Wednesday, 3 February 2016

வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடந்திருந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்


சென்னை: தமாகா தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தொண்டரணி மாநில தலைவர் அயோத்தி தலைமை வகித்தார். மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், ஞானசேகரன், கார்வேந்தன், விடியல் சேகர், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தின் போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் தமாகா சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். வரும் பிப்ரவரி மாதம் 10 முதல் 12ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம்.
பொது தொகுதிக்கு ₹5ஆயிரம், தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு ₹2,500 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், அதிகாரபூர்வமான கூட்டணி குறித்த அறிவிப்பை இம்மாத இறுதியில் வெளியிடுவேன். தமாகா இந்த தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில், அந்த சின்னத்தை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதில் ஊழல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், கத்திப்பாரா ஜனார்தனன், ஆர்.எஸ்.முத்து, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், முனவர் பாட்ஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.எம்.பிரபாகரன், சைதை மனோகரன், அனுராதா அபி, ரவிராஜ், தொண்டரணி நிர்வாகிகள் மாரி வசந்தகுமார், செந்தில் குமார், மோகன் சவுத்ரி, மயிலை பீட்டர் செல்வகுமார், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment