Saturday, 30 April 2016

"முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமானவர்" - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்


ஆர்.எஸ்.எஸ் வேண்டுமானால் பாகிஸ்தான் போகட்டும், முஸ்லிம்கள் போக வேண்டியது இல்லை என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் அதிரடி தாக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது....
பகவத் சிங்க்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை,
காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
இந்திர காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
ராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை,
சுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தனர், பிறகு அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள்.
தாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம்... இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம், அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது.
இந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசரப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல் ஹமீதின் நாடு.
நாம் அசரப்குல்லா மற்றும் மாவீரன் அப்துல் ஹமீதின் தியாகத்தை புறம்தள்ளிவிட முடியுமா? முடியாது இது அனைவருக்குமான நாடு.
இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போக சொல்லும் மூடர்களிடம் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுபற்றை நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு முஸ்லிம் நிச்சியமாக தனது இந்திய திருநாட்டை நேசிக்கும் தேசபற்றாளனாகதான் இருப்பான்.
கங்கை நதி அனைவருக்குமானது, ராமன் அனைவருக்கும் பொதுவானவன் அதே போல் முஹம்மது நபியும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லை நாம் அனைவருக்குமானவர்,
இந்த உலகமும் அனைவருக்குமானது.
இறுதியாக இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூடர்களுக்கு சொல்லிகொள்கிறேன், இந்திய இஸ்லாமியர்களை பாக்கிஸ்தான் போக சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை, அப்படி பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் நீங்கள் செல்லுங்கள் என்று விளாசி தள்ளியுள்ளார்.

சர்வதேச அல்குர்ஆன் மனனப்போட்டி - 86 வயது மூதாட்டி இரண்டாமிடம்


உலக அளவில் நடைபெற்ற திருகுர்ஆன் மனன போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்திய 86 வயதை நிறைவு செய்த தாய்.
நீங்கள் படத்தில் பார்க்கும் தாய் 86 வயதை நிறைவு செய்தவர். உலக அளவில் நடை பெற்ற திருகுர்ஆன் மனனபோட்டி ஒன்றில் கலந்து கொண்டு, உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தவர்
வயது 86 ஆக இருந்தாலும் தனது செயலின் மூலம் தாம் இன்னும் இளைமையுடன இருப்பதை நிரூபணம் செய்துள்ளார்.
சீரியலிலும், சினமாவிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய கால பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இந்த தாய் அமைகிறார்.

முகம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை, பிரசுரித்த பத்திரிக்கையாளர்களுக்கு சிறை தண்டனை


’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையில் வெளியான, முகம்மது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை தங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்த 2 பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கிய நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Cumhuriyet daily என்ற துருக்கிய பத்திரிக்கையில் கட்டுரையாளர்களாக பணிபுரிந்து வரும், Ceyda Karan and Hikmet Cetinkaya இருவரும் கடந்த வருடம் எழுதிய கட்டுரை ஒன்றில், பிரான்ஸின் ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையில் வெளியான, முகம்மது பற்றிய கேலிச் சித்திரத்தை மறு பிரசுரம் செய்துள்ளனர்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியதை அடுத்து, துருக்கி பொலிசார் அந்த பத்திரிக்கையின் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த பிரதிகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் போராட்டக்காரர்கள் பலர் அந்த கேலிச் சித்திரத்தை பிரசுரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த பத்திரிக்கை பிரதிகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
பத்திரிக்கை வழியாக மக்கள் மத்தியில் வெறுப்பையும் பகையும் வளர்ப்பதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் தனித்தனியே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அந்த பத்திரிக்கையாளர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

சவூதி அரேபியா சிறைச்சாலையில் இருந்து, உருவான 9 ஹாபிழ்கள் (படம்)


சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று அல்பாஹா. இங்கு அமைந்துள“ள சிறை ஒன்றில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஒன்பது சகோதரர்கள் தண்டனை காலத்தில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்தனர்.
குற்றவாளிகளாக சிறைக்குள் நுழைந்தவர்கள் மனம் திருந்தி தனது குற்றத்திற்காக வருந்தி இறைவனின் பக்கம் திரும்பி திருமறையையும் மனனம் செய்திருப்பது மகிழ்சிக்கு உரிய விசயமாகும்
இந்த மகிழ்சியை அந்த சிறை நிறுவாகம் விழாவாக கொண்டாடியது சிறை நிறுவாகம் வாழ்த்தும் அவர்களை நாமும் வாழ்த்துவோம். அந்த காட்சிகளை தான் படம் விளக்குகிறது.

இந்தியா முஸ்லீம்களுக்குமௌனமாக அரங்கேறிய மோடி அரசு சதி


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையொட்டி, பல்லாயிரம் பேர் பாகிஸ்தான் சென்றார்கள், பல்லாயிரம்பேர் இந்தியா வந்தார்கள்.
பாகிஸ்தானுக்குச் சென்றவர்களின் இந்தியச் சொத்துகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். சரிதான்.
தந்தை பாகிஸ்தானுக்குச் சென்றார், மகன் இங்கேயே இருந்தார், அல்லது கணவன் பாகிஸ்தானுக்குச் சென்றார், மனைவி இங்கேயே இருந்தார் என்றால், அல்லது அவர்கள் வாரிசுகள் இங்கேயே இருந்து, அவர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்கிறார்கள் என்றால் சொத்துகள் யாருக்குச் சொந்தம்? மகனுக்கும் மனைவிக்கும் வாரிசுகளுக்கும்தானே?
இல்லை என்று அவசரச்சட்டம் (Enemy Property (Amendment & Validation) Bill 2016) போட்டு திருத்தியிருக்கிறது மோடி அரசு.
* The definition of “enemy” and “enemy subject” shall include the legal heir and successor of an enemy, whether a citizen of India or a citizen of a country which is not an enemy, and also include the succeeding firm of an enemy firm in the definition of “enemy firm” irrespective of the nationality of its members or partners.
இதனால் பாதிக்கப்படப்போகிறவர்கள் பல்லாயிரம் முஸ்லிம்கள் மட்டுமே என்பது வெட்டவெளிச்சம்? விந்தை என்னவென்றால், மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்தம் நம் கவனத்தைப் பெறாமலே போயிருக்கிறது.
அப் கீ பார் ஆப்பு கீ சர்க்கார்

ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்பு துறையின் (எதிசலாத் ) பெயரில் போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது:

ஷார்ஜா:
ஏப்ரல் 30 :2016


ஷார்ஜாவில் பிரபல தொலை தொடர்பு
துறை சேவை வழங்குநர் (எடிசலாட்) இருந்து அழைப்பதாக கூறி போலி அழைப்பு விடுத்து பரிசுத் தொகை அறிவித்து பணம் பறித்த கும்பல் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்
துல்லியமாக சந்தேகம் வராதமுறையில்
அழைத்து Dh200,000  பரிசு தொகை மற்றும் ஐபோன் 6 பெறும் பொருட்டு உடனடியாக Dh5,000 முதல் Dh10,000 இடையே ஒரு தொகையினை வாடிக்கையாளர்கள் பரிமாற்ற  தொகைகள் கட்டி இந்த பரிசை பெறலாம் என்று கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.
  எனவே ஷார்ஜா போலீஸ் உயர் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஃபைசல் பின் நாசர் குற்றப் புலனாய்வுத் துறை துணை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 999 அல்லது 06-5632222 அல்லது கட்டணமில்லா எண் Najeed
800 151 அல்லது 7999 எண்ணுக்கு  எஸ்எம்எஸ் வழியாக
புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
 இணையத்திலும் புகார் செய்யலாம்
www.shjpolice.gov.ae/najeed
செய்தி:(Gulf news newspaper)

Friday, 29 April 2016

மக்கள்தொகைக்கு ஏற்ப முஸ்லீம் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு: மத்திய அரசு பரிசீலனை


நாட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சில சாதியைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும்போது, எஸ்சி, எஸ்டி அந்தஸ்தை இழப்பதாகக் கூறப்படுவது கவலை அளிக்கிறது. அத்தகைய சாதியைச் சேர்ந்தவர்களை எஸ்சி, எஸ்டி ஆக அங்கீகரித்து இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்ட (எஸ்சி) இனவரிசை (திருத்த) மசோதா 2016 மீதான விவாதத்தின்போது சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறும்போது, “மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு உறுப்பினர் கோருகிறார். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.

அவசர செய்தி : ஃபேஸ்புக்கில் அம்சத் ஆமினா என்ற பெயரில் முஸ்லீம்களை ஏமாற்றி திரியும் பிராமணபெண் / திருநங்கை


 இந்த பெண்(திருநங்கை) பிராமன இனத்தை சேர்ந்தவர். இந்து மக்கள்கட்சி வேட்பாளர் .ஆனால் தான் முஸ்ஸுமாக மாறிவிட்டதாகவும், இஸ்லாத்தை நேசிப்பதாகவும் கூறி அம்சத் ஆமினா என்ற பெயரில் ராமநாதபுரம் முகவரியில் முஸ்ஸீம் போன்றதொரு தோரனையில் முஸ்ஸீம்களை இழிவு படுத்தி வருகிறார். நானும் கூட இந்த பெண்னை முஸ்ஸீம் என நம்பினேன். அந்த பெண் அனாதை குழந்தைகளுக்கு உதவுகிறேன் பணம் அனுப்பு என்னிடம் கேட்டார். ஆனால் அனாதை குழந்தைகளை பற்றிய எந்த புகைப்படமோ ஆதாரமோ தரவில்லை.
நானும் இந்த பேஸ்புக்கின் மூலம் கஷ்டத்தில் இருக்கும் ஓரு சிலருக்கு உதவி செய்துருக்கிறேன் இறைவன் அறிவான். ஆனால் நான் இந்த பெண்னுக்கு உதவி செய்யவில்லை காரணம் நம்பும்படியாக இல்லாததால்.
மேலும் சமீபத்தில் இந்த பெண்னை மதுரை இந்து மக்கள் கட்சி வேட்பாளாராக நிற்பதை அறிந்த போதுதான் எனக்கு அதிர்ச்சியே வந்தது. இன்றுவரை என் நட்பில் இந்த பென் இருந்தார்.. அதுவும் நாளாயிரம் முஸ்ஸீம் நன்பர்களுடன்.
அனு மதுரை என்ற அய்டியில் மதுரை அன்னா நகர் முகவரியில் இந்து பெண்னாக ஓரு அய்டி. ஏன் இந்த வேசம் என்று அந்த பெண்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய போதுதான் தெரிகிறது அந்த பிராமன பெண்என்றும்
முஸ்ஸீம் மதத்திலேயே இல்லை என்று.
இதுவரை எத்தனை முஸ்ஸும் இளைஞர்கள் பனத்தையும், ஈமானையும் இழந்தார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாத்தை அழிக்க இந்தமாதிரி ஆயிரம் விசப்பூச்சிகள். ஆனால் இதைப் விட பல மலை பாம்புகளையே விழுங்கி செமித்த மதம் என இந்த மாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதைவிட கொடுமை என்றால் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நான் ஓரு திருநங்கை என சொல்லிவிட்டு தப்ப நினைக்கிறார். திருநங்கையாக இருந்தால் தன்டனையில் இருந்து தப்பலாம் என்றா?

இஸ்லாத்தின் பெயரை பயன்படுத்தி இஸ்லாத்தை அழிக்க இதுபோல் பல கூட்டம் அலைகிறது. இஸ்லாமியர்களும் இஸ்லாம் அல்லாதவர்களும் சமூக விரோதிகளிடம் இருந்து உங்கள் பனத்தையும், தூய மனத்தையும் காத்து கொள்ளுங்கள்.

Thursday, 28 April 2016

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

ஆலந்தூர்

கிண்டியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அதில் 38 மாணவர்கள் காயம் இல்லாமல் தப்பினார்கள்.
கல்லூரி சொகுசு பஸ்
சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று நேற்று காலை 38 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்னை மந்தைவெளியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் வினோத் என்பவர் ஓட்டி வந்தார்.
கிண்டி ஹால்டா சர்தார் பட்டேல் சாலையில் வந்த போது திடீரென சொகுசு பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதை கண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். டிரைவர் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் அவசர, அவசரமாக கீழே இறங்கினர்.
தீப்பிடித்து எரிந்தது
சிறிது நேரத்தில் பஸ்சில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, ராஜ்பவன் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனாலும் பஸ்சின் முன்பகுதி, இருக்கைகள் என பஸ்சின் பாதி பகுதி தீயில் எரிந்து நாசமானது. புகை வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் அந்த பஸ்சில் வந்த 38 மாணவர்களும் மாற்று பஸ்சில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ்சில் உள்ள ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இஸ்லாத்தை இழிவு படுத்திய பாத்திமா பாபுவை வண்மையாக கண்டிக்கின்றோம் ....!



ஈரோட்டில் கடந்த 19ம் தேதி இரவு நேரத்தில் அக்கரகாரம் வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறினார் முகம்மது நபி(ஸல்) தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளதாக கூறினார்.  என்று கூறி  ஜெ. அம்மாவின் காலில் தான் சொர்க்கம் உள்ளது என்று கூறி முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஜெ.அம்மாவிற்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று கேட்டு ஓட்டு சேகரித்தார்.
அல்லாஹ்வுடைய தூதர் கூறியது இந்த பெண்ணையா....?
வெக்கக்கேடு யாரை யாரோடு சேர்ந்து பேசுவது என்று வெவஷ்தை தெரியவில்லை...?
தன் சொந்த தாயை தான் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களே தவிர இது போன்ற  கூத்தாடி பொம்பலைய சொல்லவில்லை...!
தொடர்ந்து இது போன்று பேசி இஸ்லாத்தை இழிவு படுத்துவதே தொழிலாகிவிட்டது...!
இதை முஸ்லிம்கள் நாங்கள் வண்மையாக  கண்டிக்கின்றோம்....!
இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் (அதிமக)  இல்லையென்றால் வரக்கூடிய தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும்....!
மமக கண்டனம் தெரிவித்து மற்றும்  தேர்தல் ஆணையரிடம்  புகார் அளித்திருப்பது குரிப்பிடதக்கது....!
மற்ற எந்த இஸ்லாமிய இயக்கமோ அல்லது கட்சியோ இது வரை வாய் திரக்கவில்லை....!!

Wednesday, 27 April 2016

இனி பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு அழைப்புக்களை மேற்கொள்ளலாம் (Group Call)


பேஸ்புக் பயன்படுத்தும் எந்த ஒருவராலும் இன்னுமொருபேஸ்புக் நண்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதியை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதன் மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்தும் நபர்களுக்கு மத்தியில் தடையின்றி குரல்/வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிந்தது.
தற்பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் இணைந்து குழு உரையாடலில் ஈடுபடுவதற்கான "குரூப் காலிங்" (Group Calling) வசதியும் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்க.
இனி பேஸ்புக் மெசெஞ்சர்  செயலியின் மேல் மத்திய பகுதியில் வழங்கப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுவதன் ஊடாக அதன் "குரூப்" பகுதிக்கு செல்க.
பின் அதன் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள "+" குறியீட்டை சுட்டுவதன் மூலம் புதிய குழு ஒன்றை உருவாக்குக. பின்னர் அதில் நீங்கள் ஒரே நேரத்தில் பேச விரும்பும் அனைத்து நண்பர்களையும் இணைத்துக்கொள்க.
இனி நீங்கள் உருவாக்கிய குழுவின் வலது மேற்பகுதியில் வழங்கப்பட்டுள்ள அழைப்புக்களை மேற்கொள்வதற்கான குறியீட்டை சுட்டுவதன் மூலம் நீங்கள் இணைத்த நண்பர்களுடன் ஒரே நேரத்தில் உரையாட முடியும். இவ்வாறு ஒரே நேரத்தில் 50 நண்பர்களுடன் உரையாடுவதற்கான வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஒரு குழுவில் உள்ள நண்பர்களுடனும் உரையாடலை மேற்கொள்ளலாம். இதன் போது உரையாட வேண்டிய நண்பர்களை தெரிவு செய்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.
குழு உரையாடலின் போது தற்போதைக்கு இது குரல் அழைப்புக்களுக்கு மாத்திரமே ஆதரிக்கிறது. எனினும் இதில் குழு வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான காலமும் அவ்வளவு  தூரம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
எனவே இனி நீங்கள் தவறவிட்ட பாடசாலை வகுப்பறையை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.
இன்றைய தொழில்நுட்பத்தை அனுபவியுங்கள் தோழர்களே!

வாட்ஸ்அப் மூலம் செயலிகள், மைக்ரோசாப்ட் ஆவணங்கள் உட்பட எந்த ஒன்றையும் பகிர்வது எப்படி?


வாட்ஸ்அப் மூலம் குரல் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை ஏனையவர்களுடன் மிக இலகுவாக பகிர்ந்துகொள்ள முடியும்.

அத்துடன் வாட்ஸ்அப் மூலம் பி.டி.எப் (PDF) ஆவணங்களை பகிர்வதற்கான வசதியும்  அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
என்றாலும் நாம் நினைத்த அனைத்து கோப்புக்களையும் வாட்ஸ்அப் மூலம் பகிர்வதற்கான உத்தியோகபூர்வ வசதிகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
வாட்ஸ் டூல்ஸ் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்பலாம்.
எனினும் வாட்ஸ் டூல்ஸ் எனும் செயலியை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு செயலிகள், மைக்ரோசாப்ட் ஆவணகள் உட்பட நீங்கள் நினைக்கும் எந்த ஒரு கோப்பையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
வாட்ஸ் டூல்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி?
கீழே வழங்கப்பட்டுள்ள இணையச் சுட்டி மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்க
பின்னர் Settings > Accessibility பகுதியின் மூலம் வாட்ஸ் டூல்ஸ் செயலிக்கான Service எனும் வசதியை செயற்படுத்திக்கொள்ள வேண்டும். (வாட்ஸ் டூல்ஸ் செயலியை நீங்கள் முதன் முதலாக திறக்கும் போது இதனை செயற்படுத்திக் கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் உங்களுக்கு தோன்றும்)
நீங்கள் அனுப்பும் கோப்புக்கள் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் சேமிக்கப்பட்டு அதன் மூலமே அனுப்பப்படுவதால் வாட்ஸ் டூல்ஸ் செயலியுடன் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கை தொடர்புபடுத்த வேண்டும். (வாட்ஸ் டூல்ஸ் செயலியை முதன் முதலாக திறக்கும் போது இதனை மேற்கொள்ளலாம், அல்லது வாட்ஸ்அப்மூலம் கோப்புக்களை இணைக்கும்போதும் இதனை மேற்கொள்ள முடியும்)
இனி வாட்ஸ்அப் செயலியை திறந்து நீங்கள் கோப்புகளை அனுப்ப விரும்பும் நபரை தெரிவு செய்க.
அடுத்து Attachment குறியீட்டை சுட்டிய பின் கோப்புக்களை இணைப்பதற்கான புதியதொரு சாளரம் (Window) வாட்ஸ்அப் சேவையில் திறக்கப்படுவதை அவதானிப்பீர்கள்.
பின் குறிப்பிட்ட சாளரத்தின் மூலம் அனுப்ப வேண்டிய கோப்புக்களை தெரிவு செய்து குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்.
அதனை பெறுபவர் வாட்ஸ் டூல்ஸ் செயலியை நிறுவியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொண்ட இணைப்பை ஏதாவது ஒரு இணைய பயன்படுத்தி திறந்தாலே போதும் அதனை அவரால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.
அவ்வளவுதான்!
வாட்ஸ் டூல்ஸ் ஆண்ட்ராய்டு 

மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...


மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்தின. 
CBSE எனப்படும் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் மத்திய கல்வி நிறுவனங்களுக்கான மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த முறையை நீக்கி விட்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்இஇடி) என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்திடம் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு தனியார் கல்லூரிகள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. 
அவற்றின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு 2013-இல் தடை விதித்தது. இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டன. 
இதை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அண்மையில் விலக்கியது.  
இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான தேதியை நாளை முடிவு செய்யப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு உள்ள தடையை நீக்க இளவரசர் மறுப்பு.


சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சட்டத்துக்கு எதிரானது இல்லையென்றாலும் சாலைகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. பெண்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.
எனினும் நகரங்களில் உள்ள பெண்கள் கார் ஓட்டுவதற்கு சில சலுகைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த திங்களன்று இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த பேட்டியில் , பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது என்பது மதரீதியான பிரச்சனை என்பதை தாண்டி சமூக ரீதியாகவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பெண்களுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைப்பதற்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ள அவர் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள முடியாது, எனினும் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்

குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் சவுதி மன்னர் சல்மான் சூழுரை


குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் சவுதி மன்னர் சல்மான் சூழுரை
=======================================
கனவு 2030 என்றொரு திட்டத்தை சவுதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது
2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரைய பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவுதி அரேபியா கொண்டு வர இருக்கிறது
முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள சவுதி அரேபியா தேவையான மாற்றங்களை கொண்டு வர உறுதியெடுத்துள்ளது

இது பற்றி சவுதி மன்னர் சல்மான் செய்தியாளர்களிடம் பேசும் போது
மாற்றங்கள் தான் முன்னேற்றத்தின் அடிப்படை முன்னேற்றங்களுக்காக மாற்றங்களை கொண்டு வரும் போது அந்த மாற்றங்கள் இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படைகளோடு முறண்படாத நிலையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த படும்

குர்ஆனையும் சுன்னாவையும் உறுதியாக முறுக பிடித்த நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாரதயை நோக்கி அழைத்து செல்வோம் என்றும் அவர் கூறினார்

சவுதியில் மாபெரும் சீர்திருத்தங்கள்புதிய தொழில்களுக்கு முக்கியத்துவம் தர திட்டம்.


ரியாத்: எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், பிற தொழில்களை ஊக்குவிக்கும் வகையில்,மாபெரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு, சவுதி அரேபியா நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியா, எண்ணெய் வளத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளது. உலகின் பெரும்பாலான வாகனங்கள், பெட்ரோல் அல்லது டீசலில் ஓடுவதால், எண்ணெய் வர்த்தகத்தின் மூலம், சவுதி அரேபியா செல்வச்செழிப்பில் கொழித்து வந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், சவுதி அரேபியாவின் வருவாயும் வெகுவாக குறைந்தது. கடந்தாண்டில், சவுதி அரேபியாவின் மொத்த வருவாயில், 75 சதவீதம் மட்டுமே, எண்ணெய் மூலம் கிடைத்து உள்ளது.
விற்பனை செய்ய திட்டம்
எதிர்காலத்தில் எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்ற எண்ணம், சவுதி அரேபியா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2030க்குள், சவுதி அரேபியாவில், பிற தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், மாபெரும் பொருளாதார சீர்திருத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் ஒன்று, அரசுக்கு சொந்தமான, எண்ணெய் வர்த்தக ஜாம்பவான் நிறுவனமான, 'அராம்கோ'வின் பங்குகளை விற்று, பொது நிதியத்தை உண்டாக்குவது. 165 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளில், முதல் கட்டமாக, 5 சதவீதத்தை மட்டும் விற்க, தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான், 30, 'விஷன் 2030' எனப்படும், சீர்திருத்த திட்டத்தை வெளியிட்டு கூறியதாவது:
சவுதி அரேபியாவின் பொருளாதாரம், முழுவதும், எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ளது.
இதை மாற்றி, 2030க்குள், எண்ணெய் வளமின்றி நம்மால் ஜீவிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவோம். அரசு நிறுவனமான, அராம்கோவின், 5 சதவீத பங்குகள் விற்கப்படும். இதில் கிடைக்கும் தொகையுடன் சேர்த்து, 130 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, பொது முதலீட்டு நிதியம் உருவாக்கப்படும்.
'கிரீன் கார்டு' முறை
சவுதி அரேபியாவில் புதிய, 'விசா'முறை அறிமுகப்படுத்தப்படும். சவுதி அரேபியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு முஸ்லிம்கள், அரேபியர்கள், நீண்ட காலமாக வசிக்க வகை செய்யும், 'கிரீன் கார்டு' முறை கொண்டு வரப்படும். கனிமச் சுரங்கங்கள், ராணுவ தளவாட உற்பத்தியை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். பணியிடங்களில் பெண்களின் பங்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சீர்திருத்தம் நிச்சயம்!
கடந்த, 2014ல், கச்சா எண்ணெய், ஒரு பேரல், 115 டாலருக்கு விற்கப்பட்டது. தற்போது, 40 டாலர் அளவில் விற்கப்படுகிறது.
இருப்பினும், ''எண்ணெய் விலை வீழ்ச்சிக்கும், அரசின் எதிர்காலத் திட்டத்துக்கும்சம்பந்தமில்லை,'' என, அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறியுள்ளார்.
இளவரசர் முகமது பின் சல்மான் கூறியதாவது: எண்ணெய் விலை, மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்தால், சவுதி அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பேருதவியாக இருக்கும். இருப்பினும், அதிக விலை அவசியமில்லை என்றே கருதுகிறோம். குறைந்தபட்ச விலையை வைத்து கூட, சீர்திருத்த திட்டங்களை நிறைவேற்றி விட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கலங்கடித்த விலை வீழ்ச்சி
சவுதி அரேபியாவில் கிடைக்கும் அபரிமிதமான எண்ணெய் வளத்தால், அந்நாடு, மிகப்பெரும் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. ஆனால்,சமீப காலமாக, எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
2014ம் ஆண்டு மத்தியில் இருந்த விலையில், பாதிக்கும் குறைவான விலையில், கச்சா எண்ணெய் வர்த்தகம் ஆகிறது. இதனால், பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைவீழ்ச்சி அடைந்ததால், மற்றொரு எண்ணெய் உற்பத்தி நாடான அங்கோலாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நிதியத்தின் உதவியை, அங்கோலா நாடியது. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதில், சவுதி அரேபியா அரசு உறுதியாக உள்ளது.
இருப்பினும், சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம், அசுர வேகத்தில் குறைந்து வருகிறது. அந்நாட்டின் மொத்த வருவாயில், 75 சதவீத பங்கு, எண்ணெய் மூலமே கிடைக்கிறது. இதனால், இப்போதே, தக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, சவுதி அரசு கருதுகிறது.
ரூ.9 லட்சம் கோடி காலி!
* சவுதி அரேபியாவின் மொத்த வருவாயில்,75 சதவீதம், எண்ணெய் மூலம் கிடைக்கிறது
* கடந்த, 2015 பட்ஜெட்டில், 6.35 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது
* அரசு நிறுவனமான, அராம்கோவின் மதிப்பு, 165 லட்சம் கோடி ரூபாய்
* சவுதி அரேபியா அரசு உருவாக்கவுள்ள பொது முதலீட்டு நிதியத்தின் மதிப்பு, 130 லட்சம் கோடி ரூபாய்
* எளிதில் வாங்கக் கூடிய விலையிலான வீடுகளை அதிகளவில் கட்ட, திட்டமிடப்பட்டுள்ளது
* சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாடுகளை சேர்ந்த ஒரு கோடி பேர், வருவாய் முழுவதையும், தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்
* வெளிநாட்டவர், நீண்ட காலம் தங்க உதவும், 'கிரீன் கார்டு' முறையால், அவர்களின் வருவாய் மீண்டும், சவுதி அரேபியாவில் முதலீடு செய்யப்படும் என, அரசு நம்புகிறது
* கடந்த 2014ல், சவுதி அரேபியாவின் நிதி இருப்பு,49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது
* தற்போதைய நிதி இருப்பு, ஒன்பது லட்சம் குறைந்து, 40 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து விட்டது

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எவ்வித தடையும் இல்லை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....!!


மத்திய அரசின் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான விசாரணையை எடுத்துக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதில் எந்த ஒரு தடையும் இல்லை என்று அதிரடி தீர்பளித்துள்ளது.

பேசப்படாத ஒரு பெரும் ஊழல் : ஓர் அதிர்ச்சி தகவல்....!!


அரசுத் துறை நிறுவனமான குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஜி.எஸ்.பி.சி.) கிருஷ்ணா-கோதாவரி வடிநிலப் பகுதியில் ஆழ்கடலில் நிலவாயு இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி 2005 ஜூன் 26-ல் அறிவித்தார்.
அந்த வாயுவின் அளவு ரூ.2,20,000 கோடி மதிப்புள்ள 20 லட்சம் கோடி கன அடி என்றார்.
நாடே அச்செய்தி கேட்டு வியப்பில் ஆழ்ந்தது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர்.
2007 டிசம்பரில் உற்பத்தி தொடங்கும் என்றும் நிலவாயு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்றும்கூட மோடி அறிவித்தார்.
இப்போது ஆண்டு 2016. மோடி அறிவித்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வடிநிலத்திலிருந்து இன்னமும் ஒரு கன அடி நிலவாயுகூட எடுக்கப்படவில்லை.
ஏன்? ஏனென்றால், அங்கு நிலவாயுவே கிடையாது! ஜி.எஸ்.பி.சி. என்ற நிறுவனம் இத்தனை ஆண்டுகளில் நிலவாயுவைத் தேட ரூ.19,700 கோடியைச் செலவிட்டுள்ளது.

Monday, 25 April 2016

உலகின் மிக பெரிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ரியாத்தில் நிறுவபடும் சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவிப்பு .


மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் வரலாற்றினை தெளிவான சான்றுகளுடன் விளக்கும் விதத்திலான உலகிலேயே மிக பெரிய இஸ்லாமிய அருங்காட்சியம்
ரியாத்தில் அமைக்க படும் என்று  சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இன்று அறிவித்தார்
அதற்கான இடங்கள் தேர்வு செய்ய பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறிய அவர்
இந்த அருங்காட்சியகம் உலகிலேயே மிக பெரிய அருங்காட்சியகமாக உருவாக்கபடும் என்றும்
நபிகள் நாயகத்தின காலத்தில் தொடங்கி இன்றுவரையிலும் உண்டான பல்வேறு  இஸ்லாம் தொடர்ப்பான வரலாற்று சான்றுகள் அங்கே நிறுவபடும் என்றும்
மாற்று மதத்தவர் இஸ்லாத்தை தெளிவாக உணரும் விதத்திலான பல்வேறு ஆவணங்கள் அங்கு ஆவண படுத்த படும் என்றும் அவர் அறிவித்தார்

ஜெயலலிதா சொத்து மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சம் வேட்புமனு தாக்கலில் தகவல்

சென்னை,

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சம் ஆகும். வேட்புமனு தாக்கலில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்து விவரம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதன் நகல் பிரதி வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4–ல் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:–
அசையும் மற்றும் அசையா சொத்து
அசையும் சொத்தின் மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395. அசையா சொத்தின் தற்போதைய மதிப்பு (போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டிங்கள், ஐதராபாத், காஞ்சீபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட) ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190. அசையும் மற்றும் அசையா சொத்தின் மதிப்பு சேர்த்து ரூ.113 கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 585 ஆகும்.
கையிருப்பு ரூ.41 ஆயிரம். 25 வங்கிகளில் டெபாசிட் தொகை ரூ.10 கோடியே 63 லட்சத்து 83 ஆயிரத்து 945. இதில், வழக்கில் முடக்கப்பட்ட தொகை ரூ.2 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 945. 5 நிறுவனங்களில் பங்கு முதலீடுகள் ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 450.
முடக்கப்பட்ட தங்கம் 21,280.300 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ. இதில், ஒரு கிலோ 25 ஆயிரம் மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம். வங்கி கடன் ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987.
1980 மாடல் அம்பாசிடர் கார்
ஜெயலலிதா கொடுத்துள்ள சொத்து மதிப்பில் 2 டோயோட்டா கார், 1980–ம் ஆண்டு அம்பாசிடர் கார், 1990–ம் ஆண்டு கண்டஸ்சா கார் என மொத்தம் உள்ள 9 கார்களின் மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதில் அவர் குறிப்பிட்டுள்ள 1980 மாடல் அம்பாசிடர் காரை கடந்த 35 ஆண்டுகளாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழியிடம் கடன் வாங்கிய ராசாத்தி.... கருணாநிதியின் வேட்பு மனுவில் தகவல்


திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், கருணாநிதியின் சொத்து மதிப்பு, துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழியிடம் கடன் வாங்கியது உள்ளிட்ட பல சுவராஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 
வேட்பு மனுவில், கருணாநிதி ஒப்புகை அளிக்கும் முதல் பத்தியில் நான் திமுகவின் வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ளேன் என்றும்,  2-வது பத்திக்கான பதிலில் தமிழ்நாட்டின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னுடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வலைதள கணக்குகளை குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப விபரத்தில், துணைவியர் என்று மு.க. தயாளு அம்மாள், திருமதி ராசாத்தி அம்மாள் என்றும்,  நிரந்தர கணக்கு எண்ணில் (பான் கார்டு) கருணாநிதி பெயரில் 1, 21,41, 930 ரூபாய் கணக்கில் காட்டப்பட்ட சொத்தாகவும், தயாளு அம்மாள் பான் கார்டில் 9,21,430 ரூபாயும், ராசாத்தி அம்மாள் பான் கார்டில் 1,16,96,350 ரூபாயும் கணக்கில் காட்டப்பட்ட சொத்தாக (2014- 2015) சொல்லப்பட்டுள்ளது.
Advertisement
நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு கால அளவிற்கு தண்டனை பெற்றுள்ளவரா? நிலுவையில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்ற கேள்விக்கு, நிலுவையில் உள்ள திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான வழக்குகளையும் அதன் செக்‌ஷன்களையும் குறிப்பிட்டு உள்ளார். நீதிமன்றத்தால் தண்டனை ஏதும் அளிக்கப் படவில்லை.
கையிருப்பு சொத்து
கருணாநிதி: ரூ.50 ஆயிரம், தயாளு அம்மாள்: ரூ.10 ஆயிரம், ராசாத்தி அம்மாள் : 56,850 ரூபாய்.
வங்கிகளில் உள்ள சொத்து (வைப்பீடு) விபரம்: 
தயாளு அம்மாள் : 95, 59, 290 ரூபாய், இந்தியன் வங்கி, கோடம்பாக்கம் கிளை.  ஐ.ஓ.பி. , மகாலிங்கபுரம் கிளையில் 4,764.92 ரூபாய். (18.4. 2016 அன்று) இவ்வங்கிக் கணக்கு இயக்கப் படாமல் இருந்ததால் கோரப்படாத கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடையாறு கேவிபி வங்கியில் உள்ள வைப்பீடும் காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று,  ராசாத்தி அம்மாளின் வங்கி வைப்பீட்டில் ஆர்.ஏ.புரம் இந்தியன் வங்கி (கருணாநிதியுடன் ஜாய்ன்ட் அக்கவுண்ட்), கர்நாடகா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டி.எம்.பி. வங்கி, திருவாரூர் கிளை இந்தியன் வங்கியில் மு.கருணாநிதி மற்றும் கே.கலைவாணன் வைத்துள்ள ஜாய்ன்ட் அக்கவுண்ட் என வங்கிக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
Advertisement
கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுடைய 60,06,000 பங்குகள் (மதிப்பு: 6,00,60, 000 ரூபாய்). அதேபோல் வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பி.லிட்டில் ராசாத்தி அம்மாளின் முதலீடுகள், வங்கியில் உள்ள நகைகள், பணங்கள் என மொத்தமாக தயாளு அம்மாள் பெயரில் 7, 44,07,178 ரூபாயும், ராசாத்தி அம்மாள் பெயரில் 37,90, 43, 862 ரூபாயும் உள்ளதாக சொல்லப் பட்டுள்ளது.
சொந்தமாக விவசாய நிலங்கள் ஏதும் இல்லை. தயாளு அம்மாளுக்கு திருவாரூரில் ஒரு மனையும், ராசாத்தி அம்மாளுக்கு  சென்னை சிஐடி காலனியில் வீடும்  முதல் பத்தியில் சொல்லப் பட்டுள்ளது. 
அடுத்த பத்திகளில் நிலங்களில் பங்கு, சொந்தமாக காலி மனைகள் என ஏழு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளின் சந்தை மதிப்பாக தயாளு அம்மாளுக்கு 8,03,000 ரூபாயும், ராசாத்தி அம்மாளுக்கு 4,14,30,000 ரூபாய்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாளு- ராசாத்தி இவ்விருவரும் வங்கிகளில் பெற்றுள்ள கடனாக மட்டும் 11, 94, 37, 427 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடே, ராசாத்தி அம்மாள் மகள் கனிமொழியிடம் பற்றில்லா கடனாக 1,17, 76, 503 ரூபாய் வாங்கியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.
தயாளுஅம்மாள் - ராசாத்தி அம்மாள் ஆகியோரிடம் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மொத்த  மதிப்பு : 13, 42, 51, 536 ரூபாய். 
- ந.பா.சேதுராமன்

சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை சீர்த்திருத்த புதிய திட்டம்


சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த பதினைந்து ஆண்டுகளில், எண்ணெய் பொருளாதாரத்தை மட்டுமே நாடு சார்ந்திருக்கும் நிலையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க புதிய திட்டம் விழைகிறது.
வரிகளை அதிகரித்து, அரச செலவினங்களைக் குறைக்க அரசு விரும்புகிறது. அதே சமயம் தனியார் வர்த்தகத்துக்கு பெரிய பங்கை அளிக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கை எண்ணியுள்ளது. அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி உலகெங்கும் முதலீடு செய்யும் நோக்கில் இரண்டு ட்ரில்லியன் டாலர் நிதியம் உருவாக்கப்படும்.
அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு இந்த நிதியத்துக்கு தேவையான ஆதாரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
எனினும் முதல் கட்டமாக அராம்கோவின் ஐந்து சதவீத பங்குகளை மட்டுமே விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 8 முஸ்லிம்களும் அப்பாவிகள் என விடுதலை


மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 முஸ்லிம் இளைஞர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 செப்டம்பர் மாதம் ஹமிதியா மசூதி அருகே நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தரப்பிலும் 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கு மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான ஷபீர் அகமது சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். என்ஐஏவின் அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நூருல் ஹூடா சம்சுதோகா, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது ரஜப் அலி மன்சூரி, சல்மான் பர்ஸி அப்துல் லத்திப் அய்மி, பரூக் இக்பால் அகமது மக்டுமி, முகமது அலி ஆலம் ஷேக், ஆசிப் கான் பசீர் கான் (எ) ஜுனைத், முகமது ஜாஹித் அப்துல் மஜித் அன்சாரி மற்றும் அப்ரார் அகமது குலாம் அகமது ஆகிய 9 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ இம்தியாஸ் ஜலீல், 9 முஸ்லிம்களைக் கைது செய்து அவர்களின் வாழ்க்கையை அழித்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

A Mumbai court today dropped charges against eight Muslim men who were accused of carrying out bomb blasts that killed 31 people in Maharashtra’s Malegaon in 2006. The men had spent five years in jail before being granted bail in 2011, after the National Investigation Agency took over the case. They have alleged that they were tortured into making confessions by the police.

சரமாரி கேள்விகளுடன் 8ம் வகுப்பு மதுரை மாணவி எழுதிய கடிதத்திற்கு மோடி பதில்!


மதுரை: மதுரையை சேர்ந்த 8ம் வகுப்பு பள்ளி மாணவி சரமாரி கேள்விகளுடன் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் அனுப்பி உள்ளார். 
மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வினு மகள் சைதன்யா. மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயாவில் 8ம் வகுப்பு மாணவி. சமீபத்தில் இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து மாணவி சைதன்யா கூறும்போது, ‘‘இந்தியாவின் நிலையை உயர்த்த சில ஐடியாக்கள் கொடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். பள்ளியில் முன்பு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டது. 
வெளிநாடு செல்வோருக்கு பயனளிக்கும் இந்த மொழியை திரும்பக் கற்பிக்க உத்தரவிட வேண்டினேன். இந்தியாவோ, பாகிஸ்தானோ இருதரப்பு மக்களிடமும் வெறுப்புணர்வு வளர்ப்பதற்கான சூழலை மக்கள் மனங்களில் இருந்து களைவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டினேன். இந்திய எல்லையில் இருக்கிற வீரர், ஹரியானாவில் இருக்கிற ஒரு குடும்பத்தலைவி இருவருக்குமான பாதுகாப்பின்மை குறித்து கவலைப்பட்டிருந்தேன். 
உள்ளூர் வாய்ப்புகளை விட்டுவிட்டு, இளைஞர்கள் வெளிநாடு போகும் ஆவலில் இருப்பது ஏன்? என்றும் வினா எழுப்பி இருந்தேன். இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கிறது. இந்த பகிர்வு மகிழ்ச்சியளிப்பதாக கையெழுத்திட்டு ஆங்கிலம், ஹிந்தி இரு மொழிகளிலும் பதில் அனுப்பி இருக்கிறார். மதுரையில் இருந்து ஒரு மாணவியாக, என் உணர்வை இந்திய பிரதமரிடம் பதிவு செய்திருப்பது மகிழ்வளிக்கிறது. எனது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவது முக்கியம்’’ என்றார். 

இஸ்லாத்தை அறிவதற்காக குர்ஆனை படித்து வருகின்றேன் – பிரபல அமெரிக்க நடிகை !


‘இஸ்லாத்தை பரிசீலித்து வருகின்றேன். இன்னும் திருக் குர்ஆனை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை’ என அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை லின்சி லோகன் அறிவித்துள்ளார். 
29 வயதான இந்நடிகை, தான் இஸ்லாத்தை படித்து வருவதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 
இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்காக குர்ஆனை படித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் இன்னும் முழுமையாக குர்ஆனை படித்த முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 
நான் மத நம்பிக்கை கொண்ட பெண். நான் மததத்தை வெளப்படையாக கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் வித்தியாசமான வழியை தருகின்றது என முதல் தடவையாக மதம் தொடர்பில் பேசியுள்ளார். 
சமுக சேவை தொடர்பான அமர்வொன்றில் கலந்து கொள்ளுவதற்காக நியூயோர்க்கிற்கு சென்ற போது குர்ஆனையும் படிப்பதற்காக கொண்டு போவதையும் படத்தில் காணலாம்
image – dailymail.co.uk 

Sunday, 24 April 2016

உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம் – துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி


அலிகார் : 
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். நேற்று மாலை இங்கு மாணவர்களிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.
ஒரு பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினார்கள். அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் அலுவலகம் பயங்கரமாக பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். என்றாலும் கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை.
உடனே போலீசார் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து பலியானார்.
இந்த கலவரத்தால் அலிகாரில் பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்

சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு.


சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரியாத்:
சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெய்யை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின்படி, சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரி அப்துல்லா அல் ஹுசைன்-ஐ அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது அந்நாடின் வேளாண்மைத்துறை மந்திரியாக பதவி வகித்துவரும் அப்துல் ரஹ்மான் அல்-பத்லி அவருக்கு பதிலாக மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை மந்திரியின் பணிகளையும் கூடுதலாக கவனிப்பார் என மன்னரின் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் கட்டணம் உயர்வு தொடர்பான திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றத் தவறியதால் மந்திரி பதவியில் இருந்து அப்துல்லா அல் ஹுசைன் நீக்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான சவுதி பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.

உலகம் முழுவதும் தன்னம்பிக்கை மற்றும் NLP பயிற்சியளிக்கும் கீழக்கரை பெண்மணி பஜிலா ஆசாத்! கமலஹாசன் பாராட்டு!


துபாய்: துபாயில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஃபஜிலா ஆசாத் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இளைய தலைமுறையினருக்கு தன்னம்பிக்கை மற்றும் மன நலம் தொடர்பான வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார். கவிஞர், கட்டுரையாளர், நகை வடிவமைப்பாளர், சொற்பொழிவாளர், மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் ஃபஜிலா ஆசாத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த போது Nlp- neuro linguistic programming மற்றும் ஆழ் மன மொழி குறித்த விளக்கங்களை கமல்ஹாசன் இவரிடம் ஆர்வத்தோடு கேட்டறிந்தார். அதோடு இவர் எழுதி கல்லூரிகளில் பாடமாக சேர்க்கப் பட்டுள்ள 'திறந்திடு மனசே...' என்ற உளவியல் நூலையும் பெற்றுக் கொண்டு இவரின் பணிகளை பாராட்டினார்.
'எத்தனை சிகரம் தொட்டாலும்,எவ்வளவு கற்றறிந்தாலும், எந்த ஒரு புதிய விஷயத்தையும் தெரிந்து கொள்ள உலக நாயகன் கமலஹாசன் காட்டும் ஆர்வமும், ஈடுபாடும், பாராட்டக் கூடியது மட்டுமல்ல நாம் கற்றுக் கொள்ள வேண்டியதும் கூட' என்கிறார் ஃபஜிலா ஆசாத். இவர் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து துபாயில் எம்.பி.ஏ பைனான்ஸ் படித்தார். அதோடு எத்திக்கல் ஹேக்கர்ஸ்’ தொடர்பான கல்வி, நகை டிசைன் பயிற்சி கல்வி, பிசினஸ் சைக்காலஜி, லீடர்ஷிப் ஸ்கில் டெவலப்மெண்ட் என பல் வேறு பயிற்சிகளை நிறைவு செய்து பட்டங்களை பெற்றுள்ளார். அதோடு மன நலம் தொடர்பான Master NlP practitioner, Master Nlp coach, Master Hypnotism,Time paradigm technique practioner , ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டு மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவர் பல நிறுவனங்களின் தொழில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

ஒபாமாவை கண்டுகொள்ளாத சல்மான் - அமெரிக்காவை நம்பி, சவூதி அரேபியா இல்லை!


வளைகுடா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வியாழன் -21- அன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி தலை நகர் ரியாத் வருகை தந்தார்.
அமெரிக்க அதிபர் அரசுமுறை பயணமாக வெளிநாடுகள் செல்லும் போது எந்த நாட்டிர்கு செல்கிறாரோ அந்த நாட்டின் அதிபரோ பிரதமரோ மன்னரோ தான் அவரை வரவேற்ப்பது வழக்கம்.
உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபரை வரவேற்பது என்றால் இந்தியாவின் பிரதமராக பணியாற்றும் மோடி போன்றவர்கள் போட்டி போட்டு கொண்டு விமான நிலையம் ஓடுவார்கள்.
ஆனால் கடந்த வியாழன் அன்று ஒபாமா ரியாத் வந்த போது அவரை வரவேற்க்க சவுதி மன்னர் சல்மான் விமான நிலையம் வருகை தரவில்லை. மாறாக தனது பிரதிநிதியாக ரியாத் ஆளுநரை சல்மான் அனுப்பி வைத்தார்.
சல்மானின் இந்த செயல் அமெரிக்க பத்திரிகைகளில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
சவுதி மன்னர் சல்மான் விமான நிலையம் வந்து ஒபாமாவை வரவேற்க்க மறுத்ததின் மூலம் அமெரிக்காவையும் ஒபாமாவையும் சல்மான் அவமதித்து விட்டார் என்றும் அமெரிக்காவை நம்பி சவுதி இல்லை என்ற தகவலை இதன் மூலம் வாஷிங்டெனுக்கு சல்மான் தெரிவித்துள்ளார் என்று நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை கூறியுள்ளது.
ஈரானோடு அமெரிக்க அண்மையில் காட்டிய நெருக்கமும் சிரியா இராக் விசயங்களில் அமெரிக்க எடுக்கும் உறுதியற்றநிலைபாடுகளுமே சல்மானின் கோபத்திற்கு காரணமாகும் .

Saturday, 23 April 2016

இன்னும் 35 ஆண்டுகளில் தண்ணீரையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை : ஆய்வில் தகவல்.


மும்பை: இன்னும் 35 ஆண்டுகளில், இந்தியாவில் நாம் உயிர் வாழ குடிநீரையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்ற ஆய்வறிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு வளர்ந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்த வளர்ச்சிக்காக நிலத்தடி நீராதாரங்கள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன.
 இதனால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து, பல மாநிலங்களில் தற்போதைய வறட்சி, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்படிப்பட்ட நிலையில், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 1951ம் ஆண்டு தனி நபர் ஒருவருக்கு தினசரி கிடைக்கும் நிலத்தடி நீரின் அளவு 14 ஆயிரத்து 180 லிட்டராக இருந்தது. இது 1991ல் பாதியாக குறைந்தது.
 2001ம் ஆண்டு மேலும் 35 சதவீதம் குறைந்து, 5,120 லிட்டர் ஆனது. இப்படியே நிலைமை சென்று கொண்டிருந்தால், 1951ம் ஆண்டில் கிடைத்த நீரில் 25 சதவீதம் அளவுக்குதான், 2025ம் ஆண்டு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டு இது, 22 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
ஏரி, குளங்களை தூர் வாராமல் மழை நீரை வீணாக கடலில் சென்று சேர விட்டுள்ளது, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மழையை பொய்த்து போக செய்யும் வகையில் மரங்களை வெட்டுவது போன்றவை இந்த ஆபத்துக்கு காரணங்கள் என பட்டியலிடுகிறது அந்த ஆய்வு. மேலும், வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், தேவைகளும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, அன்றாடம் கிடைக்கும் தண்ணீருக்கு ஆபத்து ஏற்படுவது வெகு தூரத்தில் இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

சிசேரியன் செய்துள்ள பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள்


தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் தான் குழந்தைப் பிறக்கிறது. இதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் நன்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருந்தது மட்டுமின்றி, குழந்தையின் தவறான நிலையும் காரணங்களாகும். சிசேரியன் பிரசவத்திற்குப் பின் பெண்கள் கடுமையான வலிகளை சந்திப்பார்கள்.
எனவே சிசேரியன் செய்த பெண்களுக்கு சில மாதங்கள் நல்ல ஓய்வு என்பது அவசியம். அதிலும் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் குணமாகும் வரை பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒருசில செயல்களை சிசேரியன் செய்த பெண்கள் சில மாதங்களுக்கு மேற்கொள்ளக்கூடாது.
இங்கு சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாத சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கடுமையான உடலுழைப்பு.
சிசேரியன் செய்த பெண்கள், உடலுக்கு நல்ல ஓய்வை வழங்க வேண்டும். அதை விட்டு குணமாகும் முன்பே கடுமையான உடற்பயிற்சிகள் அல்லது வீட்டு வேலைகளைச் செய்தால், அதனால் வலி இன்னும் அதிகரிப்பதோடு, கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
மிகுந்த எடை கொண்ட பொருட்களை தூக்குவது.
சிசேரியன் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட பெண்கள், சில வாரங்களுக்கு மிகுந்த எடையைக் கொண்ட பொருட்களைத் தூக்கக்கூடாது. அப்படி தூக்கினால், தையல் கிழிந்து, இரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.
உடல் வறட்சி.
மற்றொரு முக்கியமான ஒன்று, பிரசவித்த பெண்கள் அதிகளவு நீரைப் பருக வேண்டும். உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீரை அதிகம் பருகுவதனால், உடலின் ஆற்றல் நிலைத்திருப்பதோடு, மலச்சிக்கலும் தடுக்கப்படும். சிசேரியன் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், அடிவயிற்றில் அழுத்தம் அதிகரித்து, வலி இன்னும் அதிகமாகும்.
மாடி படிக்கட்டு ஏறுவது.
முடிந்த அளவில் மாடிப்படி ஏறுவதை சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் மோசமாக, இரத்தக்கசிவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.
உடலுறவு.
சிசேரியன் செய்திருக்கும் பெண்கள் குறைந்தது 1 வாரத்திற்காவது உடலுறவில் ஈடுபடக்கூடாது. ஒருவேளை அவ்வாறு காயம் குணமாகும் முன் உடலுறவில் ஈடுபட்டால், தையல் கிழிந்து, இரத்தக்கசிவு மற்றும் இதர சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இருமல்.
சிசேரியன் செய்த பெண்கள் முடிந்த அளவில் சளி, இருமல் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக இருமினால், அடிவயிற்றில் போடப்பட்டுள்ள தையலினால் ஏற்பட்ட காயங்கள் மோசமாகும்.
எண்ணெய் அல்லது கார உணவுகள்.
சிசேரியன் செய்திருக்கும் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையிலான உணவுகளை உட்கொண்டால், அது காயங்கள் குணமாக தாமதப்படுத்தும்.
நீண்ட நேர குளியல்.
நீண்ட நேரம் குளிப்பதை சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே வேகமாக குளித்துவிட்டு வருவதோடு, காயமுள்ள பகுதியை சுத்தமான துணியால் துடைத்துவிட வேண்டும்.
காய்ச்சல்.
புதிய தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காய்ச்சல் வந்தால், காயங்கள் குணமாவதில் தாமதமாகும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்ற நல்ல பல தகவல்களை www.makkalnanpan.com மக்கள் நண்பன் என்ற எங்களது இணையத்தளதில் நீங்கள் வாசித்தறிந்து கொள்ளும் போது அதன் மூலம் நீங்கள் பெற்றுக் கொண்ட அறிவை உங்களோடு மாத்திரம் இருத்தி சுயநலவாதிகளாக இல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும், ஏனையோருக்கும் இத்தகவலைப் பகிர்ந்து நன்மைகளைத் தேடிக் கொள்ளுங்கள்.
 தகவலுக்கு நன்றி – மகா

சவூதி அரேபியாவில் ஈரான் தாக்குதல், இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!


அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளிலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, திருட்டுக்கு சமமானது என ஈரான் சாடியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசேன் ஜாபர் அன்சாரி வியாழக்கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரானின் முடக்கப்பட்ட சொத்திலிருந்து நஷ்ட ஈடு வழங்கும் அமெரிக்க அரசின் முடிவுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது, ஈரானின் சொத்தை திருடுவதற்கு சமமானது. மேலும் இந்த முடிவு சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்றார் அவர்.
லெபானான் தலைநகர் பெய்ரூட்டில், சர்வதேச அமைதிப் படையைச் சேர்ந்த அமெரிக்க மற்றும் பிரான்ஸ் வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்களில் கடந்த 1983-ஆம் ஆண்டு தற்கொலை கார் குண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இதில் 241 அமெரிக்க வீரர்களும், 58 பிரான்ஸ் வீரர்களும் பலியாகினர். அதேபோல், சவூதி அரேபியாவில் அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரு தாக்குதல்களில் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஈரான் சொத்துகளிலிருந்து, அந்த இரு தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்தது.
இந்த முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி ஈரான் ரிசர்வ் வங்கி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஈரானின் சொத்துகளில் இருந்து பெய்ரூட் மற்றும் சவூதி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.

Friday, 22 April 2016

முரண்பட்டு பேசும் திருமாவளவன் - உணர்வு பத்திரிக்கை குற்றச்சாட்டு....!!


இந்தியாவில் தலித்துகள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை நோக்கியும், கிறித்தவத்தை நோக்கியும் சென்றாலும் பெரிய அளவில் சாதிய வேறுபாட்டை மாற்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி ஹிந்துவுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவரது பேட்டி தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழான உணர்வு பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்...
தலித் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று சாதியம் ஒழியவில்லை என்று இஸ்லாத்தை ஏற்ற தலித் ஒருவராவது சொல்ல முடியுமா ? என்றும், திருக்குர்ஆனிலும், நபியின் பொன்மொழியிலும் தீண்டாமை இருப்பதாக நிரூபிக்க முடியுமா என்றும் உணர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு முன்பு பலமுறை இதே திருமாவளவன் தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு என்று கூறிவிட்டு இப்போது முரண்பட்டு பேசுவதற்கு அரசியலே காரணம் என்றும்,
தலித் என்ற அடையாளம் இல்லாவிட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்பதாலும் அதே சமயம் முஸ்லிம்களின் ஆதரவும் தேவை என்பதால் மதமாற்றத்தை மறுதலிப்பதுபோல் பேசிவிட்டு மறுப்பதாக உணர்வு குற்றம்சாட்டியுள்ளது.

கேரள அரசு துவக்கியுள்ள சிறந்த திட்டம்....!!


சவூதி அரேபியாவிலுள்ள ரியாத், ஜித்தா, தம்மாம், மக்கா, மதினா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் 24 மணிநேரமும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
அங்கு சாலைகளில் விபத்து நிகழும்போது ஆம்புலன்ஸ் விரைந்து வந்தாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால் ஏர் ஆம்புலன்ஸ் பறந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு பறந்து சென்று சேர்த்து விடும்.
இதுப்போன்ற உயிர்காக்கும் சிறந்த திட்டம் இதுவரை இந்தியாவில் இல்லாமல் இருந்தது. இப்போது கேரள அரசு துவக்கியுள்ளது.

Thursday, 21 April 2016

கேரள கர்ப்பிணி நர்ஸ் மஸ்கட்டில் மர்ம மரணம். இந்த செய்தியில் கலவரத்தை தூண்ட தினத்தந்தியின் ஏற்பாடு.


கேரள மாநிலம் அங்கமாலி காருகுட்டி பகுதியை சேர்ந்தவர் சிக்கு ரோபர்ட்( வயது 28 ). இவர் அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.  இவரது கணவர் லின்சன் மஸ்கட்டில்  சாலஹ்வில் உள்ள ஒருமருத்துவமனையில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

நேற்று தரோபர்ட் இரவு பணிக்குச் செல்லவில்லை இதை தொடர்ந்து கணவர் தனது மனைவியின் அறைக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் ரோபர்ட் பிணமாக கிடந்து உள்ளார்.
மஸ்கட் அரசு இது பற்றி தீவிர விசாரனை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 இந்த செய்தியை தினத்தத்தி எப்படி வெளியிட்டிருக்கிறது என்று பாருங்கள்.
 அதோடு பாகிஸ்தான்காரனை விசாரிக்கிறார்களாம். வேறு யாரையும் விசாரிக்க வில்லையாம்.
இந்த தினத்தந்தியை  மக்கள் புரிந்து கொண்டு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலி : வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதி அரேபியா


ரியாத் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா தற்போது வெளிநாடுகளில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அந்நாடு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதே காரணம். அந்நாட்டில் ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் சிறப்பாக இருந்த காரணத்தால்நாடு நல்ல வளத்துடன் சவுதி அரேபியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது.
எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததையடுத்து அந்நாட்டின் அக்ஷய பாத்திரமாக இருந்த எண்ணெய் வருமானம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. இதனால் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் நிர்வாகமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச வங்கிகளிலிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு அந்நாடு விண்ணப்பித்துள்ளது

ஹஜ் விசா சிக்கல், சவூதி அரேபியா - ஈரான் பேச்சுவார்த்தை முடங்கியது!


இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை தொடர்பில் பிராந்திய எதிரி நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விசா விநியோகிப்பது தொடர்பான சிக்கலால் முடங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் செயலிழந்திருக்கும் சூழலில், எவ்வாறு விசா விநியோகிப்பது என்பது குறித்து இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே ஈரான் தூதுக் குழு ஒன்று கடந்த வாரம் சவூதி சென்று பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. நான்கு நாள் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் யாத்திரிகர்களுக்கான சவூதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஈரான் ஹஜ் அமைப்பின் தலைவர் ஒஹதி அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்.
எனினும் ஈரான் மற்றும் சவூதியில் இருக்கும் இரு நாட்டு தூதரகங்களும் செயற்படாத நிலையில் ஈரானியர்களுக்கான விசா விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“விசா விநியோகம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை” என்று ஒஹதி குறிப்பிட்டார். “சவூதி இதுபற்றி தெளிவான தீர்வொன்றை தரவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஈரானுக்குள்ளேயே விசா விநியோகிக்கப்பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
தற்போது ஈரானுக்கான சவூதிய இராஜதந்திர பணிகள் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊடே இடம்பெறுகிறது. எனினும் மூன்றாவது நாட்டின் ஊடாக ஹஜ்ஜுக்கான விசாவை விநியோகிப்பது முற்றாக ஏற்க முடியாதது என்று ஈரான் கலாசார அமைச்சர் அலி ஜன்னத் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி ஷியா மதத் தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்தே இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்தது.