அதிரை காதிர் முகைதீன் கல்லுரி BA.எகனாமிக்ஸ் மாணவர்கள் தங்களது வகுப்பறை மாற்றம் செய்ததால் வகுப்பறை போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் கல்லுரி மறியலில் ஈடுபட்டனர் ...
முன் இருந்த வகுப்பறையே போதிய வசதிகளுடன் இருந்தது.. ஆனால் இப்போது கட்டிய புதிய வகுப்பறையில் தாங்கலை மாற்றியதால் அங்கே போதிய வசதிகள் மற்றும் கல்லூரியில் இருந்து வகுப்பறை செல்ல தாமதம் ஆகும் காரணத்தாலும் மாணவர்கள் புகார் அளித்தனர்..
புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதனை கல்லுரி முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்ல நினைத்த மாணவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் கல்லுரி மறியலில் ஈடுபட்டனர் ...
இதனை கண்ட கல்லுரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு முன் இருந்த வகுப்பறையை தருவதாக கூறினார்கள்...
கல்லுரி முதல்வரின் ஆணைக்கு இணங்க மாணவர்கள் மறியலை நிறுத்தினார்கள், இதனை தொடர்ந்து BA. எகனாமிக்ஸ் மாணவ மாணவியர்களுக்கு வரும் ஞாயிறு முதல் முன் இருந்த வகுப்பறை நடைமுறைப்படுத்தப்படுகிறது...


No comments:
Post a Comment