Tuesday, 31 May 2016

ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்பு;ரியாத்- திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவை கோரிக்கை:

சவுதி:

ரியாத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் சந்திப்பு;ரியாத்- திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவை கோரிக்கை:
     ரியாத்தில் உள்ள ஏர்-இந்தியா உயரதிகாரிகளை ரியாத்வாழ் இந்தியர்களின் பிரதிநிதிகளாக சிலர் சென்று ஏர்-இந்தியா நிறுவனத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர்
    தமிழ்நாட்டின் சார்பாக சென்றிருந்த அகமது இம்தியாஸ் பல்வேறு பொதுவான கோரிக்கைகள் வைத்ததுடன் குறிப்பாக திருச்சிராப்பள்ளிக்கு நேரடி விமானசேவை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யும்படி வற்புறுத்தினார்.
     திருச்சிக்கு பன்னாட்டு விமானசேவை நேரடியாக செய்வதில் விமானநிலைய சட்டதிட்டங்களில் சில சட்டசிக்கல்கள் உள்ளதனை எடுத்துக்கூறி விரைவில் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினர்.
     அதுவரை மும்பை, சென்னை போன்ற இடங்களில் வந்திறங்கும் பன்னாட்டு விமானங்களில் திருச்சிக்கு செல்வதற்கு ரியாத் / திருச்சி போன்ற புறப்படுமிடத்திலிருந்தே போர்டிங்பாஸ் விநியோகிக்குமாறு கேட்டுக்கொண்டதில் அதனை விரைவில் செய்துதருவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
  இந்த செய்தி ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதியில் நேற்று மாலை ஆறு மணிக்கு Jazan(Jizan) Commercial Centre-யில் பயங்கர தீ விபத்து.

சவுதி:

Flash news....
சவுதியில் இன்று மாலை ஆறு மணிக்கு  Jazan(Jizan) Commercial Centre-யில் பயங்கர தீ விபத்து.விபத்து குறித்தும் மக்களின் நிலைமை குறித்தும் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை .

குவைத்தின் புதிய விமான நிலைய வேலை உடனடியாக துவங்க உள்ளது:

Kuwait:

    குவைத் மக்களின் பல வருட கனவான குவைத்தின் புதிய விமான நிலையம் வேலைக்கான ஒப்பந்தத்தில் குவைத் Minister of public works and minister of state for national  Assembly Affairs Dr. Ail Al- Omair அவர்கள்  1.3 பில்லியனன் குவைத் தினார் அதாவது ($4.34 billion dollars) மதிப்பிலான வேலைக்கு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
   இதன் பணி ஆறு ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வேலையினை Turkey's Limak Group மற்றும்  Kharafi National சேர்த்து செய்வதாக செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   தற்பொது 5 மில்லியனன் பயணிகள் பயணிக்கு இந்த விமான நிலையம் இதன் மூலம் 25 மில்லியனன் பயணிகள் பயணிக்கும் விதத்தில் இருக்கும்.

குவைத் அரசு அதிரடி அறிவிப்பு தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பயணம் அனுப்பினால் 6 மாத சிறை .

குவைத்:

தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பயணம் அனுப்பினால்  6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் பிழை.இந்த சட்டத்திற்கு விரைவில் நாடாளுமன்ற அனுமதி வழங்கும் என்று தெரிகிறது என்ற செய்தியை இங்குள்ள செய்தித்தாள் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
    இதன் படி 100 தினார் வரையிலும் 2%,100 தினார் முதல் 500 தினார் வரையும் 4%; 500 தினாருக்கு மேல்  உள்ளவர்களுக்கு 5%
வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக  Al-Shahid daily செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இதை விட்டு குறுக்கு வழியில் பயணம் அனுப்பி பிடிபட்டால்  6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் என்று செய்தியை மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் அரசு அதிரடி அறிவிப்பு;குவைத் சட்டங்கள் பின்பற்றினால் Visa மாற்றம் செய்தால் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த Visa Cancel செய்யபடும்:

குவைத்:

      குவைத் அரசு அதிரடி அறிவிப்பு;குவைத் சட்டங்கள் பின்பற்றினால் Visa மாற்றம் செய்தால்  ஒரு மாதத்திற்கு பிறகு அந்த Visa Cancel செய்யபடும்:
    குவைத்தில் Sponsore-க்கும் தொழிலாளிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக சில நேரங்களில் பலர் Sponsore-யின் அனுமதி இல்லாமல் Visa மாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர். இப்படி செய்தால் அந்த நபர் தான் வந்த வேலையினை செய்யாமல் ஏமாற்றுவதாக கருதப்படும்.
இனிமுதல் இப்படி செய்தால் அந்த Visa ஒரு மாதத்திற்கு பிறகு செல்லுபடியாகாத விதத்தில் Visa Cancel செய்யபடும். இந்த அறிக்கையினை Kuwait Manpower Authority
வெளியிட்டுள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Sponsore-யின் அனுமதிக்கு பிறகு மட்டுமே Visa மாற்றம் பெற வேண்டிய முயற்சிகளை தொழிலாளி செய்ய வேண்டும்.
   ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு agreement-யில் வேலைக்கு வந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மற்றவர்களுக்கு  ஒரு மாதம்
இந்த visa மாற்றம் செய்ய தற்போது உள்ள
குவைத் தொழிலாளர் சட்டபடி அனுமதி வழங்கப்பட்டடு வருகிறது.
   இதனால் visa  மாற்றம் பெற விரும்பும் தொழிலாளர் visa மாற்றம்  பெற கடிதத்தை முறைப்படி  Sponsore-க்கு மேல் குறிப்பிட்ட
வரையறை படி கொடுக்க வேண்டும். இந்த
நேரத்தில் இதற்கு தேவையான நடவடிக்கைகளை Sponsore தொழிலாளிக்கு செய்து கொடுக்க வேண்டும்.
   இப்படி விண்ணப்பம் செய்த தொழிலாளர்கள் தனியாகவோ அல்லது  தங்களுடைய வழக்கறிஞர் உடனோ தொழிலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாலம்.
  Sponsore-ஐ மாற்ற அனுமதி கிடைத்த பிறகு அல்லது அனுமதி பத்திரத்தில் கையொப்பம் இட்ட பிறகு அந்த தொழிலாளின் பழைய Sponsore அல்லது தொழிலாளின் புதிதாக உள்ள Sponsore தொழிலாளி மீது பதிவு செய்யும் புகார் ஏற்க்கப்பட மட்டாது என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source :Asianet News

Monday, 30 May 2016

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க! உடல் எடை அதுவாக குறையும் !


எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள்.
உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.
ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.
ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்…
1. வாழைப்பழம்
இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது.
2. ஓட்ஸ் உணவு
ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.
3. தானிய உணவுகள்
தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.
4. முட்டை
இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும்.
வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5. கொழுப்பு நீக்கப்பட்ட பால்
இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

ஈரானுக்கு சவுதி அரேபியா கண்டனம்.


ரியாத் : இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு யாத்திரிகர்கள் யாரையும் அனுப்பப் போவதில்லை என ஈரான் கூறி இருந்தது. ஈரானின் இந்த முடிவுக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

மக்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்ப மாட்டோம் ஈரான் அறிவிப்பு


கடந்த ஆண்டு மெக்கா  ஹஜ் பயணத்தின்போது, ஈரானியர்கள் உள்பட  ஆயிரக்கணக்கான ஹஜ் பயணிகள் நெரிசலில் சிக்கி பலியானார்கள்.இச்சம்பவத்திற்கு ஈரான் சவுதி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.  இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டிய ஈரான் இந்த ஆண்டு மக்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்து உள்ளது.
இந்த வருடம் ஈரான் தனது குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என இரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய அதிகாரிகள் ஈரானிய ஹஜ் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கூறி உள்ளார்.
சிரியா மற்றும் ஏமன் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த இரு பிராந்திய போட்டி நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் ஈரான் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது.

​சவூதியில் தமிழ் பெண் சித்திரவதை - மீட்க கோரிக்கை!


சேலத்தில் இருந்து சவூதிக்கு வேலைக்கு சென்ற பெண் சித்திரவதை செய்யப்படுவதாக வாட்சப்பில் வீடியோ வெளியானதை தொடர்ந்து தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் சன்னியாசி குண்டு பாத்திமா நகரை சேர்ந்த பர்வீன் பானு குடும்ப சூழல் காரணமாக சவுதிக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக சம்பளம் தராமல் சித்ரவதை செய்வதாக பர்வீன் பானு வாட்சப் மூலமாக வீடியோ அனுப்பியதை தொடர்ந்து, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் அந்த வீடியோவை ஒளிபரப்பினோம். இந்நிலையில் பர்வீன் பானுவின் தாயார் தன்னுடைய மகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பர்வீனை மீட்க சென்ற தன்னுடைய மருமகன் குறித்த தகவல் எதுவும் தெரியாததால், அவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sunday, 29 May 2016

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி!


ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவி முதல்கட்டமாக ஜூலை 1-ந் தேதி முதல் 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன. பெரும்பாலான ரேஷன் கடைகளில் முதல் வாரத்திற்கு பின்னர் பொருட்கள் வழங்கப்படுவதில்லை, ஒரு மாதம் கூட நுகர்வோர் பொருட்களை முழுமையாக பெற முடிவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவும், ரேஷன் கடைகளில் காகித பயன்பாட்டை குறைக்கவும் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படும் ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவியை அறிமுகம் செய்து உள்ளது.
Advertisement
அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், செல்போன் எண், ஆதார் எண்கள் அனைத்தும் அந்த கருவியில் பதிவு செய்யப்படும். அவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் விவரமும் இக்கருவியில் பதிவு செய்யப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும்போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும். அவர்கள் வாங்கிய பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் வாங்க வேண்டிய பொருட்களின் விவரங்கள் உடனடியாக அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும்.
இதனால் கடையில் பில் வழங்கப்பட மாட்டாது. இதன்மூலம் விற்பனையாளர்களின் வேலை பளுவும் குறையும்.
இந்த கருவியை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த கருவி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அடுத்தகட்டமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த கருவி அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்ததாக இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட இருப்பதாக உணவுபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் பரிதாபம் ...!


அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநித்துவம் அதிகரித்து வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் நமது நிலை நாளுக்கு நாள் பரிதாபமாகவே ஆகிவருகிறது...
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் முஸ்லிம்களின் வெற்றி செய்திகளை இணையத்தில் கண்டேன்...
1. மேற்குவங்காளம் 294 MLA க்களில் 56 முஸ்லிம்கள் 19%
2. கேரளம் 140 MLA க்களில் 30 முஸ்லிம்கள் 21%
3. அஸ்ஸாம் 126 MLA க்களில் 29 முஸ்லிம்கள் 23%
4. பாண்டிசேரி 30 MLA க்களில் 2 முஸ்லிம்கள் 7%
5. தமிழ்நாடு 234 MLAக்களில் 5 முஸ்லிம்கள் - 2%.
1952ல் முஸ்லீம் லீக் தமிழக சட்ட மன்ற எதிர் கட்சியாக செயல் பட்டது.
ஒரு சமயத்தில் தமிழக சட்டசையில் 20 முஸ்லிம்கள் வரை இருந்துள்ளார்கள் என்றும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது... ஆனால் இன்றைய நிலைமை வெறும் ஐந்தாக குறைந்து போய்விட்டது ...
தனிமனித ஈகோவினாலும் , இயக்க வெறிகளாலும், தமிழ்நாட்டில் முஸ்லிம் இயக்கங்கள்தான் அதிகரிக்கிறதே தவிர வேறு எதுவும் உருப்படியாக தெரியவில்லை ... உருப்படியான தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை....
தேசிய அரசியலின் நீரோட்டத்தில் தமிழக முஸ்லிம்களின் பங்கு இன்னும் கணிசமாக இருக்கும் அளவுக்கு அரசியல் மாற்றம், வலுவான தலைமையுடன் கூடிய  ஒருங்கிணைந்த செயல்பாடுகள், பொது மக்கள் பிரச்சினைகள் என களம் காணாதவரை இந்த பரிதாப நிலைமை தொடரவே செய்யும் .. இன்னும் மோசமாகவே கூட ஆகலாம் ..ஆனாலும் தலைவர்கள் சிந்திப்பார்களா ?!...

சவுதியில் அவதியுறும் தமிழக பெண் பர்வீன் பானு!


சேலத்தில் இருந்து சவுதிக்கு வேலைக்கு சென்ற பெண் சம்பளம் கிடைக்காமல் சித்தரவதைக்கு ஆளாகி வருவதாக வாட்ஸ் ஆப் மூலம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சேலம் மாநகர பகுதியான சன்னியாசி குண்டு பாத்திமா நகரை சேர்ந்தவர் சலீமாதி இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். 
இதில் இரண்டாவது மகளான பர்வீன் பானு திருமணமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதியில் உள்ள ரியாத் நகருக்கு உறவினர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் வேலைக்குச் சென்றுள்ளார். 
வேலைக்குச் சென்று பத்து மாதங்கள் ஆகிவிட்டபோதும், சம்பளம் தரமால் உரிமையாளர் சித்ரவதை செய்வதாக பர்வீன் பானு வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு வீடியோ அனுப்பியுள்ளார். 
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. வீடியோவில் தன்னை உடனடியாக மீட்கும்படி பர்வீன் பானு வலியுறுத்தியுள்ளார்.

பெண்களே எச்சரிக்கை!கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!


கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!
.
புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செறி மானம் ஆக செமிக்கட்டும் என 7 UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ...!!
.
அதிகாமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் நம்மில் என்பது எத்துணை பேருக்கு தெரியும்...!!
.
இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..!!

சவுதியில் உள்ள #Twenty_Storey_Hotel-யில் பயங்கர தீ விபத்து;Makkah மாவட்டத்தைச் சேர்ந்த இடம்.

சவுதி:

சவுதியில் உள்ள #Twenty_Storey_Hotel-யில் பயங்கர தீ விபத்து;Makkah மாவட்டத்தைச் சேர்ந்த இடம்.
     Civil Defense in Makkah அதிகாரி Major Nayef Al-Sharif அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் படி கட்டிடத்தின் 7-வது மாடியில் ஏற்பட்ட தீ மற்ற  இடங்களுக்கு தீவிரமாக பரவியது.
     இந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள்
தீவிரமாக செயல்பட்டு தீயிணை அனைத்தனர்.தீ பிடித்ததுமே இதில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக Hotel-ஐ விட்டு வெளியேற்றப்பட்டனர்.இதனால்  பெரும்  உயிர்இழப்பு தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த செய்தியை சவுதியின் SPA அரசு செய்தி தளத்தில் வெளியிட்டுள்ளது.

Saturday, 28 May 2016

சவுதியில் இரண்டு தமிழர்கள் மற்றும் மூன்று கேரளா நபர்கள் என ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்து கொலை செய்த மூன்று சவுதி நபர்களுக்கு; சவுதி நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது:

சவுதி:

சவுதியில் இரண்டு தமிழர்கள் மற்றும் மூன்று  கேரளா நபர்கள் என ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்து கொலை செய்த மூன்று சவுதி நபர்களுக்கு; சவுதி நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது:
   சவுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொலை பற்றி கடந்த 2014 ஆண்டு வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது . கொலை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கொலை செய்த மூன்று சவுதி குடிமகன்களுக்கு இடையில்  ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளன.
     இவர்களுக்கு மதுவில் மயங்க மருந்து கலந்துகொடுத்து மயக்கமடையச் செய்து
கை கால்களை கட்டி உயிருடன் மண்ணுக்கு
அடியில் புதைக்கப்பட்டது. குற்றவாளிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.
       ஒரு சவுதி நபர் தன்னுடைய தோட்டத்தில்
விவசாயம் செய்ய சிறிய வாய்க்கால் தோண்டிய போது உடல் பாகங்களை கண்டதை அடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார் அவர்கள் அந்த தோட்டத்தை முழுவதுமாக தோண்டிப் பார்த்தில் இந்த
ஐந்து உடல்கள் கிடைத்துள்ளது.
   இதில் இருவர் கன்னியாகுமரி மாவட்டம் சேர்த்தவர்கள் மற்ற மூன்று பேர்  கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
      இந்த தீர்ப்பை மனப்பூர்வமான ஏற்று கொள்வதாக சவுதியில் உள்ள இந்தியர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.

Friday, 27 May 2016

துபாய் காவல்துறையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிநவீன கார்கள்:

துபாய்:

துபாய் காவல்துறையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிநவீன கார்கள்:
      சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் மக்களின் உதவி அழைப்புக்கு உடனடியாக விரைந்து சென்று உதவ அதிக திறன்கொண்ட பல கோடிரூபாய் மதிப்புள்ள இந்த கார்கள் காவல்துறையில்
இணைக்கப்பட்டுள்ளது.இதில் அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான பயங்கர தீ விபத்து 319 பணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்:

ஜப்பான்:

விமான பயங்கர தீ விபத்து 319 பணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்:
    ஜப்பான் நாட்டின் Haneda Airport விமான நிலையத்தில் புறப்பட தயார் நிலையில் ஓடு தளத்தில் சென்ற நிலையில்  Korean Air Lines  விமானத்தின் ஒரு புறத்தில் உள்ள சிறகில் விமான பறக்க உதவும் இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    இந்த  தீ விபத்தில் அதிஷ்டவசமாக 319 பயணிகள் உயிர் தப்பினர். விமானம் புறப்பட்ட பிறகு இது நிகழ்ந்திருந்தால் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
   தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச்  செய்யல்பட்டு தீயினை அணைத்தனர்.
தீயினால் ஏற்பட்ட புகையினை சுவாசித்து 30-க்கு மேற்பட்டவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் முதலுதவி அளித்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு மாற்றபட்டனர்.

சவுதி அரபியாவில் 2016 -லும் இப்படி சில மனிதர்கள்;

சவுதி:

இந்த 2016 -லும் இப்படி சில மனிதர்கள்;
சவுதி அரேபியாவில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டரை துப்பாக்கியால் சுட்ட கணவர்:
    சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் பகத் மருத்துவ சிட்டியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவரான முகன்னத் அல் ஜப்ன் என்பவர் கடந்த ஒருமாதத்திற்கு முன் பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
    பிரசவத்தின் போது இப்பெண்ணின்க ஜோர்டானை சேர்ந்த கணவரும் உடனிருந்துள்ளார், அப்போது அந்த மருத்துவர் தனது மனைவியின் உடலை தொட்டது இவருக்கு பிடிக்கவில்லை, ஆண் மருத்துவராக இருந்தபோதிலும், தனது முன்னால் எப்படி மனைவியின் உடல் பாகங்களை தொடலாம் என்று கோபம் கொண்டுள்ளார்.
   குழந்தை பிறந்து 2 வருடங்கள் கடந்து விட்டபோதிலும், இவரது மனதுக்குள் அந்த விரோதம் இருந்து வந்துள்ளது, தன்னுடைய மனைவியை எவ்வாறு அப்படி தொடலாம் எனமனதுக்குள் வன்மம் அதிகரித்து கொண்டே இருந்தது.
   ஒருநாள் தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவிய உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், எனவே உங்களை எப்போது சந்திக்கலாம் என மருத்துவர் முகன்னத்திடம்அனுமதி கோரியுள்ளார்.
   மருத்துவமனைக்கு கீழ் உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார், இதன்படியே  வந்த அந்த நபர் மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தார் திடீர் என தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரை  நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
    இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது, அதன்பின்னர் அந்நபரை தேடிப்பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரவசத்தின் போது மருத்துவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. அதனால் தான் இவ்வாறு செய்துவிட்டேன் என கூறியுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
      இதே போல் ஆறு மாதங்களுக்கு முன்பு
துபாய் கடற்கரையில் குளித்து கொண்டு இந்த தனது மகளை கடல் அடித்து சென்றது.
இதை பார்த்த கடலோர காவல்படை வீரர்கள் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். இதை செய்ய விடாமல் அந்த பெண்ணின் தந்தை வீரர்களை தடுத்தார்.
    இதில் அந்த பெண் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து போலீஸ் நடத்தி விசாரணையில் பிற ஆண்கள் எனது மகளை
தொட்டால் அவள் அசுத்தம் ஆகிவிடுவாள் எனவே வீரர்களை தடுத்தேன் என்றார். இதை
தொடர்ந்து தங்களுடைய வேலையினை செய்யவிடாமல் தடுத்த மற்றும் கொலை குற்றத்திற்காக அந்த நபரை போலீஸ் கைது செய்தது நினைவிருக்கலாம்.
Source: சவுதி பிரபல பத்திரிகை Airbtimes

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் -சொல்கிறார் சுப்ரமனிய சுவாமியின் மகள் சுஹாஸினி


இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும்.
சுஹாசனி கூறுகிறார்…
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள்,
நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள்,
அவர்கள் பயத்தை மாற்றினேன்.
தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.
இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.
பார்க்க வீடியோ.

Thursday, 26 May 2016

சபாநாயகராக தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன்.


தமிழக சட்டசபை சபாநாயகராக ப.தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்வாகிறார்கள். 2 பதவிகளுக்கும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
தமிழக சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஜூன் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அண்ணா தி.மு.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
3–-6–-2016 அன்று நடைபெற உள்ள 15–வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தலைவர் பதவிக்கான தேர்தலில் ப.தனபால் (அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதி), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் பொள்ளாச்சி வி.ஜெயராமனும் (பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி) அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
39 ஆண்டுகளுக்குப்பின் ப.தனபால் தொடர்ந்து 2-வது முறையாக சபாநாயகராக தேர்வாக இருக்கிறார். இதேபோல், 1962-ம் ஆண்டுக்கு பிறகு துணை சபாநாயகராக தொடர்ந்து 2 முறையாக பதவி வகிப்பவர் என்ற பெருமையை பொள்ளாச்சி ஜெயராமன் பெற இருக்கிறார்.

Facebook,WhatsApp க்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ் அறிமுகம் !


கூகுளின் புதிய ஆப்ஸ்!
இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தையும் அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது. அதேசமயம் ஃபேஸ்புக்கின் சிறப்புகளையும் நாம் ஒதுக்கிவிடமுடியாதே. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவரோடு நட்பு பாராட்ட உதவும் ஃபேஸ்புக்கில் இன்று சிறுவண்டுகள் கூட லைக்ஸ் தட்டிக்கொண்டிருக்கின்றன. இரண்டே ஆப்கள் –ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியுமா? 
அவர்களும் கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியும் அவ்விரண்டு ஆப்களையும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை. எனவே எப்படியேனும் ஆப் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த இரு புது ஆப்கள். மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.

மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங் செய்ய உதவுவதே டுவோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? ஏன் முடியாது? ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு தமிழனல்லவா. சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து சிலிகான் வேலியை ஆண்டு வரும் சுந்தரால் சாதிக்க முடியாமல் போய் விடுமா என்ன? கமான் சுந்தர் கமான்!

உங்களின் இக்காமா நம்பரில் எத்தணை சிம் வாங்கபட்டு உள்ளது?

சவுதி:

சவூதியில் இருப்பவர்களுக்கு : உங்கள் இக்காமா எண்ணினல் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்:
    உங்களின் இக்காமா நம்பரில் எத்தணை சிம் வாங்கபட்டு உள்ளது? 
எத்தனை சிம் கைரேகை பதிவு செய்யபட்டது என்பதை அறிய  STC .நம்பர் 900 நபம்பருக்கு 9988. டைப் செய்து அனுப்பினால் உடனே பதில் கிடைக்கும்  (படம் பார்க்கா)  உங்கள் பெயரில் வேறுயாரவது சிம் கார்டு வாங்கிஉள்ளனரா என்று
தெரிந்து கோள்ளுங்கள்.
அப்படி வேறு யாரும் SIM CARD  வாங்கயிருந்தால் சவுதி சட்டபடி குற்றமாகும்.
நீங்கள் உடனே Customer Care அழைத்து
உங்கள் புகாரை பதிவு செய்து விடுங்கள் இல்லையேல் நீஙகள் குற்றவாளியாகி விடுவீர்கள். எச்சரிக்கை கவணம்.

சவூதி போலீஸ் அதிரடி! லட்சக்கணக்கான மது பாட்டில் பறிமுதல்! 2 பாக்கிஸ்தானி கைது

சவுதி:

சவுதி போலீஸின் அதிரடி வேட்டையில் ரியாத் சிட்டியில் ஒரு கூடோனில் செயல்பட்டு வந்த
மதுபான விற்பனை நிலத்தை கண்டுபிடித்தனர். 196000 லட்சம் பாட்டில் மதுபான குவியல்களை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய ஒரு சவுதி நபர் மற்றும்  இரண்டு பாகிஸ்தான் நபர்களை போலீஸ்
கைது செய்தனர்.

குவைத்தின் போலீஸ் Mubarak Al-Kabeer மற்றும் Salmiya பகுதிகளில் கள்ளசாராய சோதனை.

குவைத்:

குவைத்தின் போலீஸ் Mubarak Al-Kabeer மற்றும் Salmiya பகுதிகளில் நடத்திய சோதனையில் அதிக அளவிலான கள்ளச்சாராய குவியல்களை போலீஸ் கைப்பற்றினர்.
    இதில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீஸ் கைது செய்தனர் மற்றும்
   Mubarak Al-Kabeer பகுதியில் இருந்து 150 பாட்டில் கள்ளச்சாராய பாட்டில், கள்ளச்சாராய கூட்டு மற்றும் கள்ளச்சாராய உற்பத்தி செய்யும்   உபகரணங்கள் ஆகியவையும் மற்றும்  இதுபோல் Salmiya பகுதியில் நடந்த மற்றொரு சோதனையில் 309 பாட்டில் கள்ளச்சாராய பாட்டில், கள்ளச்சாராய கூட்டு மற்றும் கள்ளச்சாராய உற்பத்தி செய்யும்   உபகரணங்கள் ஆகியவை போலீஸ் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் 96 நிமிடத்திற்கு மதுவால் ஒருவர் பலி! அதிர்ச்சி தகவல்


புதுடில்லி : இந்தியாவில் மதுவால் 96 நிமிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் நாள் ஒன்றிற்கு 15 பேர் பலியாகி வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கம் உள்ளது. இருப்பினும், குஜராத் மற்றும் நாகாலாந்தில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. . சமீபத்தில், பீஹாரில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற அன்று கையெழுத்திட்டுள்ளார். இருப்பினும் உலக அளவில் இந்தியாவில் தான் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகம் முழுவதும் சராசரியாக மது குடிக்கும் 16 சதவீதம் பேரில் 11 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர்.
சமீபத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பூரண மதுவிலக்கிற்கு கேரளாவில் 47 சதவீதம் பேரும், தமிழகத்தில் 52 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணம் மது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழகம் 3வது இடத்திலும், கர்நாடகா 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளது.
மதுவால் மாரடைப்பு மற்றும் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதால் மட்டுமே மது அருந்துவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும். மற்றபடி பூரண மதுவிலக்கை சட்டத்தால் கொண்டு வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது சமூக ஆர்வலர்களும், சுகாதார ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்

Tuesday, 24 May 2016

100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?

சென்னை :

 தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.  இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1,607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும், மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து தமிழக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, முதல் 100 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.3. இதில் தமிழக அரசு மானியம் ரூ.2 போக மீதமுள்ள ஒரு ரூபாய் மட்டும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணத்தில் 1 முதல் 100 யூனிட்டுகளுக்கு ஒரு ரூபாயும், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.1.50ம் வசூல் செய்யப்படுகிறது. அதுவே 501 யூனிட்டுக்கு மேல் ரூ.6.60 வசூலிக்கப்படும்.
தற்போது உள்ள புதிய நடைமுறைபடி ஒரு நுகர்வோர் எவ்வளவு யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தி இருந்தாலும், அதில் முதல் 100 யூனிட் மின்சாரம் போக மீதமுள்ள யூனிட்டுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், 500 யூனிட்டுக்கு மேல் சென்றால், முதல் 100 யூனிட் கழித்து விட்டு மீதமுள்ள 400 யூனிட்டுகளுக்கு ரூ.3 என கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதித்த அளவுக்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்துமாம்பழ ஏற்றுமதிக்கு தடை வரும் அபாயம்: ஐக்கிய அரபு எச்சரிக்கையால் சிக்கல்.

புதுடெல்லி:  

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் 70 சதவீதம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு  செல்கின்றன. இப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில் ஐக்கிய அரசு எமிரேட்சின் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஒரு தகவல் இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது.
மாம்பழங்களில் மட்டுமல்ல, மிளகாய், மிளகு, வெள்ளரிக்காய்களிலும் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து படிந்துள்ளது என்று அந்த அமைச்சகம்  சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியாவில் இருந்து கன்டெய்னர்களில் வந்த மாம்பழம், மிளகு போன்றவற்றை சோதித்ததில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்  பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவரத்தை ஏற்றுமதி செய்த நிறுவனத்துக்கு கூறியுள்ளோம் என்று விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய  (ஏபிஇடிஏ) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் இந்த ஆணையத்தில் கட்டாயம் பதிவு  செய்ய வேண்டும்.  
பூச்சிக்கொல்லி மருந்து விவகாரம் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் உள்ளிட்ட விவசாய உற்பத்தி  பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள், அத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து குறைவாக உள்ளதா என்பது குறித்த ஆய்வு அறிக்கையையும்  இணைத்து அனுப்புமாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
4 ஆண்டாக தொடரும் பிரச்னை
கடந்த நான்கு ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி மருந்து விவகாரம் காரணமாக இந்திய மாம்பழ ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்தது. இதனால் மூன்றில் ஒரு பங்கு  ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. 2011-12 நிதியாண்டில் 63,594 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகின. 2014-15 நிதியாண்டில் இது 43,191 டன்களாக சரிந்தது. எனவே, நடப்பு ஆண்டில்  ஏற்றுமதி செய்பவர்கள் ஏபிஇடிஏ அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு பரிசோதனை செய்து அனுப்புமாறு விவசாயத்துறை  கேட்டுக்கொண்டுள்ளது.

பிரட்களில் கேன்சர் பரப்பும் ரசாயனம்: விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி:   

டெல்லியில் 38 பிரபல நிறுவனங்களின் பிரட், பாவு , பன். பர்கர் பிரட், பிட்ஸா பிரட் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வகத்தில் சோதனையிட்டனர்.  இதில் பொட்டாசியம் புரோமேட்,  பொட்டாசியம் அயோடைடு போன்ற ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தது. இவை புற்று நோய் உண்டாக்கவல்லவை. பல  நாடுகளில் இவற்றை உணவு தயாரிப்புகளில் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரசாயனங்களில்  ஒன்று புற்றுநோய்க்கும், மற்றது தைராய்டு  பிரச்னைக்கும் காரணமாக அமையும்.  
இது குறித்த தகவல் அறிந்ததும், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். மக்கள் யாரும்  பீதி அடைய வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Monday, 23 May 2016

குவைத்தில் வெளிநாட்டினருக்கு Visa-விற்கு (அதாவது iqama)பதிலாக Residential permit Card வழங்க திட்டம்!

குவைத்:
FLASH NEWS.....

      குவைத்தில் வேலைக்கு வரும்  வெளிநாட்டினருக்கு Visa-விற்கு பதிலாக Residential permit Card வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Civil-யுடன் இது சேர்த்து வழங்கப்படும் என்று
உயர் அதிகாரி General Department of Residency Affairs Major General Talal Marafi  தெரிவித்தார் என்று குவைத் பத்திரிக்கைகள்
செய்தி வெளியிட்டுள்ளது.
   தற்பொது உள்ள நிலவரப்படி குவைத்தில் வரும் நபர்களுக்கு visa அதாவது iqama ஆனது passport-யில் Stamp வடிவில்
ஒட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.Residential permit Card நடைமுறைக்கு வருவதன் மூலம் தொழிலாளர்கள் Passport-யினை Sponsore பிடித்து வைப்பது என்ற பிரச்சினை முடிவுக்கு வரும்.
  இதன் மூலம் குவைத்திற்கு  வரவும் வெளியே செல்லவும் திரும்பி தாயகம் செல்லும் போது விமான நிலையத்தில் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களில் Civil-யுடன் இந்த Residential permit Card கட்டாயம்  காட்டவேண்டும்.
  இதை தவிர குவைத் விட்டு தாயகம் செல்லும் நபர்கள் தங்களுடைய  Sponsore-யின் கையில் இருந்த Exit Permit வாங்க வேண்டும் என்ற சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
   இதை தவிர அடுத்த வாரம் முதல் பல்வேறு வகையான Visiting visa-வில் குவைத் வந்துள்ள நபர்கள் Visa காலாவதி ஆகிய நாடு திரும்ப முடியாத இக்கட்டான நிலையில்
அதாவது எதாவது விபத்து மற்றும் எதாவது முக்கியமான காரணங்களால்  விமான
பயணம் தடைபட்ட நபர்களுக்கு visa கலாவதி நீடித்து வழங்கும் திட்டம்  அடுத்த வாரம் முதல்
நடைமுறைக்கு வருகிறது.
   Visiting visa-வில் குவைத் வந்து வேலை செய்யும் நபர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற நினைக்கும் நபர்கள் நடவடிக்கை ஒருபோது ஊக்கி வைக்க மட்டோம் என்று General Department of Residency Affairs Major General Talal Marafi  தெரிவித்தார் என்று  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks: குவைத் தமிழ் பசங்க.

திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானம் இயக்குவதில் ஏர் இந்தியா பாரபட்சம்!

திருச்சி, மே 23:


திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானம் இயக்குவதில் ஏர் இந்தியா பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கோடைக்கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி கடந்த குளிர் கால அட் ட வ னையை ஒப் பி டு கை யில், தற் போது மொத் தம் 13 இந் திய விமா ன நி லை யங் க ளில் இருந்து தனது வெளி நா டு க ளுக்கு, குறிப் பாக வளை குடா சேவையை நடத்தி வரு கின் றது. கூடு த லாக டெல்லி மற் றும் மும் பை யில் மீண் டும் சேவையை தொடங் கி யுள் ளது. வழக் கம் போல கேர ளா வில் இருந்து சேவையை அதி கப் ப டுத் தி யுள் ளது. திருச் சிக்கு மட் டும் பார பட் சம் தொடர் கி றது.
அமிர் த ச ர ஸ லி ருந்து துபாய்க்கு வாரத் திற்கு 7 சேவை க ளில் மாற் ற மில்லை. சென் னை யில் 11 சேவை கள் மாற் ற மில்லை. டெல்லி-அபு தா பிக்கு துபாய்க்கு வாரத் திற்கு 7 சேவை கள். பஹ் ரை னிற்கு வாரத் திற்கு 4 சேவை, தோஹா விற்கு வாரத் திற்கு 4 சேவை என மொத் தம் 22 சேவை களை தேவை யின்றி எமி ரேட்ஸ், ெஜட் ஏர் வேஸ், எத் தி காட், கத் தர் ஏர் வேஸ் மற் றும் கல்ப் ஏர் உடன் போட் டிக்கு தொடங் கி யுள் ளது.
ஜெய்ப் பூ ருக்கு வாரத் திற்கு 7 சேவை மாற் ற மில்லை. கொச்சி குளிர் கால அட் ட வ ணைப் படி வாரத் திற்கு 43 சேவை கள். தற் போது கோடைக் கால அட் ட வ ணைப் படி தம் மா மிற்கு கூடு த லாக வாரத் திற்கு 4 சேவை கள்( தம் மா மிற்கு ஏற் க னவே சவுதி அர பி யன் ஏர் லைன்ஸ் சேவை உள் ளது) ஆக தற் போது வாரத் திற்கு 47 சேவை கள்.
கோழிக் கோடு குளிர் கால அட் ட வ ணைப் படி வாரத் திற்கு 55 சேவை கள். தற் போது அல் அய் னுக்கு கூடு த லாக வாரத் திற்கு 3, புதி தாக ராஸ்- அல்-ஹைமா விற்கு வாரத் திற்கு 4 சேவை கள், துபாய்க்கு கூடு த லாக வாரத் திற்கு ஏழு , தோஹா விற்கு கூடு த லாக வாரத் திற்கு 3, (கத் தார் ஏர் வேஸ் வாரத் திற்கு ஏழு சேவை களை வழங்கி வரு கி றது. )குவைத் திற்கு கூடு த லாக வாரத் திற்கு 2 சேவை கள் என கூடு தல் சேவை கள் மட் டும் வாரத் திற்கு 19 ஆக மொத் தம் வாரத் திற்கு 74 சேவை கள்.
லக் னோ வுக்கு வாரத் திற்கு 7 சேவை கள் மாற் ற மில்லை. மங் க ளூரு கடந்த குளிர் கால அட் ட வ ணைப் படி வாரத் திற்கு 28 சேவை கள். தற் போது தோஹா விற்கு கூடு த லாக வாரத் திற்கு ஒன்று. பஹ் ரை னிற்கு வாரத் திற்கு 3, குவைத் திற்கு வாரத் திற்கு 3 என மொத் தம் வாரத் திற்கு 35 சேவை களை வழங்க உள் ளது.
மும்பை-தோஹா வாரத் திற்கு மூன்று, துபாய் வாரத் திற்கு 7, ஷார்ஜா வாரத் திற்கு 7 என மொத் தம் வாரத் திற்கு 18 சேவை கள், கத் தார் ஏர் வேஸ் எமி ரேட்ஸ் ஏர் அரோ பி யா வு டன் போட் டிக்கு தொடங் கப் பட உள் ளன. அதி லும் குறிப் பாக மும் பை யில்் இருந்து துபாய்க்கு ஜெட் ஏர் வேஸ் வாரத் திற்கு 42 சேவை க ளை யும், எமி ரேட்ஸ் வாரத் திற்கு 35 சேவை க ளை யும்( இதில் வாரத் திற்கு 28 சேவை கள், 364 இருக் கை கள் கொண்ட போயிங் 777/300இஆர் வகை விமா ன மும், வாரத் திற்கு ஏழு சேவை கள் 600 இருக் கை கள் கொண்ட இரட்டை அடுக் கு/ டபுள் டெக் கர் ஏர் பஸ் 380 விமா ன மும் ஆகும்). இயக்கி வரு கி றது.
இவர் க ளு டன் ஏர் இந் தியா எக்ஸ் பி ரஸ் துபாய்க்கு வாரத் திற்கு 7 சேவை களை ஆரம் பித்து தேவை யின்றி போட்டி போட உள் ளது. தேவை யுள்ள திருச் சி யில் இருந்து விமான சேவையை இயக்க முன் வர மறுக் கப் ப டு கி றது. புனே வுக்கு வாரத் திற்கு 3 சேவை கள் மாற் ற மில்லை. திரு வ னந் த பு ரம் முன்பு 20 சேவை கள் வாரத் திற்கு தற் போது கூடு த லாக துபாய்க்கு வாரத் திற்கு ஒரு விமான சேவை என மொத் தம் 21 சேவை கள்.
திருச்சி வாரத் திற்கு 14 சேவை கள் மாற் ற மில்லை. வார ணாசி வாரத் திற்கு முன்று சேவை கள் ஷார் ஜா விற்கு மாற் ற மில்லை.( குறைந்த அளவு பய ணி கள் பங் க ளிப் பைக் கொண்டு பிர த மர் மோடி யின் தொகுதி என்ற ஒரே கார ணத் திற் காக இயக் கப் பட்டு வரு கி றது) ஆதா ரம் டிஜி சிஏ சம் மர் பட் டி யல் 2016)
இதன் படி போட் டிக்கு மும்பை மற் றும் டெல் லி யில் இருந்து ஏற் க னவே போது மான சேவை கள் இருந் தும் மீண் டும் கேரளா விமான நிலை யங் க ளான, கொச்சி, ேகாழிக் கோடு மற் றும் கேரளா சார்பு மங் க ளூ ருக்கு மட் டும் தொடர்ந்து சேவை களை அதி க ரித்து வரும் ஏர் இந் தியா எக்ஸ் பி ர ஸின் போக்கு பார பட் ச மா னது என்று பய ணி கள் குற் றம் சாட் டு கின் ற னர். நாட் டிற்கு பொரு ளா தார நஷ்த்தை ஏற் ப டுத் தக் கூ டி யது.
ஏனெ னில் இந் நி று வ ன மும் நஷ் டத் தில் இயங் கு வ தா கவே இந் நி று வ னத் தின் கணக் குத் த ணிக்கை கூறு கி றது. பிறகு ஏன் நஷ் டப் ப டுத் தும் விமா ன நி லை யங் க ளுக்கு மீண் டும், மீண் டும் சேவை களை தொடங்க வேண் டும் அல் லது அதி க ரிக்க வேண் டும்.
திருச்சி போன்ற லாப மீட் டும் விமான நிலை யங் க ளுக்கு புதிய சேவை தொடங் க மால் உள் ளது.
திருச்சி போன்ற மாற் று வழி இல் லாத லாபம் ஈட் டித் தரு கின்ற வேக மாக வள ரு கின்ற விமா ன நி லை யத்தை திட் ட மிட்டே புறக் க ணிக் கின்ற ஏர் இந் தியா எக்ஸ் பி ர ஸின் போக்கு வன் மை யாக கண் டிக் கத் தக் கது என அனைத்து தரப் பி ன ரும் குற் றம் சாட்டி வரு கின் ற னர்.இவற்றை கவ னத் தில் கொண்டு, மத் திய மாநில அர சு கள் இனி மே லா வது சுதா ரிக் குமா என் பதே அனைத்து பய ணி க ளின் எதிர்ப் பாக உள் ளது.

இஸ்லாமிய மாணவர்களை மதம் சார்ந்து காயபடுத்தும் அமெரிக்க கல்வி நிறுவனங்கள்!!!


சில மதங்களுக்கு முன்பு இளம் விஞ்ஞானி கடிகாரத்தினை உருவாக்கிய முஹம்மது என்ற மாணவரை வெடி குண்டு வைத்திருக்கின்றான் என கூறி தவறாக கைது செய்ய வைத்த  ஆசிரியை போல்!!!
லிபோர்னியயாவை சேர்ந்த  ராஞ்சோ குகமோன்கா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வரும் இஸ்லாமிய மாணவி பாயான் ஸ்கலிப் இவருக்கு வழங்கப்பட்ட இயர் புக்கில் இவரது பெயருக்கு பதிலாக ஐ.ஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிட பட்டு இருந்தது!!!
இந்த புகைப்படத்தை மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.அதில் மாணவி ஹிஜாப். அணிந்து சிரித்தபடி உள்ளார்.அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிலிப்ஸ் என  குறிப்பிடபட்டு உள்ளது.    இதனால் நான் மிகவும்  வெறுப்படைந்து உள்ளேன். எனக்கு இது  காயத்தை ஏற்படுத்தி உள்ளது.  லாஸ் ஓசஸ் ஹை ஸ்கூல்  இயர் புக்கில்  இவ்வாறு குறிப்பிடபட்டு இருந்தது வெட்கமாக உள்ளது என தனது பேஸ் புக்கில் பாயான் தெரிவித்து உள்ளார்!!!
 மேலும் பள்ளிக்கூட்டத்தில் இருந்து என்னை வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.இதை தைரியமாக ஒரு எழுத்து பிழை  எந்ன கூறலாம். இது உண்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.என தெரிவித்து உள்ளார்!!!
இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும் போது பாயானது பெயர மற்ற மாணவி பெயருடன் சேர்ந்த்து கலந்து தவ்றுதலாக் வந்து விட்டது  இந்த் பல்ளிக்கூடம் அவரௌக்கு உத்ரவாதம் வழங்குகிறது.இதற்கு ஊழியர்கள் சார்பில் வருந்துகிறோம் என கூறி உள்ளனர் மேலும் அந்த இயர் புக்கை திரும்ப வாங்கி கொண்டனர்!!!

Sunday, 22 May 2016

ரியாத்திலுள்ள சகோதரர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை. போலீஸ் வேடத்தில் பணம் பறிக்கும் திருடன்.


போலீஸ் வேடமிட்ட அரபி திருடன் உங்கள் அறைக்கு வந்து இக்காமா கேட்டாலோ அல்லது வீட்டு வாசலில் வெளியே நிற்கும் போது கேட்டாலோ கொடுக்க வேண்டாம் அவனுடைய ஐடி கார்டை கேளுங்கள். அல்லது அவனை புகைப்படம் எடுக்க முயலுங்கள்.
ஏனெனில் சில மணி நேரத்திற்க்கு முன் இஸ்லாத்தை அறிந்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருந்த எனது மாற்றுமத நண்பரின் இக்காமாவை பிடிங்கி வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்று ஏடிஎம் மிஷினில் அவரின் கார்டின் பாஸ்வேடு மிரட்டி கேட்டு அதில் இருந்த 2900 ரியாலை திருடி விட்டு போய் விட்டான்.
இப்ப அந்த சகோதரரை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல இருக்கிறேன் ஏனெனில் அந்த ஏடிஎம் மிஷின் கேமாரவில் அந்த திருடனின் முகம் அடையாளம் பிடிபட்டிருக்கும். அதை வைத்து கம்ளைண்ட் பண்ணி பிடிக்கும் முயற்சியில் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

ரோனு புயல் தாக்கத்தால் 23 பேர் பலி -


வங்கதேசத்தில் ரோனு புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான ரோனு புயல், வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் நேற்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதையடுத்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் எடுக்க தந்தை பெயர் தேவையில்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.


புதுடெல்லி: பாஸ்போர்ட் எடுக்க தாயின் பெயரே போதும்; தந்தை பெயர் தேவையில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தனது மகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க தனியாக வாழும் தாய் ஒருவர், டெல்லி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை நாடினார். அப்போது விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் குறிப்பிடவில்லை என கூறி பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தை அலுவலகம் நிராகரித்தது. இதையடுத்து அந்த பெண் தனது மகளுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன், பாஸ்போர்ட் வழங்க தந்தையின் பெயர் அவசியம் இல்லை எனக் கூறி அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்.
உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தபோது அவரது தந்தை மனைவியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார். பெண் குழந்தை பிறந்ததை ஏற்க மறுத்து அவர் இவ்வாறு செய்துள்ளார். தற்போது திருமணம் ஆகாமலே குழந்தை பிறப்பது, பாலியல் தொழிலாளர்கள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், வாடகை தாய் உள்ளிட்ட பிரச்னைகளால் தனியாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தந்தை பெயர் இல்லை என்பதால் அவரது விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டர் நிராகரித்துள்ளது.
தந்தை, யார் என்பது சட்டப்படியான தேவை அல்ல. செயல்முறை சார்ந்த தேவை. மேலும் அந்த பெண்ணின் கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையிலும் அவரது தந்தை பெயர் இடம் பெறவில்லை. எனவே மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தனியாக வாழும் அந்த பெண்ணின் தாயின் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகளுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை மதியுங்கள்: ஃபிரான்ஸிடம் போப்!!


கிருஸ்தவ பெண்கள் சிலுவை அணிவதை மதிப்பதைப் போன்று முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்கள் மத நம்பிக்கையை பின்பற்றுவதையும் மதியுங்கள் என்று ஃபிரான்ஸ் நாட்டிடம் போப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஃபிரெஞ்ச் கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இன்னும் “மக்கள் தங்கள் மத நம்பிக்கையை முழுவதுமாக பின்பற்றுவதற்கு சுதந்திரம் வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்நாட்டில் மத சுதந்திரத்தை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவின் அதிகப்படியான முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய பகுதியாக ஃபிரான்ஸ் இருக்கிறது. இங்கு 2004 ஆண்டு முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு பொது இடங்களில் முகத்திரை அணியவும் தடை வித்திக்கப்பட்டது.

திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி! மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:


நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பான கூட்டணியை அமைத்து அதனை சீரிய முறையில வழிநடத்திய திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தனது கடும் உழைப்பால் களத்தை வலுப்படுத்திய திமுக பொருளாளர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
100 சதவீதம் வாக்கு எண்ணிக்கையை அடைவோம் என்ற நல்ல முழக்கத்துடன் செயல்பட்டாலும் தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்து ஜனநாயகப் படுகொலை நடப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாதது வேதனைக்குரியது.
நாங்கள் ஆற்றும் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளில் ஒன்றுதான் அரசியல் பணி. இந்தத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி அனைத்து மக்களுக்கும் வீரியத்துடன் அயராது தொடரும். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை குறிப்பாக மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(ஒப்பம்) எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

ஜெ., போடும் முதல் கையெழுத்து!


ஜெ., போடும் முதல் கையெழுத்து!
நாளை தமிழக முதல்வராக மீண்டும் பதவி ஏற்கிறார் ஜெ. அவர் பதவி ஏற்றதும் தனது முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்த கையெழுத்திடுகிறார். ஜுன் மாதம் முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. மின் வாரியமும் இதற்கு தயாராக உள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 கோடி செலவாகும்.

Saturday, 21 May 2016

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. 



தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. 
01. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை
02. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்
03. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்
04. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை
05. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை
06. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை 
07. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்
08. ஜெயக்குமார் - மீன் வளத்துறை,
09. சி.வி. சண்முகம் - சட்டத் துறை
10. கே.பி.அன்பழகன் - உயர் கல்வித் துறை
11. வி.சரோஜா-  சமூக நலத்துறை மற்றும் சத்துணவு
12. கே.வி. கருப்பண்ணன் -  சுற்றுச்சூழல் துறை
13. ஆர்.காமராஜ் - உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
14. எம்.சி.சம்பத் - தொழில்துறை
15. ஓ.எஸ். மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
16. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
17. விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
18. எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளத்துறை
19. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை
20. ராஜேந்திர பாலாஜி - ஊரகத் தொழில் துறை
21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை
22. பெஞ்சமின் - பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை
23. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
24. உதயகுமார் - வருவாய் துறை
25. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்
26. ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
27. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
28. துரைக்கண்ணு - வேளாண்  மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
29. கே.சி. வீரமணி - வணிக வரித்துறை

16 தொகுதிகளின் முடிவை நிர்ணயித்த நோட்டா!


சென்னை: தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் வாக்களிப்பதற்காக நோட்டா உருவாக்கப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 16 தொகுதிகளில் அதிமுக வெற்றியை நிர்ணயித்து உள்ளனர்.
* ஆவடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக 1,395 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 4,994 பேர்.
* பர்கூரில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 982 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 1,382.
* சிதம்பரம் தொகுதியில் அதிமுக வெற்றி ெபற்றது. 1,506 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பு இழந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,724.
* கரூரில் அதிமுக வெற்றி. 3,154 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் 3,595.
* காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி. 87 வாக்கு வித்தியாசத்தில் விசிக தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,025.
* கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,884.
* கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி. 428 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,350.
* மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 2,222 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,715.
* ஒட்டபிடாரம் தொகுதியில் அதிமுக வெற்றி. புதிய தமிழகம் வேட்பாளர் 393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். நோட்டா பெற்ற வாக்குகள் 2,612.
* பெரம்பூர் தொகுதியில் அதிமுக வெற்றி. 519 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,167.
* பேராவூரணி தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 995 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,294.
* ராதாபுரம் அதிமுக வெற்றி. திமுக 49 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,821.
* தென்காசியில் அதிமுக வெற்றி. திமுக 462 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,391.
* திருப்போரூர் அதிமுக வெற்றி. 950 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,116.
* தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வெற்றி. 3,155 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,570.
* விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக வெற்றி. 2,333 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,897

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் தோல்வி ஏன்? பரபரப்பு தகவல்கள்.


சென்னை, மே 21:
காட் டு மன் னார் கோ வில் (தனி) தொகு தி யில் தொல்.திரு மா வ ள வன் தோல்வி அடைந் த தற் கான பர ப ரப்பு தக வல் வெளி யா கி யுள் ளது.
தமி ழக சட் டப் பே ரவை தேர் த லில் தேமு திக- மக் கள் நலக் கூட் டணி-தமாகா ஆகி யவை இணைந்து ஒரே அணி யாக தேர் தலை சந் தித் தது. இதில் போட் டி யிட்ட 232 தொகு தி க ளி லும் இந்த கூட் டணி மண்ணை கவ் வி யது. அது மட் டு மல் லா மல் பெரும் பா லான தொகு தி க ளில் டெபா சிட்டை இழக்க நேரிட் டது. பெரி தும் எதிர் பார்க் கப் பட்ட தேமு திக தலை வர் விஜ ய காந்த், விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல்.திரு மா வ ள வன் ஆகி யோ ரும் தோல் வியை சந் திக்க நேரிட் டது.
அதா வது, உளுந் தூர் பேட் டை யில் ேபாட் டி யிட்ட விஜ ய காந்த் வெற்றி வாய்ப்பை இழந் தது மட் டு மின்றி, 3வது இடத் துக்கு தள் ளப் பட் டார். அவர் பெற் றது 34,447 வாக் கு கள் தான். இத னால், அவர் டெபா சிட் இழக்க நேரிட் டது.
இதே போல், காட் டு மன் னார் கோவில் (தனி) தொகு தி யில் போட் டி யிட்ட விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல்.திரு மா வ ள வன் நூலி ழை யில் வெற்றி வாய்ப்பை இழந் தார். அதா வது, அவரை எதிர்த்து போட் டி யிட்ட அதி முக வேட் பா ளர் முருகு மாறன் 48,450 வாக் கு க ளும், தொல்.திரு மா வ ள வன் 48,363 வாக் கு க ளும் பெற் ற னர். அதா வது, 87 வாக் கு கள் வித் தி யா சத் தில் தான் திரு மா வ ள வன் தோல் வியை சந் திக்க நேரிட் டது. இந்த தோல்வி அவ ரது கட் சி யி னர் ஜீர ணிக்க முடி யாத நிலை யில் உள் ளது. தற் போது திரு மா வ ள வன் தோற் ற தற் கான புதிய தக வல் வெளி யா கி யுள் ளது.
அதா வது, காட் டு மன் னார் கோவில் தொகு தி யில் சுயேச் சை யாக திரு மா வ ள வன் பெய ரில் மற் றொ ரு வர் போட் டி யிட் டுள் ளார். அவர் 289 வாக் கு களை பெற் றுள் ளார். விடு தலை சிறுத் தை கள் கட்சி தலை வர் தொல்.திரு மா வ ள வ னுக்கு விழ வேண் டிய வாக் கு கள் மாறி, சுயேச்சை வேட் பா ள ருக்கு விழுந் த துள் ள தா க வும், அத னால் தான் திரு மா வ ள வன் தோல் வியை சந் திக்க நேரிட் ட தா க வும் கட்சி வட் டா ரத் தில் கூறப் ப டு கி றது.


Friday, 20 May 2016

மரண அறிவிப்பு 


மரண அறிவிப்பு
   நமது ஊரை சேர்ந்த சிக்கந்தர் அவர்களின் தகப்பனார் முஹைதீன் பக்கீர் என்கிற பக்கீர்வாப்பா 20/05/2016 இறந்துவிட்டார் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா


சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 6வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2015ம் ஆண்டு இதே மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்!' - விஜயகாந்த்


சென்னை: இந்த தேர்தலில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்' என்று கூறி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்து பலம்வாய்ந்த எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால், தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. வேட்பாளர்கள் ஒரு இடங்களில்கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியை சந்தித்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்.’ தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நல கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி" என்று கூறி உள்ளார்.

ஓர் இடம்கூட கிட்டாத தேமுதிக - மநகூ - தமாகா அணி: அறிக 10 தகவல்கள்!


* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே தோல்வியை தழுவியுள்ளது.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு சென்றார். (#டெபாசிட்_இழந்தார்)
* காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
* தளி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-ம் இடத்தை பிடித்தார். அங்கு திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்றார்.
* தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியின் வீழ்ச்சியால், 3-வது அணி முயற்சி தமிழகத்தில் இந்த முறை தோல்வியில் முடிந்துள்ளது.
* "அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாக்குகளை வாங்கி உள்ளன. தமிழகத்தில் இத்தகைய நச்சுச் சூழல் தொடராமல் இருக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" என்று இந்த அணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார்.
* ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
* இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், "பண பலத்தால் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. எங்கள் அணியினர் யாருக்கும் பணத்தை கொடுக்கவில்லை. எனவே, எங்கள் தோல்வியை நினைத்து நாங்கள் வெட்கப்படவில்லை. எங்கள் கூட்டணி தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து இயங்கும்" என்றார்.
* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறும்போது, "அதிமுக, திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற பணியை நாங்கள் தொடங்கினோம். தொடங்கிய முதல்படியிலேயே தேர்தல் வந்துள்ளது. ஆகவே, இதில் சரிவு ஏற்பட்டுள்ளது" என்றார்.
* அதிமுக வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அணுகுமுறையை விமர்சித்திருக்கிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது.

Wednesday, 18 May 2016

புதுப்பட்டினம் அருகே சாலை விபத்து! இருவர் படுகாயம்


புதுப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் கமர்தீன் மற்றும் அவரது நண்பர் . இருவரும் அதிரைக்கு வந்துவிட்டு இன்று இரவு தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் அதிரையை அடுத்த எறிப்புறக்கரை அருகில் சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் சிறுபாலம் மீது மோதினர். இதில் இருவருகும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனை அடுத்து சமுக ஆர்வலர் ஆரிப், CBD தஞ்சை மாவட்ட துணை தலைவர் கலிபா ஆகியோர் இருவரையும் மீட்டு மல்லிப்பட்டினம் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவருக்கும் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கமர்தீன் அவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சாவூருக்கும், ஜாஃபர் அவர்கள் மல்லிப்பட்டினம் ஆம்புலன்ஸ் மூலமாக பட்டுக்கோட்டைக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.