Wednesday, 11 May 2016

சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த இளம்பெண் சித்ரவதை செய்து கொலை


ரியாத்: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அந்த வீட்டின் முதலாளியால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் தபீர்புரா பகுதியில் இருக்கும் ஷா காலனியை சேர்ந்த அசிமா காத்தூன் என்பவர் ஏஜெண்ட் மூலம் வீட்டு வேலை செய்வதற்கான விசா வாங்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது முதலாளியான அப்துல் ரஹ்மான் அலி முகமது என்பவர்  அசிமாவின் விசா காலமான 90 நாட்கள் முடிந்த பிறகு சட்டவிரோதமாக அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். ரியாத் சென்றதில் இருந்து அசிமா பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் அவரது குடும்பத்தார் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போன் செய்த அசிமா முதலாளி தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்வதாகவும், தன்னை இங்கிருந்து எப்படியாவது காப்பாற்றுமாறும் கூறி கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் ரியாத்தில் இருந்து அசிமாவின் வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அசிமா இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்டு தருமாறு தெலுங்கான அரசு மத்திய அரசிற்கு வலியுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment