Thursday, 12 May 2016

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

         _கல்வி வழிகாட்டி_
✅ 10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
✴ பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்பு தான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.
I. *மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு* :
■ First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு:
¤ பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு.
¤ இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம்.
அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இது தான், எனவே தான் இந்த பிரிவிற்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும்.
குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.
■ கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு:
பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு.
(மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
¤ First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும்.
¤ அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.
■ Second Group வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு:
மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது
■ Third Group - வர்த்தகம் கணக்குபதிவியியல்,  பொருளாதாரவியல் (Commerce, Accountancy, Economics) பிரிவு:
B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.
■ வரலாறு, பொருளாதாரவியல்:
எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன
■ Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
II. *பட்டய படிப்பு* (டிப்ளோமா):
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.
டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).
*12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும்*.
■ டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம்.
¤ தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.
III. *சான்றிதழ் படிப்பு (ITI):*
● இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள்.
இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது.
உடனடி வேலை வாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.
● 10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு
*(கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)*
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.
S.சித்தீக்.M.Tech
(தவ்ஹீத் ஜமாஅத் இணையதளம்)

54 அத்தியாவசிய மருந்துகளின் விலை 55% குறைப்பு


நாட்டில் 54 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையை தேசிய மருந்தக விலை ஆணையம் 55 சதவீதம் குறைத்துள்ளது.
சந்தைகளில் வந்துள்ள புதிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் விலை 55 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 
இந்த விலை குறைப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்தக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 11 May 2016

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் 11 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடியில் காண்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாற்றாக புகைப்படம் உள்ள கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிருபிக்க பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.
அந்த ஆவணங்கள் வருமாறு:-
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய மாநில அரசு சார் பொது நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள், வங்கி அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள், பான்கார்டு, என்.டி.ஆர். கீழ் ஆர்.ஜி.ஐ. அளிக்கப்பட்ட ஸ்மார்டு கார்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை பணிநிலை அட்டை, தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்குச்சீட்டு மற்றும் பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை, உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள் ஆகிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.
வாக்காளரின் அடையாளம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலம் நிறுவப்பட்டால் அதிலுள்ள எழுத்தர் பிழைகள், எழுத்துப்பிழைகள் போன்றவை புறக்கணிக்கப்படலாம். மேலும் மற்றொரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அட்டை காண்பிக்கப்பட்டால் அவ்வாக்காளர் வாக்களிக்க வரும் போது வாக்குச்சாவடிக்கு தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இருக்கும் பட்சத்தில் அவ்வகையான புகைப்பட வாக்காளர் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
புகைப்பட ஒற்றுமையில்லாத சூழலில் தங்கள் அடையாளத்தை நிருபிக்க இயலாவிட்டால் மேற்கண்ட மாற்று ஆவணங்களில் ஒன்றை வாக்காளர் காண்பிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப்படி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் வாக்காளராக பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே அடையாளம் காணப்படுவர் வேறு எந்தவித அடையாள ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த இளம்பெண் சித்ரவதை செய்து கொலை


ரியாத்: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அந்த வீட்டின் முதலாளியால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் தபீர்புரா பகுதியில் இருக்கும் ஷா காலனியை சேர்ந்த அசிமா காத்தூன் என்பவர் ஏஜெண்ட் மூலம் வீட்டு வேலை செய்வதற்கான விசா வாங்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது முதலாளியான அப்துல் ரஹ்மான் அலி முகமது என்பவர்  அசிமாவின் விசா காலமான 90 நாட்கள் முடிந்த பிறகு சட்டவிரோதமாக அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். ரியாத் சென்றதில் இருந்து அசிமா பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் அவரது குடும்பத்தார் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போன் செய்த அசிமா முதலாளி தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்வதாகவும், தன்னை இங்கிருந்து எப்படியாவது காப்பாற்றுமாறும் கூறி கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் ரியாத்தில் இருந்து அசிமாவின் வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அசிமா இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்டு தருமாறு தெலுங்கான அரசு மத்திய அரசிற்கு வலியுறுத்தியுள்ளது

Tuesday, 10 May 2016

பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவத்தினால் விசாரணையென்ற பேரில் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீன சிறார்கள் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்


பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவத்தினால்  விசாரணையென்ற பேரில்  ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீன சிறார்கள் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
இதில் இரிக்கின்ற தனது உறுவுகளை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு சில குடும்பங்கள் பல  நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி வருகின்றனர் .   ஒரு சில காட்சிகள் இவை .
#இறைவா_எமதுசமூகத்தைக்_காப்பாற்றுவாயாக !
Hafeesul haq

அமெரிக்காவில் இயர் புக்கில் மாணவியின் பெயரை ஐ.எஸ் தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்ட பள்ளிக்கூடட்ம்.


கலிபோர்னியாவை சேர்ந்த  ராஞ்சோ குகமோன்கா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வரும் இஸ்லாமிய மாணவி பாயான் ஸ்கலிப் இவருக்கு வழங்கப்பட்ட இயர் புக்கில்  இவரது பெயருக்கு பதிலாக ஐ.ஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிட பட்டு இருந்தது.
இந்த புகைப்படத்தை மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.அதில் மாணவி ஹிஜாப். அணிந்து சிரித்தபடி உள்ளார்.அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிலிப்ஸ் என  குறிப்பிடபட்டு உள்ளது.    இதனால் நான் மிகவும்  வெறுப்படைந்து உள்ளேன். எனக்கு இது  காயத்தை ஏற்படுத்தி உள்ளது.  லாஸ் ஓசஸ் ஹை ஸ்கூல்  இயர் புக்கில்  இவ்வாறு குறிப்பிடபட்டு இருந்தது வெட்கமாக உள்ளது என தனது பேஸ் புக்கில் பாயான் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிக்கூட்டத்தில் இருந்து என்னை வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.இதை தைரியமாக ஒரு எழுத்து பிழை  எந்ன கூறலாம். இது உண்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.என தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும் போது பாயானது பெயர மற்ற மாணவி பெயருடன் சேர்ந்த்து கலந்து தவ்றுதலாக் வந்து விட்டது  இந்த் பல்ளிக்கூடம் அவரௌக்கு உத்ரவாதம் வழங்குகிறது.இதற்கு ஊழியர்கள் சார்பில் வருந்துகிறோம் என கூறி உள்ளனர் மேலும் அந்த இயர் புக்கை திரும்ப வாங்கி கொண்டனர்.

Saturday, 7 May 2016

இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த#ஹமாசின்_சுரங்கப்பாதை .


இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த
#ஹமாசின்_சுரங்கப்பாதை .
  நேற்று இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலிய எல்லைக்குள் 28 ( M ) ஆழத்தில் ஹமாஸின் சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளது  . இதனால்  பீதியடைந்துவரும் இஸ்ரேலிய  பாதுகாப்பு அமைச்சு .
ஹமாஸ் அரசியலில் தலைவர் இஸ்மாயீல் #ஹனியா கூறுகையில்
#இஸ்ரேலின் எவ்வளவு (Modern Technologi )  வந்தாலும் இஸ்ரேலால் எமது சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க முடியாது . இது இஸ்ரேலைத் தாக்குவதற்கான ஒரு சுரங்கப்பாதையல்ல ! பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வெகு தூரம் இல்லை "
என்று தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி கிராமத்தில் அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் ரூ.49.07 லட்சம் பறிமுதல்.


தஞ்சாவூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 49.07 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி கிராமத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில், செலவினப் பார்வையாளர் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று, திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 49.07 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குண்டு வைப்போம் : பத்திரிக்கை.காம் பதிவுக்கு பாஜக கல்யாண் ராமன் கமெண்ட்.....!!


நாகர்கோவிலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டம் கூடவில்லை என்றும் நாற்காலிகள் காலியாக இருந்ததாகவும் பத்திரிக்கை.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்திக்கு பின்னூட்டம் செலுத்தியுள்ள பாஜக மாநில நிர்வாகியும், அண்மையில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தவருமான கல்யாண் ராமன்....
அமித் ஷா கலந்து கொள்ளும் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தால் பாஜகவினர் வெறியோடு வேலை செய்வார்கள் என்றும், 10 துலுக்கன்களையும் உள்ளே புடிச்சி போட்ட மாதிரியும் இருக்கும் என்று கமெண்ட் செய்துள்ளார்.
கல்யாண் ராமனின் சட்டத்திற்கு எதிரான இந்த கருத்திற்கு சமூக வலைத்தளங்கள் முழுவதும் கடுமையான கண்டனம் எழுந்து  வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் விரைந்து கல்யாண் ராமனை கைது செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் வெளியீடு : பத்திரிக்கை.காம்
ஆதாரம் : https://www.patrikai.com/well-bomb-bjp-kalyanraman-reaction-to-the-news-magazine-dot-com/

டில்லியில் குர்ஆன் வசனத்தை பிரிண்டு செய்து உடை தயாரிக்கிறார்கள்


டில்லியில் குர்ஆன் வசனத்தை பிரிண்டு செய்து உடை தயாரிக்கிறார்கள்

வன்மையாக கண்டிக்கின்றோம்”
டில்லியில் குர்ஆன் வசனத்தை பிரிண்டுபண்ணி உடை தயாரிக்கிறார்கள் 
அதை தடுக்க உங்கள் கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
டில்லியில் குர்ஆன் வசனத்தை பிரிண்டுபண்ணி உடை தயாரிக்கிறார்கள்
அன்பு உறவுகளே!

சவூதியில் மதம் கடந்த மனிய நேயம்! SDPI கட்சி முயற்சியில் சவுதி அரேபியாவில் இறந்த பெரம்பலூர் வாலிபரின் உடல் விமானத்தில் திருச்சி வந்தது!

செம்பட்டு, மே.7-

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெருமத்திநல்லூரை சேர்ந்த ராசலிங்கத்தின் மகன் சின்னதுரை (வயது 24). இவர் சவுதிஅரேபியாவில் ரியாத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி சாலை விபத்தில் இறந்தார். அவரது உடலை பெற்றுத்தர கோரி இந்திய தூதரகத்தினரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முறையிட்டனர். இதையடுத்து தூதரக அதிகாரிகள் அங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு சின்னதுரையின் உடலை பெற்று சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். இதன் மூலம் சின்னதுரையின் உடல் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தது. விமானநிலையத்தில் உடலை அவரது உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பெற்று வேன் மூலம் சொந்த ஊர் கொண்டு சென்றனர்.
இது பற்றி வி.களத்தூர் சனா முஹம்மது பாருக் இடம் கெட்ட போது
நமது ஊருக்கு அருகில் உள்ள நல்லூர் கிராமத்தின்  சின்னதுரை என்ற 24 வயது சகோதரர் இரண்டு வருடமாக சவுதியில் டிரைவராக பணிபுரிந்து கடந்த ஏப்ரல் 14 அன்று வாகன விபத்தில் மரணமடைந்தார். சவுதியில் உள்ள இந்திய சோசியல் போரம் (ISF) முயற்சியால் அவரது உடல் இன்று திருச்சி கொண்டுவரப்பட்டது.
விமான நிலையத்தில் SDPI கட்சி திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்றுகொண்டனர்.  எங்களது அவசர ஊர்தி வாகனத்தில் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம். ஊருக்கு வெளியே காட்டில் தனியாக ஒரு வீடு. உடலை இறக்கினோம். உறவினர்கள் கதற தொடங்கினார்கள். நாங்கள் விடைபெறலாமா என்று வினவினோம்? இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டும். இங்கு வாகன வசதி இல்லை ஆதலால் தாங்கள் காத்திருந்து இடுகாடு வரை உடலை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள்.
நாங்களும் காத்திருந்தோம். சிறிது நேரம். அதிக நேரமாகிவிட்டது. அந்த சிறிய கிராமத்தில் பள்ளிவாசல் இல்லாததால் ஜும்மா தொழுக முடியவில்லை. உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இடுகாடு வரை உடலை ஏற்றிக்கொண்டு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினோம். வரும் வழியில் சின்னாறு பள்ளியில் தொழுதுவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிடும் போது சரியாக மணி மாலை நான்கு. இறந்தவரின் தந்தை பாமக கட்சிக்காரர். அவரின் சட்டைப்பையிலும், வீட்டின் கொடிகம்பத்திலும் அது பிரதிபலித்தது. இறந்தவரின் சித்தப்பா பாஜக வின் மாவட்ட பொறுப்பில் உள்ளவர். அவரிடம் ஆறுதலாக பேசிவிட்டு கிளம்பினோம். பலரும் இணக்கமாகவும், நன்றியுடனும் பேசினார்கள்.
SDPI கட்சியின் சாதி, மதங்களை கடந்த செயல்பாடுகளுக்கும், கட்சி விருப்பு, வெறுப்பற்ற பார்வைக்கும், மனித நேயத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் இந்த சம்பவம் ஒரு சிறு துளிதான்.

சவுதி அரபியா விபத்தில் 4 உம்ரா யாத்திரிகர்கள் பலி, 45 பேர் காயம்...!


உம்ரா யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்ற  பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் பலியான நால்வர் தவிர 45 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்களை சவுதி அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

Friday, 6 May 2016

குர்ஆனின் கூறும் யூனுஸ் நபியின் வரலாற்றைமெய்பித்த அதிசய மனிதர் லுயிகி மார்கியூஸ்மூன்று தினங்கள் மீனின் வயற்றில் வாழ்ந்து மீண்டு வந்த அதிசய மனிதர் .


ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது மோசமான வானிலை காரணமாக மாயமானார்.
தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கில கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர்.
தான் 72 மணி நேரம்  திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குர் ஆன் கூறும் யூனுஸ் நபியின் வரலாற்றை நினைவு படுத்துகின்றது
சில தினங்கள் நபி அவர்கள் மீனின் வயிற்றில் வாழ்ந்த வரலாற்றை திருகுர்ஆன் குறிப்பிடுகிறது இனி யூனுஸ் நபியின் வரலாற்றை பற்றி குர்ஆன் கூறுவதை கேளுங்கள்
'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.
அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'
-குர்ஆன் 37: 143,144,145
யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.
நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.
அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.
ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.
இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.
ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.
இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.

மனித மனங்களை வென்று வரும் இஸ்லாம் 14 மாற்று மதத்தவர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர் .


உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல்லாயிர கணக்கான மக்கள் இஸ்லாத்தில் இணைந்து வருகினற்னர்

இஸ்லாம் என்னும் வெளிச்சத்தை எதிரிகள் அகற்ற நினைத்தாலும் இறைவன் அதை முழுமைபடுத்துவான என்ற இறைவனின் வாக்கை மெய்பிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது
சில தினங்களுக்கு முன்பு துபை இஸ்லாமிய தகவல் மையத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்த 14 சகோதரர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்
அந்த அழகிய காட்சியை விளக்கும் படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள் .

இஸ்லாமிய குற்றவில் சட்டங்களை நடை முறை படுத்த வேண்டும் பாஜக M.P. யும் நடிகருமான சுரேஷ்கோபி வேண்டு கோள்.


அண்மையில் கேரள சட்ட கல்லுரி மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்ய பட்டு படு கொலை செய்ய பட்டார்

இது கேரள மக்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கியது
கொலை செய்ய பட்ட மாணவி ஜிஷாவின் தாயரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரபல  நடிகரும் பாஜக வின் ராஜ்ய சபை உறுப்பினருமான சுரேஷ் கோபி கூறும் போது
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறை படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்
ஒரு பாஜக M.P யே இஸ்லாமிய சட்ங்கள் தான் இறுதி தீர்வு என கூறியிருப்பது  கேரள மக்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது .

இஸ்லாத்தை நோக்கி படையெடுத்த பிரிட்டன் – அதிர்ந்து போன கிறிஸ்தவ உலகம்..!


ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள் மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!
தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர். ”இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்” என்ற தலைப்பில் “The Independent” என்ற பிர ட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலைவெளியிட்டுள்ளது.
ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு:
கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters”என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்தஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிக்கு 4000. எனவே “The Independent”நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள் தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில், நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன் மடங்காக இருக்கும் என தெரிவித்தார்.
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உந்தப்பட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறிஸ்தவ உலகம் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழு வீச்சில் செயற்பட்டு வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்ற CIA, இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என பத்திரிகையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர்,“Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு சம்பந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்தவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறிஸ்தவர்களை தக்க வைக்க முடியாது என்பதை கிறிஸ்தவ மிஷனரிகள் நன்றாக உணர்ந்துள்ளன. பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறிஸ்தவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழ வைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலர்களுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறை வேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதிகூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்து தான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று, தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்கு தலைவியாக உள்ளார். இவர்களைப் போன்ற பலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர் வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வருகின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில்ஸ..பவுல் மார்ட்டின்-எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனைப்படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாதத்திற்குவரமால் ஓடி ஒளியும் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது. லண்டனைச் சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறிஸ்தவர்கள்குர் னின் அறிவியல் அற்புதங்களைபார்த்து ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி விடுவார்கள் எனபயந்து போய் தந்திரங்கள் செய்துதப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி -நான் ஒரு கிறிஸ்தவர், கத்தோலிக்க பள்ளியில் படித்தேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனைப் படிக்கும் போது ஏசு,மேரி,தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறிஸ்தவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்கையானது என கருதுகின்றேன்(அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால்,தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்.
கதீஜா ரியோபுக்- ”நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வாரா வாரம் சர்ச்சிற்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில்
கிடைக்கவில்லை,ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனதுதாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ள முடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்.”
ஹனா தஜீமா- ”நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவதாக இருந்தது. எனவே, ஆழ்ந்த மதப்பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்.”
இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்துச் சொன்னால் இஸ்லாத்தை ஏற்க கோடிக் கணக்கான கிறிஸ்தவர்கள் இருகின்றனர், இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறிஸ்தவ மக்களுக்கு எடுத்து சொல்வது தான் மீதமிருக்கும் வேலை.
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். – பிரிட்டிஷ் பிரதமர்.
ஐக்கிய இராச்சியத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ஹலால் உணவே சிறந்தது எனவும் ஹலால் முறைப்படி உயிரினங்களை அறுப்பதற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படமாட்டாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற சிறந்த இஸ்லாமிய ஊடகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்சியில் தெரிவித்தார்.
லண்டனில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இல்லாமல் செய்ய பிரித்தானிய நீதித்துறைக்கு கட்டளை இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த ஒரு முஸ்லிமும் வெறுமனே இஸ்லாத்தை பின்பற்றவில்லை மாறாக முழு நம்பிக்கையுடன் அவர்களுடைய வாழ்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும், வாழ்வின் இலட்சியங்களை அடைந்து கொள்ளவும் பின்பற்றுகின்றார்கள் என கூறினார்.
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். நான் பிரதமராக இருக்கும் வரையில் ஹலால் உணவே பிரதானமானதாக இருக்கும் எனவும் அதுவே பிரித்தானியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் என உறுதியளித்தார்.
கடந்த மாதம் டென்மார்க்கில் ஹலால் உணவு தடை செய்யப்பட்டுள்ளபோதும் பிரித்தானிய பிரதமர் மிகவும் துணிச்சலாக ஹலால் உணவுக்கு ஆதரவளித்து பாராட்டத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.
”இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.” (அல் குர்ஆன் 5: 8).

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது

சென்னை, 

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி நிறைவு பெற்றது. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 8.39 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-வகுப்பு பொதுத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்கள் எழுதினர். எழுதிய மாணவர்கள் மதிப்பெண்கள் விபரங்களை தெரிந்துக் கொள்ளவும், உயர்கல்விக்கு சேர்வதிலும் ஆர்வமாக உள்ளனர். தற்போது பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 17-ம் தேதியும், 10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 25-ம் தேதியும் வெளியாகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வரும் 17-ம் தேதி காலை 10:31 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வரும் 25-ம் தேதி வெளியாகிறது. காலை 9:31 முதல் 10 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தேர்வு முடிவுகள் www.tnresluts.nic.in.,  www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியாகிறது www.dge2.tn.nic.in என்ற இணைய தளத்திலும் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். 
அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday, 5 May 2016

மக்காவுக்கு அருகில் சவூதி படை அதிரடி - 4 தீவிரவாதிகள் பலி.


மெக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
ஐ எஸ் அமைப்புக்கு எதிராக சவுதி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத வலையமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் அந்த உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பலமணி நேரங்கள் மோதல்கள் நடைபெற்றன என்று சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த மோதல்கள் மெக்காவின் புறநகரில் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்குள்ளே ஷியா பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்களில் தாங்கள் தாக்குதலை நடத்தியதாக ஐ எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது, சிரியா அல்லது இராக்கில் போரிடப் போவது ஆகியவைக்கு எதிராக கடுமையான புதிய நடவடிக்கைகளை அண்மையில் சவுதி அரேபிய அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர்.

ஐ.சி.எஸ்.இ. 10–வது, 12–வது வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு.


மாற்றம் செய்த நாள்: வெள்ளி, மே 06,2016, 12:00 AM IST பதிவு செய்த
சென்னை, 
ஐ.சி.எஸ்.இ. கல்வி முறையில் 10–வது வகுப்பு படித்த மாணவ–மாணவிகளுக்கு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். 12–வது வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இந்த தேர்வை 42 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவ–மாணவிகள் முடிவை இணையதளத்தில் (www.cisce.org.) காணலாம். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக ஐ.சி.எஸ்.இ. நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

திருக்குர்ஆன் தஜ்வீத் போட்டி - 3 வயது குழந்தை சபா பேகம் சாதனை....!!


ஹைதராபாதை சேர்ந்த இக்குழந்தை, குர்ஆனை தஜ்வீத் முறைப்படி மனனம் செய்துள்ளதுடன் தஜ்வீத் மற்றும் கிராத் குறித்த சட்டங்களையும் முழுமையாக விளக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.
அல்லாஹ் இக்குழந்தைக்கு மேலும் மார்க்க ஞானத்தையும் வழங்கிட உதவி புரிவானாக...

கேரளாவில் தலித் மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து இஸ்லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டம் ....


கேரளாவில் தலித் மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து இஸ்லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டம் ....
சமீப காலத்தில் நடந்த மிகக் கொடூர கொலை இதுவாகத்தான் இருக்கும்.!!
கேரளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது பாலியன் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப் பட்ட செய்தி இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது.!!
தன் தாயுடன் வசித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வியாழன் அன்று தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய அவருடைய தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானர்.!!
தற்சமயம் மனம்பிழந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.!!
கொலையான மாணவியின் உடலில் 30 இடங்களில் கடுமையான காயம் பட்டுள்ளது. இரு முலைகளும் அறுக்கப்பட்டுள்ளன. கூர்மையான ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அவருடைய அடிவயிறு பகுதியில் கடுமையாக சிதைக்கப்பட்டு, குடலை உருவி வெளியே போட்டிருக்கின்றன. கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.!!
அதிகமாக பகிருங்கள்..!!!!
குறிப்பு :
எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளாத நிலையில் அந்த மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டம் ...

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் வழங்கவேண்டிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்
* அரசு கேபிள் டிவி சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் விலையில்லா செட் ஆப் பாக்ஸ்
* தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதரார்களுக்கும் விலையில்லா கைபேசி
* தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்க நடவடிக்கை
* மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம்
* பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை
* 2016-2021 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
* மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம்
* பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்புள்ள கோ-ஆப்டெக்ஸ் கூப்பன்
* ஏழை எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெற அம்மா வங்கி அட்டை வழங்கப்படும்
*காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை
* சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்
* லஞ்சம் - ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்
* அங்கன்வாடி மையத்துக்கு கேஸ் அடுப்பு, குக்கர் வழங்கப்படும்
* மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படும்
* தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்
* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்
* மீனவர்களுக்கு தனி வீடு, மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
* மீன்பதன பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது
* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்
* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்
*மகப்பேறு உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்
* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்
* மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய சேவை
* நூறு யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் கட்டணமில்லை
* வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு
* பேறுகால விடுப்பு 9 மாதகாலமாக அதிகரிக்கப்படும்
* பேருந்து நிலையம், வணிக வளாகம் மற்றும் பூங்காக்களில் இலவச வைஃபை வசதி
* மாநில அரசு ஊழியர்களில் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்
* அம்பேத்கரின் கொள்கையைப் பரப்ப ரூ.5 கோடியில் அம்பேத்கர் அமைப்பு உருவாக்கப்படும்
* மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைகால நிவாரண உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்
*நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வரை இலவசம்
* வழக்கறிஞர்களுக்கான சேமநலநிதி ரூ.17 லட்சமாக உயர்த்தப்படும்
* அம்மா குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்

வரலாற்றில் முதல் முறையாக லண்டன் நகர மேயராக சித்தீக் கான் என்ற முஸ்லிம் பொறுப்பேற்கிறார் .


பிரிட்டனில்  இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது
அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு அரசு பொறுப்புகளுக்கு முஸ்லிம்கள் தேர்வு செய்ய பட்டு வருகின்றர்
அதன் தொடர்ச்சியாக லண்டன் நகரின் மேயர் பதவிக்கு இன்று நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் சித்தீக் கான் முஸ்லிம் சகோதரர் வெற்றி பெறுவது உறுதி செய்ய பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது
தேர்தலுக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகள்
வரலாற்றில் முதல் முறையாக லண்டன் நகர மேயாராக தொழிலாளர் கட்சியை சார்ந்த சித்தீக் கான் என்ற இஸ்லாமிய சகோதரர் பதவி ஏர்ப்பார்
என்ற தகவலை தெரிவித்துள்ளன

தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கண்ணீர் சிந்தி அழுத தந்தை.


தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கண்ணீர் சிந்தி அழுத தந்தை.
உயர்தரப் படிப்பை முடித்து வெளியாகும் தனது கடைசிமகனாகிய "ராகான்" இன் பட்டமளிப்பு விழாவில் கலந்து மகன் பட்டம் பெறும்பொழுது தேம்பித் தேம்பி அழுத சம்பவமொன்று  நேற்று முன் தினம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மாநகரின் பாடசாலையொன்றில் நடைபெற்றது.
அந்த ராக்கானின் தந்தை யாரென்றால் உலக முஸ்லிம்களை எதிரிகளின் சதியிலிருந்து பாதுகாக்க துடியாய்த் துடிக்கும் 83 வயதிலும் இளம் வாலிபனை விட வீரமாகவும் விவேகமாகவும் செயல் படும் சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னராகிய சல்மானே.
குறித்த விழாவில் ஓரு சாதரண மாணவனின் தந்தையாக உரையாற்றிய மன்னர் : இவ்விழாவில் ஒரு மாணவனின் தந்தையாக கலந்து கொள்வதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் , நான் ராக்கானின் தந்தையாக இருப்பினும் நீங்கள் அனைவரும் எனது பிள்ளைகளே, ராக்கானை விட நீங்கள் நன்றாகப் படித்து பல பட்டங்களைப் பெற்று நம் நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் பணிக்குச் சென்ற 5,875 இந்தியர்கள் மரணம் - மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்.


கடந்த 2015 ஆண்டில் மட்டும், வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 
மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சவுதி அரேபியாவில் மட்டும் அதிகபட்சமாக இரண்டாயிரத்து 691 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,540 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாக வி.கே.சிங் குறிப்பிட்டார். இதேபோன்று குவைத்தில் 611 இந்திய தொழிலாளர்களும், ஓமனில் 520 பேரும், கத்தார் நாட்டில் 279 பேரும், பஹ்ரைன் நாட்டில் 223 பேர் என வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  
இதில் பெரும்பாலானோர் இயற்கையான மற்றும் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு ஆபத்தானதா வாட்ஸ்-அப்?


வாட்ஸ்-அப் என்க்ரிப்ஷன் அப்டேட் ஆகத் தொடங்கிய நாளிலிருந்தே அது இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே வாட்ஸ்-அப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் பரவின. அதுவா எப்ப நடக்க? இப்பவே தடை பண்ணுங்க என நீதிமன்ற படி ஏறியிருக்கிறார் ஒரு சமூக ஆர்வலர். வாட்ஸ்-அப் என்க்ரிப்ஷன் மிகவும் ஆபத்தானது என்பது அவரின் வாதம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த என்க்ரிப்ஷனில்?
எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் கீழ் நீங்கள் மெசேஜ், படம், வீடியோ, டாக்குமென்ட் என எந்த எலக்ட்ரானிக் மெசேஜ் அனுப்பினாலும் அதை மற்ற யாராலும் படிக்க முடியாது. மறுமுனையில் இருப்பவர் மட்டுமே படிக்க முடியும். உண்மையில் இந்த என்க்ரிப்ஷனை 2014-லிலேயே தொடங்கிவிட்டது வாட்ஸ்-அப். அப்போது மெசேஜ்க்கு மட்டும் இருந்த என்க்ரிப்ஷன் இப்போது எல்லாவற்றுக்கும் பரவியிருக்கிறது.
இந்த என்க்ரிப்ஷனுக்காக சிக்னல் புரோட்டாகாலை பயன்படுத்துகிறது வாட்ஸ்-அப். இதன் மூலம் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜும் ஒரு ரகசிய மெசேஜ் கீ தாங்கிச் செல்லும். ஒவ்வொரு மெசேஜுக்கும் ஒவ்வொரு கீ என்பதால் இவற்றை உடைப்பது மிகவும் சிரமம். அப்படியே செய்தாலும் அந்த கீ-க்கான துண்டு செய்தி மட்டும்தான் கிடைக்கும். முழு உரையாடலும் கிடைக்காது. இப்படி கீ தாங்கிச் செல்வதால் முன்பை விட மெசேஜ் கொஞ்சம் மெதுவாகவே சென்று டெலிவர் ஆகும்.
இதை நீங்கள் செக் செய்தும் பார்க்கலாம். மறுமுனையில் இருப்பவரின் பெயரை க்ளிக் செய்தால் ஒரு 60 இலக்க எண்ணும், QR கோடும் காட்டும். அதனை நம் மொபைலில் இருந்து ஸ்கேன் செய்தால் க்ரீன் டிக் தோன்றி என்க்ரிப்ட் ஆனதை உறுதிப்படுத்தும்.
இந்த என்க்ப்ரிஷன் திரும்பி வர முடியாத ஒரு வழிப்பாதை. இதற்குள் நீங்கள் நுழைந்து விட்டால் திரும்ப பழைய செட்டிங்கிற்கு வரமுடியாது. அதே சமயம் கோடிக்கணக்கான பேர் இதை பயன்படுத்தினால் அனைத்தும் சிதம்பர ரகசியமாகிவிடும்.

சவுதியில் பதிவு செய்யப்படாத STC சிம்கள் முடக்கப்படும்.!விழிப்புணர்வு தகவல்!


உரிய ஆவனங்கள் சமர்ப்பித்து, கைரேகைகள் பதிவு செய்யப்படாத சிம்காட்கள் முடக்கப்படும் என சவுதி அரேபியாவின் மிகப் பெரும் தொலைபேசி வலையமைப்பான சவுதி டெலிகொம் தெரிவித்துள்ளது.
சவுதி டெலிகொம் ( STC) உப தலைவர் பைசல் அல் ஜபர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
தற்போது அனைத்து (STC) சிம் பாவனையாளர்களுக்கும் சிம்களை தங்களது பெயரில் பதிவு செய்யுமாறும், கைரேகைகளை பதிவு செய்யுமாறும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது அதனை ஒரு பொருட்டாக கருதாத அனைத்து சிம்களும் முடக்கப்படும். ஆகவே உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உங்களது சிம்களை உங்கள் பெயரில் பதிவு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
சவுதியில் அதிகமானோர் Black Market இல் பதிவு செய்யப்படாத சிம்களைப் பெற்று அதனை தனது சொந்தப் பெயரில் மாற்றாது பாவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, 4 May 2016

கை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை.


சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது.
பிறந்த அந்த குழந்தைக்கு பொதுவாக கை, கால்களில் இருக்கும் 20 விரல்களுக்கு பதிலாக மொத்தம் 31 விரல்கள் இருந்தன.
2 கைகளில் 15 விரல்களும், கால் பாதங்களில் 16 விரல்களும் உருவாகி இருந்தன. இவற்றில் ஒரு கையில் 8 விரல்களும், மற்றொன்றில் 7 விரல்களும் உள்ளன. கால்களில் தலா 8 விரல்கள் இருக்கின்றன. ஆனால் கை, கால்களில் பெருவிரல்கள் இல்லை.
இக்குழந்தையை ‘ஹாங்காங்’ என அழைக்கின்றனர். இதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, குழந்தையின் தாய்க்கும் இது போன்று கால், கைகளில் அதிக அளவில் விரல்கள் உள்ளன. எனவே, மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கை, கால்களில் அதிக விரல் இருப்பதால் குழந்தை ஹாங்காங் மிகவும் சிரமப்படுகின்றான். எனவே சிகிச்சை மூலம் அதை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். குழந்தை ஹாங்காங்கின் தந்தை ஷோயு ஷெஸ்லின் ஏழை. எனவே தனது மகன் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்று முன் : இஸ்லாத்தை இழிவாகப் பேசிய 2 ஹிந்து ஆசிரியைகள் கைது


சற்று முன் : இஸ்லாத்தை இழிவாகப் பேசிய 2 ஹிந்து ஆசிரியைகள் கைது
6 மாத சிறை தண்டனை.
வங்கதேசத்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிகவும் கேவலமாகப் பேசிய 2 ஹிந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை கொடுக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
A court in southern Bangladesh sentenced two Hindu schoolteachers to six months in jail for making “abusive” remarks about Islam that led a mob to attack their school, a magistrate said Tuesday

மார்புகளை அறுத்து, குடலை உருவி… கேரள சட்டக் கல்லூரி மாணவியின் கொடூர கொலை


சமீப காலத்தில் நடந்த மிகக் கொடூர கொலை இதுவாகத்தான் இருக்கும். கேரளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது பாலியன் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப் பட்ட செய்தி இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
தன் தாயுடன் வசித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வியாழன் அன்று தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய அவருடைய தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானர். தற்சமயம் மனம்பிழந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலையான மாணவியின் உடலில் 30 இடங்களில் கடுமையான காயம் பட்டுள்ளது. இரு முலைகளும் அறுக்கப்பட்டுள்ளன. கூர்மையான ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அவருடைய அடிவயிறு பகுதியில் கடுமையாக சிதைக்கப்பட்டு, குடலை உருவி வெளியே போட்டிருக்கின்றன. கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை.


Tuesday, 3 May 2016

பேராவூரணி தொகுதியில் அஇஅதிமுக வெற்றிபெற அதிக வாய்ப்பு :: தந்தி தொலைக்காட்சியின் "மக்கள் மனதில் யார்-2016" தேர்தல் கருத்துக்கணிப்பில் தகவல்.


தமிழகத்தின் முண்ணனி தொலைக்காட்சிகளில் ஒன்றான தந்தி டிவி "மக்கள் மனதில் யார்-2016" என்ற பிரம்மாண்ட தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி கடந்த சில நாட்களாக மாவட்டவாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என ஒளிபரப்பப்பட்டுவருகிறது.
இந்தவரிசையில் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. இதன்படி,
அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு 43% முதல் 48% ஆதரவு பெற்று முன்னிலையில் உள்ளார், இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை திமுக வேட்பாளர் நா.அசோக்குமார் 37% முதல் 43% வரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தமயந்தி திருஞானம் 7% முதல் 13% வரை ஆதரவு பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும் பேராவூரணியில் போட்டியிடும் இதர வேட்பாளர்கள் 2% முதல் 8% வரை ஆதரவு பெற்றுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராஜனுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், திமுக பல ஆண்டுகளுக்கு பின்னர் பேராவூரணியில் போட்டியிடுவதால் இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக இக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்புகள் தந்தி தொலைக்காட்சியில் இரவு 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நெஞ்சை நெகிழவைக்கும் அற்புத நிகழ்வு - 9 பேரை இஸ்லாத்திற்கு அழைத்துவந்த ஊமைச் சகோதரி!


நீங்கள் பார்க்கும் புகைப்படம் நமது மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டு நம்மை உண்மையாக நெகிழவைக்கும் ஒரு அழகான புகைப்படம்.
ஆம், இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த சகோதிரியால் பேசவும் முடியாது. செவியுறவும் முடியாது 
ஊமையாகவும் செவிதிறனை இழந்தவராகவும் உள்ள அந்த சகோதிரியின் அளபெரிய முயற்சியினால் 9 சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர் 
இதை குறிப்பிடும் போது தொகுப்பாளர் தன்னையும் அறியாமல் அழுது வீடுகிறார் 
அனைத்து திறனையும் பெற்றிருக்கும் நாம் மனிதகுலத்தை நரகபடுகுழியில் இருந்து பாதுகாக்கும் உன்னத பணியில் அலட்சியம் காட்டி கொண்டிருக்கிறோம்
ஆனால் பேசவும் முடியாத செவியுறும் திறனும் இல்லாத இந்த சகோதிரி தனது முயர்ச்சியினால் ஒன்பது பேரை இஸ்லாத்தை நோக்கி அழைத்து வந்திருக்கிறார் நாம் வெட்க படவேண்டும் என்று கூறியாவாறு அழுது விடுகிறார் 
இறைவன் நாடினால் பேசவே தெரியாத எந்த ஆற்றலும் இல்லாத சாதரண மனிதர்கள் வழியாக கூட இறைவனால் இஸ்லாத்தை மக்களை நோக்கி கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு உரிய அற்புத சான்றுகளில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

குவைத்தில் வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்திற்கு வரிவிதிக்க நாடாளுமன்றத்தில் MP Faisal Mohamed Al-Kandari மீண்டும் வலியுறுத்தல்:!

குவைத்:

   குவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர் தங்களுடைய நாட்டிற்கு 
அனுப்பும் பணத்திற்கு வரி விதிப்பு செய்ய நாடாளுமன்றத்தில் MP Faisal Mohamed Al-Kandari மீண்டும் நாடாளுமன்றத்தில் இன்று  வலியுறுத்தல்.
    இதன்படி 100 KD அனுப்பினால் 2% 100 KD முதல் 499 KD வரை 4% 500 KD முதல் அதற்கு மேல் அனுப்பும் பணத்திற்கு 5 % விதிக்கவும் அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    வெளிநாட்டினர் கடந்த  5 ஆண்டுகளில் தங்களுடைய நாட்டுக்கு அனுப்பும் 19 பில்லியன் குவைத் தினார் என்பது குவைத்திற்கு ஒரு ஆண்டிற்கான நிதி நிலை திட்டத்தை விட அதிகம் என்றும் இதனால் இந்த வரிவிதிப்பு மூலம் குவைத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
      கடந்த வருடம் இதே தீர்மானத்தை 
இரண்டு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்கள் ஆனால் அந்த 
நேரத்தில் இதற்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.
  ஆனால் தற்போது வளைகுடா நாடுகளில் நிலவிவரும் எண்ணெய் விலை சரிவு சம்மந்தப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த புதிய வலியுறுத்தலுக்கு அரசு என்ன முடிவும் எடுப்பார்கள் என்று தெரியவில்லை.
  ஆனால் இதை நடைமுறைக்கு கொண்டு வந்தால் சாதாரண தொழிலாளர் பெருமளவிலாக பாதிக்கப்படுவார்கள் என்பதில் எந்த  சந்தேகமில்லை.

Monday, 2 May 2016

பேராவூரணியில் வேட்புமனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலதண்டாயுதம் :: தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என வேட்புமனுவில் தகவல்.


பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
எதிர்வரும் மே.16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத்தேர்தலை
சந்திக்கவுள்ள நிலையில்
வேட்புமனு தொடங்கி பல
நாட்களாகியும் யாரும்
வேட்புமனு தாக்கல்
செய்யாமலே இருந்தனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேராவூரணியில்
போட்டியிடும் பாலதண்டாயுதம் தனது வேட்புமனுவை பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் தேர்தல்
நடத்தும் அலுவலரிடம் சமர்பித்தார்.
வேட்புமனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் பாலதண்டாயுதம் வேட்பாளருக்கான
உறுதிமொழியையும்
எடுத்துக்கொண்டார்.
பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின்
பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் பாலதண்டாயுதம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என
தெரிவித்துள்ளார்.
பேராவூரணியை
அடுத்த கழனிவாசலை சேர்ந்த 37 வயதாகும் இவர், SSLC வரை படித்துள்ளார். மேலும் இவரது கையிருப்புத்தொகை ரூபாய் 50,000 எனவும், இவரது துணைவியின் கையிருப்புத்தொகை ரூ.10,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது வங்கி கணக்கில் ரூ.6500 உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது துணைவி ரூ.1,00,000 அளவிற்கு நகைகள் வைத்துள்ளதாக இந்த வேட்புமனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்திர்காக தனது கண்ணை இழந்த ஆப்ரிக்க சகோதரர்.


இஸ்லாத்திர்காக தனது கண்ணை இழந்த
ஆப்ரிக்க சகோதரர்
=======================================
படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் ஆப்ரிக்காவை சார்ந்தவர்  கருப்பினத்தை சார்ந்தவராக இருந்தாலும் வெள்ளை உள்ளத்திற்கு சொந்த காரர்
பிறப்பால் கிருத்தவரான அவரை இஸ்லாம் கவர்ந்தது
தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
இதனை தொடற்ந்து அவரது குடும்பத்தில் மிக பெரிய குழப்பங்கள் உருவானது
அவரை தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் அவருக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நின்றனர்
அவர் மனம் தளராமல் தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களையும் இஸ்லாத்தில் இணைப்பதற்க்காக போராடி வருகிறார்
அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டு விட்டார் என்ற ஆதங்கத்தில் அவரது தந்தையே அவரது கண்ணை குத்தி குறுடாக்கி விட்டார்
இஸ்லாத்திர்காக தனது கண்ணை இழந்த நிலையிலும் சிறிது கூட தளர்வோ சோர்வோ இல்லாமல் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து வருகிறார்
அண்மையில் அவர் சவுதி வந்திருந்த போது எடுக்க பட்ட படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்

வாரம் ஒரு முறை அசைவம்…தினம் ஒரு முட்டை.


நாம் அன்றாடம் உண்னும் உணவில் இயற்கையில் விளைந்த காய் ,கனிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
கீரை, பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும்.
அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும்.
காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும்.
உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்

ஃபிரான்ஸ்: கோர்சிகா பள்ளிவாசலுக்கு தீவைப்பு


ஃபிரான்ஸின் கோர்சிகா தீவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் சனிகிழமை அதிகாலையில் தீவைத்துள்ளனர்.
இந்த தீவைப்பு சம்பவத்தை பற்றியா விசாரணை உடனடியாக துவக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு தனது ஆதரவை தான் தெரிவித்துகொல்வதாகவும் ஃபிரான்ஸ் ஜனாதிபதி ஹோலாண்டே கூறியுள்ளார்.
இதே பகுதியில் கடந்த 2015 டிசெம்பர் மாதம் அகதிகளின் வருகையை எதிர்த்து  ஒரு பள்ளிவாசல் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday, 1 May 2016

தமிழக முதலமைச்சர்கள் இதுவரை!



தமிழக முதலமைச்சர்கள் இதுவரை!

1 . ஜெ.ஜெயலலிதா
    மே 23, 2015  தற்போது வரை
    அதிமுக
2.  ஓ.பன்னீர்செல்வம்
     செப்டம்பர் 29, 2014
     மே 22, 2015
     அதிமுக
3 . ஜெ.ஜெயலலிதா
     மே 16, 2011
     செப்டம்பர் 27, 2014
     அதிமுக
4.  கருணாநிதி
     மே 13, 2006
     மே 15, 2011
     திமுக
5. ஜெயலலிதா
     மார்ச் 2, 2002
     மே 12, 2006
     அதிமுக
6. ஓ.பன்னீர்செல்வம்
    செப்டம்பர் 21, 2001
    மார்ச் 1 2002
    அதிமுக
7. ஜெ.ஜெயலலிதா
    மே 14, 2001
    செப்டம்பர் 21, 2001
    அதிமுக
8. கருணாநிதி
    மே 13, 1996
    மே 13, 2001
    திமுக
9. ஜெயலலிதா
    ஜூன் 24, 1991
    மே 12, 1996
    அதிமுக
10 . குடியரசுத்தலைவர் ஆட்சி
       ஜனவரி 30, 1991
       ஜுன் 24, 1991
11. கருணாநிதி
       ஜனவரி 27, 1989
       ஜனவரி 30, 1991
       திமுக
12. குடியரசுத்தலைவர் ஆட்சி
       ஜனவரி 30, 1988
       ஜனவரி 27, 1989
13. ஜானகி ராமச்சந்திரன்
       ஜனவரி 7, 1988
       ஜனவரி 30, 1988
       அதிமுக
14 . வி.ஆர். நெடுஞ்செழியன்(ஆக்டிங்)  
       டிசம்பர் 24, 1987
       ஜனவரி 7, 1988
       அதிமுக
15. எம்.ஜி.ராமச்சந்திரன்
       பிப்ரவரி 10, 1985
       டிசம்பர் 24, 1987
      அதிமுக
16. எம்.ஜி.ராமச்சந்திரன்
      ஜூன் 9, 1980
      நவம்பர் 15, 1984 
      அதிமுக
17. குடியரசுத்தலைவர் ஆட்சி
       பிப்ரவரி 17, 1980
      ஜுன் 9, 1980
18. எம்.ஜி.ராமச்சந்திரன்
      ஜூன் 30, 1977
      பிப்ரவரி 17, 1980
      அதிமுக
19. குடியரசுத்தலைவர் ஆட்சி
      ஜனவரி 31, 1976
      ஜூன் 30, 1977
20. கருணாநிதி
      மார்ச் 15, 1971
      ஜனவரி 31, 1976
      திமுக
21. கருணாநிதி
       பிப்ரவரி 10, 1969
       ஜனவரி 4, 1971
       திமுக
22. வி.ஆர்.நெடுஞ்செழியன் (ஆக்டிங்)
       பிப்ரவரி 3, 1969
      பிப்ரவரி 10, 1969
      திமுக
23. அண்ணாத்துரை
      ஜனவரி 14, 1969
      பிப்ரவரி 3, 1969
      திமுக
24. அண்ணாத்துரை
       மார்ச் 6, 1967
       ஜனவரி 14, 1969
       திமுக
25. பக்தவச்சலம்
      அக்டோபர் 2, 1963
      மார்ச் 6, 1967
      காங்கிரஸ்
26. காமராஜர்
       மார்ச் 15, 1962
       அக்டோபர் 2, 1963
       காங்கிரஸ்
27. காமராஜர்
       ஏப்ரல் 13, 1957
       மார்ச் 1, 1962
       காங்கிரஸ்
28. காமராஜர்
       ஏப்ரல் 13, 1954
       மார்ச் 31, 1957
       காங்கிரஸ்
29. ராஜகோபாலச்சாரி
      ஏப்ரல் 10, 1952
      ஏப்ரல் 13, 1954
      காங்கிரஸ்
30. பி.எஸ்.குமாரசாமி ராஜா
      ஜனவரி 26, 1950
      ஏப்ரல் 9, 1952.


பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கல் :: திரளான பேராவூரணி அஇஅதிமுக தொணடர்கள் பங்கேற்பு.


பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் ஏப்.16 ஆம் தேதி தமிழகசட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பேராவூரணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்யத்தொடங்கியுள்ளனர்.
இந்த வரிசையில் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து வேட்பாளளுக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
இந்த வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் திரளான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.இதன்பின்னர் அதிமுக வேட்பாளர் மா.கோவிந்தராசு பேராவூரணியின் கடைவீதிகளில் வாக்குசேகரித்தார்.
தமிழகத்தின் 233 தொகுதிகளில் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராவூரணியில் வேட்புமனு தாக்கல் செய்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தமயந்தி திருஞானம் :: தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என வேட்புமனுவில் தகவல்.


பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
எதிர்வரும் மே.16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத்தேர்தலை
சந்திக்கவுள்ள நிலையில்
வேட்புமனு தொடங்கி பல
நாட்களாகியும் யாரும்
வேட்புமனு தாக்கல்
செய்யாமலே இருந்தனர்.
தமிழகம் முழுவதும் எதிர்வரும் 29.05.2016 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்
நிறைவடையவுள்ள நிலையில் மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக
கூட்டணியின் சார்பில்
போட்டியிடும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த
தமயந்தி திருஞானம் இன்று தனது வேட்புமனுவை பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் தேர்தல்
நடத்தும் அலுவலரிடம் சமர்பித்தார்.
வேட்புமனுவை தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் தமயந்தி திருஞானம் வேட்பாளருக்கான
உறுதிமொழியையும்
எடுத்துக்கொண்டார்.
பேராவூரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின்
பேராவூரணி
சட்டப்பேரவைத்தொகுதி
வேட்பாளர் தமயந்தி திருஞானம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை என
தெரிவித்துள்ளார்.
பேராவூரணியை
அடுத்த பெரியநாயகிபுரத்தை சேர்ந்த 51 வயதாகும் இவர், சுய உதவிக்குழுவில்
ரூ.12,000 கடன் பெற்றுள்ளார். மேலும் இவரது கணவருக்கு ரூபாய் 6,40,000-க்கு அசையும் சொத்துக்களும், 1,00,000 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், சுயமாக சம்பாதித்த
சொத்தாக ரூ.4,20,000
மதிப்புள்ள சொத்துக்கள்
உள்ளன. மேலும் ரூ.1,00,000 ரூபாய்க்கு
பூர்விக சொத்துக்களும்
உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர் TATA Sumo காரும். ஒரு Hero Passion பைக்கும் வைத்துள்ளதாக இந்த வேட்புமனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வேட்பாளர் தமயந்தி திருஞானம் அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.7426 உள்ளதாகவும், அவரது கணவரின் வங்கி கணக்கில் ரூ.7,19,327 ரூபாய் உள்ளதாகவும் இந்த வேட்புமனுவில்
கூறப்பட்டுள்ளது.

பேராவூரணி திமுக வேட்பாளர் என்.அசோக்குமார் வேட்புமனுத்தாக்கல் :: தன் பெயரிலும், துணைவி பெயரிலும் ₹6.83 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல்!!


பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் எதிர்வரும் மே.16 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். இதனை தொடர்ந்து பேராவூரணியில் பல அரசியல் கட்சியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவந்தனர்.
இதைப்போலவை பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பேராவூரணி பேரூராட்சித்தலைவர் நா.அசோக்குமார் தனது வேட்புமனுவை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்பித்தார். இதனைத்தொடர்ந்து வேட்பாளருக்கான உறுதிமொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து திரளான திமுக தொண்டர்களுடன் பேராவூரணி நகர வீதிகளில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குசேகரித்தார்.
பேராவூரணி திமுக வேட்பாளர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் பெயரிலும், தனது துணைவி பெயரிலும் ரூ.6.83 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வேட்புமனுவின் படி, திமுக வேட்பாளர் அசோக்குமார் மற்றும் அவரது துணைவிக்கு அசையும் சொத்துக்கள் ₹1,07,19,677 கோடி (₹8053602+2666075) ரூபாய்க்கு உள்ளதாகவும், அசையா சொத்துக்களில் சுயமாக வாங்கிய சொத்தின் கொள்முதல்விலை மதிப்பு ₹33,06,000 (₹13,00,000+₹20,06,600) லட்சம் எனவும், அசையா சொத்தில் மேம்பாட்டு மதிப்பு ₹40,000 ரூபாய் எனவும், மொத்த அசையா சொத்தின் தோராய மதிப்பு ₹2,22,65,835 கோடி (₹1,13,94,835+₹1,08,71,000) எனவும், சுயமாக வாங்கிய சொத்து ₹2,25,00,000 கோடி (₹1,15,00,000+₹1,10,00,005) எனவும், பூர்விக சொத்து ₹95,50,000 லட்சம் என மொத்தம் ₹ 6,83,81,512 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

பேராவூரணி அருகே ₹85,400 ரூபாய் பறிமுதல் :: ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து பேராவூரணி தேர்தல் அதிகாரிகள் அதிரடி.


பேராவூரணி அருகே அலிவலம் என்ற இடத்தில் ரூ. 85,400-ஐ பறக்கும் படை அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல்
செய்தனர்.
பேராவூரணி நிலை கண்காணிப்பு குழு
அலுவலர் பூவந்திநாதன்
தலைமையில் பறக்கும்படையினர்
அலிவலத்தில் வாகனச்
சோதனையில்
ஈடுபட்டிருந்தனர்.
பட்டுக்கோட்டையிலிருந்து
திருச்சிற்றம்பலம் நோக்கி சென்ற காரை நிறுத்தி
சோதனையிட்டதில்,காரை உப்புவிடுதி பகுதியைச் சேர்ந்த வெ.சேதுராமன் என்பவர் ஓட்டி வந்தததும்,அதில் உரிய
ஆவணமின்றி கொண்டு
செல்லப்பட்ட ரூ. 85,400
இருந்ததும் தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்து பேராவூரணி உதவி தேர்தல் அதிகாரி கோ.ரகுராமனிடம் ஒப்படைத்தனர்.

புதுப்பட்டினம் அருகே சாலைவிபத்தில் விவசாயி பலி :: சேதுபாவாச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை.  


புதுப்பட்டினம் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். 
புதுப்பட்டினம் அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு
கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (65) விவசாயி. வெள்ளிக்கிழமை மாலை வெளியூர் செல்வதற்காக தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர
வாகனம் கந்தசாமி மீது மோதியது. இதில் பலத்த
காயமடைந்த அவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.

சவூதி அரேபியா பிரபல பின்லாடன் நிறுவனம் 50000 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்ப முடிவு! !


இன்றைய சவுதி கெஜட்டின் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பினால் கிட்டத்தட்ட 50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நான்கு மாத சம்பளம் வேறு பலருக்கு பாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது அதிகம் இந்தியர்களே! அடி மட்ட தொழிலாளர்களிலிருந்து உயர் தர டெக்னீஷியன் வரை பணி புரிவது அதிகம் இந்தியர்களே! அதற்குள் நிலைமை சீரடைந்தால் இவர்கள் தப்புவார்கள். இல்லை என்றால் இந்தியாவை நோக்கி போக வேண்டியதுதான். 
இதனால் இந்திய பொருளாதாரமும் மிகப் பெரிய சிக்கலில் மாட்டும் அபாயம் உள்ளது. நம் நாட்டு அரசியல் கொள்ளையர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்தாலும் பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே அந்நிய செலாவணியாக நாம் மாதா மாதம் அனுப்பும் சம்பள பணங்களே! பின் லாடன் போன்ற பெரிய கம்பெனிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற கம்பெனிகளைப் பற்றி சொல்ல வேண்டாம்.
எனவே வளைகுடாவை நம்பியிருக்கும் குடும்பங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு ஊரில் ஏதாவது தொழில் தொடங்க பணத்தை இப்போதே சேகரிக்க தொடங்குங்கள். எந்த நிலைமையையும் எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க, இஸ்ரேலிய பிணந் தின்னி கழுகுகளால் மொத்த வளைகுடா நாடுகளும் அச்சத்தில் உள்ளன. இறைவன்தான் இந்த நிலையை சீராக்கி சகஜ நிலைக்கு வளைகுடா பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும்.