சவுதி அரேபியாவிற்கு தொழிலாளர்களாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்பட 1500 இந்தியர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு ஒன்றரை மாதங்களாக தவித்து வருகின்றனர்.
சவுதி நாட்டில் வேலை பார்த்துவந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்பட 1500 இந்தியர்களுக்கும் அவர்களுக்கு வேலை அளித்த பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே ஊதியம் வழங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அந்த நிறுவனங்கள் அளித்த புகாரின்பேரில் அங்குள்ள சிறைகளில் அவர்கள் அனைவரும் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தனியார் ஏஜெண்ட் மூலம் அந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சவுதிக்கு வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2004-ஆம் ஆண்டு அங்கு வேலைக்குச் சென்ற அவர்கள் தற்போது வரை இந்தியா திரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்தத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், முன்னதாக தங்களிடம் கூறிய வேலையை அளிக்காமல் தங்களுக்குப் பிடிக்காத வேலையைச் செய்ய தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுடையே தொலைபேசிப் பேட்டியை இப்போது பார்ப்போம்.

No comments:
Post a Comment