தேவையானவை: தூதுவளைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பச்சைப் பயறு - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய்த் துருவல், தோல் சீவிய இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். தூதுவளைக்கீரையை ஆய்ந்து, முளைகட்டிய பச்சைப் பயறுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வேகவிடவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து, எல்லாம் ஒன்றாக கலந்து கொதி வந்ததும் இறக்கவும்.
இந்த தூதுவளை கூட்டை அவ்வபோது சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் நம்மை விட்டு ஓடியேவிடும்

No comments:
Post a Comment