Wednesday, 6 January 2016

வாகனக் கட்டுப்பாட்டால் காற்று மாசு குறைந்துள்ளதா என டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பதிவு செய்த நேரம்:2016-01-06 16:15:53


புதுடெல்லி: டெல்லியில் வாகனக் கட்டுப்பாட்டால் காற்று மாசு குறைந்துள்ளதா என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாசு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒன்றை மற்றும் இரட்டைப் படை இலக்க பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு மாறிமாறி அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சோதனை அடிப்படையில் வாகனக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. டெல்லி அரசு கொண்ட வந்துள்ள இந்த புதிய முறையால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்திருந்தாலும், பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் உரிய நேரத்தில் போய் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் வாகனக்கட்டுப்பாடு திட்டத்தை எதிர்த்து பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது. பொதுநல மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காற்று மாசு குறைந்துள்ளதா என்பது பற்றி 8-ம் தேதி அறிக்கை தர அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. டெல்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்தால் மக்களுக்கு இன்னல்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது. எதற்கு 15 நாட்கள்-? வாகனக் கட்டுப்பாட்டு திட்டம் ஒரு வாரத்துக்கு போதாதா எனவும் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நல்ல விதமான முன்னேற்றம் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும். ஏதாவது பலன் ஏற்பட்டுள்ளதா என டெல்லி உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. இருப்பினும் விளக்கம் அளிக்க மேலும் அவகாசம் வேண்டும் என டெல்லி அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது. இது புறம் இருக்க, இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்த பிறகு, கடந்த ஒரு வாரத்தில் டெல்லி சாலை தூசிகள் மற்றும் வாகன புகையின் காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், சல்பர் டைஆக்சைடு, கார்பன் உள்ளிட்ட நச்சுக்களின் அளவு குறைந்துள்ளதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment