Sunday, 22 May 2016

ரோனு புயல் தாக்கத்தால் 23 பேர் பலி -


வங்கதேசத்தில் ரோனு புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான ரோனு புயல், வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் நேற்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதையடுத்து பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment