Wednesday, 31 August 2016

இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி

மும்பை: 
                
                   இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்குவது பற்றி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆராய்ந்து வருகிறது. வட்டிக்கு வாங்குவதும் கொடுப்பதும் பாவச்செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.  இதற்கு மதிப்பளித்து, இவர்களுக்கான வட்டியில்லா வங்கி தொடங்கப்பட வேண்டியது குறித்து ரிசர்வ் வங்கி தனது 2015-16 ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது.  கடந்த ஆண்டு ஜெட்டாவை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவில் தனது முதல் வங்கி கிளையை அகமதாபாத்தில் தொடங்குவதாக அறிவித்தது. இதற்கு சில அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
 ஆனால், உலக அளவில் இஸ்லாமிய வங்கி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், 2008ம் ஆண்டு இறுதியில் நிதித்துறை சீர்திருத்த குழு தலைவராக இருந்தபோது, வட்டியில்லா வங்கி தொடங்குவது பற்றி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.   இந்நிலையில், இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி (ஷரியத் வங்கி) தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தற்போது ஆராய்ந்து வருகின்றன. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி செயல் இயக்குநர் தீபக் மொஹந்தி நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள், வட்டியில்லா வங்கிச்சேவை வழங்க முன்வரவேண்டும் என பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2009ல் 36 நாடுகளில் இயங்கிய இஸ்லாமிய வங்கிகள், தற்போது 70 நாடுகளுக்கு மேல் விரிவடைந்துள்ளன.

ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை: Aug 31 2016 on 8:07 PM

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. புதிய ரே‌ஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ அளவில் வழங்கப்பட உள்ளது.
இதனால் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 2017 ஜனவரி முதல் புதிய ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
ரே‌ஷன் கடைகளில் நவீன விற்பனை எந்திரம் (பாயிண்டஸ் ஆப் சேல்) அமைக்கப்பட்டு அதில் குடும்ப அட்டைதாரர்களின் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் விவரம், செல்போன் எண், சிலிண்டர் எண்ணிக்கை போன்றவற்றோடு ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.
குடும்ப அட்டை எண் முதல் அனைத்து விவரங்களும் அந்த கருவி மூலமாக கடை ஊழியர் பதிவு செய்வார். ஆதார் அட்டையை அக்கருவி ஸ்கேன் செய்து கொள்ளும்.
இந்த பணி இதுவரையில் 13 மாவட்டங்களில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான அளவில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் 23 ரே‌ஷன் கடைகளில் மட்டும் பரீட்சார்ந்த முறையில் தொடங்கப்பட்டது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தகவல்கள் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. தென் சென்னையில் 6-ந்தேதியும், வட சென்னையில் 7-ந்தேதியும் தொடங்குகிறது. 2 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நவீன கருவி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைகளின் விவரமும் பதிவு செய்யப்படும்.
இந்த பணி தொடங்குவதற்கு முன்பாக நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து ரே‌ஷன் கார்டு விவரங் களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கள் ஆலோசனை வழங்கு கின்றனர்.
இந்த பணி 2 மாதம் வரையும் நடைபெறும். நவம்பர் 1-ந்தேதி ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கும். டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கார்டுகள் தயாராகிவிடும். ஜனவரியில் இருந்து பயன்படுத்த கூடிய வகையில் பழைய கார்டுகளை பெற்றுக் கொண்டு புதிய கார்டு வழங்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் நவீன கருவி மூலம் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி இந்த பணி தொடங்குகிறது. வழங்கல் பதிவேட்டில் உள்ள குடும்ப அட்டை விவரங்களை ரே‌ஷன் கடை ஊழியர் இந்த கருவியில் முதலில் பதிவு செய்துவிடுவார்.
அதன் பின்னர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் போது குடும்ப தலைவரிடம் சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்டு பதிவு செய்யப்படும்.
அடுத்த முறை கடைக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டு வந்து பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு ரே‌ஷன் கடையிலும் தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைகள் விவரம் பதிவு செய்யப்படும்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருந்தாலும் பதிவு செய்யலாம். ஒரு மாதம் இந்த பணி நடைபெறும். அதன்பிறகும் பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது ‘பில்’ வழங்கப்படாது. அந்த கார்டை கருவியில் காட்டினால் போதும் அவர்களுக்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
பொருட்கள் வழங்குவது குறித்த தகவல் உடனடியாக குடும்ப தலைவர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். செல்போனில் வந்த தகவலை காண்பித்து தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்க்ரீன் லாக் ஆன பின்னரும் யூடியூப் வீடியோ தொடர வேண்டுமா? இதை படியுங்கள்


              கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் யூடியூப் ஆப் உள்ளது. ஆனால் இந்த ஆப்களில் ஸ்க்ரீன் லாக் செய்தால் உடனே யூடியூப் வீடியோவும் ஆஃப் ஆகிவிடும். வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டுமானால், ஸ்க்ரீன் லாக் செய்யாமல் இருக்க வேண்டும்
 
இதை தவிர்க்க முடியாமல் பலர் அவஸ்தையில் உள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இதற்கொரு தீர்வு கிடைத்தது. இதற்காகவே 'யூடியூ ரெட்' அறிமுகம் செய்யப்பட்டுள்ள்து. இப்போதைக்கு யூடியூப் ரெட் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி இதற்கு கட்டணமும் உண்டு
சரி நம்மூரில் இதுமாதியான பிரச்சனைகளை சமாளிப்பதற்கு என்ன வழி? அதற்கும் ஒரு சுலபமான வழி உள்ளது. 
1. நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆப்ஸை டவுன்லோடு செய்ய வேண்டும்
2. ஃபயர்பாக்ஸ் ஆப்ஸை டவுன்லோடு செய்த பின்னர் அதன் மூலம் யூடியூப் இணையதளத்திற்கு செல்லவும்
3. நீங்கள் விரும்பும் வீடியோ ஒன்றை தேர்வு செய்து அதை ஓடவிடவும்
4. இப்பொழுது நீங்கள் உங்கள் ஆப்ஸை விட்டு வெளியே வந்தாலும், ஸ்க்ரீன் லாக் செய்தாலும் தொடர்ந்து நீங்கள் தேர்வு செய்த வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். நீங்களாக ஆப் செய்தால்தான் ஆப் ஆகும். என்ன இந்த பிரச்சனைக்கு சுலபமான வழி கிடைத்துவிட்டதல்லவா! உடனே இதை பின்பற்றவும்

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள் - ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!

        
           சில வருடங்களாக ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல வகையான பால்களை ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆரோக்கியமற்றது அல்லது உடல் எடை அதிகரிக்க செய்யும் என்ற காரணத்தால் நாம் அதிகம் பயன்படுத்த தயங்கும் கொழுப்பு நீக்கப்படாத பால் தான் ஆரோக்கியமானது என கண்டறியப்பட்டது.
மேலும், கொழுப்பு நீக்கப்பட்டு விற்கபடும் ஸ்கிம்டு மில்க் எனும் பால் வகை தான் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகள் / கோளாறுகளுக்கு காரணியாக விளங்குகிறது என்பதையும் இந்த ஆய்வில் ஹார்வர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வைட்டமின் சத்துக்கள் உடலில் சீராக இருக்க செய்கிறது.
குடல் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கிறது.
மிகுதியான கால்சியம் சத்து அளிக்கிறது.
எலும்புகளின் வலிமையை ஊக்கப்படுத்துகிறது.

கொழுப்பு நீக்கப்படுவதால் இதில், கொழுப்பின் அளவு குறைவாக இருப்பினும், சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. இந்த வகை சர்க்கரை உடல் பருமன், எளிதாக நோய் தொற்று ஏற்படுதல் போன்றவைக்கு காரணியாக இருக்கிறது.

ஸ்கிம்டு மில்க் என்ற பெயரில் தனியாக பதப்படுத்தி விற்கபடும் பால்களும் இருக்கின்றன. இவை ஆர்கானிக் என்ற பெயரில் விற்கப்படுகிறது. ஆனால், இதில் ட்ரான்ஸ் கொழுப்பு சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை ஆகும்.
இப்போது, கொழுப்பு நீக்கப்பட்டு, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி போன்ற பல வகை ஃப்ளாவர்கள் சேர்த்து குழந்தைகளை கவரும் வகையிலும் பால்கள் விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் பதப்படுத்தி விற்கப்படும் பால் வகைகள் ஆகும்.
இதில் சேர்க்கப்படும் சர்க்கரை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பலவகையிலான உடல்நல பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் ஏராளம்.
உண்மையில் தூய்மையான பசும்பால் தான் சிறந்தது. இதில் இருக்கும் மூலப்பொருட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக (antibiotics) செயல்படுகின்றன. புற்கள், காய்கறிகள் சாப்பிட்டு ஆர்கானிக் முறையில் வளர்ந்த பசுமாட்டின் பால் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நாம் உடல்நலனுக்கு நல்லது என்று நம்பி வாங்கும் பொருட்கள் சில தான் உண்மையில் உடல்நலனை சீர்குலைந்து போக செய்கிறது. எனவே, இனிமேல் எந்த ஒரு உணவு பொருள் வாங்குவதாக இருப்பினும், அதை பற்றி சிறிதளவு ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்.

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளை போக்கும் மல்லிகை பூ


       மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..
உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

Monday, 29 August 2016

அமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிரடியாக குறைப்பு:

துபாய்:

    அமீரகத்தில் செயல்படும் 39 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் அமீரக சுகாதார அமைச்சகம் நடத்திய முன்முயற்சி நடவடிக்கைகளின் விளைவாக 762 வகையான மருந்துகளின் விலைகள் சுமார் 2 சதவிகிதத்திலிலந்து 63 சதவிகிதம் வரை குறையவுள்ளது.
    657 மருந்து வகைகளின் மீது 2016 செப்டம்பர் மாதம் முதலும், எஞ்சிய 105 மருந்து வகைகளின் மீது 2017 ஜனவரி மாதம் முதலும் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருகின்றன. இந்த விலை குறைப்பு நடவடிக்கையால் 657 மருந்து வகைகளின் முந்தைய விலையிலிருந்து சுமார் 267 மில்லியன் திர்ஹம் தள்ளுபடி அளவுக்கான பயன்கள் ஏழைகளையும், நாட்பட்ட நோயாளிகளை சென்றடையும்.
   விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள முக்கிய நோய்களும் அதன் நிவாரணி வகைகளின் எண்ணிக்கையும்;
இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் 135 மருந்து வகைகள்
மத்திய நரம்பு சார் நோய்கள் 115 மருந்து வகைகள்
தொற்று நோய்கள் 84 மருந்து வகைகள்
சுவாசக் கோளாறு பிரச்சனைகள் 72 மருந்து வகைகள்
நாளமில்லா சுரப்பி சம்பந்தப்பட்டவை 59 மருந்து வகைகள்
மகப்பேறு, பெண்கள் மற்றும் சிறுநீர் பாதை கோளாறுகள் 35 மருந்து வகைகள்
தோல் நோய் 35 மருந்து வகைகள்
இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் 32 மருந்து வகைகள்
  என மக்கள் அதிகம் சந்திக்கும் உபாதைகளுக்கான மருந்து விலை குறைப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று
வாழ்த்துக்கள்
Source: Emirates 247

துபாயில் பழைய துணிகளை சேகரித்து கின்னஸ் சாதனை: துனையாக நின்ற தமிழ் நிறுவனத்திற்கு விருது:

துபாய் :

 துபாயில் உபயோகித்த துணிமணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.
    துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது.
   இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் டேலண்ட் சோன் இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சன்யோ தப்னே பல்லிகர் கூறியதாவது :
    அமீரகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உபயோகித்த துணிகள் அதிகமாக தேங்கி வருகிறது. ஒவ்வொருவரின் வீடுகளிலும் இது இருந்து வருகிறது. எனினும் சிலருக்கு இதனை எங்கு கொடுப்பது என தெரிவதில்லை. இதனால் கடந்த ரமலான் மாதத்தில் உபயோகித்த துணிகளை சேகரிக்கும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த பணியில் தங்களது கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து பழைய துணிகளை சேகரிக்க உதவினர்.
    இந்த துணிகள் அனைத்தும் நன்றாக துவைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாதாரண முறையில் தொடங்கப்பட்ட பணியானது தற்போது உலக சாதனையாக உருவெடுத்துள்ளது. இந்த துணிகள் சேகரிப்பின் மூலம் 295,122 துணிகள் சேகரிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக இது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட துணிகளை விட அதிகமாகிவிட்டதால் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்க தேர்வு செய்யப்பட்டது.
   இந்த பணியில் எங்களது நிறுவனமும் ஈடுபட்டதால் எங்களுக்கு அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    இந்த பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. வரும் ஆண்டிலும் மிகவும் பெரிய அளவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Sunday, 28 August 2016

இந்தியருக்கு நாடுகள் கடந்து உதவமுன்வந்தார் பஹ்ரைன் மன்னர்.

பஹ்ரைன்:

  இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இறந்த தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற செய்தி உலகையே உலகியது.
   இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் Khalifa_bin_Salman_Al_Khalifa முன்வந்துள்ளார்.
  அவரது செய்திக்குறிப்பில்:
     இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் #தனா_மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
       பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு நாடுகடந்த  மனிதநேய உதவி கிடைக்கும்.
  

ஒட்டுநர் உறவுகள் கவணம் சாலை விதிகளை மீறவேண்டாம்;ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா சாலைகள்:

துபாய்:

ஒட்டுநர் உறவுகள் கவணம் சாலை விதிகளை மீறவேண்டாம்;ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா சாலைகள்:
     அமீரகத்தில் பொதுவாகவே அலுவலகம் செல்லும் காலை நேரங்கள் நெரிசல் மிகுந்தவை ஒட்டுனர்களின் பொறுமையை சோதிப்பவை. அதிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டால் நத்தை வேகம் நிச்சயம். இதற்கு அமீரகத்தின் எந்தப் பகுதியும் விதிவிலக்கல்ல.
     அலுவலகம் செல்லும் நேரமும் பள்ளிக்கூடம் செல்லும் நேரமும் ஒன்றாக இருப்பதால் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய ஷார்ஜா போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரங்களில் ஷார்ஜாவில் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை அறிந்து களையும் நோக்கில் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் கண்காணித்து இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள 60 சிறப்பு ரோந்துக் காவல் வாகனங்கள் மூலம் நிலைமையை உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    5 போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஷார்ஜாவில் அதிக நெரிசல் காணப்படும் இன்டஸ்ட்ரியல் ஏரியாக்கள் போன்ற பகுதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளன.
Source: Emirates 247

 WhatsApp பயனாளர்களுக்கு எச்சரிக்கை! இனி வாட்ஸ் அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்?


கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy-ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது.இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது நாம் அனைவரும் அறிந்ததே! எனவே வாட்ஸ் அப் குறித்த முடிவுகளையும், அதன் parent company-யான பேஸ்புக்தான் எடுக்கும். குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, பேஸ்புக்கில் இனி உங்களுக்கு மிகவும் தொடர்புள்ள, நீங்கள் விருப்பம் காட்டும் வணிக விளம்பரங்கள் வரவிருக்கின்றன. அவற்றை சந்திக்கத் தயாராக இருங்கள்!
2.நீங்கள் தாரளாமாக இந்த மொபைல் எண் பரிமாற்றத்தை தடுக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, வாட்ஸ்அப்பை அன்-இன்ஸ்டால் செய்வது மட்டுமே! ஆம். இந்த புதிய நிபந்தனைக்கு நீங்கள் அனுமதி தரவில்லையெனில், இன்னும் 28 நாட்களுக்குப் பிறகு நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
3.உங்களது மொபைல் எண்ணை பேஸ்புக்கிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப் போவதாக வாட்ஸ்அப் மூலம், பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் எண், விளம்பர நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படாது எனக் கூறியுள்ளது.
4.பேஸ்புக்கின், தரத்தை மேம்படுத்தி உங்களுக்குத் தேவையான விளம்பரங்களை காட்டுவது, சரியான Friend suggestions கொடுப்பது போன்றவற்றிற்காக மட்டுமே, இந்த ‘ஷேரிங்’ என்கிறது வாட்ஸ்அப். அத்துடன் போலியான விளம்பரங்கள் நிச்சயம் வராது என உறுதியளித்துள்ளது.
5.அப்போ, இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் வருமா என சந்தேகம் வரலாம். ஆனால் “இந்த முடிவு பேஸ்புக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்டது. வழக்கம் போலவே வாட்ஸ் அப்பில் விளம்பரங்கள் காட்டப்படாது” என்கிறது அந்நிறுவனம்.

6.நமது பல பெர்சனல் தகவல்கள் வாட்ஸ்அப்பில்தான் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் வாட்ஸ்அப் பகிர்ந்து கொள்ளாதாம். உங்களது வாட்ஸ்அப் மொபைல் எண், உங்கள் மொபைலின் OS விவரம் மற்றும் கடைசியாக வாட்ஸ்அப் பயன்படுத்திய விவரம் ஆகியவை மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சொந்த விஷயங்கள் வழக்கம் போலவே யாராலும் பார்க்க முடியாத படி encrypt செய்யப்பட்டிருக்கும்.
7.வாட்ஸ் அப்பில் இருக்கும் நீங்கள், பேஸ்புக்கில் இல்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களை பேஸ்புக் இன்ஸ்டால் செய்யசொல்லி, வாட்ஸ்அப் கட்டாயப்படுத்தாது. ஆனால் ஒரே மொபைல் எண் கொடுத்து, இரண்டையும் ஒரே போனில் பயன்படுத்தி வந்தால், இரண்டும் தானாக இணைக்கப்பட்டு விடும்.
8.வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.

9.இதை ஓரளவு தடுக்க, வாட்ஸ் அப்பிற்கென ஒரு மொபைல் நம்பரையும், ஃபேஸ்புக்கிற்கென மற்றொரு மொபைல் நம்பரையும் தர வேண்டும். இப்படி செய்யும் போது, அந்த மொபைல் நம்பரின் மூலம் எடுக்கப்படும் விவரங்கள், ஃபேஸ்புக்கிற்கு பயன்படாது. 
சரி..நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? முதலில் உங்களுக்கு கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போன்ற செய்தி உங்கள் வாட்ஸ்அப்பில் காட்டப்படும். நீங்கள் உடனே ‘Agree’ கொடுத்துவிட்டால், உங்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஏற்கனவே நீங்கள் ‘Agree’ கொடுத்திருந்தால் பிரச்னை இல்லை.
 மீண்டும் உங்கள் வாட்ஸ் அப்பை திறந்து, ‘settings’-ல் இருக்கும், ‘Account’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் காட்டப்படும் ‘Share my account info’ என்னும் ஆப்ஷனின் அருகில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்து விடுங்கள். இப்போதைக்கு உங்கள் அக்கவுன்ட் தகவல் பேஸ்புக்கிடம் பகிரப்படாமல் இருக்கும். இல்லை இந்த மொபைல் எண் பரிமாற்றம் உங்களுக்கு, வேண்டாம் என்றால் தற்போது விட்டுவிடுங்கள்.
ஆனால் இன்னும் 28 நாட்களுக்குள் இதே அறிவிப்பு மீண்டும் உங்களுக்கு காட்டப்பட்டு, வாட்ஸ் அப் உங்களிடம் அனுமதி கேட்கும். அப்போதும் நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லையெனில்...மேலே இருக்கும் 2-வது பாய்ன்ட்டை படிக்கவும்!அவ்வளவுதான்! வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் உங்கள் தகவல் பறிபோகும் என நினைத்தால் மற்ற உடனடி தகவல் ஆப்ஸ்களாக ஹைக், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- வெ.வித்யா காயத்ரி,
(மாணவப் பத்திரிகையாளர்)

உடலில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு டேஸ்டி மில்க்.

                 
               பொருளாதார உழைப்பிற்கு உடல் தான் முதல் முதலீடு. அது ஆரோக்கியமாக இருந்தால்தான் நீங்கல் தெம்பாக செயல்பட முடியும். ஒரு தலைவலி வந்தால்கூட அன்று நாள் முழுவதும் போராட்டமாகத்தான் இருக்கும். நமது உடல் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனையை இன்னும் ஒருபடி மேல போய், பிரச்சனையே உடலாக இருந்தால், பாதி நேரம் இந்த பாதிப்புகளை சரி பண்ணுவதிலேயே முடிந்துவிடும். பின் எப்படி வேலையில் கவனம் செலுத்துவது.
ஆகவே உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமாய் நீங்கள் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் எவை தெரியுமா? மூளை, இதயம், கல்லீரல், மற்றும் சிறுநீரகம்.
இவை ஆரோக்கியமாக இருந்தால் உங்களால் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
மூளைக்கு நல்ல தூக்கத்தையும், இதயத்திற்கு கொழுப்பு குறைவான உணவையும், கல்லீரலுக்கு ஆரோக்கியமான உணவுகளையும், சிறு நீரகத்திற்கு நிறைய நீரையும் நாம் கொடுத்தால் அவற்றின் ஆரோக்கியம் எப்போதும் பலப்படும். இப்படி நான்கு உறுப்புகளுக்கும் பலம் தரும் ஒரு ஆரோக்கிய பானம் எது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
ஹெர்பல் பால் மிகவும் சத்து நிறைந்த , சுவை நிறைந்த ஒரு பால். இதில் நாம் அன்றாடம் குடிக்கும் பால் இருக்காது. தேங்காய்ப் பால், மஞ்சள், பட்டை , தேன் கலந்த இந்த பாலை தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் அகற்றிவிடும்.
நச்சுக்களை அகற்றும். இரைப்பை வியாதிகளை குணப்படுத்தும். சரும வியாதிகளை சரிபடுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். நுரையீரலை பலப்படுத்தும்.
தூக்கமின்மை வியாதியை குணபடுத்தும், தசைகளுக்கு வலிமை தரும். ஜீரண மண்டலத்தை வலிமையாக்கும். ஆர்த்ரைடிஸை குணமாக்கும். உணவு அலர்ஜியை தடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கும்.
தேவையானவை :
தேங்காய் பால் - 2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
இஞ்சி -பொடியாய் நறுக்கியது அரை ஸ்பூன்
பட்டைபொடி- அரை டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
மிளகுபொடி - ஒரு சிட்டிகை.
ஒரு பாத்திரத்தில் தேனை தவிர்த்து , தேவையான மற்ற அனைத்தையும் கலந்து கொதிக்கவிடவும். இது தங்க நிறமாக மாறும். கொதி வந்ததும் அதனை இறக்கி வெதுவெதுப்பான நிலையில் தேன் கலந்து குடிக்கவும்.

நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா?.


நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா?
என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்
குறிப்பு : சிலர் அவசர கெதியில் தக்பீர் கெட்டி நிமிர்ந்து நிற்காமல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே நிற்பர்,
ருக்கூ, பின்பு எழுந்து நிற்பது மற்றும் ஸுஜூதில் உடம்பில் உள்ள உருப்புகள் அதன் அதன் இடங்களில் அமைதி பெரும் வகையில் செய்யாமல் ஒழுங்கற்ற முறையில் செய்வார்கள் அவர்களுக்கு இது பொருந்தாது என்கிறார்கள், மருத்துவர்கள்.

Saturday, 27 August 2016

கொழும்புவில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் சில விமானங்கள் மூன்று மாதங்கள் ரத்து மற்றும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

இலங்கை :

      கொழும்புவில் உள்ள பண்டார நாயகே சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் ஜனவரி மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு   சென்னை, திருச்சி,  கொச்சின், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக  இலங்கை ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
    சிங்கப்பூர், மாலே ஆகிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களும் இந்த மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஜனவரி 6_ஆம் தேதி முதல் ஏப்ரல் 6_ஆம் தேதி வரை இந்த ரத்து அறிவிப்பு நடைமுறையில் இருக்கும். அதேபோல், இந்த காலகட்டத்தில் காலை 8.30 மணி முதல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என்று இலங்கை ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    அதேபோல், கொழும்புவில் இருந்து பெய்ஜிங், ஷாங்காய், பான்க்காங்,கோலாலம்பூர், திருவனந்தபுரம், புதுடெல்லி, கராச்சி, லண்டன், ஜெட்டா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:
தினத்தந்தி நாளிதழ்
https://m.facebook.com/story.php?story_fbid=1428936567122952&id=630553376961279

Friday, 26 August 2016

ரூ.1099 ரூபாய்க்கு அன்லிமிடெட் 3G-ஐ வழங்குகிறது BSNL!

   

      ”வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியதை அடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துவருகிறது. மேலும் தொலைதொடர்பு நிறுவனங்களில் ரூ.1,099 அன்லிமிடெட் 3 ஜி சேவையை வழங்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல்.தான்’ என்று, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
Reliance, Airtel, Vodafone போன்ற தனியார் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் அதிக சலுகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை அதிகரிப்பதால், அவர்களுடன் சந்தையில் இணையாக வளரும் விதமாக, அனைத்து இடங்களிலும் வலுவான டவர் ரேஞ்ச்சைக் கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் டேட்டா கட்டணங்களை 67% குறைத்துள்ளது. லேண்ட்லைனில் 49 ரூபாய்க்கு, தினமும் இரவு 9 முதல் காலை 5 வரையிலும், ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக அளித்தும் வருகிறது. தற்போது 1099 ரூபாய் அன்லிமிடெட் 3G வழங்குகிறது பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம்.

ஆண்களே! உங்க கருவளம் மேம்பட வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...


      ஆசியா மற்றும் இந்தியாவில் சாப்பிடப்படும் பழங்களில் ஒன்று தான் அத்திப்பழம். இந்த அத்திப்பழம் உலர்ந்த வடிவில் நிறைய கடைகளில் விற்கப்படுகிறது. உலர்ந்த வடிவிலான அத்திப்பழம் மில்க் ஷேக் மற்றும் லஸ்ஸியாகவும் தயாரித்து கடைகளில் விற்கப்படுகிறது.
அத்திப்பழம் எந்த வடிவில் இருந்தாலும், ஒரே அளவிலான சத்துக்களைத் தான் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பழம் ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு மற்றும் பல் சொத்தை ஏற்படும். ஆனால் அளவாக உட்கொண்டு வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இங்கு அத்திப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அத்திப்பழத்தை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் செரிமான பிரச்சனையே வராது. மேலும் இது மலமிளக்கியாக செயல்படுவதால், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும்.
அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம், உடலில் இரத்த அழுத்தத்தின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
ஆய்வு ஒன்றில் அத்திப்பழத்தில் உள்ள உட்பொருட்கள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்திப்பழம் இரும்புச்சத்தை உடலுக்கு வழங்கி, ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, இரத்த சோகை வரும் அபாயத்தைத் தடுக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ஸ்நாக்ஸாக அத்திப்பழத்தை உட்கொண்டு வந்தால், அது வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, வேகமாக உடல் எடை குறைய உதவும்.

அத்திப்பழம் இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள பெக்டின் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும் மற்றும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கும்.

நிறைய ஆய்வுகள் அத்திப்பழம் பாலுணர்ச்சி மற்றும் கருவளத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றன. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள மக்னீசியம், ஜிங்க் மற்றும் மாங்கனீசு சத்து தான் காரணமாகவும் கூறுகின்றன.

அத்திப்பழத்தில் கால்சியமும் உள்ளது. ஆகவே இப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள் வலிமை அடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா..? - அதிர்ச்சியோடு தெரிந்து கொள்ளுங்கள்...

     
        நீங்கள் அதிகம் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லவா?...
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?.
சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.
உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லை யென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தே கம் இருப்பின் இணை யத்தின் மூலமும் நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும்.
www.numberingplans.com என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்து வைத்துக் கொ ண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும். உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம்குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

Thursday, 25 August 2016

சமூகவலைதளங்களை கண்காணிக்க தமிழக அரசு திட்டம் !


    சமூக வலைதளங்களில் பயங்கரவாத குழுக்கள் செயல்படுவதைக் கண்காணிக்கும் வகையில், தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 
ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, அதிக அளவிலான பயங்கரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதால், அவற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, ரூ 32 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், சமூக வலைதளங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் வைத்துள்ள கணக்குகளையும், அவர்களின் பதிவுகளையும் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிகிறது.

