சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23ம் தேதி திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 6வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2015ம் ஆண்டு இதே மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment