சவுதி:
சவுதியில் இரண்டு தமிழர்கள் மற்றும் மூன்று கேரளா நபர்கள் என ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்து கொலை செய்த மூன்று சவுதி நபர்களுக்கு; சவுதி நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது:
சவுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொலை பற்றி கடந்த 2014 ஆண்டு வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது . கொலை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கொலை செய்த மூன்று சவுதி குடிமகன்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளன.
இவர்களுக்கு மதுவில் மயங்க மருந்து கலந்துகொடுத்து மயக்கமடையச் செய்து
கை கால்களை கட்டி உயிருடன் மண்ணுக்கு
அடியில் புதைக்கப்பட்டது. குற்றவாளிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.
ஒரு சவுதி நபர் தன்னுடைய தோட்டத்தில்
விவசாயம் செய்ய சிறிய வாய்க்கால் தோண்டிய போது உடல் பாகங்களை கண்டதை அடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார் அவர்கள் அந்த தோட்டத்தை முழுவதுமாக தோண்டிப் பார்த்தில் இந்த
ஐந்து உடல்கள் கிடைத்துள்ளது.
இதில் இருவர் கன்னியாகுமரி மாவட்டம் சேர்த்தவர்கள் மற்ற மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இந்த தீர்ப்பை மனப்பூர்வமான ஏற்று கொள்வதாக சவுதியில் உள்ள இந்தியர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment