Wednesday, 27 April 2016

வாட்ஸ்அப் மூலம் செயலிகள், மைக்ரோசாப்ட் ஆவணங்கள் உட்பட எந்த ஒன்றையும் பகிர்வது எப்படி?


வாட்ஸ்அப் மூலம் குரல் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை ஏனையவர்களுடன் மிக இலகுவாக பகிர்ந்துகொள்ள முடியும்.

அத்துடன் வாட்ஸ்அப் மூலம் பி.டி.எப் (PDF) ஆவணங்களை பகிர்வதற்கான வசதியும்  அண்மையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
என்றாலும் நாம் நினைத்த அனைத்து கோப்புக்களையும் வாட்ஸ்அப் மூலம் பகிர்வதற்கான உத்தியோகபூர்வ வசதிகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
வாட்ஸ் டூல்ஸ் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் எந்த ஒன்றையும் அனுப்பலாம்.
எனினும் வாட்ஸ் டூல்ஸ் எனும் செயலியை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு செயலிகள், மைக்ரோசாப்ட் ஆவணகள் உட்பட நீங்கள் நினைக்கும் எந்த ஒரு கோப்பையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
வாட்ஸ் டூல்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி?
கீழே வழங்கப்பட்டுள்ள இணையச் சுட்டி மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்க
பின்னர் Settings > Accessibility பகுதியின் மூலம் வாட்ஸ் டூல்ஸ் செயலிக்கான Service எனும் வசதியை செயற்படுத்திக்கொள்ள வேண்டும். (வாட்ஸ் டூல்ஸ் செயலியை நீங்கள் முதன் முதலாக திறக்கும் போது இதனை செயற்படுத்திக் கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் உங்களுக்கு தோன்றும்)
நீங்கள் அனுப்பும் கோப்புக்கள் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் சேமிக்கப்பட்டு அதன் மூலமே அனுப்பப்படுவதால் வாட்ஸ் டூல்ஸ் செயலியுடன் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கை தொடர்புபடுத்த வேண்டும். (வாட்ஸ் டூல்ஸ் செயலியை முதன் முதலாக திறக்கும் போது இதனை மேற்கொள்ளலாம், அல்லது வாட்ஸ்அப்மூலம் கோப்புக்களை இணைக்கும்போதும் இதனை மேற்கொள்ள முடியும்)
இனி வாட்ஸ்அப் செயலியை திறந்து நீங்கள் கோப்புகளை அனுப்ப விரும்பும் நபரை தெரிவு செய்க.
அடுத்து Attachment குறியீட்டை சுட்டிய பின் கோப்புக்களை இணைப்பதற்கான புதியதொரு சாளரம் (Window) வாட்ஸ்அப் சேவையில் திறக்கப்படுவதை அவதானிப்பீர்கள்.
பின் குறிப்பிட்ட சாளரத்தின் மூலம் அனுப்ப வேண்டிய கோப்புக்களை தெரிவு செய்து குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்.
அதனை பெறுபவர் வாட்ஸ் டூல்ஸ் செயலியை நிறுவியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொண்ட இணைப்பை ஏதாவது ஒரு இணைய பயன்படுத்தி திறந்தாலே போதும் அதனை அவரால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.
அவ்வளவுதான்!
வாட்ஸ் டூல்ஸ் ஆண்ட்ராய்டு 

No comments:

Post a Comment