Wednesday, 3 February 2016

மாவட்டத்தில் 26 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்: இன்று முதல் செயல்படும்



விவசாயிகளிடமிருந்து சம்பா, தாளபடி சாகுபடிக்கான நெல்லை கொள்முதல் செய்வதற்காக திருச்சி மாவட்டத்தில் 26 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 3) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் நல்ல மழை பெய்ததால் ஆர்வத்துடன் விவசாயிகள் சம்பா சாகுபடியைச்செய்யத் தொடங்கினர். மாவட்டத்தில் டெல்டா பகுதிகளில் 34,400 ஹெக்டேரிலும், டெல்டா அல்லாத பகுதிகளில் 17,300 ஹெக்டேரிலும் என மொத்தமாக 51,700 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது சம்பா நெற்கதிரறுக்கும் பணி லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி போன்ற பகுதிகளில் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.இந்த நிலையில் விவசாயிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் 26 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதன்கிழமை (பிப்.3) தொடங்குகிறது.எந்தெந்த இடங்கள்: லால்குடி வட்டத்தில் அன்பில், கோமாக்குடி, மேட்டுப்பட்டி, பூவாளூர், திண்ணியம்,டி. கல்விக்குடி, நகர், அரியூர், நத்தமாங்குடி, காட்டூர், வெள்ளனூர், புஞ்சை சங்கேந்தி, எல். அபிஷேகபுரம், செம்பரை, திருவெறும்பூர் வட்டத்தில் மேலக்கல்கண்டார்கோட்டை, சிறிóரங்கம் வட்டத்தில் குழுமணி, மணிகண்டம், நவலூர் குட்டப்பட்டு, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் நொச்சியம் முசிறி வட்டத்தில் முசிறி, காட்டுப்புத்தூர், குணசீலம், தொட்டியம் வட்டத்தில் தொட்டியம், துறையூர் வட்டத்தில் பி. மேட்டூர், ஆலத்துடையான்பட்டி.விலை எவ்வளவு: சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஏற்கெனவே அரசு வழங்கிய ரூ. 1,450 உடன் ஊக்கத்தொகை ரூ.70 சேர்த்து ரூ. 1520-ம், பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ஏற்கெனவே வழங்கியரூ. 1410 உடன் ஊக்கத் தொகை ரூ.50 சேர்த்து ரூ. 1460 வழங்கப்படும்.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை விவசாயிகளின் விருப்பத்துக்கேற்ப ரொக்கமாகவோ அல்லது அவர்களுடைய வங்கிக் கணக்கில் இசிஎஸ் மூலம் வழங்கப்படும். எனவே விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை அளித்து பயன்பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி.

நன்றி : தினமணி 

No comments:

Post a Comment