சென்னை: தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் வாக்களிப்பதற்காக நோட்டா உருவாக்கப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 16 தொகுதிகளில் அதிமுக வெற்றியை நிர்ணயித்து உள்ளனர்.
* ஆவடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக 1,395 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 4,994 பேர்.
* பர்கூரில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 982 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 1,382.
* சிதம்பரம் தொகுதியில் அதிமுக வெற்றி ெபற்றது. 1,506 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பு இழந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,724.
* கரூரில் அதிமுக வெற்றி. 3,154 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் 3,595.
* காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி. 87 வாக்கு வித்தியாசத்தில் விசிக தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,025.
* கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,884.
* கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி. 428 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்தது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,350.
* மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 2,222 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,715.
* ஒட்டபிடாரம் தொகுதியில் அதிமுக வெற்றி. புதிய தமிழகம் வேட்பாளர் 393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். நோட்டா பெற்ற வாக்குகள் 2,612.
* பெரம்பூர் தொகுதியில் அதிமுக வெற்றி. 519 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,167.
* பேராவூரணி தொகுதியில் அதிமுக வெற்றி. திமுக 995 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,294.
* ராதாபுரம் அதிமுக வெற்றி. திமுக 49 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 1,821.
* தென்காசியில் அதிமுக வெற்றி. திமுக 462 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,391.
* திருப்போரூர் அதிமுக வெற்றி. 950 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 2,116.
* தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வெற்றி. 3,155 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,570.
* விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக வெற்றி. 2,333 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோற்றது. நோட்டா பெற்ற வாக்குகள் 3,897
No comments:
Post a Comment