Monday, 25 April 2016

ஜெயலலிதா சொத்து மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சம் வேட்புமனு தாக்கலில் தகவல்

சென்னை,

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.113 கோடியே 73 லட்சம் ஆகும். வேட்புமனு தாக்கலில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்து விவரம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதன் நகல் பிரதி வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4–ல் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:–
அசையும் மற்றும் அசையா சொத்து
அசையும் சொத்தின் மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395. அசையா சொத்தின் தற்போதைய மதிப்பு (போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டிங்கள், ஐதராபாத், காஞ்சீபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட) ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190. அசையும் மற்றும் அசையா சொத்தின் மதிப்பு சேர்த்து ரூ.113 கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 585 ஆகும்.
கையிருப்பு ரூ.41 ஆயிரம். 25 வங்கிகளில் டெபாசிட் தொகை ரூ.10 கோடியே 63 லட்சத்து 83 ஆயிரத்து 945. இதில், வழக்கில் முடக்கப்பட்ட தொகை ரூ.2 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 945. 5 நிறுவனங்களில் பங்கு முதலீடுகள் ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 450.
முடக்கப்பட்ட தங்கம் 21,280.300 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ. இதில், ஒரு கிலோ 25 ஆயிரம் மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம். வங்கி கடன் ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987.
1980 மாடல் அம்பாசிடர் கார்
ஜெயலலிதா கொடுத்துள்ள சொத்து மதிப்பில் 2 டோயோட்டா கார், 1980–ம் ஆண்டு அம்பாசிடர் கார், 1990–ம் ஆண்டு கண்டஸ்சா கார் என மொத்தம் உள்ள 9 கார்களின் மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதில் அவர் குறிப்பிட்டுள்ள 1980 மாடல் அம்பாசிடர் காரை கடந்த 35 ஆண்டுகளாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment