்டி குறைப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்த பெண்ணின் கணவர், தங்கையை கடத்திய கும்பல்



திருவண்ணாமலை : சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ சீட் கேட்டு விருப்பமனு கொடுத்த அதிமுக நிர்வாகியின் கணவரையும், தங்கையையும் கத்தி முனையில் மர்ம கும்பம் கடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு மனு அளித்துள்ளனர்.
தனி தொகுதியான வந்தவாசி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்காக கிரின் பார்க் பள்ளியின் தாளாளர் விஜயன் என்பவரின் மனைவி அன்னபூரணி என்பவர் விருப்பமனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த 31ம் தேதி விஜயன், தனது மனைவியின் தங்கை அனிதா உடன் பள்ளியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது 8 கேர் கொண்ட மர்மக்கும்பல், விஜயனின் காரை மறித்து கத்திமுனையில் கடத்தியது.
பல இடங்களுக்கு காரிலேயே சுற்றிய அந்த கும்பல், இருவரையும் துன்புறுத்தியதோடு விருப்பமனுவை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்த விஜயன், மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து இருவரையும் மேல்மருவத்தூர் ரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னபூரணி வந்தவாசி போலீசில் புகார் அளித்தார். நடந்த சம்பவத்தினை போலீசில் தெரிவித்த விஜயன், என்னுடைய மனைவியின் தங்கையுடன் காரில் வந்துக்கொண்டு இருந்தேன், அப்போது, என்னுடைய காரை பின்தொடர்ந்து வந்த கொண்டு இருந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென காரை வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர், ஏரி அருகே நிறுத்தி விருப்பமனுவை திரும்ப பெறுமாறு கத்தி முனையில் மிரட்டினர். மேலும் விற்பனை செய்ய உள்ள நிலத்தின் பணத்தில் ரூ 10 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அந்த கும்பல் காருக்குள் வைத்து என்னை கத்தியால் தாக்கினர் என்றார். அவர்கள் சொன்னதை செய்வதாக கூறிய பின் கடத்தல் கும்பல் இருவரையும் காஞ்சிபுரம் மாவட்டம் ராமாபுரத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர் என்று கூறினார். புகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது வந்தவாசி அதிமுக பிரமுகர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவர்கள் கடத்தில் மிரட்டப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் 26 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்: இன்று முதல் செயல்படும்



விவசாயிகளிடமிருந்து சம்பா, தாளபடி சாகுபடிக்கான நெல்லை கொள்முதல் செய்வதற்காக திருச்சி மாவட்டத்தில் 26 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 3) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் நல்ல மழை பெய்ததால் ஆர்வத்துடன் விவசாயிகள் சம்பா சாகுபடியைச்செய்யத் தொடங்கினர். மாவட்டத்தில் டெல்டா பகுதிகளில் 34,400 ஹெக்டேரிலும், டெல்டா அல்லாத பகுதிகளில் 17,300 ஹெக்டேரிலும் என மொத்தமாக 51,700 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது சம்பா நெற்கதிரறுக்கும் பணி லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி போன்ற பகுதிகளில் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.இந்த நிலையில் விவசாயிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் 26 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதன்கிழமை (பிப்.3) தொடங்குகிறது.எந்தெந்த இடங்கள்: லால்குடி வட்டத்தில் அன்பில், கோமாக்குடி, மேட்டுப்பட்டி, பூவாளூர், திண்ணியம்,டி. கல்விக்குடி, நகர், அரியூர், நத்தமாங்குடி, காட்டூர், வெள்ளனூர், புஞ்சை சங்கேந்தி, எல். அபிஷேகபுரம், செம்பரை, திருவெறும்பூர் வட்டத்தில் மேலக்கல்கண்டார்கோட்டை, சிறிóரங்கம் வட்டத்தில் குழுமணி, மணிகண்டம், நவலூர் குட்டப்பட்டு, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் நொச்சியம் முசிறி வட்டத்தில் முசிறி, காட்டுப்புத்தூர், குணசீலம், தொட்டியம் வட்டத்தில் தொட்டியம், துறையூர் வட்டத்தில் பி. மேட்டூர், ஆலத்துடையான்பட்டி.விலை எவ்வளவு: சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஏற்கெனவே அரசு வழங்கிய ரூ. 1,450 உடன் ஊக்கத்தொகை ரூ.70 சேர்த்து ரூ. 1520-ம், பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ஏற்கெனவே வழங்கியரூ. 1410 உடன் ஊக்கத் தொகை ரூ.50 சேர்த்து ரூ. 1460 வழங்கப்படும்.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை விவசாயிகளின் விருப்பத்துக்கேற்ப ரொக்கமாகவோ அல்லது அவர்களுடைய வங்கிக் கணக்கில் இசிஎஸ் மூலம் வழங்கப்படும். எனவே விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை அளித்து பயன்பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி.

நன்றி : தினமணி 

அதிபராக, முதல் முறையாக அமெரிக்க மசூதிக்குச் செல்லும் ஒபாமா.... விருந்திலும் பங்கேற்பு

Wednesday, 03 Feb, 9.57 am

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை ஒட்டியுள்ள மசூதிக்கு இன்று அந்த நாட்டு அதிபர் ஒபாமா செல்ல இருப்பதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது பல்வேறு மசூதிகளுக்குச் சென்றுள்ளார். ஆனால், அமெரிக்காவிலுள்ள மசூதிக்கு இதுவரை சென்றதில்லை.
விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் முஸ்லிம் விரோதக் கருத்துகளை வெளியிட்டு வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா அருகே மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று வருகை தருகிறார். அங்கு முஸ்லிம்களுடன் அவர் உரையாடுகிறார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், 'தலைநகரையொட்டி அமைந்துள்ள மசூதிக்கு அதிபர் ஒபாமா புதன்கிழமை செல்கிறார். அங்கு பிரார்த்தனைக்குப் பிறகு நடைபெறும் விருந்தில் அவர் கலந்து கொள்கிறார்.
அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கவும், அனைத்து மதத்தினருக்கும் தங்களது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அமெரிக்காவில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் அவர் மசூதி செல்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் அமெரிக்காவில், அண்மைக் காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளால் மதச் சுதந்திரம் கேள்விக் குறியாகியுள்ளது. அத்தகைய சந்தேகங்களைப் போக்கும் வகையில் அதிபர் ஒபாமா மசூதிக்குச் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சீக்கிய அல்லது இந்துக் கோவிலுக்குச் செல்லும் திட்டம் ஒபாமாவிடம் இருக்கிறதா என்று தனக்குத தெரியவில்லை என்றும் எர்னஸ்ட் கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் கடந்த 2010-ம் ஆண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 2 February 2016

அதிரையில் மாட்டு வண்டி மீது லாரி மோதி விவசாயி பலி


அதிராம்பட்டினம் அருகே மலவேனிற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல் (வயது 55), சாமிகண்ணு (60). விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் வைக்கோல் போர் வாங்குவதற்காக இன்று அதுகாலை மாட்டுவண்டியை எடுத்திகொண்டு சென்றுள்ளனர்.
சாமிகண்ணு வண்டியை ஓட்டிவந்துள்ளார். பழனிவேல் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதேவழியாக அவர்களது வண்டியின் பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிவந்த மாட்டிவண்டியின் மீது வேகமாக மோதியது.
இதில் மாட்டு வண்டியின் பின்னால் அமர்ந்து வந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்டியை ஓட்டி சென்ற சாமிகண்ணு படுகாயம் அடைந்தார்.
அதேபோல் வண்டியை இழுத்து சென்ற 2 மாடுகளில் ஒருமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு மாடுக்கு கால்கள் முறிந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த சாமிகண்னை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பழனிவேலின் உடலை அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து இறந்த மாடையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காயமடைந்த மாட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து அந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

“சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதலை தடுத்து நிறுத்த தவறி விட்டார் பிரதமர் மோடி!’’

அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு அறிவிப்பு

லண்டன் ஜன் 31 இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக் குதலைத் தடுக்க முழு அதிகாரம் படைத்த மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  அதிகாரமிக்க இரண்டு மனிதஉரிமைகள் அமைப்பு கூட்டாக அறிக்கை விட் டுள்ளன.
அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு 2016-ஆம் ஆண்டிற்கான உரிமைமீறல் குற்ற அறிக் கையை லண்டனில் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது பன்னாட்டு மன்னிப்பு சபையும் தனது அறிக்கையை சமர்ப்பித்தது அப்போது பேசிய தெற்காசியாவிற்கான மனித உரிமைகள் அமைப் பின் தலைவர் மினாக்ஷி காங்குலி கூறியதாவது:
“சிறுபான்மையினர் மற்றும் ஊனமுற்றவர்கள் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள் ளன. இவர்களின் முன் னேற்றத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு நட வடிக்கையையும் எடுக்க வில்லை. அதே நேரத் தில் இவர்களுக்கு உதவும் நோக்கில் செயல் பட்டுவரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மீது பொய்யான குற் றச்சாட்டைக் கூறி தடைசெய்யும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.
மதவாதிகள் வன் முறையைத் தூண்டும் விதமாக பேசி வருகின் றனர். அதிகாரம் கொண்ட பதவியில் உள்ளவர்கள், மக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறுபான்மை மக் களுக்கு எதிரான நட வடிக்கைகளால் ஒருபிரிவினர் எப்போதும் அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கின்றனர். அங்குள்ள எங்களது உறுப்பினர்கள் அளித்த அறிக்கை மற்றும் ஊடகம், காவல்துறை குற்றப்பதிவேடுகளின் படி இந்தியாவில் நாளுக்கு நாள் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிபோவது கண்கூடாகத் தெரிகிறது,
ஆளும் பாஜக தலை வர்களே காரணம்  ஆளும் கட்சியில் சில தலைவர்கள் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் சிறுபான்மையினர் பாதுகாப்பாற்ற சூழலில் வாழும் நிலை உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், ஜம்மூ-காஷ்மீர், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் மாட்டைத் தொடர்புப் படுத்தி தொடர்ந்து இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டவிதம் குறித்து மனித உரிமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது மிகவும் கண்டிக் கத்தக்கதாகும், மக்களாட்சி நடைபெறும் நாடான இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தொண்டு நிறுவனங்களின் மீது தடை அல்லது ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் கீழ் நட வடிக்கை  எடுத்தது மிக வும் கவலைக்குரியதாக உள்ளது.
குஜராத் மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடந்த மத வன்முறையாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக் காக குரல் கொடுத்தவர்கள் மீது போலியான குற்றச் சாட்டுகளை கூறி அவர்களை நீதிமன்றங்களுக்கு அலைக் கழிப்பதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது, குஜ ராத் வன்முறைக்கு நீதி கேட்டுப் போராடிய தீஸ்தா செதல்வாட் மற்றும் ஜாவேத் ஆனந்த் போன்றோர் மீது பாஜக அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
இதே காரணத்தை பன்னாட்டு மன்னிப் புச் சபையும் கூறியுள் ளது. அரசின் அடக்கு முறைகளை தட்டிக் கேட்பவர்கள் மீது பொய் வழக்கு மற்றும் சமூகவிரோதிகளை ஏவி விட்டு மிரட்டல் தாக்குதல் போன்றவை தற்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன. மோடி தலைமையில் ஆன ஆட்சி அமைந்தவுடன் சமூக சேவை அமைப்புகளின் வங்கிக்கணக்குகளை முடக்குவதன் மூலம் உதவிவேண்டி நிற்கும் ஏழைகள் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் சுயமுன்னேற்றம் கேள்விக்குறியாகியுள்ளது, அரசியல் காரணங்களுக் காக இதுபோன்ற நட வடிக்கைகள் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கவலைக்குரிய தாகும் என்று கூறியுள்ளது.

- விடுதலை 

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதித்து எரிவாயு கொண்டுச் செல்ல கெயில் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகள் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியங்கள் உள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் வாதாட தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உடனடியாக மறு சீராய்வு மனுவினை தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கேரளாவிலிருந்து, கர்நாடகாவுக்கு எரிவாயுவை கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டின் சேலம், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட விளை நிலங்கள் வழியாக குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் முயற்சித்த போது, தமிழகம் கொந்தளித்து. விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் போராட்டங்களை தொடர்ந்து தமிழக அரசு அந்த திட்டத்திற்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து கெயில் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தடைக்கு எதிராக அனுமதி பெற்றது. பின்னர் இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை உறுதி செய்து விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எரிவாயு எடுத்துச் செல்ல கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. இதன் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆகவே, இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனுவினை தாக்கல் செய்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அல்சருக்கான சித்த மருத்துவத்தில் தீர்வுகள்:



அறிகுறிகள் :

முதல் அறிகுறி வயிற்று வலிதான். பற்றி எரிவது போன்ற கடுமையான வலி வயிற்றில் ஏற்படும்.  அடி வயிறு முதல் நெஞ்சுக்கூடு வரையிலான இடத்தில் வலி ஏற்படலாம். வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகரிக்கும். வலி தொடர்ந்து இருக்கும் என்று இல்லை, ஒரு நாள் இருக்கலாம், அடுத்து சில நாட்களுக்கோ, வாரத்துக்கோ வலி இல்லாமல் இருக்கும். பிற்கு, மீண்டும் வலி ஏற்படும்.

வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது, மலத்தில் ரத்தம் வெளியேறுவது, குமட்டல் அல்லது வாந்தி, காரணமின்றி உடல் எடை குறைவது, பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்.

அல்சருக்கான சித்த மருத்துவத்தில் தீர்வுகள்:

வால்மிளகை பொடி செய்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

அல்சர் வராமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை :

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

பயனுள்ள பத்து மருத்துவ குறிப்புகள்....


1. சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.

8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

10. இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

இந்திய தேசிய கொடியை ஏன் எரித்தேன்திலீபன் மகேந்திரன் வழிக்காட்டுதலில்



நீங்கள் தமிழன் என்றால் பகிருங்கள் இல்லையேல் எனக்கு தணடனை வாங்கிக்கொடுக்க ரோட்டுக்கு வந்து போராடுங்கள்
இந்திய முதல்சுதந்திர தினத்தில் பேசிய நேரு உலகத்தில் எந்த தேசிய இனத்தின் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டால் இந்திய ராணுவம் அங்கே நிற்க்கும் என்று கூறினாரே அதே நேரு பிரதமராக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது தமிழ் தேசிய இனத்தின் பூர்விக நிலத்தை அண்டை மாநிலத்தானுக்கு கொடுத்து அதை எதிர்த்த தமிழர்களை கொன்று நிலத்தை அன்பளிப்பாக கொடுத்தரே அதற்க்காக எரித்தேன்.
இந்தியா ஒரு கூட்டமைப்பு என்ற போதிலும் வட இந்தியாவில் சிலமாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்ற காரணத்தினால் இந்தியை ஆட்சிமொழியாக்க துடித்திர்களே அந்த அநீதிக்கு எதிராக எரித்தேன்.
இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழர்களை கொன்று போட்டார்களே அதற்க்காக எரித்தேன்.
1974ல் இந்தியா தன்னுடைய சுயநலத்துக்காக தமிழ்த்தேசிய இனத்துக்கு சொந்தமான கட்சதீவை தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி சிங்களவனுக்கு கொடுத்ததே அதற்க்காக எரித்தேன்.
1987ல் தலைவர் பிரபாகரனை அமைதி பேச்சு வார்த்தை என்று சொல்லி அவரை பின் தலையில் அடித்து கொல்ல சொன்னாரே இந்திய பிரதமர் அந்த ஈனசெயலுக்காக எரித்தேன்.
1987ல் ஈழவிடுதலைப்போரில் புலேந்திரன் குமரப்பா போன்றவர்களின் மரணத்துக்கு காரணமானவர்களுக்காக எரித்தேன் கொடியை.
1987ல் இந்தியா சொன்னா அந்த அமைதி ஒப்பந்தத்தையாவது காபாற்று என 12நாட்கள் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து உங்களால் தியாகி திலீபன் இறந்து போனானே அதற்க்காக எரித்தேன் கொடியை.
1987ல் தொடங்கி 1990வரை  அமைதிப்படை என்ற பெயரில் 20000 தமிழர்களை கொன்றும் 5000தமிழ் பெண்களை பாலியல் வல்லுனர்வு செய்ததே அதற்க்காகதான் எரித்தேன்.
ராஜிவ் காந்தி படுகொலையில் உண்மை குற்றவாளிகள் வெளியில் இருந்தபோதும் அப்பாவி தமிழர்களை சிறையிலடைத்து இன்றுவரை நீதி மறுக்கப்படுகிறதே அதற்காக எரித்தேன்.
1991ல் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழ் உறவுகளை கொடுஞ்சித்ரவதைக்களுக்கு உள்ளாக்கிய இந்தியத்துக்கு எதிராகவே கொடியை கொளுத்தினேன்.
1992ல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடி படையினரால் வாச்சாத்தியில் கற்ப்பழிப்புக்குள்ளான 50க்கும் அதிகமான பெண்களுக்கான நீதியை இன்றுவரை நீதிமன்றம் தரவில்லையே என்ற கோபத்தில் கொடியை கொளுத்தினேன்.
2006லிருந்து 2009வரை ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதங்களை கொடுத்த இந்திய ஆட்சிப்பிடத்தை எதிர்க்கவே  கொடியை எரித்தேன்.
இந்திய கொடியை தன்னுடைய படகில் ஏற்றிவிட்டு மீன் பிடிக்கசென்ற தமிழ் மீனவர்கள சிங்கள கடற்ப்படை கொல்லமட்டுமல்ல அதற்க்கு மறைமுக ஆதரவளித்த இந்தியக்கொடியை எரித்ததில் தவறில்லை.
உலகத்தால் தடை செய்யப்பட்ட ரசாயனகுண்டுகளை இலங்கையிடம் கொடுத்து தமிழர்களை கொலை செய்த இந்திய கொடியைதான் எரித்தேன்.
முத்துகுமார் தொடங்கி 19ஈகியர்கள் ஈழப்போரை நிறுத்தச்சொல்லி இன்னுயிரை ஈந்தார்களே அந்த ஈகையினை இந்திய ஈனத்தமிழர்கள் நினைத்து பார்க்கவில்லையே என்ற என்னத்தில் கொளுத்தினேன்.
உலககோப்பை மட்டை பந்தாட்டத்தில் இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்தியை அறிந்த சிங்கள கடற்ப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழகத்து மீனவர்கள் நான்குபேரை துண்டு துண்டாக வெட்டி கடலில் போட்டதே அப்போது இந்தியனை யாருடா வெட்டியது என்று யாருமே போராடவில்லையே அப்போதும் நாங்கள் தமிழர்கள்தானே போராடினோம். அதுக்காகதான் எரித்தேன்.
அது மட்டுமா?
காவிரியில் தண்ணீர் தரசொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அதை மதிக்காத கர்நாடக அரசை இந்தியா கண்டிக்கவில்லை அதுக்காகதான் எரித்தேன் .
முல்லைப்பெரியாறு அணையில் எங்களுக்கான உரிமைதான் கேட்டோம் இன்றுவரை கிடைக்கிறதா ? தீர்ப்பு சொன்னாலும் காலில் தூக்கிப்போட்டு மிதிக்கிற கேரளாவை ஒன்றும் பேசமாட்டிர்கள் ஆனால் நான் கொடியை எரித்ததுக்கு கோபப்படுவீர்கள் இதுதான் தேசப்பற்றா?
  என்னை திட்டியும் எதிர்த்தும் பதிவு போடுகிற தோழர்களே   மீத்தேனும் நீயூட்ரினோவுக்கு எதிராக தமிழக மக்கள் போராடுகிறார்களே அதற்க்காக என்றைக்காகவது போராடியிருக்கிறிர்களா மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்? நான் போராடியிருக்கிறேன்
ஆந்திராவில் 20தமிழர்களை சுட்டுகொன்றார்களே அதற்க்காக நீங்க போராடியதுண்டா ? நான் போராடியிருக்கிறேன் நான் மனசாட்சி உள்ளவன் ஆனால் நீங்க?
எனக்கு மரண தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் என்னை கொல்லும்முன் ஒரே கேள்வி ?
  தமிழர்களுக்காக நான் போராடிய போராட்டங்களும் சிறைதண்டனையும் என் மனதுக்கு சரி என்று பட்டது.   கொடியை எரித்ததும் சரி என்றுதான் சொல்கிறேன்.
எனக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறவர்களே இத்தனை ஆண்டுகளில் எத்தனை தமிழர்களின் போராட்டங்களில் போராடியிருக்கிறிர்கள் .  வெறும் தேசப்பற்று கொடியை எரித்தவனுக்கு எதிராக பொங்குவதல்ல அதை தூண்டிய இந்திய அரசியல்வாதிகளை எதிர்த்தும். யார் செத்தா எனக்கு என்ன என்று போகிறவர்களுக்கு எதிராகவும்தான் போராடவேண்டும் நீங்கள்
தமிழனுக்காக போராடி சிறை சென்று தூக்கில் தொங்கவும்  நான் தயார்?
நீங்கள்?

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்! - மோடி அரசின் அப்பட்டமான சட்ட மீறல், ஜனநாயகத்தை சாகடிக்கும் செயல் என எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவரின் ஆட்சியை அமல்படுத்தியது,மத்திய பா.ஜ.க அரசின் அப்பட்டமான சட்ட மீறல் என்றும், ஜனநாயகத்தை சாகடிக்கும் செயல் என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் சர்புதீன் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவரின் ஆட்சியை மோடி அரசாங்கம் திணித்திருப்பது இணக்கமான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தும் உறுதிமொழிக்கு எதிரானது. அருணாச்சல பிரதேசத்தில் தோன்றியுள்ள அரசியல் சாசன பிரச்சனை குறித்து, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன் அவசர அவசரமாக உள்நோக்கத்தோடு ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி நடைபெறவிடாமல் மக்களின் உரிமைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அங்கே வலது சாரி ஆர்.எஸ்.எஸ் ஆளுநரும் திணிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்துள்ளது.
மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் மரியாதை இல்லாதது துரதிஷ்டவசமானது. பதவி பசி பிடித்திருக்கும் மத்திய அரசு, ஊறிப்போன ஊழல், சமூக வெறி, தலித் எதிர்ப்பு, சிறுபான்மையினர் விரோதம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக அரசியல் சட்டத்தின் பாதுகாவலான உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசு தன்னை சட்டத்திற்கும் மேலான அமைப்பாக கருதுகிறது. அதனால் தான் நீதிபதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தேசிய நீதித்துறை நியமன கமிஷனை அமைக்க முயன்று அதில் படுதோல்வியடைந்தது.
நீதிபதிகள் நியமனத்திற்கு அருணாச்சல பிரதேசம் அரசியல் ரீதியில் முக்கியமான பிராந்தியம். அந்த மாநிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. எந்த நேரத்திலும் நாகா இனப் போராளிகளின் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அந்த மாநிலத்தின் ஸ்திர தன்மைக்கு அரசியல் ஸ்திர தன்மையின்மை ஏற்படுவது சரியானது அல்ல. ஒரு எல்லைப் பகுதி மாநிலத்தில் அரசியல் ரீதியாகவோ, சட்டம் ஒழுங்கு ரீதியாகவோ ஸ்திர தன்மை பாதிக்கப்படுவது நல்லதல்ல. இந்தியாவில் நடைபெறம் நிகழ்வுகளை சீன அரசு மிக நெருக்கமாக கண்காணிக்கிறது. இந்தியா ஒரு திறந்த புத்தகமாகவே திகழ்கிறது. ஆனால் சீனாவின் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து இந்தியா கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவில் ஆளுநர்கள் நியமனம் ஒரு கேலிக்கூத்தாகவே நடைபெற்று வருகிறது. மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனத்தில் தீவிர சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். முதன்மையாக ஆளுநராக நியமனம் செய்யப்படுபவர் அரசியல் சார்ந்தவராக இல்லாமல். ஓய்வுபெற்ற நீதிபதியாகவோ அல்லது ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். செயலாக்கம் மற்றும் செயலாக்கமின்மை ஆகியவற்றால் மத்திய அரசு அரசியல் சட்ட தவறுகளை இழைப்பதற்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்தை நிறைவேற்றுவதற்கும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைக்கிறார்; 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பிரதமர் மோடி இன்று கோவை வருகை; பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்



கோவை,
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவ கல்லூரி கட்டிடம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.மோடி இன்று கோவை வருகை
மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.இந்த விழாவில் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைப்பதற்காகவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வந்து சேரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.திறப்பு விழா
பின்னர் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் புறப்பட்டு 3.30 மணிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு பிரதமர் மோடி, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கிறார்.விழாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகிக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதி எம்.பி. பி.நாகராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.பொதுக்கூட்டம்
திறப்பு விழா முடிந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் மாலை 4.45 மணிக்கு கொடிசியா மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார்.கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பண்டாரு தத்தாத்ரேயா, அகில இந்திய பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ், அக்கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் எம்.பியான சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து மாலை 6 மணிக்கு காரில் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் 6.30 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில், 35 போலீஸ் சூப்பிரண்டுகள், 50 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் என 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் கோவை வந்து உள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் தனிப்பிரிவு (எஸ்.பி.ஜி.) ஐ.ஜி. யஷ்வந்த்குமார் ஜெத்வா தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகம், கொடிசியா மைதானம், பிரதமர் பயணம் செய்யும் சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.வெடிகுண்டு நிபுணர்கள்
கோவை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. பிரதமர் செல்லும் சாலை மற்றும் பொதுக்கூட்ட மைதானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்திலும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்தில் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு தொழில்நுட்ப அதிகாரிகள் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவு மூலமும் சோதனை நடத்தப்படுகிறது.குண்டு துளைக்காத கார்கள்
கொடிசியா மைதானத்தில் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியில் உள்ளனர்.பிரதமர் பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத 3 கார்கள் கோவைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. பொதுக்கூட்ட மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார விளக்குகள் உள்பட அனைத்து பொருட்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.பிரதமரின் வருகையையொட்டி, கோவை அவினாசி சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கோவையில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், பாரதீய ஜனதாவின் முதல் தேர்தல் பிரசார கூட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது.இந்த பொதுக்கூட்டம் பாரதீய ஜனதாவுக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று அக்கட்சியினர் கருதுகிறார்கள்.

பிரதமர் மோடிக்கு சொந்தமான கார் ஏதும் இல்லை:டெல்லியில் எந்த வங்கிகளிலும் கணக்கு இல்லை


பிரதமர் மோடிக்கு சொந்தமான கார் ஏதும் இல்லை என்றும், டெல்லியில் உள்ள எந்த வங்கிகளிலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி கடந்த 2014–ம் ஆண்டு மே 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை  பிரதமர் அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் கடந்த 30–ந் தேதி மோடியின் சொத்து குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 26, 2014 அன்று பிரதமர் பதவியை ஏற்றார். இதுவரைக்கும் அவருக்கு சொந்த காரோ விமானமோ,கப்பலோ, சொந்தமாக இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமராக இருந்தும் கூட அவர் டெல்லியில் உள்ள எந்த ஒரு வங்கிகளிலும் வங்கி கணக்க்கு வைத்திருக்கவில்லை.
இவ்வாறு பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு குஜராத்தில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், கையிருப்பாக 4,700 ரூபாய் இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமூகவலை தளங்களில் வெளியான படம்: தேசியக்கொடியை எரித்த வாலிபர் சென்னையில் கைது



ராயபுரம்,
தேசியக்கொடியை ஒருவர் எரிப்பது போன்ற படம் சமூகவலை தளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் சென்னையில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேசியக்கொடி எரிப்பு
பேஸ்புக், வாட்ஸ்–அப் போன்ற சமூகவலை தளங்களில் வாலிபர் ஒருவர் தேசியக்கொடியை தீயிட்டு எரிப்பது போன்ற படங்கள் சில நாட்களுக்கு முன்பு பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நாராயணன் புளியந்தோப்பு போலீசில், தேசியக்கொடியை எரித்து அதனை சமூகவலை தளங்களில் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார்.புகாரை பெற்று கொண்ட போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திலீபன் என்ற வாலிபர் தேசியக்கொடியை எரித்து சமூகவலை தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த வாலிபரை போலீசார் தேடிவந்தனர்.கைது
இந்நிலையில் தேசியக்கொடியை எரித்த படத்தில் உள்ள வாலிபர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு பதுங்கி இருந்த திலீபனை கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், திலீபனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, 1 February 2016

செல்போனின் முக்கிய எண்கள் [MOBILE PHONE IMPORTANT CODES]…!!!

செல்போனின் முக்கிய எண்கள்
—————————————————
[Mobile Phone Important Codes]…!!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –… தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க2945
*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices whichsupport WLAN such as N80.*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.- This also helps you increase your GPRS speed to some extent.- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset:
*#7370925538#Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345*#3925538# – used to delete the contents and code of wallet.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை… 


வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. 
இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. 
அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். 
அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். 
எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். 
ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். 
அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். 
ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். 
இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போதுசட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். 
பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். 
காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது.
  
இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’ செய்கிறது. 
விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. 
மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!

கோவையில் சட்ட ஒழுங்கை மீறிய பா.ஜா.கா எம்.பி



கோவையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக நீதிக்கட்சித் தலைவர் கோவை போலீஸில் புகார் அளித்துள்ளார்

கால்நடைகளுக்கு உணவாகும் சத்துமாவு



அங்கன்வாடிகளில் மூன்று முதல், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சத்துணவு மற்றும் மாவு உருண்டை வழங்கப்படுகிறது. வாரந்தோறும், திங்களன்று தக்காளி சாதம், முட்டை, செவ்வாய் அன்று காய்கறி கலவை சாதம், பாசிப்பயிறு அல்லது கொண்டைக்கடலை, புதனன்று காய்கறி புலாவ், முட்டை, வியாழன் அன்று எலுமிச்சை சாதம், முட்டை மற்றும் வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் ஆகிய உணவுகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பம் கண்டறியப்பட்ட நாள் முதல், குழந்தை பிறந்து ஆறு மாதத்துக்கு பாலூட்டும் காலம் வரை, பத்து நாட்களுக்கு ஒரு முறை, 60 கிராம் எடையுள்ள மாவு பாக்கெட் வழங்கப்படுகிறது.இதில் கோதுமை, முளை கட்டிய தானிய வகைகள், கடலைப்பருப்பு மற்றும் வெல்லம் கலந்து இருக்கும்.
மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கூடுதலாக, 190 கிராம் பாக்கெட்டில், சத்துமாவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சத்துமாவு பெரும்பாலும் காலாவதியானதாகவே இருந்து வருகிறது. அங்கன்வாடிகளுக்கு வரும்போது இதன் தரத்தை பரிசோதிக்கின்ற அதிகாரிகள் இதனை வேண்டாம் என்று திருப்பி அனுப்பினால் மேலிடத்தில் இருந்து அழைத்து கண்டிப்பாக திருப்பி அனுப்ப கூடாது என்று கூறுகின்றனர். இதன் காரணமாக இவை மோசமான தரத்துடன் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்கள் போன்று நாற்றமடித்து காணப்படும் இவற்றை உண்டால் வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கருதி இவற்றை கால்நடைகளுக்கு பலரும் உணவாக கொடுக்கின்ற வழக்கம் கிராமப்புறங்களில் இருந்து வருகிறது.

தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்



சென்னை: தமிழக அரசின் நிதி நெருக்கடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வரிவருவாய் 25,000 கோடி ரூபாய் குறையும் என்று வெளியாக செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுக அரசு பதவியை விட்டு செல்லும் போது அரசு கஜானாவை காலி செய்துவிட்டு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதில் இருந்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதும் அவர் நடத்தும் கபட நாடகமும் இதில் இருந்து தெரிவதாக அவர் கூறியுள்ளார். 
அதிமுக அரசு தனது வரிவருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் செயற்கையாக உயர்த்திக்காட்டி மோசடி செய்துள்ளதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடளாளி மாநிலம் என்ற தலைக்குனிவில் இருந்து மீட்கப் போவதாக வாய்ப்பந்தல் போட்ட ஜெயலலிதா மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளதாக விஜயகாந்த கூறியுள்ளார். அதிகமாக கடன் வாங்குவது அதிமுக அரசின் உரிமை என்று நியாயம்படுத்தும் ஜெயலலிதாவின் இரட்டை வேடம் தற்போது கலைந்துவிட்டது. எனவே தமிழக மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பூரண மதுவிலக்கை அமுல்படுத்திய தவ்ஹீத் ஜமாஅத்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் சார்பில் நேற்று ஜனவரி 31 அன்று திருச்சியில் திண்டுக்கல் செல்லும் வழியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் குழுமிய 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டு பிராட்டியூரை ஆக்கிரமித்தது.
லட்சக்கணக்கான மக்கள் திரண்ட திடலில் இன்று எங்கு தேடிப்பார்த்தும் ஒரு பீடித்துண்டோ , சிகரெட் பாக்கெட்டோ , மது பாட்டிலோ காணவில்லை. 
என்னது மதுபாடிலே இல்லையா? . மது பாட்டில் இல்லாத ஒரு மாநாடா ? அப்படியென்றால் இது சரித்திரப்புகழ் பெற்ற மாநாடாயிற்றே! என வியந்தோம்.
அங்கிருந்த ஒரு முஸ்லிம் சகோதரரிடம் வினவியபோது இறைவனுக்கு இணைவைக்காத எந்த முஸ்லிமும் மதுவுக்கு மயங்கமாட்டான் என்றார்.
இக்காட்சியைப்பார்த்தும் நீங்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துவதுடன் மதுஒழிப்பு மாநாட்டையும் நடத்திவிட்டீர்கள் .
என்றும் நம் தமிழகம் ஜன31 தவ்ஹீத் ஜமாத் மாநாட்டுத்திடலாக அமைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டோம்.