புதுப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் கமர்தீன் மற்றும் அவரது நண்பர் . இருவரும் அதிரைக்கு வந்துவிட்டு இன்று இரவு தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் அதிரையை அடுத்த எறிப்புறக்கரை அருகில் சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் சிறுபாலம் மீது மோதினர். இதில் இருவருகும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனை அடுத்து சமுக ஆர்வலர் ஆரிப், CBD தஞ்சை மாவட்ட துணை தலைவர் கலிபா ஆகியோர் இருவரையும் மீட்டு மல்லிப்பட்டினம் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவருக்கும் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கமர்தீன் அவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சாவூருக்கும், ஜாஃபர் அவர்கள் மல்லிப்பட்டினம் ஆம்புலன்ஸ் மூலமாக பட்டுக்கோட்டைக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment