Tuesday, 24 May 2016

பிரட்களில் கேன்சர் பரப்பும் ரசாயனம்: விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி:   

டெல்லியில் 38 பிரபல நிறுவனங்களின் பிரட், பாவு , பன். பர்கர் பிரட், பிட்ஸா பிரட் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வகத்தில் சோதனையிட்டனர்.  இதில் பொட்டாசியம் புரோமேட்,  பொட்டாசியம் அயோடைடு போன்ற ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தது. இவை புற்று நோய் உண்டாக்கவல்லவை. பல  நாடுகளில் இவற்றை உணவு தயாரிப்புகளில் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரசாயனங்களில்  ஒன்று புற்றுநோய்க்கும், மற்றது தைராய்டு  பிரச்னைக்கும் காரணமாக அமையும்.  
இது குறித்த தகவல் அறிந்ததும், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். மக்கள் யாரும்  பீதி அடைய வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment