Thursday, 12 May 2016

54 அத்தியாவசிய மருந்துகளின் விலை 55% குறைப்பு


நாட்டில் 54 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையை தேசிய மருந்தக விலை ஆணையம் 55 சதவீதம் குறைத்துள்ளது.
சந்தைகளில் வந்துள்ள புதிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் விலை 55 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 
இந்த விலை குறைப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்தக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment