Friday, 22 April 2016

முரண்பட்டு பேசும் திருமாவளவன் - உணர்வு பத்திரிக்கை குற்றச்சாட்டு....!!


இந்தியாவில் தலித்துகள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை நோக்கியும், கிறித்தவத்தை நோக்கியும் சென்றாலும் பெரிய அளவில் சாதிய வேறுபாட்டை மாற்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி ஹிந்துவுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவரது பேட்டி தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழான உணர்வு பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்...
தலித் ஒருவர் இஸ்லாத்தை ஏற்று சாதியம் ஒழியவில்லை என்று இஸ்லாத்தை ஏற்ற தலித் ஒருவராவது சொல்ல முடியுமா ? என்றும், திருக்குர்ஆனிலும், நபியின் பொன்மொழியிலும் தீண்டாமை இருப்பதாக நிரூபிக்க முடியுமா என்றும் உணர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு முன்பு பலமுறை இதே திருமாவளவன் தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு என்று கூறிவிட்டு இப்போது முரண்பட்டு பேசுவதற்கு அரசியலே காரணம் என்றும்,
தலித் என்ற அடையாளம் இல்லாவிட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்பதாலும் அதே சமயம் முஸ்லிம்களின் ஆதரவும் தேவை என்பதால் மதமாற்றத்தை மறுதலிப்பதுபோல் பேசிவிட்டு மறுப்பதாக உணர்வு குற்றம்சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment