Sunday, 7 February 2016

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களே உஷார்...



புதுடில்லி : வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் ஏமாற்று பேர்வழிகள் மோசடி செய்யது வருகிறார்கள். வாட்ஸ்அப் மூலம் தனிநபர் பற்றிய வங்கி கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உங்கள் நண்பரில் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க்(link)" அனுப்பப்படும். அதில் சென்றால் உங்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்படும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. போலி இணையதளங்களை பயன்படுத்தி, உங்கள் போனில் மார்வேர் மூலம் ஊடுருவி, உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து மோசடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலக அளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பா நாடுகள் மற்றும் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் அதிகம். உலகம் முழுவதிலும் சுமார் ஒரு பில்லியன் நபர்கள் வாட்ஸ்அப்.,ஐ பயன்படுத்துகிறார்கள். அதிகரித்து வரும் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களை குறிவைத்தே இந்த மோசடி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சில சமயம், பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களிடம் பேசியும் அவர்களை கவர்ந்து, அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றனவாம். அல்லது, ஏதாவது ஒரு தகவலை அனுப்பி, அதனை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சலுகை கிடைக்கும் எனவும் பயன்பாட்களை சூழ்ச்சி வலையில் சிக்கி வைக்கிறார்களாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் வங்கி கணக்கு அப்ளிகேஷன்களை இயக்கும் வசதி வந்து விட்டதால், வாட்ஸ்அப் மோசடி நபர்கள் எளிதில் உங்கள் மொபைல் போனிற்குள் ஊடுரு, உங்கள் வங்கி கணக்கில் மோசடி செய்யும் வாய்ப்பு அதிகம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களே உஷார்...
http://newshunt.com/share/49366347
via NewsHunt.com

No comments:

Post a Comment