Tuesday, 2 February 2016

“சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதலை தடுத்து நிறுத்த தவறி விட்டார் பிரதமர் மோடி!’’

அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு அறிவிப்பு

லண்டன் ஜன் 31 இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக் குதலைத் தடுக்க முழு அதிகாரம் படைத்த மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  அதிகாரமிக்க இரண்டு மனிதஉரிமைகள் அமைப்பு கூட்டாக அறிக்கை விட் டுள்ளன.
அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு 2016-ஆம் ஆண்டிற்கான உரிமைமீறல் குற்ற அறிக் கையை லண்டனில் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது பன்னாட்டு மன்னிப்பு சபையும் தனது அறிக்கையை சமர்ப்பித்தது அப்போது பேசிய தெற்காசியாவிற்கான மனித உரிமைகள் அமைப் பின் தலைவர் மினாக்ஷி காங்குலி கூறியதாவது:
“சிறுபான்மையினர் மற்றும் ஊனமுற்றவர்கள் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள் ளன. இவர்களின் முன் னேற்றத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு நட வடிக்கையையும் எடுக்க வில்லை. அதே நேரத் தில் இவர்களுக்கு உதவும் நோக்கில் செயல் பட்டுவரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மீது பொய்யான குற் றச்சாட்டைக் கூறி தடைசெய்யும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.
மதவாதிகள் வன் முறையைத் தூண்டும் விதமாக பேசி வருகின் றனர். அதிகாரம் கொண்ட பதவியில் உள்ளவர்கள், மக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறுபான்மை மக் களுக்கு எதிரான நட வடிக்கைகளால் ஒருபிரிவினர் எப்போதும் அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கின்றனர். அங்குள்ள எங்களது உறுப்பினர்கள் அளித்த அறிக்கை மற்றும் ஊடகம், காவல்துறை குற்றப்பதிவேடுகளின் படி இந்தியாவில் நாளுக்கு நாள் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிபோவது கண்கூடாகத் தெரிகிறது,
ஆளும் பாஜக தலை வர்களே காரணம்  ஆளும் கட்சியில் சில தலைவர்கள் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் சிறுபான்மையினர் பாதுகாப்பாற்ற சூழலில் வாழும் நிலை உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், ஜம்மூ-காஷ்மீர், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் மாட்டைத் தொடர்புப் படுத்தி தொடர்ந்து இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டவிதம் குறித்து மனித உரிமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது மிகவும் கண்டிக் கத்தக்கதாகும், மக்களாட்சி நடைபெறும் நாடான இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தொண்டு நிறுவனங்களின் மீது தடை அல்லது ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் கீழ் நட வடிக்கை  எடுத்தது மிக வும் கவலைக்குரியதாக உள்ளது.
குஜராத் மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடந்த மத வன்முறையாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக் காக குரல் கொடுத்தவர்கள் மீது போலியான குற்றச் சாட்டுகளை கூறி அவர்களை நீதிமன்றங்களுக்கு அலைக் கழிப்பதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது, குஜ ராத் வன்முறைக்கு நீதி கேட்டுப் போராடிய தீஸ்தா செதல்வாட் மற்றும் ஜாவேத் ஆனந்த் போன்றோர் மீது பாஜக அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
இதே காரணத்தை பன்னாட்டு மன்னிப் புச் சபையும் கூறியுள் ளது. அரசின் அடக்கு முறைகளை தட்டிக் கேட்பவர்கள் மீது பொய் வழக்கு மற்றும் சமூகவிரோதிகளை ஏவி விட்டு மிரட்டல் தாக்குதல் போன்றவை தற்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன. மோடி தலைமையில் ஆன ஆட்சி அமைந்தவுடன் சமூக சேவை அமைப்புகளின் வங்கிக்கணக்குகளை முடக்குவதன் மூலம் உதவிவேண்டி நிற்கும் ஏழைகள் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் சுயமுன்னேற்றம் கேள்விக்குறியாகியுள்ளது, அரசியல் காரணங்களுக் காக இதுபோன்ற நட வடிக்கைகள் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கவலைக்குரிய தாகும் என்று கூறியுள்ளது.

- விடுதலை 

No comments:

Post a Comment