Thursday, 7 January 2016

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Pakistan-flag
இஸ்லாமாபாத் - இந்தியா - பாகிஸ்தான் 
இஸ்லாமாபாத் - இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சில இயக்கங்கள் சதி செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை தீவிரவாத செயல் மூலம், சீர்குலைக்க சில இயக்கங்கள் விரும்புகிறது, ஆனால் அவர்களுடைய தீய எண்ணமானது நிறைவேறாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு முதல்வர் கவாஜா முகமது ஆசிப் கூறிஉள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகிவந்த நிலையில் பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாத திட்டமானது பாகிஸ்தான் உளவுஅமைப்பு ஐ.எஸ்.ஐ. தலைமையில் தீட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உறுதிசெய்து உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவிக்கையில்., இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நாசமாக்க சில இயக்கங்கள் விரும்புகிறது என்று கூறிஉள்ளார். 
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா - பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தீவிரவாத தாக்குதல்கள் மூலம் அதனை நாசமாக்க சில இயக்கங்கள் விரும்புகிறது, இருப்பினும் அவர்களுடைய தீய நடவடிக்கையில் அவர்கள் வெற்றிபெற முடியாது, என்று முகமது ஆசிப் கூறிஉள்ளார். தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, நவாஸ் செரீப் உறுதிசெய்து உள்ளார்,” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment