Monday, 25 April 2016

கனிமொழியிடம் கடன் வாங்கிய ராசாத்தி.... கருணாநிதியின் வேட்பு மனுவில் தகவல்


திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், கருணாநிதியின் சொத்து மதிப்பு, துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழியிடம் கடன் வாங்கியது உள்ளிட்ட பல சுவராஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 
வேட்பு மனுவில், கருணாநிதி ஒப்புகை அளிக்கும் முதல் பத்தியில் நான் திமுகவின் வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ளேன் என்றும்,  2-வது பத்திக்கான பதிலில் தமிழ்நாட்டின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னுடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வலைதள கணக்குகளை குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப விபரத்தில், துணைவியர் என்று மு.க. தயாளு அம்மாள், திருமதி ராசாத்தி அம்மாள் என்றும்,  நிரந்தர கணக்கு எண்ணில் (பான் கார்டு) கருணாநிதி பெயரில் 1, 21,41, 930 ரூபாய் கணக்கில் காட்டப்பட்ட சொத்தாகவும், தயாளு அம்மாள் பான் கார்டில் 9,21,430 ரூபாயும், ராசாத்தி அம்மாள் பான் கார்டில் 1,16,96,350 ரூபாயும் கணக்கில் காட்டப்பட்ட சொத்தாக (2014- 2015) சொல்லப்பட்டுள்ளது.
Advertisement
நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு கால அளவிற்கு தண்டனை பெற்றுள்ளவரா? நிலுவையில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்ற கேள்விக்கு, நிலுவையில் உள்ள திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான வழக்குகளையும் அதன் செக்‌ஷன்களையும் குறிப்பிட்டு உள்ளார். நீதிமன்றத்தால் தண்டனை ஏதும் அளிக்கப் படவில்லை.
கையிருப்பு சொத்து
கருணாநிதி: ரூ.50 ஆயிரம், தயாளு அம்மாள்: ரூ.10 ஆயிரம், ராசாத்தி அம்மாள் : 56,850 ரூபாய்.
வங்கிகளில் உள்ள சொத்து (வைப்பீடு) விபரம்: 
தயாளு அம்மாள் : 95, 59, 290 ரூபாய், இந்தியன் வங்கி, கோடம்பாக்கம் கிளை.  ஐ.ஓ.பி. , மகாலிங்கபுரம் கிளையில் 4,764.92 ரூபாய். (18.4. 2016 அன்று) இவ்வங்கிக் கணக்கு இயக்கப் படாமல் இருந்ததால் கோரப்படாத கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடையாறு கேவிபி வங்கியில் உள்ள வைப்பீடும் காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று,  ராசாத்தி அம்மாளின் வங்கி வைப்பீட்டில் ஆர்.ஏ.புரம் இந்தியன் வங்கி (கருணாநிதியுடன் ஜாய்ன்ட் அக்கவுண்ட்), கர்நாடகா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டி.எம்.பி. வங்கி, திருவாரூர் கிளை இந்தியன் வங்கியில் மு.கருணாநிதி மற்றும் கே.கலைவாணன் வைத்துள்ள ஜாய்ன்ட் அக்கவுண்ட் என வங்கிக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
Advertisement
கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுடைய 60,06,000 பங்குகள் (மதிப்பு: 6,00,60, 000 ரூபாய்). அதேபோல் வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பி.லிட்டில் ராசாத்தி அம்மாளின் முதலீடுகள், வங்கியில் உள்ள நகைகள், பணங்கள் என மொத்தமாக தயாளு அம்மாள் பெயரில் 7, 44,07,178 ரூபாயும், ராசாத்தி அம்மாள் பெயரில் 37,90, 43, 862 ரூபாயும் உள்ளதாக சொல்லப் பட்டுள்ளது.
சொந்தமாக விவசாய நிலங்கள் ஏதும் இல்லை. தயாளு அம்மாளுக்கு திருவாரூரில் ஒரு மனையும், ராசாத்தி அம்மாளுக்கு  சென்னை சிஐடி காலனியில் வீடும்  முதல் பத்தியில் சொல்லப் பட்டுள்ளது. 
அடுத்த பத்திகளில் நிலங்களில் பங்கு, சொந்தமாக காலி மனைகள் என ஏழு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளின் சந்தை மதிப்பாக தயாளு அம்மாளுக்கு 8,03,000 ரூபாயும், ராசாத்தி அம்மாளுக்கு 4,14,30,000 ரூபாய்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாளு- ராசாத்தி இவ்விருவரும் வங்கிகளில் பெற்றுள்ள கடனாக மட்டும் 11, 94, 37, 427 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடே, ராசாத்தி அம்மாள் மகள் கனிமொழியிடம் பற்றில்லா கடனாக 1,17, 76, 503 ரூபாய் வாங்கியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.
தயாளுஅம்மாள் - ராசாத்தி அம்மாள் ஆகியோரிடம் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மொத்த  மதிப்பு : 13, 42, 51, 536 ரூபாய். 
- ந.பா.சேதுராமன்

No comments:

Post a Comment