Monday, 22 August 2016

இந்த அறிகுறிகள் உங்க சிறுநீரகம் மோசமான நிலையில் உள்ளதைத் தான் குறிக்கிறது என்று தெரியுமா?

   
   உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் சிறுநீரக ஆரோக்கியம் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் மற்றும் தினமும் 10-150 குவாட்ஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது.
மேலும் சிறுநீரகம் உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், எலக்டோலைட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்யும்.
இவ்வளவு முக்கிய பணிகளைச் செய்யும் சிறுநீரகம் சரியாக இயங்காமல், நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டால், அதனால் உயிரை இழக்கவும் நேரிடும்.
சரி, இப்போது சிறுநீரகம் மோசமான நிலையில் இருந்தால் தென்படும் அறிகுறிகள் குறித்து காண்போம்.
சிறுநீர் கழிக்கவே முடியாமல் தவிப்பது, நுரையுடனான சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது போன்றவை சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படாமல் தேங்கி, உடலில் ஆங்காங்கு வீக்கத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
சிறுநீரக கோளாறு இருந்தால், இரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, அதனால் வாய் துர்நாற்றம் அல்லது சுவையில் மாற்றத்தை உணரக்கூடும். சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், அவர்களால் உணவின் சுவையை உணர முடியாமல் இருப்பதோடு, பசியின்மையால் அவஸ்தைப்படுவார்கள்.

இன்னும் சில நேரங்களில், சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடலில் உள்ள செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடல் மிகுந்த சோர்வடையும். இது அப்படியே நீடித்தால், அதனால் இரத்த சோகையால் கூட பாதிக்கப்படக்கூடும்.
மேல் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதனால் மூச்சுவிடுவதில் கூட சிரமத்தை உணர நேரிடும்.
சிறுநீரகம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருந்தால், இரத்த சோகை முற்றி, அதனால் எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போய், தலை பாரம், தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.
சிறுநீரகம் சரியாக இயங்காமல் இருந்தால், சிறுநீரகங்களில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கக்கூடும். எனவே சருமத்தில் அரிப்பு கடுமையாக இருந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதை கவனியுங்கள்.

நலம் தரும் நிலவேம்பு

   
    சித்த மருத்துவத்தில் ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியபோது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது நிலவேம்பு. சிறு செடி வகையைச் சேர்ந்த இதற்கு, காண்டம், காண்டகம், கோகனம், கிராதம் போன்ற பல பெயர்கள் உள்ளன.  நிலவேம்பில் சீமை நிலவேம்பு, நாட்டுநிலவேம்பு என இரண்டு வகைகள் உள்ளன. சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. 
*நிலவேம்பின் எல்லா பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையவைதான். எனினும், இலையும் தண்டும் அதிக அளவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 
*வாதசுரம் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல், நீர்க்கோவை, மூக்கடைப்பு ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் நிலவேம்புக்கு உண்டு.  நிலவேம்பு  இலையைப் பொடித்து, 15 கிராம் எடுத்து, இதனுடன், கிச்சிலித்தோல், கொத்தமல்லி தலா சுமார் 200 மி.கி சேர்த்து, வெந்நீரில் கலக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, வடிகட்டி 15  - 30 மி.லி அளவுக்கு நாள்தோறும் இரண்டு மூன்று முறை குடித்துவர, நிவாரணம் கிடைக்கும்.
*நிலவேம்புச் செடியை முதன்மை பொருளாகக்கொண்டு சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்படும் நிலவேம்புக் குடிநீர், டெங்கு காய்ச்சல் மற்றும் மூட்டுக்களைப் பாதித்து, தாங்கமுடியாத வலியை உண்டாக்கும் சிக்குன்குனியா ஆகிய இரண்டு காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து. 
*டெங்கு சுரம், சிக்குன்குனியா மற்றும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, அவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது நிலவேம்புக் குடிநீர் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
*நிலவேம்பைப் பொடித்து, 34 கிராம் எடுத்து, 700 மி.லி வெந்நீரில் கலந்து, கிராம்புத்தூள், கருவாப்பட்டைத்தூள், ஏலப்பொடி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நான்கு கிராம் கலந்து, சுமார் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் 15-30 மி.லி அளவுக்கு தினமும் பருகிவர, முறைசுரம், குளிர்சுரம், மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பு, அஜீரணம், வயிற்றுப்புழுக்கள் நீங்கி, உடலுக்கு வலிமை கிடைக்கும்.
*நிலவேம்பு இலையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, குடிநீர் செய்து, குடித்துவர கல்லீரல் தளர்ச்சி, நரம்புவலி, அஜீரணம், குடல் பொருமல் நீங்கும்.

Friday, 19 August 2016

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள் .


கறிவேப்பிலை
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்
♻ இதில் இருப்பவை :-
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே  பட்டியலிடப்பட்டுள்ளன.
கொழுப்புக்கள் கரையும் :
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை :
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
இதய நோய் :
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தேக்கம் :
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
கல்லீரல் பாதிப்பு :
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...
  இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்
❣ அன்புடன் ❣
டாக்டர். இஃப்திகார்
@ +919894487919
வாணியம்பாடி

நாடாளுமன்றத்தில் பாஜக வினரை கதிகலங்கச் செய்த அசத்துன் உவைசி!


மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார்.
குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது மட்டும் உங்களுக்கு அகுமானதா? எனக் கேட்டதும் அங்கு அமர்ந்திருந்த பாஜகவினருக்கு வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டது
மேலும் மோடியின் சமீபத்திய வசமான ”என்னை சுடுங்கள் அவர்களை விட்டு விடுங்கள்” என்பது குறித்து பேசிய உவைசி:
பிரபல இந்தி பட வசனத்தை பேசியுள்ள மோடி ஒன்றை தெளிவு படுத்தியுள்ளார், ஆட்சி அமைக்க வேண்டும் எனில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதை மோடி இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் சரமாறியாக பல்வேறு கேள்விகளை ஆதாரங்களுடன் எழுப்பி பாஜக வினரை கதிகலங்கச் செய்துள்ளார் உவைசி
மேடை சொற்பொழிவுகளில் நாம் பேசிவிட்டு போய்விடலாம். ஆனால் நாட்டை ஆளும் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரை ஒழிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளவர்கள் முன்னிலையில் இப்படி பேசுவதற்கு நிச்சயம் உண்மையான துனிவும் திறனும் வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நபரை பாராளுமன்றம் இதுவரை பார்த்தது இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
உவைசி பேச்சின் காணோளி

சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர தடை உட்பட புதிய கட்டுப்பாடு:


சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர தடை உட்பட புதிய கட்டுப்பாடு:
  சவுதி General Directorate of Passports தலைமைகத்தை மேற்கோள் காட்டி சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) நேற்று  வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள், சவுதி அரேபியாவில், எந்த எந்த நிறுவனத்தின் மூலம் பணிக்குச் சேருகிறார்களோ (கஃபீல்) அந்த நிறுவனத்திலிருந்து விதிமுறைகளுக்கு எதிராக வெளியேறினால், இனிமேல் அபராதமாக சவுதி ரியால்(SR) 10000 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் மற்றும் நாடு கடத்தப்படவும், நாட்டுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடையையும் சந்திக்க நேரிடும்.
   ஓடிப்போகும் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என சவுதி பிரஜைகளை, பாஸ்போர்ட் முகமை அறிவுறுத்தியுள்ளது.
அதை அவர்கள் கடைபிடிக்காவிட்டால், அவர்களும் சவுதி ரியால்(SR) 10000
அபராதம் கட்டவும்,மற்றும் 6 மாதம்  சிறை தண்டனையை அனுபவிக்கவும் நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
     இப்படி வெளியே தொழிலாளர் பற்றி Sponsore(அரபி) Online மூலம் தொழில்துறை அமைச்சகத்திற்கு புகார் தெவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இப்படி வெளியே தொழிலாளர்  தங்களுக்கு ஏற்பட்ட  பிரச்சனையில் மற்றும்  கொடுமைகள் ஆதரத்துடன் நிரூப்பித்தால் மட்டுமே பிழையில் இருந்து தப்பிக்க முடியும்.
  இதற்கிடேயே ஸ்பான்ஸர்ஷிப் எனப்படும் முகமை அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அது ஒருவித அடிமைத்தனம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Source: Arab Times

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


சென்னை: தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 'பிப்பீள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் செயலாளர் அருண் பிரசன்னா, கடந்த 2015-ல் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன் விசாரணைக்கு இன்று (ஆகஸ்ட் 18) வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குத் தாக்கல் செய்த அருண் பிரசன்னா கூறுகையில், "ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன.
அதைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் தகவல் உரிமை அறியும் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் ஒட்டகம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம். அதைக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கில் தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்துத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

துபாயில் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ள விசா நடைமுறைகள் அறிவிப்பு:

துபாய்:

      துபாயில் இனி புதிய விசா, ரெஸிடென்ஸி விசா புதுப்பித்தால், விசா ரத்து செய்தல் மற்றும் இது தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் இனி General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) அலுவலகம் செல்லாமலேயே அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு மையங்களிலேயே (Typing Centers) விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
     "UAE Vision" என்ற தூரநோக்குத் திட்டத்தின் கீழ் இத்தகைய இலகு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சரியான மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் வசிப்பிட முகவரிகளை எத்தகைய தவறும் இன்றி அளிக்க வேண்டும்.
     விசிட் விசா விண்ணப்பதாரர்களுக்கு ஈமெயில் மூலம் ஈ-விசாவாக (e-visa) அனுப்பப்படும், இனி விசிட்டிற்கு பேப்பர் வடிவ விசா கிடையாது. ரெஸிடென்ட் விசாக்கள் மட்டும் 'Zajel' கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்.
    விசா நடைமுறைகள் அனைத்தையும் ஓரிடத்திலேயே முடித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டாலும் ஸ்டாம்பிங் செய்யப்பட்ட பாஸ்போர்ட்களை பெற மட்டும் GDRFA அலுவலகத்திற்கு ஒருமுறை நேரில் செல்ல வேண்டும்.
     அதுபோல் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் விசா விண்ணப்பம் அனைத்தும் இமிக்கிரேசன் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது குறித்து (Final Step) விண்ணப்பதாரருக்கு "SMS" மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
    கடந்த ஒரு மாதமாக பரீட்ச்சார்த்த முறையில் இருந்த இந்த திட்டம் தற்போது துபாயில் மட்டும் அமுலுக்கு வந்துள்ளது ஏனைய அமீரக பகுதிகள் குறித்து தகவல் இல்லை.
Source: Gulf News
தமிழில்( நன்றி):அதிரை நியூஸ்

துபாயில் பிறக்கும் வெளிநாட்டினர் குழந்தைகளுக்கான விசா நடைமுறை:

துபாய்:

    துபாயில் ரெஸிடென்ட் விசாவுடன் வசிக்கக்கூடிய அனைத்து வெளிநாட்டினரும் துபையில் பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு 120 நாட்களுக்குள் கட்டாயமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து ரெஸிடென்ட் விசா எடுக்க வேண்டும் தவறுபவர்கள் அபராதம் செலுத்த நேரிடும்.
   பிறந்த குழந்தைகளுக்கான விசா வேண்டும் ஆவணங்கள் என்பது தனியார் துறை, அரசுத்துறை மற்றும் சிறப்பு மண்டலப் பகுதி [ FREE  ZONES ] ஊழியர்கள் என சற்றே வேறுபடும்.
     தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
       துபை General Directorate of Residency and Foreigners Affairs in Dubai (GDRFA) அறிவுறுத்தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் வழியாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களுடன் குழந்தையின் 2 போட்டோக்கள், குழந்தையின் அசல் பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழுடன் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்ப படிவ சான்றுடன் GDRFA அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும், பெற்றோர்கள் இருவரின் பாஸ்போர்ட் மற்றும் விசா ஸ்டாம்ப் நகல்களுடன் இருவரின் எமிரேட்ஸ் ஐடியின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும்.
    சான்றழிக்கப்பட்ட வீட்டு ஒப்பந்தப் நகல் (Attested Tenancy Contract), சமீபத்திய தேவா ரசீது (DEWA Bill) மற்றும் பணி ஒப்பந்த பத்திரங்களுடன் (Labour Contract) உங்களின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 3000 இருந்து 4000 திர்ஹங்களாக கூடுதல் படிகளுடன் (Allowances) இருக்க வேண்டும்.
     குழந்தை பிறந்து 120 நாட்கள் எனும் கருணை காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறும் ஒவ்வொரு நாளுக்கு 25 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.
     குழந்தையின் ரெஸிடென்ட் விசா விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 அல்லது 3 வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட்டில் விசா முத்திரை பதிந்து தரப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates 247

Wednesday, 17 August 2016

குவைத்தில் தனியார் கம்பெனியின் ஒப்பந்தம் திடிரெனரத்தானதால் 32 இந்தியர்கள் உப்பட 102 செவிலியர்கள் வேலை இழப்பு:

குவைத்:

                    இந்தியாவில் இருந்து ஒரு ஏஜென்சி மூலம் 6 முதல் 7 லட்சம் 
வரையில் வழங்கி குவைத்தின் ஒரு பிரபல மருந்தகத்தின் கீழ் உள்ள ஆம்புலன்ஸ்களில் வேலை செய்து வந்த இவர்களுக்கு வேலை பறிபோய் உள்ளது.
    ஆனால் ஒப்பந்த நேரத்தில் ஐந்து வருட ஒப்பந்தம் என்று தான் இந்த அளவு பணம் கடன்வாங்கி இந்த வேலைக்கு வந்துள்ளனர்.
தற்போது ஒரு வருடத்தில் தாயகம் திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
   ஆனால் கம்பெனி தரப்பில் கூறப்பட்டுள்ள தகவல் படி இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வேலை இழப்பு குறித்து அறிவிப்பு கடிதங்கள் கொடுத்ததாகவும். வரும் ஆகஸ்டு 22 வரையிலான சம்பளம் இவர்களுக்கு வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலை இழந்தவர்களில் இந்தியர்கள்,  பிலிப்பைன்ஸ், ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.
    இதையடு‌த்து நேற்று வேலை இழந்த  இந்தியர்கள் குவைத் இந்திய தூதரக அதிகாரி சுனில் ஜெயினிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
Source : Asianet news

சென்னையிலிருந்து 2016 புனித ஹஜ் பயணத்திற்கான விமானங்களின் பட்டியல் வெளியீடு !



இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சகணக்கான யாத்திரீகர்கள் விமானங்கள் மூலமாக சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு செல்வார்கள். 
இப்புனித யாத்த்ரீகர்களின் வசதிக்காக விமான நிலைய ஆணையரகம், மற்றும் இந்திய ஹஜ் கமிட்டியினர் சிறப்பு விமானங்களை இயக்குவர். 
அதன்படி 2016 ஆம் ஆண்டின் ஹஜ்ஜுக்கான சிறப்பு விமானங்களின் பட்டியலை தமிழக ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ளது.. 
அதில் தமிழகத்தில் இருந்து வருகின்ற20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9:30மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் (AI 5301) சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு புறப்படுவதாக ஹஜ் கமிட்டியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

சவூதி தம்மாமில் தவித்த இந்திய வாலிபர் மீட்பு !


பெரியகுளம் கீழ வடகரை காயிதேமில்லத் தெருவில் வசிக்கும்
ஜமால் மைதீன் இவரது மகன் யூனுஸ் சவூதி தம்மாமில் வேலைக்கு சென்றுள்ளார் சென்ற இடத்தில் தங்க இடமும் இல்லாமல் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு மேல் மிகவும் சிரமத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
விபரம் அறிந்த யூனுஸ் தகப்பனார் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில நிர்வாகிகளிடம் தனது மகனை மீட்டு தரக்கோரி மனு அளித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் தம்மாமில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடனடியாக யூனுஸ் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படி கோரினார்கள்.
இதன் அடிப்படையில் தம்மாம் I.S.F நிர்வாகிகள் ஜின்னா, மக்தூம், சபியுல்லா மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கும் இடவசதி மற்றும் சட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வாலிபரை மீட்டு பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
மும்பை சென்னை வழியாக 15/08/2016 காலை 11.30மணியளவில் மதுரை விமானநிலையம் வந்தடைந்த வாலிபரை விமான நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூசுப் தெற்கு நிர்வாகிகள் சாகுல் ஹமீது, சம்சுஅப்துல்லா 50வதுவார்டு நிர்வாகிகள் நாகூர் கனி, சம்சுதீன் யூனுஸின் தந்தை ஜமால்மைதீன் ஆகியோர் வரவேற்றனர்.
மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு வாலிபர் யூனுஸும் அவரது தந்தை ஜமால் மைதீன் அவர்களும் நன்றி கூறியதுடன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுநல சேவையை மனம் நெகிழ்ந்து பாராட்டினர்.
துரிதமாக செயல்பட்டு வாலிபரை மீட்டெடுத்து தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தமிழ் பிரிவின் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,ஊடக பொறுப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் பாராட்டினர்.
யூனுஸ் அவர்களின் தந்தை ஜமால் மைதீன் அவர்கள் இந்தியா தவ்ஹித் ஜமாஅத் பெரியகுளம் தொகுதி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: கீழை அரூஸி.

Tuesday, 16 August 2016

சிறுபான்மை இன பள்ளி மாணவ-மாணவியர்கள் அரசின் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


சிறுபான்மை இன பள்ளி மாணவ-மாணவியர்கள் அரசின் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை அறிவிப்பு. (தினதந்தி 24.07.2016)
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2016
இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய முகவரி : www.scholarships.gov.in

ஹாஜிகள் மார்க்கம் தடுத்துள்ள வீணான காரியங்களை தவிற்த்து ஹஜ் கடமையை மனநிறைவோடு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்து வேண்டும்ஹாஜிகளுக்கு மன்னர் சல்மான் வேண்டுகோள்


ஹாஜிகள் மார்க்கம் தடுத்துள்ள வீணான காரியங்களை தவிற்த்து ஹஜ் கடமையை மனநிறைவோடு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்து வேண்டும்
ஹாஜிகளுக்கு மன்னர் சல்மான் வேண்டுகோள்.
சுவனத்தை அடைவதற்கு உரிய சிறந்த அமல்களில் ஹஜ் தனித்துவம் வாய்ந்ததாகும்
ஹஜ் கடமையை நிறைவு செய்ய வரும் இறைவனின் விருந்தாளிகள் மார்க்கம் வெறுத்துள்ள தடை செய்துள்ள  எந்த செயல்களிலும் கவனம் செலுத்தாமல்
தங்களது அமல்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சவுதி மன்னர் சல்மான் ஹாஜிகளுக்கு அன்பான் வேண்டு கோள் வைத்துள்ளார்
ஹாஜிகளுக்கு எந்த அளவிற்கு எங்களால் சிறப்பான சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பான சேவையை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

19 வயது இஸ்லாமிய சகோதிரியை உலகின் சிறந்த சமூக சேவகராக ஐநா சபை அறிவித்தது.


19 வயது இஸ்லாமிய சகோதிரியை உலகின் சிறந்த சமூக சேவகராக
ஐநா சபை அறிவித்தது
படத்தில்  நீங்கள் பார்க்கும் சகோதிரி சவுதி அரேபியாவை சார்ந்தவர் 19 வயதை நிரம்ப பெற்றவர் அவரது பெயர் ருஸான் பர்ஹான்
சிறுவயதிலேயே சிறப்பான முறையில் சமூக சேலையாற்றியதற்காக அவரை சிறந்த சமூக சேவகராக
ஐநா சபை அறிவித்து அவருக்கு பரிசுகளையும் பாராட்டு பத்திரங்களையும் வழங்கி மரியாதை செய்ததோடு
அவரை ஐநா சபையின் நல்லெண்ண பிரதிநிதியாகவும் அறிவித்துள்ளது
அண்மையில் சவுதி அரேபியா அறிவித்த கனவு 2030 என்ற திட்டத்தை சுற்றி விரிவான சமூக பணி அவர் ஆற்றிவருதாலும் அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்க பட்டார் என ஜநா சபையின் செய்தி குறிப்பில் கூறபட்டிருக்கிறது

ஹிஜாப் அணிந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் அமெரிக்கப் பெண்:இப்திஹாஜ் முஹம்மத்!


ஹிஜாப் பெண்களை முடக்குகிறது என்ற கோஷங்களை தனது கத்திச் சண்டையால் கிழித்தெறிந்துள்ளார் இப்திஹாஜ் முஹம்மது.
அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணான இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் கத்திச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
2008 பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான கத்திச் சண்டை போட்டியில் அமெரிக்கா பதக்கம் வென்றுள்ளது.
தனது வெற்றி குறித்து இப்த்ஹாஜ் கருத்து தெரிவிக்கையில், “இன்று மக்களில் பலர் முஸ்லிம் பெண்கள் குரலற்றவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டும் முஸ்லிம் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் நினைத்துக் கொண்டுள்ளனர். இத்தகைய எண்ணங்களை நான் அகற்ற விரும்பினேன்” என்று கூறியுள்ளார்.

துபாயில் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ள விசா நடைமுறைகள் அறிவிப்பு !


துபாய், ஆகஸ்ட் 16
துபாயில் இனி புதிய விசா, ரெஸிடென்ஸி விசா புதுப்பித்தால், விசா ரத்து செய்தல் மற்றும் இது தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் இனி General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) அலுவலகம் செல்லாமலேயே அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு மையங்களிலேயே (Typing Centers) விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
"UAE Vision" என்ற தூரநோக்குத் திட்டத்தின் கீழ் இத்தகைய இலகு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சரியான மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் வசிப்பிட முகவரிகளை எத்தகைய தவறும் இன்றி அளிக்க வேண்டும்.
விசிட் விசா விண்ணப்பதாரர்களுக்கு ஈமெயில் மூலம் ஈ-விசாவாக (e-visa) அனுப்பப்படும், இனி விசிட்டிற்கு பேப்பர் வடிவ விசா கிடையாது. ரெஸிடென்ட் விசாக்கள் மட்டும் 'Zajel' கூரியர் வழியாக அனுப்பித் தரப்படும்.
விசா நடைமுறைகள் அனைத்தையும் ஓரிடத்திலேயே முடித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டாலும் ஸ்டாம்பிங் செய்யப்பட்ட பாஸ்போர்ட்களை பெற மட்டும் GDRFA அலுவலகத்திற்கு ஒருமுறை நேரில் செல்ல வேண்டும்.
அதுபோல் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் விசா விண்ணப்பம் அனைத்தும் இமிக்கிரேசன் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது குறித்து (Final Step) விண்ணப்பதாரருக்கு "SMS" மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த ஒரு மாதமாக பரீட்ச்சார்த்த முறையில் இருந்த இந்த திட்டம் தற்போது துபாயில் மட்டும் அமுலுக்கு வந்துள்ளது ஏனைய அமீரக பகுதிகள் குறித்து தகவல் இல்லை.
Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்:

சவூதி அரபியாவில் இனி விபத்துக்களை படமெடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை !


சவூதி அரேபியா ஆகஸ்ட் 16
துபாயில் விபத்துக்களை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் குறைந்தபட்சம் 3 மாதத்திலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சவூதியிலும் அதைவிட கடும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சவூதியில் நடைபெறும் சாலை விபத்துக்கள், கடல், காற்று, நெருப்பு மற்றும் இதர வகை விபத்துக்கள் அனைத்தையும் படமெடுத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தனிமனித அந்தரங்க பாதுகாப்பு சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப குற்றவியல் சட்டப்படியும் விதிக்கப்படும் என சவூதியில் இருந்து வெளிவரும் 'SADA' என்ற அரபி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
Source: Emirates 247
தமிழில்:அதிரை நியூஸ்:

Monday, 15 August 2016

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1500 இந்தியர்கள்!


சவுதி அரேபியாவிற்கு தொழிலாளர்களாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்பட 1500 இந்தியர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு ஒன்றரை மாதங்களாக தவித்து வருகின்றனர்.
சவுதி நாட்டில் வேலை பார்த்துவந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்பட 1500 இந்தியர்களுக்கும் அவர்களுக்கு வேலை அளித்த பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே ஊதியம் வழங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அந்த நிறுவனங்கள் அளித்த புகாரின்பேரில் அங்குள்ள சிறைகளில் அவர்கள் அனைவரும் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தனியார் ஏஜெண்ட் மூலம் அந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சவுதிக்கு வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. 
கடந்த 2004-ஆம் ஆண்டு அங்கு வேலைக்குச் சென்ற அவர்கள் தற்போது வரை இந்தியா திரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்தத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், முன்னதாக தங்களிடம் கூறிய வேலையை அளிக்காமல் தங்களுக்குப் பிடிக்காத வேலையைச் செய்ய தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 
தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுடையே தொலைபேசிப் பேட்டியை இப்போது பார்ப்போம்.

Sunday, 14 August 2016

சுதந்திர தினம் முதல் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். அதிரடி!


  சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ம் தேதி முதல், தனது வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவசம் என்று பி.எஸ்.என்.எல். அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய அரசுக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் ( பி.எஸ்.என்.எல் ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " ஏற்கனவே, லேண்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன்கருதி, சுதந்திர தினமான வருகின்ற 15-ம் தேதியில் இருந்து, பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.
மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக, ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதி வரை புதிய லேண்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும்" என கூறப்பட்டு உள்ளது.

துபாய் மற்றும் அமீரகத்தில் டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிப்பது எப்படி:

துபாய்:

      10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் அமீரக ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமீரகத்தில் செயல்படும் எந்த போக்குவரத்து அலுவலகத்திலோ (Traffic Dept) அல்லது துபையில் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (RTA) அலுவலகத்திலோ சுமார் 1 மணிநேரத்திற்குள் எளிதாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை:
1. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஓட்டுனர் உரிமம் வழங்கும் பிரிவில் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
2. அங்கீகரிக்கப்பட்ட கண் மருத்துவர் (Ophthalmologist) அல்லது கண்ணாடி விற்பனையகத்தில் (Optician) கண் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை பெற வேண்டும்.
3. உங்களுடைய செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல் ஒன்றும் அதனுடன் உறைவிட விசா நகலும் இணைக்கப்பட வேண்டும். (Valid PP with valid residence visa)
4. உங்களுடைய காலாவதியான அசல் ஒட்டுனர் உரிமத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
5. அதனுடன் எமிரேட்ஸ் ஐடி நகல் இணைக்கப்படுவதுடன் அசல் எமிரேட்ஸ் ஐடியையும் சரிபார்ப்பிற்காக எடுத்துச் செல்ல வேண்டும்.
6. சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இணைக்கப்பட வேண்டும்.
7. நீங்கள் கன ரக வாகனங்களை (Heavy Vehicles) / இயந்திரங்களை (Heavy Mechanical Equipment) இயக்குபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தின் தடையில்லா கடிதம் (NOC) ஒன்றையும் இணைக்க வேண்டும்.
8. இவை அனைத்தையும் சமர்ப்பிக்கும் முன்பாக எத்தகைய போக்குவரத்து தொடர்புடைய அபராதங்களும் நிலுவையில் இல்லாமல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
9. ஓட்டுனர் உரிமத்தை புதிப்பிக்க கட்டணம் 110 திர்ஹம்.
10. மேற்படி ஆவணங்கள் அனைத்தும் சரியாகவும், அபராதங்களும் செலுத்தப்பட்டிருப்பின் 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்ட ஒட்டுனர் உரிமம் உங்களுக்கு கிடைக்கும்.
11. விண்ணப்பதாரர் அனைவரும் மேற்படி ஆவணங்களுடன் நேரில் செல்ல வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
12. ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அவசியம் கண் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை இணைக்க வேண்டும்.
Source: 7 Days

இந்த அசாதாரண அறிகுறிகள் உடலில் இரத்தம் குறைவாக உள்ளதை தான் சொல்கிறது!


உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். அந்த அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் தீவிர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் வரும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து வந்தால், அதன் தீவிரமடைவதைத் தடுக்கலாம்.
இங்கு ஒருவரது உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் தோல் வெளுத்து போய், சற்று வீக்கத்துடன் காணப்பட்டால், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
உங்கள் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால், இதயத்தில் மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால், இதயம் சற்று கடினமாகவும் அதிகமாகவும் வேலை செய்ய வேண்டியிருந்து, அதனாலும் நெஞ்சு வலியை உணரக்கூடும்.
வயிற்று அல்சரால் அவஸ்தைப்பட்டு வந்தால், அப்போது உடலினுள் அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
நீங்கள் அடிக்கடி படபடப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இரத்தம் குறைவாக இருப்பதால், இதயத்திற்கு போதிய இரத்தம் கிடைக்காமல் அழுத்தத்திற்குட்பட்டு, அடிக்கடி படபடப்பை உண்டாக்குகிறது.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறைவாக இருந்தால், உங்கள் உடலில் இரத்தம் மிகவும் குறைவாக உள்ளது என்றும், உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம்.
நகம் உடைதல் என்பது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். அதில் இரத்த சோகைக்கும் ஒன்று. எனவே உங்கள் நகம் அடிக்கடி எளிதில் உடைந்து கொண்டே இருந்தால், இரத்த சோகை உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்தில் இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

Friday, 12 August 2016

இதய நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?


*  ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும். இதனால் இதயப் பிரச்னைகளை வருவதற்கு முன்பே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுத்துவிடலாம். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது.
*  புகையிலையில் உள்ள ரசாயனங்கள் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ரத்தக்குழாய்கள் குறுகலாகி, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, புகைப்பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
*  சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், உடற்பருமன் ஆகியவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. அதனால் மருத்துவ ஆலோசனையோடு  இவற்றைக் கட்டுப்படுத்துவதும், தொடர் சிகிச்சை பெறுவதும் முக்கியம்.
*  ஒருவர் தன் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக் கிறாரா என்பதைக் கண்டறியும் பிஎம்ஐ (BMI – Body Mass Index) அளவானது 25-க்கு அதிகமாக இருந்து, மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே, `பிஎம்ஐ' சரியான அளவில் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியம்.
*  தினமும் 30 - 45 நிமிடங்கள் உடற்பயிற்சி தேவை. ஜிம் சென்று வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்பது இல்லை. குழந்தைகளுடன் விளையாடுவது தொடங்கி வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் என உடலுக்கு இயக்கங்கள் கொடுக்கலாம். நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவை இதயத்தை பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
*  ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இல்லாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு அதுவே வாசலாக அமையும்.
*  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகத்தைத் தாமதப்படுத்து வதோடு கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு நாளைக்கு 25 - 35 கிராம் நார்ச்சத்து ஒருவருக்குத் தேவைப்படும்.
*  உணவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அளவைக் குறைக்கவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சில மீன் வகைகள் இதயத்தைப் பாதுகாக்கும். பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
*  வயிற்றைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு, இதயத்துக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இதய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். எனவே, தொப்பையைக் கரைக்கும் பயிற்சி களைச் செய்து, வயிற்றுப்பகுதியை ஃபிட்டாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
``மொத்தத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தொடர் உடற்பரிசோதனைகள், இடைவிடாத சிகிச்சை போன்றவை இதயம் காக்கும் கவசங்கள்’’

சளி, இருமலை விரட்டும் தூதுவளை கூட்டு எப்படி செய்யணும் தெரியுமா?


   தேவையானவை: தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய்த் துருவல், தோல் சீவிய இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். தூதுவளைக்கீரையை ஆய்ந்து, முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வேகவிடவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து, எல்லாம் ஒன்றாக கலந்து கொதி வந்ததும் இறக்கவும்.
இந்த தூதுவளை கூட்டை அவ்வபோது சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் நம்மை விட்டு ஓடியேவிடும்
 

உணவு உண்பதற்கு முன் இந்த டீயை ஒரு கப் குடித்தால், உடலில் உள்ள புழுக்களை முற்றிலும் வெளியேற்றலாம்!


ஒட்டுண்ணிகள் மற்ற உயிரினங்களின் உடலில் புகுந்து உயிர் வாழும். இது மனிதர்களை மட்டுமின்றி மிருகங்களின் உடலினுள்ளும் வாழும். ஒருவரது உடலில் ஒட்டுண்ணிப் புழுக்கள் அதிகம் இருந்தால், அதனால் பல கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அமெரிக்காவில் நிறைய பேர் பல்வேறு வகையான ஒட்டுண்ணிப் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அந்த புழுக்கள் ஒருவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கர தொற்றுக்களை உண்டாக்கி அவஸ்தைப்படச் செய்யும்.
* உடலில் அரிப்புக்களுடன் காய்ச்சல்
* வீக்கம்
* வாந்தி
* அசாதாரண அல்லது தீவிர தலைவலி
* வேகமான இதய துடிப்பு
* மங்கலான பார்வை
* மூச்சு விடுவதில் சிரமம்
* ஒரு வாரத்திற்கும் மேலான இருமல்
உடலில் ஒட்டுண்ணி தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், ஒரு சக்தி வாய்ந்த மருத்துகுணம் கொண்ட டீயை தயாரித்து குடித்து வாருங்கள். இதனால் புழுக்கள் அழிக்கப்பட்டு, உடல் சுத்தமாகும்.
பூண்டு - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டினால், டீ ரெடி!
இந்த டீயை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் உடலில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்கள் அழித்து வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.

கூகுள் மேப்ஸ் தெரியும், அதுல இதெல்லாம் செய்ய முடியும்னு தெரியுமா?


புதிய ஊர்களுக்குச் செல்லும் போது வழி தெரியாமல் எங்குச் சிக்கி கொண்டாலும், சாமர்த்தியமாகக் கண்டுபிடிக்க உதவும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கின்றது. இந்த ஆப் இண்டர்நெட் மற்றும் தான் சேகரித்த தகவல்களின் உதிவியுடன் நமக்கு உதவுகின்றது.
கூகுள் மேப்ஸ் செயலியில் பயனுள்ள பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் பலரும் அறிந்திராத சில முக்கிய அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..
நீங்கள் பயணிக்கும் சாலையில் நீங்கள் அதிகபட்ச வேகத்தினை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வெலோகிராப்டர் - மேப் ஸ்பீடு லிமிட் (Velociraptor - Map Speed Limit) என்ற செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும்.
சில காலமாக கோரப்பட்டு வந்த இந்த அம்சம் ஒரு வழியாகக் கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் வழங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம் புறப்படும் போதே குறிப்பிட்ட இடம் ஒன்றை நிறுத்தமாக செட் செய்து கொள்ள முடியும். மேலும் வழியில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் இடம் மற்றும் அவற்றில் விலைப் பட்டியல் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய காம்பஸ் ஐகானை இரு முறை அழுத்தினால் போதும். நீங்கள் திரும்பும் திசைகளைத் துல்லியமாக வழங்கும்.
நீங்கள் ஏற்கனவே சென்ற இடத்தினை மை பிளேசஸ் அம்சத்தில் பதிவு செய்ய முடியும். லேபிள் எனும் புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் இல்லாத நீங்கள் நண்பருடன் பயணிக்கும் குறுக்கு வழிகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
கூகுள் மேப்ஸ் செயலியை கணினி மூலம் வழி தேடி அதே முகவரியை மொபைல் போனிலும் பெறக் கணினியில் தெரியும் சென்டு டூ போன் அம்சத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்குக் கணினி மற்றும் மொபைல் போனிலும் ஒரே கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும்பயணிகளுக்கு எச்சரிக்கை! திருச்சி ஏர்போர்டில் சூட்கேஸ் வைத்திருந்த விலை உயர்ந்த மொபைல் மாயம்!



திருச்சி: விமானத்தில் வந்து தவறிய சூட்கேஸ் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து 4 செல்போன்கள் மாயமானது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் கேட்டபோது ஏர்போர்ட் அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால் கூச்சல் குழப்பம் உருவாகி பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அய்யனார்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (25). இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் வேலைக்காக சிங்கப்பூர் சென்றார். 
பின்னர் கடந்த 8ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். சிங்கப்பூரில் இருந்து வந்த மலிண்டோ விமானம் மலேசியா சென்று அதன்பின்னர் திருச்சி வந்தது. திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய பின்னர், பயணிகளின் சூட்கேஸ்கள் மற்றும் லக்கேஜ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தது. அதில் வந்த பொருட்களை கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்கள் எடுத்து சென்றனர். இதில் வெகு நேரமாக ரிஸ்வான் சூட்கேசுக்காக நின்று கொண்டிருந்தார். ஆனாலும், அனைத்து பயணிகளின் பொருட்கள் வந்து எடுத்து சென்ற பின்னர் ரிஸ்வான் சூட்கேஸ் வரவில்லை. 
இதுகுறித்து விமான நிலையத்தில் மலிண்டோ நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, மலேசியா சென்று திருச்சி வந்ததால் சூட்கேஸ் மிஸ்ஸாகி இருக்கலாம், நீங்கள் ஊருக்கு செல்லுங்கள் உங்களுடைய சூட்கேஸ் அங்கிருந்து பெறப்பட்டு மறுநாள் விமானத்தில் கொண்டு வந்து டோர்டெலிவரி செய்யப்படும் என கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதுபோல் நேற்று காரைக்குடியில் இவரது வீட்டிற்கு வந்த தனியார் கூரியர் ஊழியர்கள் ரிஸ்வான் சூட்கேஸ்சை ஒப்படைத்து சென்றனர். 
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் சூட்கேஸ்சை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த விலை உயர்ந்த 4 செல்போன்கள் மாயமாகி இருந்தது கண்டு ரிஸ்வான் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்த குடும்பத்தினர், இங்குள்ள மலிண்டோ விமான அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு எதுவும் தெரியாது, இதுகுறித்து புகார் அளிக்க விரும்பினால் மலேசியா அல்லது சிங்கப்பூரில் தான் கொடுக்க வேண்டும் என்றனர். 
இதற்கிடையில் இதேபோல் கீரனூரை சேர்ந்த ஒருவர் தன்னுடைய சூட்கேஸ்சிலும் இதுபோல் விலை உயர்ந்த செல்போனை காணவில்லை என கூறி புகார் அளித்தார். விமான நிறுவன அலுவலக ஊழியர்கள் சரியாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்தவர்கள் டிக்கெட் வழங்கும் அலுவலக கண்ணாடி அருகே சூட்கேஸ்களை வைத்து மறைத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. தகவலறிந்த ஏர்போர்ட் போலீசார் அங்கு சென்று சமாதானம் பேசி புகார் அளிக்குமாறு கூறினர். இதையடுத்து இருதரப்பினரும் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். 
எனவே வளைகுடா மற்றும் வெளிநாடுகளில் வரும் பயணிகள் சூட்கேஸ்ல் மொபைல் வைப்பதை தவிர்க்கவும்.

துபாய் மற்றும் அமீரகத்தில் கவனமாக தவிர்க்க வேண்டிய 14 அம்சங்கள்:

துபாய்:

       அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருபவர்கள் அல்லது ரெஸிடன்ட் விசாவில் தங்கி இருப்பவர்கள் மிகக்கவனமாக சில விஷயங்களை தவிர்ந்து கொள்ளாவிட்டால் அது சிறை தண்டனையிலோ அல்லது அபராத விதிப்பிலோ கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் இதில் பல விஷயங்கள் சில நாடுகளில் மிகச்சாதாரணமாக நடைபெறும் செயல்கள், சர்வ சாதாரணமாக அவர்கள் தங்களின் நாடுகளில் கடைபிடித்து வருபவை அமீரகத்தில் குற்றங்களாக கருதப்படுகின்றன என்பதை நினைவில் அழுத்தமாக நிறுத்த வேண்டும். அதில் முக்கியமான 14 அம்சங்களை சற்று பார்ப்போம்.
1. முத்தமிடுதல் / தொடுதல்:
யாரையும் முத்தமிடவோ அல்லது கட்டித் தழுவுதலோ கூடாது. அதிகபட்சம் கை கொடுக்கலாம். அதுவே, திருமணமானவர்களாக இருந்தால் பொதுவெளியில் முகமன் கூறுவதுடன் நிறுத்திக் கொண்டு கை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
2. திட்டுதல் / அசிங்கமாக சைகை செய்தல்:
கை விரல்கள், நாக்குகளை கொண்டு அசிங்கமாக சைகை செய்தல், தெருவில் ஆத்திரப்பட்டு கத்தி பேசுதல் ஆகியவை போலீஸ் நடவடிக்கைக்கு உட்பட்டது.
3. அனுமதி இன்றி போட்டோ எடுத்தல்:
அனுமதியின்றி எந்த மனிதரையும் குறிப்பாக பெண்களை அல்லது குடும்பத்தினர்களை போட்டோ எடுப்பது சட்டப்படி தண்டம் கட்ட வேண்டிய தண்டனை.
4. மத நிபந்தனை:
வெளிநாட்டினர் அவர்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனுமதிக்கப்படுவர் ஆனால் அந்த அனுமதியை இஸ்லாத்தையோ அல்லது பிறர் மதத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் சிறை அறை வரவேற்கும்.
5. அரசியல் சச்சரவுகள்:
அரசியல் சச்சரவுகளை பதிவேற்றினாலோ அல்லது பொது வெளியில் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ நாடு கடத்தப்படுவது நிச்சயம்.
6. தங்குமிடங்களை அந்நியருடன் பகிர்ந்து கொள்ளுதல்:
திருமணமான தம்பதியர் அல்லது உறவினர்களை தவிர மற்ற அந்நிய ஆணும் பெண்ணும் தனது தங்குமிடத்தை, ஹோட்டல் அறையை அல்லது காரில் தங்கினால் அதற்குப் பிறகு தங்கும் இடமே வேறு தான்.
7. ஆபாச ஆடைக்கு தடை:
ஆபாச ஆடை அணிந்து தெருக்களில், மால்களில், உணவகங்களில் மற்றும் பொது வெளிகளில் நடமாடக்கூடாது. கடற்கரையில் மட்டும் நீச்சலுடை அணியலாம் என்றாலும் சூரிய குளியலுக்காக அந்தரங்கப் பகுதிகளை வெளியே தெரியும்படி அரைகுறை ஆடை அணியக்கூடாது.
8. மதுபானம்:
துபையில் இது ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பொது வெளியிலோ அல்லது தங்குமிடத்திலோ அல்லது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கோ அனுமதி இல்லை.
9. ஒட்டுனர் கட்டுப்பாடு:
பிற வாகனங்களை நெருக்கமாக பின் தொடர்தல், ரேஸ் விடுதல், அதிவேகம், லேன் மாறி மாறிச் செல்லுதல் என நீங்கள் எல்லை மீறும் போதெல்லாம் உங்களுடைய வாகனம் உட்பட ஜெயிலுக்குள் செல்ல வேண்டி வரும்.
10. போதை வஸ்த்துக்கள்;
போதைப் பொருட்கள் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளன அது உங்களுடைய நாட்டில் அனுமதிக்கப்பட்ட மருந்து வடிவில் இருந்தால் கூட.
11. பாலியல் துன்புறுத்தல்கள்:
பெண்களுடன் (குறிப்பாக அமீரக பெண்களுடன்) பொது இடங்களில் தனித்து பேசுவது, அவர்களுடைய அனுமதியின்றி போட்டோ எடுப்பது மற்றும் பின் தொடர்ந்து சென்று தொல்லை தருவது போன்ற பாலியல் தொந்தரவு குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் நெற்றிக்கண் திறக்கும் வரை பொறுமையாக காத்திருக்காது.
12. முறையற்ற தொடர்புகள்:
முறையற்ற தொடர்புகள் மூலம் கர்ப்பமானால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் தண்டனை உண்டு மேலும் அவர்களுடைய திருமணம் விண்ணப்பம் மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்றவை நிராகரிக்கப்படும்.
13. புகை பிடித்தல்:
அரசு அலுவலகங்கள், மால்கள் மற்றும் பொது இடங்களில் புகைப் பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. புகைப் பிடிப்போர் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே புகைக்கலாம்.
14. ஆவணங்கள் இல்லாமல் வேலை பார்ப்பது:
முறையான அனுமதியின்றி அமீரகத்தில் வேலை பார்ப்பது சட்டப்படி குற்றம், மீறினால் "உள்ளே" இருந்த பிறகு ஊருக்குத் தான் போகலாம்.
(குறிப்பு: பல விஷயங்கள் சுய தணிக்கைக்கு உட்பட்டே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன)
Source: Scoop Empire / Msn

*ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்*


    வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.
அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
link👇🏻

Thursday, 11 August 2016

துபாய் எமிரேட்ஸ் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 7 ஆயிரம் டாலர் உதவித்தொகை :

துபாய்:

துபாய் எமிரேட்ஸ் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 7 ஆயிரம் டாலர் உதவித்தொகை :
   திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற
கடந்த வாரம் விபத்து ஏற்பட்ட எமிரேட்ஸ் விமான பயணிகள் பலருக்கும் அவர்களின் கேபின் பேக்கேஜ் மற்றும் லக்கேஜூகளும் எரிந்துவிட்டதை கருத்திற்கொண்டு, அவர்களின் இழப்பில் பங்கெடுக்கும் வகையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் 7 ஆயிரம் டாலர்களை வழங்கத் துவங்கியுள்ளது.
    இதற்கிடையில், விமான விபத்து குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் காற்றுப் பெயர்ச்சியின் (Wind Shear) காரணமாக விமானம் தீ பற்றியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News

சவுதியில் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து முதல் இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது:

சவுதி: 

சவுதியில் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து முதல் இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது:
    சவுதியில் ஜித்தா விமானம் நிலையில்  இருந்து இந்திய தொழிலாளர் குழு இந்திய திரும்பியது. மாலை 6 மணிக்கு மும்பை சர்வதேச  விமான நிலையம் வந்தடைவார்கள்.
    அங்கிருந்த தங்களுடைய ஊர்களுக்கு செல்லும் நடவடிக்கையை இந்திய அரசு அதிகாரிகள் செய்வார்கள்.
  இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் சவுதி அதிகாரிகள் இனிப்புகளை வழங்கி வழி அனுப்பினார்.

துபாய் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்தி:


துபாய் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்தி:
நமது மக்கள்  ஆர்வக் கோளறுகள் பல பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது நிதர்சனம் அதுவும் இன்றைய சமூக வலைத்தளங்கள் திறந்துவிடப்பட்ட பின் 'பகிர்கிறேன்' பேர்வழி என எதையும் யோசிக்காமல் அனைத்தையும் பகிர்ந்து வருகிறோம் ஆனால் இங்கே தான் நிற்கின்றது அமீரக சட்டம் என்பதையும் மறந்து விடுகின்றோம்.
    அமீரகத்தில் நடைபெறும் விபத்துக்களை படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தால் தண்டனை நிச்சயம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது அமீரகம்,
    இது சமீபத்தில் நடந்த விமான விபத்தை ஒட்டிய 'பகிர்தல்கள்' எல்லை கடந்து சென்றதால், அமீரக சட்டம் தன் கடமையை செய்யும் என நினைவூட்டியுள்ளனர். விழித்துக் கொள்வோர் பிழைத்துக் கொள்வர்.
Source: The New Arab

ஒலிம்பிக்கில் கத்தார் நாட்டின் வித்தியாசமான அணுகுமுறை:

கத்தார்

    ஒலிம்பிக் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்பதற்காக 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்களை கத்தார் நாடு அனுப்பியுள்ளது.
     எண்ணெய் வளமிக்க கத்தாரில் பெரும்பாலான வெளிநாட்டினரே வசித்துவருகின்றனர். மேலும், வர்த்தக நடவடிக்கைகளையே அதிகம் நம்பியிருக்கும் அந்த வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.
    ஆனால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுத் திருவிழாவில், தங்கள் நாட்டை முன்னிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், மற்ற நாடுகளின் வீரர்களின்பால் கத்தாரின் கவனம் திரும்பியுள்ளது.
    இதற்காக மற்றநாடுகளில் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்துள்ள வீரர்களை தங்கள் நாட்டின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும்படியான ஏற்பாடுகளை கத்தார் செய்துள்ளது.
     அதன்படி, உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 17 நாடுகளின் வீரர்களை அந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது. சூடானில் இருந்து தடகள வீரர்கள், ஜேர்மனியில் இருந்து குத்துச் சண்டை வீரர்கள், பிரேசிலில் இருந்து பீச் வாலிபால் வீரர்கள் மற்றும் சீனாவில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் உள்ளிட்டோர் நடப்பு ரியோ ஒலிம்பிக் போட்டியில் கத்தார் சார்பில் பங்கேற்கின்றனர்.

Wednesday, 10 August 2016

கைபேசி (செல்போன்) பற்றிய தகவல்கள் .


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
‪#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet.

Tuesday, 9 August 2016

ரியோ 2016 ஒலிம்பிக் : ஹிஜாப் எனது மார்க்கம் போதித்த உடை..


ஹிஜாப் எனது மார்க்கம் போதித்த உடை..
ஹிஜாப் எனது வாழ்க்கைக்கு தகுந்த உடை...
உடலை மறைக்கத்தான் ஹிஜாபே தவிர திறமைகளை அல்ல என நிருபிக்கும் இஸ்லாமிய வீராங்கணைகள்...

வேலைவாய்ப்பு செய்திகள்.

வேலைவாய்ப்பு செய்திகள்.

1)  *Company Name :* Bharat Electronics Limited (BEL) *Job Location:* Chennai *Qualification:* SSLC/Diploma *Salary:*  25,500/- *Link:* http://goo.gl/hdV2eu ---------------------------

 2) *Company Name :* Tiruchirappalli District Court *Job Location:* Tiruchirapalli *Qualification:* 10th/12h/Degree *Salary:*  20200/- *Link:* http://goo.gl/cv7Ml2 ----------------------------- 

3) *Company Name :* Singapore Jobs *Job Location:* Singapore *Qualification:* supermarket field *Salary:*  650$ + OT *Link:* http://goo.gl/yfSr3o -----------------------------

  4) *Company Name :* Ariyalur District Court *Job Location:* Ariyalur *Qualification:* 10th/12th/Degree *Salary:*  20200/- *Link:* http://goo.gl/LkVGyn -----------------------------

 5) *Company Name :*  Indian Army *Job Location:* All Over India *Qualification:* BDS/MDS *Link:* http://goo.gl/XTN08O -------------------------------

6) *Company Name :* Sashastra Seema Bal (SSB) *Job Location:* All Over India *Salary:*  20200/- *Link:* http://goo.gl/nqF829 ------------------------------

 7) *Company Name :* Aavin *Job Location:* Chennai *Qualification:* 8th/10th/ITI *Salary:*  20,200/- *Link:* http://goo.gl/cv0Enb -------------------------------

 8) *Company Name :* Bharat Petroleum Corporation Limited *Job Location:* Kerala, Kochi *Qualification:* Diploma *Link:* http://goo.gl/grczZi -------------------------------

 9) *Company Name :* State Institute Of Hotel Management and Catering Technology, (SIHMCT) *Job Location:* Trichy *Qualification:* 10th/12th/Degree *Salary:*  34800/- *Link:* http://goo.gl/FJxuFu ------------------------------ 

10) *Company Name :* Border Security Force (BSF) *Job Location:* All over India *Qualification:* 12th/Diploma/Degree *Salary:*  22800/- *Link:* http://goo.gl/o0nT2l -----------------------------------

11) *Company Name :* TNPL *Job Location:* Trichy *Qualification:* 10th/12th/Degree *Link:* http://goo.gl/xiOvPY -----------------------------

 12) *Company Name :* Indian Air Force (IAF) *Job Location:* All over India *Qualification:* 10th/12th/Bachelor Degree *Salary:*  22600/- *Link:* http://goo.gl/WauYEq --------------------------

 13) *Company Name :* Namakkal District Court *Job Location:* Namakkal *Qualification:* 10th *Salary:*  13000/- *Link:* http://goo.gl/7DtZXg -----------------------------

14) *Company Name :* Neyveli Lignite Corporation Limited *Job Location:* Neyveli *Qualification:* Degree *Salary:*  10,000/- *Link:* http://goo.gl/OhL4tt ----------------------------

15) *Company Name :* Rail India Technical and Economic Service *Job Location:* All Over India *Qualification:* B.E/B.Tech *Salary:*  20,200 to 50,000/- *Link:* http://goo.gl/OmLX6u ---------------------------

16) *Company Name :* ICFRE *Job Location:* Coimbatore *Qualification:* SSLC/Degree *Salary:*  36,000/- *Link:* http://goo.gl/VraJYH -------------------------

 17) *Company Name :* Forest Research Institute *Job Location:* Dehradun, Uttarakhand *Qualification:* Degree *Salary:*  16,000/- *Link:* http://goo.gl/wvVGjV -----------------------------

 18) *Company Name :* Oil India Limited *Job Location:* Uttar Pradesh *Qualification:* Diploma *Salary:*  34,000/- *Link:* http://goo.gl/fahTBI *இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்*

வேளை வாய்ப்பு தகவல் குரூப் 4 தேர்வு அறிவிப்பு .


குரூப் 4 தேர்வு  அறிவிப்பு .
காலியிடங்கள் - 5451
இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
வரி தண்டலர் - 8
நில அளவர் - 532
வரைவாளர் - 327
தட்டச்சர் - 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள் - நவம்பர் 6
மேலும் விபரங்கள்
www.tnpsc.gov.in