Thursday, 5 May 2016

தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கண்ணீர் சிந்தி அழுத தந்தை.


தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கண்ணீர் சிந்தி அழுத தந்தை.
உயர்தரப் படிப்பை முடித்து வெளியாகும் தனது கடைசிமகனாகிய "ராகான்" இன் பட்டமளிப்பு விழாவில் கலந்து மகன் பட்டம் பெறும்பொழுது தேம்பித் தேம்பி அழுத சம்பவமொன்று  நேற்று முன் தினம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மாநகரின் பாடசாலையொன்றில் நடைபெற்றது.
அந்த ராக்கானின் தந்தை யாரென்றால் உலக முஸ்லிம்களை எதிரிகளின் சதியிலிருந்து பாதுகாக்க துடியாய்த் துடிக்கும் 83 வயதிலும் இளம் வாலிபனை விட வீரமாகவும் விவேகமாகவும் செயல் படும் சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னராகிய சல்மானே.
குறித்த விழாவில் ஓரு சாதரண மாணவனின் தந்தையாக உரையாற்றிய மன்னர் : இவ்விழாவில் ஒரு மாணவனின் தந்தையாக கலந்து கொள்வதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் , நான் ராக்கானின் தந்தையாக இருப்பினும் நீங்கள் அனைவரும் எனது பிள்ளைகளே, ராக்கானை விட நீங்கள் நன்றாகப் படித்து பல பட்டங்களைப் பெற்று நம் நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment