ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 55–வது முறையாக தடுப்பு கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்படுகின்றன.விமான நிலையத்தில் இதுவரை 14 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 19 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 15 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து விழுந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளன. ஒரு முறை விளக்கு கண்ணாடி நொறுங்கி உள்ளது.இதுவரை 54 முறை நடைபெற்று உள்ள இந்த சம்பவங்களில் 11 பேர் காயம் அடைந்து உள்ளனர்.தடுப்பு கண்ணாடி உடைந்தது
இந்தநிலையில் 55–வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் மேலாளர் அறை அருகே உள்ள 8 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுவர் தடுப்பு கண்ணாடி ஒன்று திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.அப்போது அங்கிருந்த ஊழியர்களும், பாதுகாப்பு வீரர்களும் அலறியடித்து ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதிகாரிகள் விசாரணை
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். பின்னர் தரையில் நொறுங்கி கிடந்த கண்ணாடி கழிவுகளை அகற்றினார்கள். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘விமான நிலையத்தில் பழுதடைந்த கண்ணாடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கண்ணாடியை அகற்ற இருந்தோம். ஆனால் அதற்குள் கண்ணாடியே உடைந்து விழுந்து விட்டது. பழுதடைந்த கண்ணாடிகள் விரைவில் மாற்றப்படும்’’ என்றனர்.

No comments:
Post a Comment