Saturday, 7 May 2016

குண்டு வைப்போம் : பத்திரிக்கை.காம் பதிவுக்கு பாஜக கல்யாண் ராமன் கமெண்ட்.....!!


நாகர்கோவிலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டம் கூடவில்லை என்றும் நாற்காலிகள் காலியாக இருந்ததாகவும் பத்திரிக்கை.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்திக்கு பின்னூட்டம் செலுத்தியுள்ள பாஜக மாநில நிர்வாகியும், அண்மையில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தவருமான கல்யாண் ராமன்....
அமித் ஷா கலந்து கொள்ளும் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தால் பாஜகவினர் வெறியோடு வேலை செய்வார்கள் என்றும், 10 துலுக்கன்களையும் உள்ளே புடிச்சி போட்ட மாதிரியும் இருக்கும் என்று கமெண்ட் செய்துள்ளார்.
கல்யாண் ராமனின் சட்டத்திற்கு எதிரான இந்த கருத்திற்கு சமூக வலைத்தளங்கள் முழுவதும் கடுமையான கண்டனம் எழுந்து  வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் விரைந்து கல்யாண் ராமனை கைது செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் வெளியீடு : பத்திரிக்கை.காம்
ஆதாரம் : https://www.patrikai.com/well-bomb-bjp-kalyanraman-reaction-to-the-news-magazine-dot-com/

No comments:

Post a Comment