Friday, 27 May 2016

சவுதி அரபியாவில் 2016 -லும் இப்படி சில மனிதர்கள்;

சவுதி:

இந்த 2016 -லும் இப்படி சில மனிதர்கள்;
சவுதி அரேபியாவில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டரை துப்பாக்கியால் சுட்ட கணவர்:
    சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் பகத் மருத்துவ சிட்டியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவரான முகன்னத் அல் ஜப்ன் என்பவர் கடந்த ஒருமாதத்திற்கு முன் பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
    பிரசவத்தின் போது இப்பெண்ணின்க ஜோர்டானை சேர்ந்த கணவரும் உடனிருந்துள்ளார், அப்போது அந்த மருத்துவர் தனது மனைவியின் உடலை தொட்டது இவருக்கு பிடிக்கவில்லை, ஆண் மருத்துவராக இருந்தபோதிலும், தனது முன்னால் எப்படி மனைவியின் உடல் பாகங்களை தொடலாம் என்று கோபம் கொண்டுள்ளார்.
   குழந்தை பிறந்து 2 வருடங்கள் கடந்து விட்டபோதிலும், இவரது மனதுக்குள் அந்த விரோதம் இருந்து வந்துள்ளது, தன்னுடைய மனைவியை எவ்வாறு அப்படி தொடலாம் எனமனதுக்குள் வன்மம் அதிகரித்து கொண்டே இருந்தது.
   ஒருநாள் தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவிய உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், எனவே உங்களை எப்போது சந்திக்கலாம் என மருத்துவர் முகன்னத்திடம்அனுமதி கோரியுள்ளார்.
   மருத்துவமனைக்கு கீழ் உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார், இதன்படியே  வந்த அந்த நபர் மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தார் திடீர் என தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரை  நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
    இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது, அதன்பின்னர் அந்நபரை தேடிப்பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரவசத்தின் போது மருத்துவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. அதனால் தான் இவ்வாறு செய்துவிட்டேன் என கூறியுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
      இதே போல் ஆறு மாதங்களுக்கு முன்பு
துபாய் கடற்கரையில் குளித்து கொண்டு இந்த தனது மகளை கடல் அடித்து சென்றது.
இதை பார்த்த கடலோர காவல்படை வீரர்கள் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். இதை செய்ய விடாமல் அந்த பெண்ணின் தந்தை வீரர்களை தடுத்தார்.
    இதில் அந்த பெண் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து போலீஸ் நடத்தி விசாரணையில் பிற ஆண்கள் எனது மகளை
தொட்டால் அவள் அசுத்தம் ஆகிவிடுவாள் எனவே வீரர்களை தடுத்தேன் என்றார். இதை
தொடர்ந்து தங்களுடைய வேலையினை செய்யவிடாமல் தடுத்த மற்றும் கொலை குற்றத்திற்காக அந்த நபரை போலீஸ் கைது செய்தது நினைவிருக்கலாம்.
Source: சவுதி பிரபல பத்திரிகை Airbtimes

No comments:

Post a Comment