ரியாத் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா தற்போது வெளிநாடுகளில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அந்நாடு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதே காரணம். அந்நாட்டில் ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் வருமானம் சிறப்பாக இருந்த காரணத்தால்நாடு நல்ல வளத்துடன் சவுதி அரேபியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது.
எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததையடுத்து அந்நாட்டின் அக்ஷய பாத்திரமாக இருந்த எண்ணெய் வருமானம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. இதனால் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் நிர்வாகமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச வங்கிகளிலிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு அந்நாடு விண்ணப்பித்துள்ளது
No comments:
Post a Comment