தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஏ.கே.தாஜூத்தீன் (வயது 53). விசைப்படகு உரிமையாளரான இவர் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளராக உள்ளார். மேலும் மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க கௌரவ தலைவராகவும் இருந்து வருகிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வாக்கில் கடைவீதியில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது மோட்டார் பைக்குகளில் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த மர்ம கும்பல் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த தாஜூத்தீனை வழிமறித்து திடீரென தாக்கியதில் உடலில் காயம் ஏற்பட்டது. தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக தாஜூத்தீன் தாக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறை விசாரித்து வருகிறது.

No comments:
Post a Comment