Tuesday, 5 January 2016

ஜெட்டாவிலிருந்து மும்பை வந்த சவூதி ஏர்லைன் விமானத்தின் டயர் வெடித்து விபத்து


Posted by:Tue, Jan 5, 2016, 16:31 


மும்பை: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து இன்று காலை மும்பை வந்த சவூதி ஏர்லைன் விமானம் தரை இறங்கிய போது விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் எவ்வித காயமுமின்றி தப்பித்தனர். சவூதி ஏர்லைன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777-200 விமானம் இன்று காலை மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்ததது. அப்போது, விமானம் ஓடுதளத்தில் இறங்கியபோது, விமானத்தின் டயரிலிருந்து புகை வருவதைக் கண்ட விமானி அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி 'டாக்ஸி வே' எனப்படும் சாலைக்குள் புகுந்தது. இதையடுத்து விமானி சமயோஜிதமாக செயல்பட்டு விமானத்தின் எஞ்சினை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். இது குறித்து மும்பையில் உள்ள சவூதி ஏர்லைன் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு, விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் அதன் இருப்பிடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/tension-over-saudi-airlines-plane-s-tyre-burst-mumbai-airport-243836.html

No comments:

Post a Comment