தஞ்சாவூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 49.07 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி கிராமத்தில், அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில், செலவினப் பார்வையாளர் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று, திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 49.07 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:
Post a Comment