Thursday, 5 May 2016

வளைகுடா நாடுகளில் பணிக்குச் சென்ற 5,875 இந்தியர்கள் மரணம் - மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்.


கடந்த 2015 ஆண்டில் மட்டும், வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 
மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சவுதி அரேபியாவில் மட்டும் அதிகபட்சமாக இரண்டாயிரத்து 691 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,540 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாக வி.கே.சிங் குறிப்பிட்டார். இதேபோன்று குவைத்தில் 611 இந்திய தொழிலாளர்களும், ஓமனில் 520 பேரும், கத்தார் நாட்டில் 279 பேரும், பஹ்ரைன் நாட்டில் 223 பேர் என வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  
இதில் பெரும்பாலானோர் இயற்கையான மற்றும் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment