* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும். இதனால் இதயப் பிரச்னைகளை வருவதற்கு முன்பே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுத்துவிடலாம். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது.
* புகையிலையில் உள்ள ரசாயனங்கள் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ரத்தக்குழாய்கள் குறுகலாகி, மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, புகைப்பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
* சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், உடற்பருமன் ஆகியவை இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. அதனால் மருத்துவ ஆலோசனையோடு இவற்றைக் கட்டுப்படுத்துவதும், தொடர் சிகிச்சை பெறுவதும் முக்கியம்.
* ஒருவர் தன் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக் கிறாரா என்பதைக் கண்டறியும் பிஎம்ஐ (BMI – Body Mass Index) அளவானது 25-க்கு அதிகமாக இருந்து, மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே, `பிஎம்ஐ' சரியான அளவில் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியம்.
* தினமும் 30 - 45 நிமிடங்கள் உடற்பயிற்சி தேவை. ஜிம் சென்று வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்பது இல்லை. குழந்தைகளுடன் விளையாடுவது தொடங்கி வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் என உடலுக்கு இயக்கங்கள் கொடுக்கலாம். நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவை இதயத்தை பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இல்லாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு அதுவே வாசலாக அமையும்.
* நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகத்தைத் தாமதப்படுத்து வதோடு கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு நாளைக்கு 25 - 35 கிராம் நார்ச்சத்து ஒருவருக்குத் தேவைப்படும்.
* உணவில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை அளவைக் குறைக்கவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சில மீன் வகைகள் இதயத்தைப் பாதுகாக்கும். பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
* வயிற்றைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பு, இதயத்துக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இதய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். எனவே, தொப்பையைக் கரைக்கும் பயிற்சி களைச் செய்து, வயிற்றுப்பகுதியை ஃபிட்டாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
``மொத்தத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தொடர் உடற்பரிசோதனைகள், இடைவிடாத சிகிச்சை போன்றவை இதயம் காக்கும் கவசங்கள்’’

No comments:
Post a Comment