Tuesday, 5 January 2016

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்

manipur earth
 Jan/05/2016 இம்பால்,(மணிப்பூர்) - நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம்(ஜன3) 6.8ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 8பேர்உயிரிழந்தார்கள். கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. தேசிய இடர்பாடு நிர்வாக கமிட்டி நிலமையை ஆய்வு செய்ய கூடியபோதும் அங்கு பீதி காணப்படுகிறது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து தேசிய பேரிடர் உதவி படை மணிப்பூர் மாநிலத்திற்கு விரைந்து வந்துள்ளது.
அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது தொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மணிப்பூர் மாநிலத்தில் டாமன்கிளாங் மாவட்டம் நில நடுக்கத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூருக்கு வருவதற்காக அசாமில் உள்ள சில்சாரில் ஒரு மீட்பு குழு தயாராக உள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதேப்போன்றுஅவசரத்தேவைடியில்லாத  அரசு,தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
நிலநடுக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட டெமன் லாங் , சேனாபதி மாவட்டங்களில் சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மின் விநியோகம் மீண்டும் துவங்கியது. மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்க 3 உறுப்பினர் கொண்ட  மின்மாற்றி கழக குழு நடவடிக் கை மேற் கொண்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய மருத்துவ குழு வந்துள்ளது. அந்த குழுவில்  எலும்பு மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், மற்றும் இதர தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். மணிப்பூர் நில நடுக்கத்தில் 8பேர் இறந்தனர். 88பேர் காயம் அடைந்தனர். 33பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர்கள் மணிப்பூரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.காயம் அடைந்த இதர நபர்கள் உரிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.பகுதி அளவில் சேதமடைந்த கட்டிடங்களை மதிப்பீடு செய்து மாநில அரசுக்கு தெரிவிக்க தேசிய பேரிடர் மீட்பு குழு நிபுணர்கள் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மணிப்பூர் மாநிலத்தில் தொலைபேசி சேவை முழுமையாக செயல்படதுவங்கியுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இம்பாலுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டிட சேதங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் பின்னர் தொலை தொடர்பு துறை சேவை கட்டிடங்கள் பாதுகாப்புடன் செயல்படுவதற்குஉரிய  ஆலோசனைகளை கூறுகிறார்கள். மணிப்பூருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு மாநில அரசு ,தேசிய பேரிடர் மீட்பு படை, மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுடன் உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வாகனப்போக்குவரத்து தடையில்லாமல் இயங்குகிறது. தேசிய பேரிடர் நிர்வாக குழு டெல்லியில் கூடி மணிப்பூர் நில நடுக்க நிலமையை ஆய்வு செய்து வருகிறது. கேபினட் செயலாளர் பி.கே. சின்கா தலைமையில்இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மணிப்பூர் தலைமைச் செயலாளர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு தகவல்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment