Showing posts with label சமுக வலைதளம். Show all posts
Showing posts with label சமுக வலைதளம். Show all posts

Wednesday, 3 August 2016

சட்டக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 முஸ்லிம் மாணவர்கள் தேர்வு......!!


      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர போராட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற 3.5 சதவீத இட ஒதுக்கீட்டினால் இந்த கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான முதல் கலந்தாய்வில் 24 முஸ்லிம் மாணவர்களுக்கு  சட்டக்கல்லூரியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர்களில் 14 ஆண்கள், 10 பெண்கள்.
நஜ்முதீன், நசீர் ஹூசைன், ஜபருல்லாஹ், ஃபசீலா பாத்திமா, ஜீனத் பாத்திமா, ஷரிபா பானு, சதாம் ஹூசைன், நிஹால் அஹமத், ரியாஸ் கான், சிக்கந்தர்,
யாஸ்மீன், ஷப்னா, கான் சாஹிப், ரஜப் நிஷா, ஷேக் அப்துல்லாஹ், ஷாஜிதா, முஹம்மது பாரூக், அம்மார் பிஸ்மி, அசிதா, ஷகாவுதீன், ஜீனத் சோபியா, அப்துர் ரஹ்மான் தாஹி, ஷேக் அப்துல் வகீல், முஹம்மது அசார்
ஆகியோர் முதல் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை திரட்டி  மாநிலம் தழுவிய கும்பகோணம் பேரணி & மாநாடு,  மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம், மாநிலம் தழுவிய சிறைநிரப்பும் போராட்டம், சட்டசபை முற்றுகை போராட்ட அறிவிப்பு என்று ஆளும் வர்க்கத்திற்கு தொடர் நெருக்கடியை ஏற்படுத்தி எண்ணற்ற தியாகங்களினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்று தந்த இட ஒதுக்கீட்டினால் இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது.

Sunday, 10 April 2016

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தீ விபத்து ஏற்பட்டது.

துஆ செய்யுங்கள்....!!

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைய ஏக இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
இரத்ததான உதவி, ஆம்புலன்ஸ் உதவி போன்றவற்றிற்கு இஸ்லாமிய இயக்கங்களை அணுகவும்.

Saturday, 9 April 2016

நாச்சிக்குளத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல் மீது தாக்குதல் - அல்லாஹ்வுடைய அச்சம் உள்ளவர்கள் கண்டியுங்கள்....!!


திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல் மீது தர்கா வணங்கிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தர்கா - கந்தூரி விழாவுக்காக அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் மீது தாக்குதல் தொடுப்பது தான் மார்க்கம் போதித்ததா ?
ஒவ்வொரு ஊர் தர்காவிலும் ஆடல், பாடல், கூத்து, கும்மாளம் போடும் தர்கா வணங்கிகள் என்றாவது ஓர் நாள் இதே ஆடல், பாடல், கூத்து, கும்மாளங்களை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் போட்டது உண்டா ?
தர்காவை குப்பையாக நினைத்ததினால் தான் கூத்து கும்மாளம் நடத்த முடிகிறது, பள்ளிவாசல் அல்லாஹ்வுக்கு உரியது என்று நினைத்ததினால் தான் அங்கு எந்த அனாச்சாரத்தையும் செய்ய மனசு வருவதில்லை,
நாம் இங்கு கேட்க விரும்புவது என்னவென்றால் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலை அல்லாஹ்வுடைய பள்ளிவாசலாக பார்த்தவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அல்லாஹ்வுடைய பள்ளிவாசலாக பார்க்காதது ஏன் ?
உலகிலுள்ள அனைத்து பள்ளிவாசலும் அல்லாஹ்வுடையது என்று நினைக்க வேண்டும்.
மனசாட்சி உள்ளவர்கள் அல்லாஹ்வுடைய அச்சம் உள்ளவர்கள் அநியாயத்தை கண்டிக்க வேண்டும்.

Thursday, 24 March 2016

மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு :(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

#மார்ச்_26_அரசியல்_மறுமலர்ச்சி_மாநாடு

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு இறையருளால் எதிர்வரும் மார்ச் 26 , 2016 சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை OMR சாலையில் உள்ள YMCA  திடலில் நடைபெறவிருக்கிறது .
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்கள் . ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூட மைதானங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன .
இரவு புறப்பட்டு காலை வந்து சேரும் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த  மக்கள் தங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன  . மாநாட்டு மைதானத்தில் புத்தக கடைகள் , வணிக வளாகங்கள் , உணவகங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன .
மாநாட்டு திடலுக்கு கலீபா உமர் அவர்களின் பெயரும் , மேடைக்கு காயிதே மில்லத் அவர்களின் பெயரும் ,  பெண்கள் பகுதிக்கு அன்னை . தெரஸா அவர்களின் பெயரும் , இரண்டு நுழைவுவாயில்களுக்கு ஒன்றுக்கு ஐயா பெரியார் அவர்களின் பெயரும் , இன்னொன்றுக்கு மாணவர் போராளி ரோஹித் வெமுலா அவர்களின் பெயரும் ,திடல் வரவேற்பு வளைவுக்கு மவ்லவி அப்துல் ரஹீம் அவர்களின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது .
இம்மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள் . மாவட்ட செயலாளர்கள் , அணிகளின் மாநில செயலாளர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகிறார்கள் .
இம்மாநாட்டில் அ.இ.அ.தி.மு.க வின் சார்பில் அனைத்துலக MGR நற்பணி மன்ற செயலாளரும் , தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான தமிழ்மகன் உசேன் , இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் , சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் R. சரத்குமார் , பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் P.V.கதிரவன் , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல் முருகன் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் U. தனியரசு , இந்திய யூனியன் காயிதேமில்லத் லீக்கின் தலைவர் தாவூத் மியாகான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர் .
இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
24-03-2016

Sunday, 13 March 2016

முஸ்லிம்களை_யோகா_டீச்சர்_வேலைக்கு_எடுக்கக்கூடாது: மத்திய அரசின் காவி சிந்தனை!


☝ ஆயுஷ் துறையில் யோகா பயிற்றுநர்களாக, ஆசிரியர்களாக முஸ்லிம்களை வேலைக்கு எடுக்ககக்கூடாது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
☝ ஆயுஷ் துறை (AYUSH – Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy Mission) என்பது ஆயுர்வேதா, சித்தா, யோகா, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துறைகளை உள்ளடக்கியது. இத்துறையில் முஸ்லிம்களை வேலைக்கு எடுப்பதில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் கொள்கை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
☝ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள்
ஆயுஷ் துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உலக யோகா தினம் 2015 அன்று, யோகா பயிற்சி அளிப்பதற்காக எத்தனை முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும், இவை தவிர யோகா ஆசிரியர் பணிக்கு எத்தனை முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள ஆயுஷ் துறை, முஸ்லிம்கள் 711 பேர் யோகா பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், இதுவரை யோகா ஆசிரியர் பணிக்கு முஸ்லிம்கள் 3841 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவித்தது. இதில் #யாரையும்_தேர்வு_செய்யவில்லை என்றும், இது #மத்திய_அரசின்_கொள்கை என்றும் ஆயுஷ் துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதி அனுப்பிய பதில் ஒன்றில் இத்தகவலை தெரிவித்துள்ளது. ஆயுஷ் துறையின் பதிலை இங்கே பாருங்கள்:
கடந்த ஆண்டு, டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அழைக்கப்படவில்லை.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, ஹமீது அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் கலந்துகொள்ளவில்லை என பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார். ஆனால் துணைக்குடியரசுத் தலைவர் அலுவலகம், அன்சாரிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருப்பது தவறு என்றும், யோகா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்காததால் தான் ஹமீது அன்சாரி கலந்து கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
#இந்து_சகோதர்களே!
முஸ்லிம்கள் ஏன் சங்பரிவார இயக்கங்கள் மற்றும் பாஜகவை எதிர்க்கிறது என்று பாருங்கள்.
சங்பரிவார இயக்கங்களின் வெறி முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும். இந்தியாவை இந்து ராஜியமாக ஆக்க வேண்டும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1034715346618139&id=602076026548742



Saturday, 20 February 2016

முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை குறித்து எல்லா இயக்கங்களும் போராட்டம் நடத்தி விட்டன. அதற்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?


இறைவனின் திருப்பெயரால் ..
முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை குறித்து எல்லா இயக்கங்களும் போராட்டம் நடத்தி விட்டன. அதற்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?
சிறைவாசிகளின் குடும்பத்தார் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்ததாகக் கூறப்படுவது உண்மையா? அதில் என்ன பேசப்பட்டது?
பதில்
உண்மைதான்.
கடந்த சனிக்கிழமை அன்று சிறைவாசிகளின் குடும்பத்தார் தலைமையகத்தில் வைத்து நம்மைச் சந்தித்தனர்.
ஏற்கனவே ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு முன் அல்தாஃபி அவர்கள் கோவை சென்றிருந்த போது அவர்களை நேரில் சந்தித்து தமது குடும்பத்தாரின் விடுதலைக்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அந்த வகையில் போராட்ட வழிமுறை குறித்தும் அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்குவதற்காகவும் அவர்களை நாம் அழைத்திருந்தோம்.
சிறைவாசிகளுக்காக பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் மக்கள் ஆதரவையும் அரசின்  கவனத்தையும் ஈர்த்திருக்கிற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதைக் கையிலெடுத்தால்தான் விடுதலைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
எனவே இதற்காக நீங்கள் போராட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்கள்.
சிறைவாசிக்களுக்காக நடத்தப்படும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களால் நன்மைகளை விட தீமைகளே அதிகம்.  விடுதலை செய்!
என்று நாம் போராடினால் மரண தண்டனை வழங்கு என பரிவாரப் படைகள் எதிர்ப் போராட்டங்களை நடத்தி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விடுகிறார்கள்.
சமீபத்தில் இதற்காக நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு சிவசேனா சார்பில் பிப்ரவரி 14-ல் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தார்கள்.
முஸ்லிம் சிறைவாசிகளை பயங்கரவாதிகள் என்றும் அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க வலியுறுத்தியும் விஷம் கக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்கள்.
இப்படி ஒரு எதிர்வினை வந்தால் அரசாங்கம் என்ன செய்யும்?
நம்முடைய ஓட்டுக்களுக்காக கருணை காட்ட நினைக்கும் ஆட்சியாளர்கள் எதிர் ஓட்டுக்களை கணக்குப் பார்த்து விட்டு முன்பு இருந்ததை விட கூடுதலாகக் கடுமை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
எனவே இந்தப் பிரச்சனையை ஆர்ப்பாட்ட வடிவில் எதிர்கொள்வது ஆபத்தாகத் தெரிகிறது.
ஆகையால் இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டம் எதுவும் தற்போது தவ்ஹீத் ஜமாஅத்திடம் இல்லை என்பதை சிறைவாசிகளின் குடும்பத்தாரிடம் எடுத்துச் சொன்னோம்.
ஒருவேளை போராட்டம் நடத்துவதாக இருந்தால் அதற்கு தேர்தல் நேரம் கொஞ்சமும் பொருத்தமானதல்ல.
ஏனெனில் நெருக்கடியான எந்த முடிவுகளையும் ஆட்சியாளர்கள் பதவியேற்ற புதிதில்தான் எடுப்பார்கள்.
நான்கு ஆண்டுகளில் மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், பதவிக் காலத்தின் கடைசியில் விஷப் பரீட்சைக்கு யாரும் தம்மை உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவேளை அரசு இவர்களை மன்னிக்க நினைத்தால் கூட இவர்கள் விடுதலையாகிவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
விடுதலையை எதிர்ப்போம் என்கிறார்கள்.
அதை நம்மிடம் வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறார்கள்.
ஏற்கனவே விடுதலையாகி வெளியில் வந்துள்ள சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்.
இவர்களை வெளியே விட்டால் நமக்குத்தான் தலைவலி என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
எனவே நம்முடைய காய் நகர்த்தல்கள் கவனமாகவும், எதிரிகளை சீண்டாத வகையிலும் இருக்க வேண்டும்.
அதற்கு போராட்டம் உகந்த வழிமுறை அல்ல என்று எடுத்துச் சொன்னோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை மக்களை திரட்டி பேராட்டம் நடத்துவது சிரமமானதல்ல.
சில வருடங்களுக்கு முன்பாவது தவ்ஹீத் ஜமாஅத் தலையீட்டை சிறைவாசிகள் சிலர் விரும்பவில்லை.
அவர்களே விரும்பாத போது நாம் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி இருந்தது.
இப்போது அதுவும் அடிபட்டுப் போய் விட்டது.
எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று அனைவரும் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டால் சிறைவாசிகளுக்காக தவ்ஹீத் ஜமாஅத் எதுவும் செய்யவில்லை என்று அரசியல் செய்பவர்களின் வாய்களுக்கும் சீல் வைத்து விட முடியும்.
அதை விரும்புகிறவர்களின் அபிமானத்தையும் ஜமாஅத்திற்கு ஆதாயமாக்கிக் கொள்ள முடியும்.
ஒரு போராட்டத்தை நடத்தி விட்டால் அமைப்புக்கு இப்படி பல அனுகூலங்கள் இருந்தாலும் அவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு குற்றச்சாட்டுகளையும் சுமந்து கொண்டு நிற்பதற்குக் காரணம் அவர்களின் விடுதலையின் மீது கொண்டுள்ள உண்மையான அக்கறைதான் என்பதை எடுத்துச் சொன்னோம்.
அதே நேரத்தில் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளோம்.
ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் அனைவரையும் நேரில் சந்தித்து மற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதி முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது என்பதை விளக்கியுள்ளோம்.
பல்லாண்டுகாலமாக முஸ்லிம்களின் உள்ளத்தைத் துளைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் யார் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் முஸ்லிம்களின் வாக்குகளை அதைச் சொல்லியே நீங்கள் பெற்றுவிட முடியும் என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரிய வைத்து காரியம் சாதிப்போம்.
அதுபோன்ற மறைமுக காய் நகர்த்தல்கள் அவர்களின் விடுதலைக்கு உதவும்.
அதை தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து செய்யும் என உறுதியளித்தோம்.
இதைத் தாண்டி போராட்டங்களை நீங்கள் விரும்பினால் அதை முஸ்லிம் சிறைவாசிகள் என்று சுருக்காமல் 12 ஆண்டுகளைக் கடந்து சிறையில் வாடும் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வையுங்கள்.
உங்களுக்காகப் போராட்டம் நடத்துபவர்களையும் அவ்வாறு வைக்கச் சொல்லுங்கள் என்றோம். ஏனெனில் முஸ்லிம் என்று சுருக்கும் போது அதை பயங்கரவாதிகளுக்கு ஆதரவான போராட்டமாக இந்துத்துவாவினர் திசை திருப்பி விடுகிறார்கள்.
அதனால் அரசாங்கமும் அதைப் பரிசீலிக்க மறுத்து விடுகிறது.
அனைவரையும் உள்ளே இழுத்துக் கொண்டால் அதில் மதச்சாயம் பூசி திருப்ப முடியாது.
அதனால் தான் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு தீர்மானத்தில் கூட முஸ்லிம் சிறைவாசிகள் என்பதைக் கவனமாகத் தவிர்த்து விட்டு 12 ஆண்டுகளைக் கடந்த அனைத்து சிறைவாசிகளையும் சாதி மத வேறுபாடின்றி விடுவிக்குமாறு தீர்மானம் இயற்றினோம்.
இவ்வாறு உங்கள் கோரிக்கையை விரிவுபடுத்துங்கள்.
அதுவும் நன்மை பயக்கும் என்று கேட்டுக் கொண்டோம்.
அடுத்து இது முஸ்லிம்களின் போராட்டம் அல்ல.
அனைத்து சமூக மக்களும் இதற்காக குரல் கொடுக்கிறார்கள் என ஆட்சியாளர்கள் எண்ணும் வகையில் நமது போராட்டங்கள் அமைய வேண்டும்.
அதற்கு முஸ்லிமல்லாத சிறைவாசிகளின் குடும்பத்தாரை சந்தித்து அவர்களின் தலைமையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
இதன் மூலம் முஸ்லிம் என்பதற்காக நடக்கும் அலட்சியங்களை சரி செய்து விட முடியும்.
அப்படி நடத்தப்படும் போராட்டத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர்களிடம் விளக்கினோம்.
மேலும் தலைமையேற்பது யார்?
என்பதைப் பார்த்து விட்டு இயக்க ரீதியாக ஒன்று கூடத் தயங்கும் முஸ்லிம் அமைப்புகளை இந்த பொதுத் தலைமையின் மூலம் எளிதாக ஒன்றிணைக்கும் நன்மையும் இதன் மூலம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அந்தப் பேச்சுவார்த்தையில் நாம் தெரிவித்தோம்.
நன்றி
உணர்வு வார இதழ்

தமிழச்சி என்பவர் தவ்ஹீத் ஜமாஅத் விவாத அழைப்பு விடுத்தால் சந்திக்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.


இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்
ஃபேஸ்புக்கில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வந்த தமிழச்சி என்பவருக்கு நம் கொள்கை சகோதரர்கள் அவருக்கு அழகிய முறையில் பதில்கள் கூறியபோதும், மீண்டும் மீண்டும் அதே கருத்தைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்,
மேலும் tntj வை விமர்சனம் செய்தும்,நான் tntj விடம் விவாதம் செய்யத்தயார் என்றும் சொல்லி இருந்தார்.
Tntj எப்போதும் விவாதிக்க அழைப்பு விட்டுக்கொண்டே தான் உள்ளது,
இப்போது tntj தலைமை இவரின் விவாத அழைப்பை ஏற்று உள்ளது,
அந்த விவாத அழைப்பை tntj ஏற்றுக்கொண்டு தலைமையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில்  அழைப்பு விட்ட செய்தியினை கீழே எமது தவ்ஹீத் சோஷியல் மீடியா சார்பாக வெளியிட்டுள்ளோம்,,
விவாத_அழைப்பு;
தமிழச்சி என்பவர் தவ்ஹீத் ஜமாஅத் விவாத அழைப்பு விடுத்தால் சந்திக்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவருக்கு பகிரங்கமாக விவாத அழைப்பை விடுக்கிறோம். அவர் தனது முகவரியைத் தெரிவித்தால் அவரது முகவரிக்கு விவாத அழைப்பு பதிவுத் தபாலில் அனுப்பி வைப்போம்.
அவர் ஏற்றுக் கொண்டு பதில் அனுப்பிய உடனே தாமதமில்லாமல் விவாத ஒழுங்குகள்,
இடம்,நாட்கள் உள்ளிட்ட அனைத்து விசயங்கள் குறித்தும் நேரில் சந்தித்து ஒப்பந்தம் செய்து அதன்படி விவாதிப்போம்.
(இன்ஷா அல்லாஹ்)
இப்படிக்கு.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்க்காக.
இ. அகமது பாரூக்
மாநில செயலாளர் (tntj)
9952056444
நமது கேள்வி தமிழச்சியை நோக்கி
அயல்நாட்டில் உட்காந்து கொண்டு பொது தளத்தில் விவாதத்திற்கு அழைப்பு கேட்டுக்கொண்டிருந்த தமிழச்சியே,தற்போது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பகிரங்கமாக தங்களது அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவாத அழைப்பை விடுத்துள்ளது,,,அல்ஹம்துலில்லாஹ்...
இதை ஏற்றுக்கொண்டு விவாதிக்க வருவீர்களா???அல்லது நான் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முகநூலில் மட்டுமே விவாத அழைப்பு விடுப்பேன்,முநூலில் மட்டுமே இஸ்லாத்திற்கு எதிராக விஷக்கருத்தை பதிவு செய்வேன் என சொல்லப்போகிறீர்களா????
உங்களின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்,,விவாத அழைப்புக்கு தேதியை குறித்த பதில் அனுப்புங்கள் தமிழச்சியே!!!


Saturday, 6 February 2016

மிகவும் அவசரம் இரத்தம் தேவை ;


திருநெல்வேலி மாவட்டம் (களக்காடு) நவ்பல் ரிஸ்வான் என்கிற சகோதரருக்கு  பைக்கில் சென்றபோது விபத்து ஏர்பட்டது இதனால் அந்த சகேதரனின் நுரைஇரல் மிகவும் பாதிக்கப்பட்டது.இதனால்  அவருக்கு அவசரமாக அறுவைச் சிகிச்சை நடைப்பெறுகிறது
இரத்தம் மிக அவசரமாக தேவைப்படுகிறது.
இரத்தம் பிரிவு
- A1negative or Anegative  (3UNIT)
இரத்தம் கிடைக்காததால் அவருடைய  சிகிச்சை தள்ளி போகிறது. எனவே இந்த செய்தியை ஒவ்வொரு ஊரிலும் தெரியப்படுத்தி அந்த சகோதரர் உயிர் காக்க உதவிடுவோம் குமரிமாவட்டம் நாகர்கோவில் செய்சேகரன் மருத்துவயில் அட்மிட் செயப்பட்டுள்ளது
தயவு செய்து இந்த பதிவை அதிகமாக ஷேர் செய்து உயிர் காக்க உதவுங்கள்
தொடர்புக்கு 📞contact:
9095204041,
9751975949,
9751965182.
S.ஷபீக்
தேதி: 06/02/2016, சனிக்கிழமை🔴🔴🔴🔴

Sunday, 31 January 2016

தவ்ஹீத் ஜமாஅத் வழக்கறிங்கர் விஜந்திரன்..!


தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான வழக்குகளை பார்த்து கொண்டு நமது ஜமாத்திற்க்கு சட்ட ரீதியாக உதவிய வழக்கரஞர் சகோ. விஜந்திரன்.
சென்னையில் நடந்த போராட்டத்திற்க்கும் இன்று நடந்த மாநாடுட்டிற்க்கும் சட்டரீதியாக உதவி செய்த வக்கீல் சகோ விஜந்திரன் அவர்களுக்கு மாநாட்டில் அறிமுகப்படுத்தி நன்றியே தெரிவித்துக் கொள்கிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.

மத்திய தமிழகத்தில் மையம்கொண்டது மனிதப்புயல்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய தமிழகமான திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று வரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.
இன்னும் லட்சோபலட்ச மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து சாலைகளும்
மத்திய தமிழகமான திருச்சியை நோக்கி இருந்ததால் திருச்சியின் அனைத்து வழி சாலைகளும் ஸ்தம்பித்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கிவிட்டான்.
முஸ்லிம் சமுதாயம் TNTJ பின்னால் தான் இருப்பது நிரூபணம் ஆகிவிட்டது.
மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

Saturday, 30 January 2016

ஷிர்க்கு ஒழிப்பு மாநாட்டிற்கு ஆம்புலன்சை கொண்டு செல்லும் வழியில் ராஜ சேகரன் என்ற சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.



ஷிர்க்கு ஒழிப்பு மாநாட்டிற்கு ஆம்புலன்சை கொண்டு செல்லும் வழியில் ராஜ சேகரன் என்ற சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை மீட்டு முதலுதவி செய்து, தஞ்சை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்து விட்டு மீண்டும் மாநாட்டு திடலை நோக்கி புறப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ்.
ஷிர்க் ஒழிப்பு மாநாடு இந்துக்களுக்கு எதிரானது என்று ஒருபுறம் இந்துத்வா அமைப்புகள் மதவெறியை தூண்டுகின்றன. மறுபுறம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு செல்லும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் ஒரு இந்துவின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. இனியும் பல இந்துக்களின் உயிர்களை காப்பாற்றும்.

Friday, 29 January 2016

இந்த உலகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் செய்தி என்ன ? பிறமத மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஷிர்க் ஒழிப்பு மாநாடு....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு TNTJ யின் எல்லையை தாண்டி, இஸ்லாமிய சமூகத்தின் எல்லையை தாண்டி, பிறமத மக்களின் கவனத்தையும் ஈர்த்து ஷிர்க் என்றால் என்ன ? எதற்காக ஷிர்கை ஒழிக்க வேண்டும் ? பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மட்டுமின்றி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாஅத்துக்களும்எதிர்க்க வேண்டிய காரணம் என்ன ?
இரத்ததானம் முதல் இயற்கை சீற்றம் வரை அனைத்திலும் மனிதநேய பணியில் தனி முத்திரை பதித்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்பட காரணம் என்ன ? 
இந்த உலகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லவரும் செய்தி என்ன ? 
இதுதான் பிறமத சகோதரர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை இந்த உலகுக்கு உரக்க சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாமாகும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையான இஸ்லாமிய கொள்கையை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிலர் திருக்குர்ஆனை சரியாக விளங்காமல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்டு ஓர் இறைவனுக்கு இணையாக தர்காவை வணங்குகிறார்கள்.
இவ்வாறு தர்காவை வணங்கி வழிபடுவது ஓர் இறைக்கொள்கைக்குமாற்றமானது, ஓர் இறைக்கொள்கையை நிலைநாட்டுங்கள், ஓர் இறைக்கு இணை கற்பிக்காதீர்கள் என்பதை பிரகடனம் செய்யவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு.
முஸ்லிம் என்றால் பெயரளவில் வாழாமல் உண்மையான முஸ்லிமாக வாழுங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார்களே அப்படி வாழுங்கள் என்கிறது தவ்ஹீத் ஜமாஅத் 
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - இதுதான் தவ்ஹீத் ஜமாஅத் இந்த உலகத்திற்கு சொல்லும் செய்தி....

தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதல் உண்மை நிலை என்ன ? ( கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் )



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியின் கார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மாலை பத்திரிக்கைகளும் கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
வெறும் வாயிக்கு சோழ பொறி கிடைத்தாற்போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளுக்கு இந்த செய்தி லட்டு மாதிரி கிடைத்ததாக நினைத்து முகநூல் முழுவதும் பரப்பி புழங்காகிதம் அடைந்தனர்.
இவையனைத்தும் இன்று நடந்தது.
கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இந்த செய்தியின் உண்மைநிலை அறியாமல் பரப்பியவர்கள் பொய்யர்கள் என்பதை கூறிக்கொண்டு அந்த செய்தியின் உண்மை தகவலுக்கு வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர்.
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்தார் TNTJ மாவட்ட நிர்வாகி,
இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை,
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S.அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்கள் நினைவிருக்கிறதா ?
அதேப்போன்று இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.
அயோக்கியர்களின் அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவிடு பொடியாக்கி அயோக்கியர்களின்முகத்தை தலைகுனிய வைத்து விட்டான்.
யா ரப்பே நீயே நீதியாளன் !!

Wednesday, 27 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சிறப்பு இரத்ததானம் முகாம்



குடியரசு தினத்தன்று மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மானில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.
* எங்களுக்கு தேசிய கொடியை சட்டையில் குத்திக்கொண்டு தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
* சினிமா தியேட்டரில் போடப்படும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று தேசபக்தியை நிரூபிக்க தெரியாது.
சுதந்திரத்திற்கு முன்பு இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்தினோம். சுதந்திரத்திற்கு பிறகும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்துகிறோம். இயற்க்கை பேரிடரால் தேசத்தின் மக்கள் பாதிக்கப்படும்போது உடலாலும், பொருளாலும் எங்களின் சக்திக்கும் மீறி சாதி மதம் பாராமல் உதவி செய்கிறோம்.
தேச மக்களின் நலன் காக்க தீவிரமாக இருப்பதனால் தானோ என்னவோ எங்களுக்கு "தீவிரவாதிகள்" என்கிற பட்டம் தந்து மகிழ்கிறார்கள் ஆட்சியாளர்களும், ஊடகவியளார்களும்.

Tuesday, 26 January 2016

புறக்கணிக்கப்பட்ட தமிழிசை அக்கா!




இன்று குடியரசு தினம். வழக்கமாக குடியரசு தினத்தில் வீர தீரச்செயல் புரிந்த 4 பேருக்கு அவர்களின் வீரத்தைப் பாராட்டி வருடா வருடம் தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா விருது சாகசம் புரிந்த 4 பேருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
சென்ற டிசம்பர் மாதம் சென்னையில் மழைவெள்ளத்தில் தத்தளித்த சகோதரி.சித்ரா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை மீட்டு காப்பாற்றிய சகோ.யூனுஸ் உள்ளிட்ட 4 பேர்களுக்கு இன்றைக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
ஆனால் இவர்களையெல்லாம் விட தன் உயிரைப் பணயம் வைத்து ஈக்காட்டுத்தாங்கலில் காலை 6 மணிக்கு என் உதவி யாருக்காவது வேண்டுமா? என்று வெங்கலக்குரலில் கத்திக் கொண்டே சென்று அங்கே ஒரு கர்ப்பிணிப் பெண் எவ்வித ஆதரவும் இன்றி தத்தளித்தவரை அவசரமாக ஒரு படகில் ஏற்றி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்துக் காப்பாற்றி அவருக்கு பிரசவமும் பார்த்து அந்தக் குழந்தைக்கு தமிழிசை என்று பெயரும் வைத்த ஒரு வரலாற்று சம்பவம் நிகழ்ந்துள்ளதை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏனோ?
அதுமட்டுமின்றி இப்போது அந்தக் குழந்தையை தமிழிசை அவர்கள் தன் சொந்த செலவில் ரஷ்யாவிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்துள்ள செய்திகளும் பிபிசி தமிழோசையில் வந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் இவ்வருட அண்ணா விருது பட்டியலில் அக்கா. தமிழிசையை சேர்க்காதது வருத்தத்தை தருகின்றது.
எனவே இதுபற்றி நடுநிலை ஊடகவியலாளர் நீதிமான் பாண்டே அவர்கள் தந்தி டிவி வாயிலாக அக்காவைப் பேட்டி எடுத்து தமிழக அரசின் புறக்கணிப்பை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

பெண்ணியவாதிகளுக்கு .!!



முதல் படம் : மகாராஷ்டிர மாநிலம் அஹமத் நகரில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (26.01.2016) கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.
இரண்டாவது படம் : 200 கோடி முஸ்லிம்களின் புனித தளமான மக்காவின் உள்ளே முஸ்லிம் பெண்கள். இது பெண்கள் போராடி பெற்ற அனுமதியில்லை. 1450 வருடங்களுக்கு முன்பாக நபிகள் நாயகம் காலத்திலேயே வழங்கப்பட்ட அனுமதி.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துது அவ்வளவு தான் - பெண்ணியவாதிகள்

தேர்தல் நாடகமா ? TMMK, PFI, முஸ்லிம் லீக் சகோதரர்களின் கவனத்திற்கு.....!! 




அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநாட்டும் விதமாக நடத்தப்படும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை கொச்சைப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றிய ஜமாஅத்துல் உலமா சபையின் கூற்றுக்கு உரிய பதிலை முகநூல் முஸ்லிம் மீடியா சார்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு தமுமுக, PFI, முஸ்லிம் லீக் சகோதரர்களுக்காக வெளியிடப்படுகிறது.
பொதுவாக எந்த ஒரு இயக்கமும் மாநாடு அறிவித்தால் மாநாட்டை தான் பிரம்மாண்டமாக நடத்துவார்கள். ஆனால் TNTJ நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தொடர்பாக கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், சிறுமிகள் என்று ஒட்டுமொத்த நிர்வாகமும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு ? என்றும் ஷிர்க் என்றால் என்னவென்றும், எதற்காக ஷிர்கை ஒழிக்க வேண்டுமென்றும் மிக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்களே....
இதுவெல்லாம் எதற்காக என்று சிந்தித்தீர்களா ?
இதற்கெல்லாம் TNTJ தலைமை சம்பளம் கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா ? 
எந்தவித சம்பளமும் இல்லாமல், இரவு பகல் பாராமல், வெயிலிலும், மழையிலும், குளிரிலும், தூக்கமிழந்து, பசியை இழந்து வீதி வீதியாக, தெரு தெருவாக, வீடு வீடாக கதவை தட்டி ஷிர்கை பற்றி பிரச்சாரம் செய்யும் நோக்கம் என்னவென்று தெரியுமா ?
யார் ஷிர்க் வைக்கிறாரோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்து விட்டதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான், நம்முடைய உறவுகள் நரகம் சென்று விடக்கூடாது, அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக....
அடி, உதை, வெட்டு, குத்து, இரத்தம் சிந்தி, ஊர் நீக்கம் செய்யப்பட்டும், ஜனாஸாவை அடக்க மறுத்தும் நீங்கள் நரகத்திற்கு போய் விடக்கூடாது, நமக்கு கிடைத்த தூய இஸ்லாம் நம் உறவுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான்....
இரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த மூன்றாவது நாளில் மீண்டும் மார்க்கத்தை சொல்ல புறப்பட்டுள்ள தவ்ஹீத் சகோதரரை பாருங்கள், உடல் ஊனமுற்ற நிலையிலும் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவ்ஹீத் சகோதரரை பாருங்கள்.
வீடு வீடாக கதவை கட்டி நம் சகோதரிகளுக்கு ஷிர்கை பற்றி போதிக்கும் தவ்ஹீத் சகோதரிகளை பாருங்கள்...
இவ்வளவு மக்களின் தியாகத்தையும் ஒரே வார்த்தையில் தேர்தல் நாடகம் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள்.
தமிழகத்திலுள்ள முஸ்லிம் இயக்கங்களில் தேர்தலில் போட்டியிடாத ஒரே தூய்மையான இயக்கம் TNTJ மட்டுமே, மீதமுள்ள அனைத்து இயக்கங்களும் தேர்தல் அரசியலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகளாக மாறி விட்டன.
தேர்தலில் போட்டியேயிடாத TNTJ மாநாடு நடத்தினால் தேர்தலுக்காக நடத்தப்படும் மாநாடு என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறீர்களே அப்படியென்றால்.... 
தேர்தலில் போட்டியிடக்கூடிய தமுமுகவும், PFI யும் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் சிறைவாசிகள் விடுதலைக்காக போராட்டம் அறிவித்துள்ளதே....
இந்த போராட்டமும் தேர்தல் நாடகமா ? தேர்தல் நாடகம் இல்லையென்றால் கடந்த 5 ஆண்டுகளில் சிறைவாசிகளின் விடுதலைக்காக எத்தனை முறை போராட்டம் நடத்தியுள்ளீர்கள் ?
தேர்தல் வாடையே படாத TNTJ மாநாடு நடத்தினால் அது தேர்தல் நாடகம் என்று சொல்லும் நீங்கள், தேர்தலில் போட்டியிடும் உங்களது இயக்கங்கள் நடத்தக்கூடிய போராட்டங்கள் தேர்தல் நாடகம் என்று நாங்கள் சொல்லலாமா ?
இப்பொழுதும் நம்புகிறோம் ஷிர்கை ஆதரிக்கக்கூடிய 90 சதவீத மக்கள் ஷிர்க்கின் விபரீதம் புரியாமல் தர்கா, மௌலூது போன்றவைகள் மார்க்கத்தில் உள்ளது என்ற நம்பிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமையடைந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறகு மனிதர்களால் சுயநலனுக்காக வியாபார ரீதியாக உருவாக்கப்பட்டதே தர்கா வழிபாடும், மௌலூதுகளும்....
தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களாக உள்ள 95 சதவீத உறுப்பினர்கள் தவ்ஹீத் ஜமாஅத் தந்தைக்கு பிறந்தவர்கள் அல்ல, சுன்னத் ஜமாஅத் தந்தைக்கு பிறந்து தர்கா வழிபாடு, மௌலூது போன்ற அனைத்து ஷிர்கிலும் ஈடுபட்டு பின்னர் மார்க்கத்தை விளங்கி தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சென்றவர்கள் தான் 95 சதவீத உறுப்பினர்கள். 
சுன்னத் ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை, தமுமுக, PFI, SDPI, முஸ்லிம்லீக் என்று ஒட்டுமொத்த சமூகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு நடத்தும் இம்மாநாடு ஓர் இறைக்கொள்கையை நிலைநாட்டுவதற்காக என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
https://m.facebook.com/story.php?story_fbid=586048378220983&substory_index=0&id=318795831612907

Monday, 25 January 2016

நாங்கள் இந்தக் கல்லூரியில் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம்.


நாங்கள் இந்தக் கல்லூரியில் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம். இதுவரை 2வது வருடம் கூட பாஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் ரூ. 6 லட்சம் வரை பீஸ் வாங்கி விட்டனர்.
இந்தக் கல்லூரி மீது இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்து கொள்கிறோம்
என்று தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் எஸ்.விஎஸ். நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.
அதில் அவர்கள் எழுதியிருப்பது
சரண்யா, மோனிஷா, பிரியங்கா. நாங்க svs naturopathy medical college-ல் படிக்கிறோம்.
இந்த காலேஜ்ல நிறைய fees வாங்குறாங்க. கட்டுன எந்த fees-க்கும் பில் தர மாட்டேங்குறாங்க. கோச்சிங் இல்லை கோச்சிங் இல்லை இந்த காலேஜ்ல் பீஸ் வாங்குற அளவுக்கு coaching இல்லை.
staffs யாரும் இல்லை. இதை நிறையப் பேர் complaint பண்ணியும் எந்த step-ம் எடுக்கலை. படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம்...
இங்கு படிக்கிறதுனால எங்களுக்கும், எங்க வீட்டுக்கும் stress அதிகமாயிட்டே இருக்கு.
‪#‎கிரிமினல்_எனத்_திட்டும்_சேர்மன்_வாசுகி‬
இந்த காலேஜ் சேர்மன் வாசுகி அவர்கள் இங்கு படிக்கும் மாணவர்களை criminal என்று சொல்லித் திட்டுவார்கள்.
இந்த காலேஜ்ல நாங்க நிறைய கஷ்டப்பட்டிருக்கோம். இனிமேலாவது இந்த காலேஜ் மேல ஆக்ஷன் எடுங்க.
இனியாவது நடவடிக்கை எடுங்க இந்தக் காரணத்தால நாங்க தற்கொலை பண்ணிக்கிறோம்.
ஆனால் இதை chairman வாசுகி நாங்க 3 பேரும் charector lessன்னு சொல்லுவாங்க. நாங்க தற்கொலை பண்ணிக்கிறதே இந்த காலேஜ் மேல ஆக்ஷன் எடுக்கனும்தான்.
தயவு செஞ்சு அவங்க எங்களைப் பத்தி தப்பா சொன்னா நம்பிடாதீங்க. சுய நினைவுடன் சுய நினைவுடன் நாங்க இதுவரைக்கும் II year இயர் பாஸ் பண்ணல.
ஆனால் இதுவரைக்கும் 6 lakhs பீஸ் வாங்கிருக்காங்க. இதை நாங்கள் சுய நினைவுடன் எழுதிக் கொள்கிறோம் என்று கூறி மூன்று பேரும் கையெழுத்திடுள்ளனர்

சீமான் அறைகூவலை ஏற்றது TNTJ : விவாதத்திற்கு தயார் - TNTJ அதிரடி அறிவிப்பு.....!!


எந்த மதத்தின் நூல்களையும் விட திருக்குறளே உலக பொதுமறை என்றும் இதற்காக தாம் எந்த மதத்தினருடனும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.
சீமானின் அறைகூவலை ஏற்று விவாதத்திற்கு தாம் தயாராக இருப்பதாகவும், திருக்குறளில் நல்ல கருத்துக்கள் இருப்பதுப்போல் காலத்துக்கு ஒவ்வாத, அறிவுக்கு பொருந்தாத, நடைமுறைப்படுத்தமுடியாத, சீமானே எதிர்க்கிற பல்வேறு கருத்துக்கள் அடங்கியுள்ளதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக சீமானுக்கு விவாதத்திற்கான ஒப்பந்தம் போடுவதற்கு TNTJ அழைப்பு விடுத்துள்ளது.
TNTJ யின் அறிவிப்பை ஏற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விவாதத்திற்கு முன் வர வேண்டும்.
கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, கிறித்தவர்களுடன் விவாதம் செய்து வெற்றி, இந்து முன்னணிக்கு விவாதத்திற்கு அழைப்பு விடுத்து TNTJ நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் விவாதத்திற்கு வருவார் என்றால் தாம் விவாதத்திற்கு வரமாட்டேன் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலனை தலைதெறிக்க ஓட விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீமானின் அறைகூவலை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.