January 5, 2016
ஐக்கிய நாடுகள் சபை - ஈரான்- சவுதி அரேபிய நாடுகள் ராஜிய உறவு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாடுகள் இடையே கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பதட்டத்தை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதகுரு ஷேக் நிமிர் பகிர் அல் நிமிர்கொல்லப்பட்டதற்கும் அவர் வேதனை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மதகுருவுக்கு மரண தண்டனை விதித்தது குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த பிரச்சினை குறித்து சவுதி அரேபியாவின் நிர்வாகத்துடன் பல்வேறு முறை எழுப்பியுள்ளேன்.ஈரான் தலைநகர் டெகரானில் உள்ள சவுத தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. ஈரான் சவுதியுடன் ராஜிய உறவை துண்டிப்பதாக அறிவித்து இருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா மீண்டும் மேற் கொள்ள வேண்டும். கடந்த சனிக்கிழமையன்று மத குரு அல் நிமிர் மற்றும் 46கைதிகளுக்கு சவுதிஅரசு மரண தண்டனை விதித்துள்ளது. இது கவலையளிப்பதாக உள்ளது. இவ்வாறு பான் கி முன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment