Thursday, 7 January 2016

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Pakistan-flag
இஸ்லாமாபாத் - இந்தியா - பாகிஸ்தான் 
இஸ்லாமாபாத் - இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சில இயக்கங்கள் சதி செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை தீவிரவாத செயல் மூலம், சீர்குலைக்க சில இயக்கங்கள் விரும்புகிறது, ஆனால் அவர்களுடைய தீய எண்ணமானது நிறைவேறாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு முதல்வர் கவாஜா முகமது ஆசிப் கூறிஉள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகிவந்த நிலையில் பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாத திட்டமானது பாகிஸ்தான் உளவுஅமைப்பு ஐ.எஸ்.ஐ. தலைமையில் தீட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உறுதிசெய்து உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவிக்கையில்., இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நாசமாக்க சில இயக்கங்கள் விரும்புகிறது என்று கூறிஉள்ளார். 
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா - பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தீவிரவாத தாக்குதல்கள் மூலம் அதனை நாசமாக்க சில இயக்கங்கள் விரும்புகிறது, இருப்பினும் அவர்களுடைய தீய நடவடிக்கையில் அவர்கள் வெற்றிபெற முடியாது, என்று முகமது ஆசிப் கூறிஉள்ளார். தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, நவாஸ் செரீப் உறுதிசெய்து உள்ளார்,” என்று அவர் கூறினார்.

இஸ்லாத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் தலையை வெட்டுவேன்: மத குரு சபதம்

Wednesday, 6 January 2016

சிறைக்குள்ளேயே “கரும்பு விவசாயம்” - திருச்சி கைதிகள் சாதனை; அறுவடை துவக்கம்!


Posted by: Admin Wed, Jan 6, 2016, 14:53


திருச்சி: திருச்சி சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகள், வழக்கு விசாரணை முடிவடைந்து அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை கைதிகள் உள்பட கிட்டதட்ட 1500 கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள் சிறைவாழ்க்கை முடிந்து வீடு திரும்பும்போது ஏதாவது தொழில் செய்து திருந்தி வாழவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சிறையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர சிறை வளாகத்தில் உள்ள தரிசு நிலத்தை செம்மைப்படுத்தி அந்த இடங்களில் காய்கறிகள் பயிரிட்டு தோட்ட வேலைகளை பராமரிக்கும் பணிகளையும் கைதிகள் செய்து வருகிறார்கள். கைதிகளால் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சிறை முன்பாக "சிறை அங்காடி" என்ற வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் பயிரிடப்பட்டு அதனையும் கைதிகள் பராமரித்தார்கள்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்ய கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. சிறையில் உள்ள தண்டனை கைதிகள் இதற்கு முறையாக தண்ணீர் விட்டு பராமரித்து வந்தனர். தற்போது அந்த கரும்புகள் அறுவடைக்கு தயாரான நிலையை அடைந்து உள்ளதால் அவற்றை வெட்டும் பணி நேற்று தொடங்கியது. கைதிகள் நேற்று அந்த தோட்டத்தில் உள்ள கரும்புகளில் ஒரு பகுதியை வெட்டினார்கள். பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தும் மஞ்சள் கொத்துகளையும் மண்ணில் இருந்து பறித்து எடுத்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து கரும்புகளும் வெட்டப்பட்டு சிறை அங்காடியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்தார்

வாகனக் கட்டுப்பாட்டால் காற்று மாசு குறைந்துள்ளதா என டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பதிவு செய்த நேரம்:2016-01-06 16:15:53


புதுடெல்லி: டெல்லியில் வாகனக் கட்டுப்பாட்டால் காற்று மாசு குறைந்துள்ளதா என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாசு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒன்றை மற்றும் இரட்டைப் படை இலக்க பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு மாறிமாறி அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் வாகனக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. டெல்லி அரசு கொண்ட வந்துள்ள இந்த புதிய முறையால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்திருந்தாலும், பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் உரிய நேரத்தில் போய் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் வாகனக்கட்டுப்பாடு திட்டத்தை எதிர்த்து பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது. பொதுநல மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காற்று மாசு குறைந்துள்ளதா என்பது பற்றி 8-ம் தேதி அறிக்கை தர அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. டெல்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்தால் மக்களுக்கு இன்னல்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது. எதற்கு 15 நாட்கள்-? வாகனக் கட்டுப்பாட்டு திட்டம் ஒரு வாரத்துக்கு போதாதா எனவும் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நல்ல விதமான முன்னேற்றம் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும். ஏதாவது பலன் ஏற்பட்டுள்ளதா என டெல்லி உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. இருப்பினும் விளக்கம் அளிக்க மேலும் அவகாசம் வேண்டும் என டெல்லி அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது. இது புறம் இருக்க, இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்த பிறகு, கடந்த ஒரு வாரத்தில் டெல்லி சாலை தூசிகள் மற்றும் வாகன புகையின் காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், சல்பர் டைஆக்சைடு, கார்பன் உள்ளிட்ட நச்சுக்களின் அளவு குறைந்துள்ளதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

அ.தி.மு.க. துணை பொதுச்செயலராகிறார் சசிகலா?

Posted by: Admin Wed, Jan 6, 2016, 15:00 


சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவிலேயே நம்பர் 2-வாக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது இம்மாத இறுதிக்குள் சசிகலா அதிமுக துணிப் பொதுச்செயலராகிவிடுவார் என்கிறது அதிமுக வட்டாரங்கள். அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலராக ஜெயலலிதாவே நீடித்து வருகிறார். மற்ற கட்சிகளைப் போல அதிமுகவில் நம்பர் 2 இடம் யாருக்கும் கிடையாது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்ட போது அடுத்த முதல்வர் யாராக இருக்கலாம் என சசிகலாவின் உறவினர்கள் உட்பட பலரது பெயர்களும் அடிபட்டன. ஓய்வுபெற்ற பின்னரும் அரசு பதவியில் ஆலோசகராக ஒட்டிக் கொண்டிருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் கூட அடிபட்டது. ஆனால் மீண்டும் ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வரானார். இந்த நிலையில் அதிமுகவை தொடர்ந்து தமது பிடியில் வைத்துக் கொள்ளும் வகையில் சசிகலாவுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப் போகிறார் ஜெயலலிதா என கூறப்பட்டு வந்தது. ஆனால் வழக்கமாக பொதுக்குழுவில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சசிகலா இம்முறை ஆப்சென்ட் ஆகிப் போனார். இதனிடையேதான் சசிகலாவுக்கு இந்த மாத இறுதிக்குள் துணைப் பொதுச்செயலர் பதவி கிடைக்கப் போகிறது என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மன்னார்குடி வகையறாவில் தினகரனுக்கு மீண்டும் ஏறுமுகம் கிடைத்துவிட்டது...அவர்தான் கட்சியின் துணைப் பொதுச்செயலராகப் போகிறார் என்கிற தகவலும் பறந்து கொண்டிருக்கிறது. மன்னார்குடி குடும்பத்துக்கு தொடர்புடைய எல்லோருமே 'கார்டனில்' செல்வாக்கு பெற்றவர்கள்தான் என்பதால் துணைப் பொதுச் செயலர் பதவியை வெல்லப் போவது சசிகலா? தினகரனா? என்கிற பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-get-top-admk-post-243905.html

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் முற்றுகை.. வகுப்பறை மாற்றித்தர வேண்டுகோள்...



அதிரை காதிர் முகைதீன் கல்லுரி BA.எகனாமிக்ஸ் மாணவர்கள் தங்களது வகுப்பறை மாற்றம் செய்ததால் வகுப்பறை போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் கல்லுரி மறியலில் ஈடுபட்டனர் ...

முன் இருந்த வகுப்பறையே போதிய வசதிகளுடன் இருந்தது.. ஆனால் இப்போது கட்டிய புதிய வகுப்பறையில் தாங்கலை மாற்றியதால் அங்கே போதிய வசதிகள் மற்றும் கல்லூரியில் இருந்து வகுப்பறை செல்ல தாமதம் ஆகும் காரணத்தாலும் மாணவர்கள் புகார் அளித்தனர்..

புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதனை கல்லுரி முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல நினைத்த மாணவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் கல்லுரி மறியலில் ஈடுபட்டனர் ...

இதனை கண்ட கல்லுரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு முன் இருந்த வகுப்பறையை தருவதாக கூறினார்கள்...

கல்லுரி முதல்வரின் ஆணைக்கு இணங்க மாணவர்கள் மறியலை நிறுத்தினார்கள், இதனை தொடர்ந்து BA. எகனாமிக்ஸ் மாணவ மாணவியர்களுக்கு வரும் ஞாயிறு முதல் முன் இருந்த வகுப்பறை நடைமுறைப்படுத்தப்படுகிறது...

Tuesday, 5 January 2016

விரைவில் இந்தியாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்படும்: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை

 Posted by: Siva | Wed, Jan 6, 2016, 10:02 

              

         டெல்லி: ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமய மலை பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், தற்போது மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகியவற்றால் பூமிக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்ஸ் எனப்படும் பூமியின் அடுக்குகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இமய மலை பகுதியில் விரைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். குறைந்தது 4 முறையாவது பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். அது ரிக்டர் அளவுகோலில் 8.2 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விரைவில் ஏற்பட உள்ள பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளம், பூட்டான், மியான்மர் மற்றும் இந்தியாவில் பாதிப்பு அதிக அளவில் இருக்கக்கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலையில் உள்ள மாநிலங்களும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், தற்போதுள்ள சூழலில் குறைந்தது 4 முறையாவது பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விரைவில் நிலநடுக்கம் ஏற்படாவிட்டால் டெக்டானிக் பிளேட்ஸ் அழுத்தம் அதிகரித்து பேரழிவை ஏற்படுத்தும் வகையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/big-quake-coming-warn-mha-experts-243879.html

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்

manipur earth
 Jan/05/2016 இம்பால்,(மணிப்பூர்) - நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம்(ஜன3) 6.8ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 8பேர்உயிரிழந்தார்கள். கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. தேசிய இடர்பாடு நிர்வாக கமிட்டி நிலமையை ஆய்வு செய்ய கூடியபோதும் அங்கு பீதி காணப்படுகிறது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து தேசிய பேரிடர் உதவி படை மணிப்பூர் மாநிலத்திற்கு விரைந்து வந்துள்ளது.
அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது தொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மணிப்பூர் மாநிலத்தில் டாமன்கிளாங் மாவட்டம் நில நடுக்கத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூருக்கு வருவதற்காக அசாமில் உள்ள சில்சாரில் ஒரு மீட்பு குழு தயாராக உள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதேப்போன்றுஅவசரத்தேவைடியில்லாத  அரசு,தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
நிலநடுக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட டெமன் லாங் , சேனாபதி மாவட்டங்களில் சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மின் விநியோகம் மீண்டும் துவங்கியது. மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்க 3 உறுப்பினர் கொண்ட  மின்மாற்றி கழக குழு நடவடிக் கை மேற் கொண்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய மருத்துவ குழு வந்துள்ளது. அந்த குழுவில்  எலும்பு மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், மற்றும் இதர தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். மணிப்பூர் நில நடுக்கத்தில் 8பேர் இறந்தனர். 88பேர் காயம் அடைந்தனர். 33பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர்கள் மணிப்பூரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.காயம் அடைந்த இதர நபர்கள் உரிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.பகுதி அளவில் சேதமடைந்த கட்டிடங்களை மதிப்பீடு செய்து மாநில அரசுக்கு தெரிவிக்க தேசிய பேரிடர் மீட்பு குழு நிபுணர்கள் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மணிப்பூர் மாநிலத்தில் தொலைபேசி சேவை முழுமையாக செயல்படதுவங்கியுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இம்பாலுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டிட சேதங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் பின்னர் தொலை தொடர்பு துறை சேவை கட்டிடங்கள் பாதுகாப்புடன் செயல்படுவதற்குஉரிய  ஆலோசனைகளை கூறுகிறார்கள். மணிப்பூருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு மாநில அரசு ,தேசிய பேரிடர் மீட்பு படை, மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுடன் உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வாகனப்போக்குவரத்து தடையில்லாமல் இயங்குகிறது. தேசிய பேரிடர் நிர்வாக குழு டெல்லியில் கூடி மணிப்பூர் நில நடுக்க நிலமையை ஆய்வு செய்து வருகிறது. கேபினட் செயலாளர் பி.கே. சின்கா தலைமையில்இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மணிப்பூர் தலைமைச் செயலாளர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு தகவல்களை தெரிவித்தார்.

ஈரான்-சவுதி அரேபியா பதட்டத்தை தவிர்க்க வேண்டும் : ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வேண்டுகோள்

ban-ki-moon new 
January 5, 2016 
 ஐக்கிய நாடுகள் சபை -  ஈரான்- சவுதி அரேபிய நாடுகள் ராஜிய உறவு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாடுகள் இடையே கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பதட்டத்தை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதகுரு ஷேக் நிமிர் பகிர் அல் நிமிர்கொல்லப்பட்டதற்கும் அவர் வேதனை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன்  சவுதி வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,  மதகுருவுக்கு மரண தண்டனை விதித்தது குறித்து  மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த பிரச்சினை குறித்து சவுதி அரேபியாவின் நிர்வாகத்துடன் பல்வேறு முறை எழுப்பியுள்ளேன்.ஈரான் தலைநகர் டெகரானில் உள்ள சவுத தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.  ஈரான் சவுதியுடன் ராஜிய உறவை துண்டிப்பதாக அறிவித்து இருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா மீண்டும் மேற் கொள்ள வேண்டும். கடந்த சனிக்கிழமையன்று மத குரு அல் நிமிர் மற்றும் 46கைதிகளுக்கு சவுதிஅரசு  மரண தண்டனை விதித்துள்ளது. இது கவலையளிப்பதாக உள்ளது. இவ்வாறு பான் கி முன் தெரிவித்தார்.

ஜெட்டாவிலிருந்து மும்பை வந்த சவூதி ஏர்லைன் விமானத்தின் டயர் வெடித்து விபத்து


Posted by:Tue, Jan 5, 2016, 16:31 


மும்பை: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து இன்று காலை மும்பை வந்த சவூதி ஏர்லைன் விமானம் தரை இறங்கிய போது விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் எவ்வித காயமுமின்றி தப்பித்தனர். சவூதி ஏர்லைன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777-200 விமானம் இன்று காலை மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்ததது. அப்போது, விமானம் ஓடுதளத்தில் இறங்கியபோது, விமானத்தின் டயரிலிருந்து புகை வருவதைக் கண்ட விமானி அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி 'டாக்ஸி வே' எனப்படும் சாலைக்குள் புகுந்தது. இதையடுத்து விமானி சமயோஜிதமாக செயல்பட்டு விமானத்தின் எஞ்சினை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். இது குறித்து மும்பையில் உள்ள சவூதி ஏர்லைன் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு, விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் அதன் இருப்பிடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/tension-over-saudi-airlines-plane-s-tyre-burst-mumbai-airport-243836.html

"1000' ரன்கள் அடித்து மும்பை பள்ளி மாணவர் உலக சாதனை: ஆட்டோ ஓட்டுநரின் மகன் அபாரம்

First Published : 06 January 2016 12:50 AM IST


மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் செவ்வாய்க்கிழமை 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்துள்ளார்.
 பண்டாரி கோப்பைக்காக பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்யா குருகுல பள்ளிக்கு எதிராக, கே.சி.காந்தி உயர்நிலைப் பள்ளி சார்பில் விளையாடினார் 10ஆம் வகுப்பு மாணவர் பிரணவ். இதில் அவர் 323 பந்துகளில் 59 சிக்ஸர்கள், 129 பவுண்டரிகள் விளாசி இந்த சாதனை ரன்களை சொந்தமாக்கினார்.
 117 ஆண்டு சாதனை முறியடிப்பு: இதற்கு முன்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஏ.இ.ஜே.காலின்ஸ் என்ற வீரர் கடந்த 1899-ஆம் ஆண்டு அடித்திருந்த 628 ரன்களே உலக அளவில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்தது.
 இந்நிலையில், 117 ஆண்டுகள் கழித்து 1,009 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார் பிரணவ்.
 அத்துடன், இந்திய பள்ளிகளிடையேயான கிரிக்கெட்டில், மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா என்ற மற்றொரு மாணவரின் 546 ரன்களையும் பிரணவ் முறியடித்துள்ளார்.
 அணி அளவிலும் சாதனை: பிரணவின் ரன் குவிப்பானது, அவரது பள்ளி அணியும் உலக சாதனை படைக்க சாதகமாக அமைந்தது.
 பிரணவின் கே.சி.காந்தி உயர் நிலைப் பள்ளி அணியானது, 3 விக்கெட் இழப்புக்கு 1, 465 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து சாதனை படைத்தது. முன்னதாக, அதன் எதிரணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
 இதற்கு முன்பாக, 1926ஆம் ஆண்டு நியூ செளத் வேல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விக்டோரியா அணி அடித்திருந்த 1,107 ரன்களே உலக சாதனையாக இருந்தது.
 அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுரையில் வாழ்த்து
 சச்சின்: "ஒரு இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்து சாதனை படைத்த முதல் வீரரானதற்கு வாழ்த்துக்கள் பிரணவ். கடின உழைப்புடன் இன்னும் புதிய உச்சங்களைத் தொட வேண்டும்'.
 ஹர்பஜன் சிங்: "நன்றாக விளையாடினாய் பிரணவ். எந்த கிரிக்கெட்டில் விளையாடினாய் என்பது முக்கியமல்ல. உனது ரன்கள் நம்பமுடியாதது. இன்னொரு சச்சின் உருவாகிறாரா?'

வெடிகுண்டு புரளியால் சென்னையில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

Updated: January 5, 2016 19:10 IST
வீடு திரும்பும் சென்னை - சிந்தாதிரிப்பேட்டை பள்ளி மாணவர்கள்.
பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியதை தொடர்ந்து 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புரளி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு இன்று காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு சென்று அனைத்து இடங்களையும் சோதனை செய்தனர். ஆனால் சந்தேகப்படும் விதத்தில் எந்த பொருளும் சிக்கவில்லை. அதன் பின்னரே வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. போனில் பேசிய நபரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் புரளி
இந்நிலையில் வெடிகுண்டு புரளி 'வாட்ஸ் அப்' மூலம் காட்டுத் தீ போல பரவியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது என்கிற நிலையில் தகவல் பரவியதால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு படையெடுத்து சென்றனர். பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக விடுமுறை விடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு குழந்தைகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
11 பள்ளிகள் விடுமுறை
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள வெட்டுவாங்கேணி செயின்ட் ஜோசப் பள்ளி, திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, நீலாங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஈஞ்சம்பாக்கம் ஏஎல்எம் தனியார் பள்ளி, நீலாங்கரை பிரதர்ஸ் குட் பள்ளி, பாலவாக்கம் மேன்வெல் மோனி பள்ளி, கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மந்தைவெளியில் ஒரு தனியார் பள்ளி என 11 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
போக்குவரத்து நெருக்கடி
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று பரவிய செய்தியால் ஒரே நேரத்தில் பெற்றோர்கள் திரண்டு கார், மோட்டார் சைக்கிளில் மற்றும் பல வாகனங்களில் சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டன. திருவான்மியூரில் இருந்து கானத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சென்னை நகரிலும் புரளி
வாட்ஸ்அப் தகவல் மேலும் பரவ, சென்னை நகரில் உள்ள பள்ளிகளுக்கும் பெற்றோர் படையெடுக்க ஆரம்பித்தனர். தங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். அடையாறு, மேற்கு மாம்பலம், அமைந்தகரை, அரும்பாக்கம், தி.நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பெற்றோர் சென்று குழந்தைகளை அழைத்து சென்றனர். ஆனால் இந்த பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்படவில்லை.
போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் கூறுகையில், "சென்னையில் எந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வரவில்லை. வாட்ஸ் அப் மூலம் தேவையில்லாத புரளியை சிலர் பரப்பி வருகின்றனர். வெடிகுண்டு புரளியை பரப்புபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எல்லாம் இழந்த எங்களுக்கு வெறும் 5 ஆயிரம்தான் நிவாரணமா? மத்திய குழுவை மக்கள் முற்றுகை



 சைதாப்பேட்டையில் பரபரப்பு
தூத்துக்குடி, நெல்லையில் இன்று ஆய்வு

சென்னை: ‘சென்னை மழை வெள்ளத்துக்கு எல்லா உடமைகளையும் இழந்து, நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு தமிழக அரசின் ரூ. 5 ஆயிரம் நிவாரணத் தொகை  போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்று கூறி, மத்திய குழுவினரின் காரை பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டதால் சைதாப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் 2வது முறையாக நேற்று சென்னை வந்தனர். அவர்கள் நேற்று காலை தலைமைச்செயலகம் சென்று, அங்கு முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய குழுவிடம், ஜெயலலிதா விவரித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க, அதிகாரிகள் தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டனர்.


மயிலாப்பூரில் 10 நிமிடம்: மத்தியக் குழுவினர் ஏற்கனவே, திட்டமிட்டப்படி முதலில் மயிலாப்பூர் சிவசாமி சாலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாலை 4.10 மணி அளவில் அங்கு சென்றனர்.  சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே ஆய்வு செய்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 10 நிமிடத்தில் எப்படி முழுமையாக வெள்ளபாதிப்புகளை கணக்கீடு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க முடியும் என்று மக்களும், சமூக ஆர்வலர்களும் கொந்தளித்தனர். போட்டோ பார்த்து இழப்பீடு வழங்க முடியுமா? வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய பகுதிக்கு மத்தியக்குழுவினர் சென்றனர். மழை வெள்ளத்தின்போது கோட்டூர்புரத்தில் 10 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.


இந்நிலையில் அது வற்றிபோன நிலையில் இருந்தது. வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்பை மத்திய பார்வையாளர்கள் குழு உணர வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின்போது கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய பகுதிகள் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வகையில் போட்டோ எடுத்து ஒரு பலகையில் ஒட்டியிருந்தனர். கோட்டூர்புரத்துக்கு மாலை 4.35 மணிய அளவில் சென்ற மத்தியக்குழுவினர், அங்கு ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு ஆய்வு செய்ய கிளம்ப முயன்றனர். இதை பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வெறும் போட்டோவை பார்த்துவிட்டு எப்படி இழப்பீட்டை நிர்ணயிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

ஒப்புக்கு கருத்து கேட்ட
- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=188447#sthash.8jHC5K6i.dpuf

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு 375 பணிகள்

1/4/2016 9:44:00 AM
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 375 பணிகள்

உள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:–

தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக டி.என்.இ.பி என்றழைக்கப்படும், இந்த துறையில் தற்போது உதவி பொறியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 375 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவற்றில் மின்னியல் பிரிவில் 300 இடங்களும், சிவில் பிரிவில் 50 இடங்களும்,  மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 1–7–2015 அன்று 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 30 வயதிக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. பிரிவினர் விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் இல்லை. கல்வித்தகுதி:

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொடர்பு, மெக்கானிக்கல், புரொடெக்சன், இண்டஸ்ட்ரியல், மேனுபக்சரிங், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி., விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமாக 250 ரூபாயும் பி.சி., எம்.பி.சி., மற்றும் ஓ.சி பிரிவினர் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். கட்டணத்தை கனரா வங்கி அல்லது இந்தியன் வங்கி மூலமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். எனவே முன்னதாகவே ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க கடைசி நாள் : 11–1–2016

கட்டணம் செலுத்த இறுதி நாள் : 13–1–2016தேர்வு நடைபெறும் நாள் : 30–1–2016

விண்ணப்பிக்கவும், இதுபற்றிய விரிவான விவரங்களை அறிந்துகொள்ளவும்   www.tangedco.gov.in    என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுதங்களை சவூதி அரேபியா வாங்குவதற்கு வாய்ப்பு; அமெரிக்கா கவலை


11:31 PM | ஜனவரி 05, 2016
வாஷிங்டன்,

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் சவுதி அரேபியா அண்மையில் மரண தண்டனையை நிறைவேற்றியது. ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட ஈரான், ஈராக் நாடுகள் சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளன. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள சவூதி அரேபியா அந்நாட்டிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்க வாய்ப்புள்ளதாகவும், அப்படி வாங்கினால் நிலமை மேலும் மோசமாகிவிடும் எனவும் அமெரிக்காவின் மூத்த செனட்டர் ரான் ஜான்சன் கவலை தெரிவித்துள்ளார்.

Sunday, 3 January 2016

ஒரு கிராமத்துக்கே இலவச Wi-Fi இண்டெர்நெட் சேவையை வழங்கிய இஸ்லாமிய மாணவி ஷகீல் அஞ்சும்!





அரசின் உதவி இல்லாமலேயே சாதனை படைத்த ஷகீல் அஞ்சும்..!
மத்திய பிரதேச மாநிலத்தின் ‘பாவ்டி கேடா’ என்ற முழு கிராம பஞ்சாயத்துக்கு, அரசின் உதவி இல்லாமலேயே இலவச ‘வை ஃபை’ வசதியை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார், முஸ்லிம் எஞ்சினியரிங் மாணவி, ஷகீல் அஞ்சும்.
ஷகீல் அஞ்சுமின் இப்பணியில், அவருக்கு உறுதுணையாக பானு, துஷார் பர்தாரே, அபிஷேக் பர்தாரே ஆகிய 3 மாணவர்கள் செயல்பட்டுள்ளனர்.
ஷகீல் அஞ்சும் குழுவினரின் இந்த இலவச சேவையை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தருண் குமார், ஷகீல் அஞ்சும் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
விழாவில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், கல்வித்துறை உயரதிகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டு ‘பாவ்டி கேடா’ கிராம மக்களுக்கு இலவச வை ஃபை வசதியை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

துபாய் ஹோட்டல் தீயணைப்பு பணியில் பங்கேற்ற‌ துபாய் ஆட்சியாளர் மகன்



பதிவு செய்த நேரம்:2016-01-03 16:25:35


துபாய்: துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா அருகே தனியார்  நட்சத்திர ஹோட்டலில்  ஒரு பகுதியில் இரவு புத்தாண்டு தொடங்க சில மணி நேரங்கள் இருந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டது. புத்தாண்டையோட்டி புர்ஜ் கலிபா அருகே வாண வேடிக்கைகளை காண‌  அப்பகுதியில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த நிலையில் பெரிய விபத்து ஏற்பட்டு விடாமல் அரசு நிர்வாகம் உடனடியாக தீயை அணைக்க‌ தேவையான நடவடிக்கைகள் எடுத்து சில மணிநேரங்களில் தீயை அனைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹோட்டல் தீவிபத்தில் 14 பேர் சிறிய அளவில் காயமடைந்தனர். உடனடியாக மருத்துவ முதலுதவி செய்யப்பட்டது.

புத்தாண்டில் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை  காண்பதற்கு உலகம் முழுவதும் புர்ஜ் கலிபா பகுதிக்கு  சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த‌ நிலையில்  தீவிபத்து உடனடியாக சீர்செய்யப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பிரம்மாண்ட‌ வாணவேடிக்கை உள்ளிட்ட புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படாமல் அனைத்தும் முன் திட்டமிட்டபடி நடைபெற்றது.

இது குறித்து தீயணைப்புபடையினர் மற்றும் மீட்பு படையினரின் சிறப்பான பணியை பாராட்டி துபாய் ஆட்சியாளரும் அமீரக பிரதமரும், துணை அதிபருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித்  அல் மக்தூம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார் மேலும் அக்குழுவினரை நேரிலும் பாராட்டினார்.

மேலும் தீவிபத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த துபாய் ஆட்சியாளர் மகன் ஷேக் மன்சூர் பின் முஹம்மது  தீயணைப்புதுறை வீரர் உடை அணிந்து நேரடியாக பணியாற்றினார். சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலைக்கழகம்


பதிவு செய்த நேரம்:2016-01-03 17:29:22



ரியாத்: எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவூதி அரேபியாவில்தான் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக  உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ளது. ரியாத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் தொடக்கத்தில் Riyadh University for Women என்ற பெயரில் இருந்தது பின்பு இளவரசி நூரா பல்கலைகழகம் (princess noura bin abdul Rahman university(PNU) பெயரில் 2008ம் ஆண்டு மாற்றம் பெற்றது. பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் 60 ஆயிரம் பேர் கல்வி கற்கின்றனர்.

இங்கு 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் மட்டும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆயிரம் மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள்

அமெரிக்காவில் இருந்து இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்


பதிவு செய்த நேரம்:2016-01-03 15:52:07

ஐதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 30 பேர் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் ஐதராபாத் விமான நிலையம்  வந்தடைந்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான மாணவர்களை, அமெரிக்கா அனுமதிக்க மறுத்து விட்டது. அமெரிக்காவின்  நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்கள் படிக்க செல்வது வழக்கம். இந்நிலையில்,  அங்குள்ள இரண்டு பல்கலைக்கழகங்களை அமெரிக்க கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி அந்த  பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், கறுப்பு பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க சென்ற இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அனுமதி  மறுத்து வருகின்றனர். அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் இந்திய மாணவர்களிடம் கடுமையான விசாரணை மேற்கொள்கின்றனர். 2 நாட்கள்  வரை தங்க வைத்து கேள்விகளை கேட்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் தங்களை குற்றவாளிகள் போன்று  நடத்துவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவுக்கு படிக்க சென்ற மாணவர்கள் 30 பேர் கடந்த  2 நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஐதராபாத் விமான நிலையம் வந்தடைந்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை  எடுத்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

வைகோவை கடுமையாக விமர்சித்ததுதான் நாஞ்சிலின் பதவி பறிப்புக்கு காரணமா?

த னியார் தொலைகாட்சிக்கு நாஞ்சில் சம்பத், அளித்த பேட்டியில் வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக விமர்சித்ததுதான், நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடித்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் செயலாளர் ஜெயலலிததா, தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார். தற்போதைய சூழலில் தமிழகத்தை பொறுத்த வரை, அதிமுக அசுர பலத்துடன் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் கொண்டு வருவதை கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதை அதிமுக அறியாமல் இல்லை. இதனால் மற்ற தேர்தல் போல, வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக தலைமை கருதவில்லை. கடுமையான போட்டி இருக்கும் என்றும் பார்டரில்தான் பாசாகும் நிலை இருக்கும் என்பதையும் அதிமுக தலைமை புரிந்து வைத்திருக்கிறது. அதனாலேயே பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக தலைமை இப்படி ஒரு சூசக அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.கவுடன் நெருங்கி வரும் வேளையில், தே.மு.தி.க சண்டிக்குதிரையாக திரியும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணி சான்ஸ் மக்கள் நல கூட்டணியுடன் மட்டும்தான் அமைக்க முடியும். இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்பவர் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் உள்ளனர். தற்போது வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நல கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நல கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் எளிதாக மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விட வாய்ப்புண்டு. அதனை கருத்தில் கொண்டே சூழலுக்கு ஏற்ப கூட்டணி என்ற அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அதிமுக துணை பொதுத் செயலாளரான நாஞ்சில் சம்பத் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் நல கூட்டணி குறித்து கடுமையாக விமர்சத்தார். மக்கள் நல கூட்டணி ஒரு வெத்து வேட்டும் எனும்விதத்தில் மதிமுக தன்னால்தான் வளர்ச்சி பெற்றதாகவும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் குறிப்பிட்டார். அந்த பேட்டியில் நாஞ்சில் வைகோ பற்றி இவ்வாறு கூறுகிறார், '' மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வைகோ. அவருக்கு கட்சினு ஒன்று தமிழ்நாட்டுல இருக்குதா?. அந்த கட்சியை ஊர் ஊராக சுமந்தவன் நான். அந்த கட்சிக்கு வானமும் சிறகுமாக இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்ற விபரம் வைகோவுக்கு தெரியாது. அந்த கட்சி தரை மட்டமாகி விட்டது தமிழ்நாட்டில் வரவில்லாத ஒரே கட்சி மதிமுகதான். சங்கரன்கோவிலில் அவரது சொந்த தொகுதியில், வைகோவை ஆதரித்து வீதி வீதியாக பேசியவன் நான். அங்கேயே கரை சேர முடியதவர் வைகோ '' என்றார். வைகோவை மட்டுமல்ல மற்ற மக்கள் நல கூட்டணித் தலைவர்களையும் விமர்சிக்க நாஞ்சில் சம்பத் தவறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் கூட நாஞ்சில் சம்பத் கடுமையாக தாக்கிப் பேசினார். சூழலுக்கு தக்க பேசுவோம், என்று அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், நாஞ்சில் மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசியதை அதிமுக தலைமை ரசிக்கவில்லையாம். விளைவு நாஞ்சிலின் பதவி பறிப்பாம்!

பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும்


(3 Jan) டெல்லி: பதன்கோட் தீவிரவாத  குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை புகுந்த 5 தீவிரவாதிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிளால் கண்மூடித்தனமாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 பேர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தனர். சம்பவ இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறையின் உதவியை தேசிய புலனாய்வு ஏஜென்சி நாட உள்ளது. உத்தம்பூர் தீவிரவாத தாக்குதலைப் போன்று தான் பதன்கோட்டிலும் நடந்துள்ளது. அதனால் உத்தம்பூர் தாக்குதல் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதன்கோட் தாக்குதல் குறித்தும் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குர்தாஸ்பூர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் பஞ்சாப் போலீசாரிடம் இருந்து சில தகவல்கள் பெறப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், உத்தம்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் போலீசாரிடம் சிக்கிய முகமது நவீதிடம் விசாரிக்கப்படும். அவரிடம் இருந்து சில தகவல்களை பெறலாம். அவரும் பாகிஸ்தானின் பவால்பூரில் இருந்து தான் வந்துள்ளார் என்றார். குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த வழியாக ஊடுருவினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Source: tamil.oneindia.com