Tuesday, 5 January 2016

எல்லாம் இழந்த எங்களுக்கு வெறும் 5 ஆயிரம்தான் நிவாரணமா? மத்திய குழுவை மக்கள் முற்றுகை



 சைதாப்பேட்டையில் பரபரப்பு
தூத்துக்குடி, நெல்லையில் இன்று ஆய்வு

சென்னை: ‘சென்னை மழை வெள்ளத்துக்கு எல்லா உடமைகளையும் இழந்து, நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு தமிழக அரசின் ரூ. 5 ஆயிரம் நிவாரணத் தொகை  போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்று கூறி, மத்திய குழுவினரின் காரை பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டதால் சைதாப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் 2வது முறையாக நேற்று சென்னை வந்தனர். அவர்கள் நேற்று காலை தலைமைச்செயலகம் சென்று, அங்கு முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய குழுவிடம், ஜெயலலிதா விவரித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க, அதிகாரிகள் தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டனர்.


மயிலாப்பூரில் 10 நிமிடம்: மத்தியக் குழுவினர் ஏற்கனவே, திட்டமிட்டப்படி முதலில் மயிலாப்பூர் சிவசாமி சாலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாலை 4.10 மணி அளவில் அங்கு சென்றனர்.  சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே ஆய்வு செய்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 10 நிமிடத்தில் எப்படி முழுமையாக வெள்ளபாதிப்புகளை கணக்கீடு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க முடியும் என்று மக்களும், சமூக ஆர்வலர்களும் கொந்தளித்தனர். போட்டோ பார்த்து இழப்பீடு வழங்க முடியுமா? வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய பகுதிக்கு மத்தியக்குழுவினர் சென்றனர். மழை வெள்ளத்தின்போது கோட்டூர்புரத்தில் 10 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.


இந்நிலையில் அது வற்றிபோன நிலையில் இருந்தது. வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்பை மத்திய பார்வையாளர்கள் குழு உணர வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின்போது கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய பகுதிகள் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வகையில் போட்டோ எடுத்து ஒரு பலகையில் ஒட்டியிருந்தனர். கோட்டூர்புரத்துக்கு மாலை 4.35 மணிய அளவில் சென்ற மத்தியக்குழுவினர், அங்கு ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு ஆய்வு செய்ய கிளம்ப முயன்றனர். இதை பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வெறும் போட்டோவை பார்த்துவிட்டு எப்படி இழப்பீட்டை நிர்ணயிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

ஒப்புக்கு கருத்து கேட்ட
- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=188447#sthash.8jHC5K6i.dpuf

No comments:

Post a Comment