கத்தாரில் பொது மன்னிப்பு பல்வேறு காரணங்களால் கத்தாரில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர் தாயம் திரும்ப மூன்று மாதங்கள் அனுமதி

கத்தார்:

கத்தாரில் பொது மன்னிப்பு பல்வேறு காரணங்களால் கத்தாரில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர் தாயம் திரும்ப மூன்று மாதங்கள் அனுமதி/Qatar announces three-month amnesty for illegal residents:
     கத்தார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ முகநூல் பக்க செய்தியில் கட்டார் நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Residency Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கத்தார் நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதட்கான பொது மன்னிப்பினை வழங்கவுள்ளதாக கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
    எதிர்வரும் 2016 செப்டம்பர் 1 முதல் 2016 டிசம்பர் 1 வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள் வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
   12 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான பொதுமன்னிப்புக் காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது . 2004 ஆம் ஆண்டு கட்டாரின் மொத்த ஜனத்தொகை எண்ணளவாக 650,000 இருந்த பொழுது இவ்வாறானதொரு பொதுமன்னிப்பினால் சுமார் 6,000 பேர் பயன் அடைந்தனர். எனினும், இவ்வருட ஏப்ரல் மாதக் கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2,560,000 பேரைக் கொண்டதாக மொத்த ஜனத்தொகை காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மேட்குறிப்பிடப்பட்ட சட்ட விரோத குடியிருப்பாளார்கள் Search and Follow up Department திணைக்களத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
   The Ministry of Interior (MoI) has announced a three-month amnesty for illegal residents to leave the country without facing any legal consequences of their overstay.
A first in 12 years and the third ever in Qatar, the grace period comes into force on September 1 and ends on December 1, 2016.
Foreigners who are residing in the country in violation of the provisions of Law No. 4 of 2009 Regulating the Entry, Exit, Residence and Sponsorship of Expatriates can exit the country without legal consequences, the MoI said on Wednesday through a post on its Facebook page.
"Illegal residents should contact the Search and Follow up Department to complete the exit procedures during the grace period," it said.
About 6,000 illegal residents had availed the scheme in the first three months between March 21 and June 20 during the last amnesty announced in 2004.
Later, the grace period was extended by one month until July 20, 2004, and more people had reportedly utilised the offer to go back to their home countries. Most of those illegal residents were either Asian or Arab expatriates.
There were some days when 200 or more people approached the authorities for assistance to leave the country. Queues of illegal expatriates were witnessed at the Search and Follow up Department office on Salwa Road during that period.
During the earlier amnesty scheme, the government had allowed those illegal residents who voluntarily surrendered and left the country to return two years after the day they exited the country, inquiries had found.
When the last amnesty scheme was in force the country' population was less than 650,000, whereas an all time high of 2.56 mn people were reported living in Qatar in April this year.
Most of the people who are overstaying their visa periods in Qatar are reported to be doing odd jobs in the country to make a living, and some of them are said to be able to save small amounts of money to be sent home for the sustenance of their family members.
Source :Gulf-times 24/08/2016
https://m.facebook.com/story.php?story_fbid=958808744245980&id=274209762705885

இனி விமானங்களில் இன்டெர்நெட் !


உள்நாட்டு விமானங்களில் வைஃபை சேவைக்கு விரைவில் அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவுபே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்நாட்டு விமான பயணத்தின் போது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு கருவிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது விமானத்துக்கு வரும் சிக்னல்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
இதை தளர்த்த மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், விமானங்களில் இன்டெர்நெட் பயன்படுத்தலாம்.

பிரான்ஸ் கடல்கரையில் பர்தாவோடு நின்ற முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த சோக நிலை..!


பிரான்சில் உள்ள நைஸ் நகரில் சில மாதங்கள் முன்னர் பாரிய தாக்குதல் இடம்பெற்று இருந்தது யாவரும் அறிந்த விடையம். முஸ்லீம் தீவிரவாதிகள் வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்து சரமாரியாக சுட்டுத் தள்ளிய கொடூரச் சம்பவம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை எனலாம்.
இன் நிலையில் நேற்றைய தின நைஸ் நகரில் உள்ள கடல்கரை ஒன்றில். முகத்தை மறைத்துக்கொண்டு பர்தா அணிந்துகொண்டு ஒரு பெண் அங்கே உட்கார்ந்து இருந்துள்ளார். இதனை அடுத்து, அருகில் இருந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தார்கள். சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க.
அங்கே விரைந்து வந்த ஆயுதப் பொலிசார், உடனடியாக பர்தாவை களற்றுமாறு உத்தரவிட்டார்கள். வேறு வழி இன்றி அவர் உடனே தனது பர்தாவை களற்றினார். அவரை பரிசோதித்த பின்னர் பொலிசார் அங்கிருந்து விலகச் சென்றார்கள். இருப்பினும் குறிப்பிட்ட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என பிரான்ஸ் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் ஹஜ் யாத்திரையின் ஜமாரத்@ சாத்தான் மீது கல் எறியும் நேரம் 12 மணி நேரமாக குறைப்பு!


 
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 25
ஹஜ் யாத்ரீகர்கள் ஜமாரத் எனும் ஷைத்தானுக்கு கல்லெறியும் சமய சடங்கை பாதுகாப்புடன் நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன்படி முறைப்படுத்தப்பட்ட நேரங்களில் ஹஜ் யாத்திரை குழுக்கள் கல்லெறிய அனுமதிக்கப்படுவர் என்றாலும் கீழ்க்காணும் தினங்களில் குறிப்பிட்ட நேரத்தில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஹஜ், உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.
துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள்: காலை 6 மணி முதல் காலை 10.30 மணி வரை.
துல்ஹஜ் பிறை 11 ஆம் நாள்: பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை.
துல்ஹஜ் பிறை 12 ஆம் நாள்: காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை.
ஹஜ் யாத்ரீகர்கள் முறைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட தடத்தில் அனுமதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புனித கஃபத்துல்லாஹ்வில் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்கு முன்னும் பின்னும் ஒரு மணி நேரம் "தவாஃப் அல் குதூம்" செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஹஜ் யாத்ரீகர்கள் புனிதப் பள்ளிக்குள் நுழையும் போது இஹ்ராம் ஆடையுடனும், கை பட்டியுடனும், அடையாள அட்டைகளுடனும் இருக்க வேண்டும் எனவும் இவற்றை 90 முதவாக்கள் (mutawwifs ) 3 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Arab News

Tuesday, 23 August 2016

இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வற்புறுத்தியவர்கள் கைது.


        விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு, இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்ததாக 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் விநாயகர் மண்டல் என்ற அமைப்பினர் போசாரி பகுதியில் உள்ள பேக்கரியில் 151 ரூபாய் நன்கொடை கேட்டுள்ளனர். நன்கொடை தர மறுத்ததால் கடையில் இருந்த 4 ஊழியர்களை  தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். அவர்கள் தோப்புக் கரணம் போட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் 3 பேர் கைதாகியுள்ளனர்.

தந்தை இறந்துவிட்டால்வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட்வழங்கலாம் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

மதுரை :

   தந்தை இறந்து விட்டால், வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிஜிஸ் ஆர்சிபால்டு என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவருடைய தந்தை ஆலிவர் சமர் கடந்த 2000 ஆண்டு இறந்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவருடைய தாயார் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்போர்ட்டில் இறந்த தந்தையின் பெயருக்கு பதில் வளர்ப்பு தந்தையின் பெயரை ஏற்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மறுத்துவிட்டதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
    இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வளர்ப்பு தந்தையின் பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம் என கூறி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 7வது இடம் !

பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 7வது இடம் !

உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. தென்னாப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு தனிநபர் சொத்து மதிப்பின் அடிப்படையில் நடத்திய ஆய்வில்  உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் (அமெரிக்க டாலரில்) :
அமெரிக்கா 48,900 பில்லியன்
சீனா 17,400 பில்லியன்
ஜப்பான் 15,100 பில்லியன்
பிரிட்டன் 9,200 பில்லியன்
ஜெர்மனி  9,100  பில்லியன்
பிரான்ஸ் 6,600 பில்லியன்
இந்தியா 5,600  பில்லியன்  (ரூ. 375704 கோடி)
கனடா 4,700 பில்லியன்
ஆஸ்திரேலியா  4,500 பில்லியன்
இத்தாலி  4,400 பில்லியன்

செப்டம்பர் 25-ந்தேதிக்குள் நாடு திரும்புங்கள் !

செப்டம்பர் 25-ந்தேதிக்குள் நாடு திரும்புங்கள் !

சவுதியில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள் செப்டம்பர் 25ந்தேதிக்குள் நாடு திரும்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்..
இந்தியர்களின் பயணச்செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பள பாக்கித்தொகையை பெற்றுத்தர அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும், பாக்கித்தொகை தொடர்பான விவரங்களை தூதரகத்தில்  தெரியப்படுத்த   சுஷ்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 25ந்தேதிக்கு முன்னதாக நாடு திரும்பாதவர்கள், இருப்பிடம், உணவு உள்ளிட்டவைகளை தங்கள் சொந்த செலவில் பார்த்துக்கொள்ளுமாறும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி :

 முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட உயர்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்..
1. பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் IES-ல் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
2. ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும்  100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
3.  உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும்.
4. மதுரையில் உள்ள தமிழ்நாடு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இங்கு ஆண்டொன்றுக்கு 100 பேருக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
5. கோவை மேட்டுப்பாளையம், சென்னை பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்
6. அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைவுக் கல்லூரிகள் மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு
பலவித சேவைகள் வழங்கப்படும்.
7. அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம் ஒன்று மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும்.
8. 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
9. அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். காப்பீடு உரிமை சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும்
காப்பீடு உரிமை பெற தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம்ஒருங்கிணைக்கும்.
10. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்டு வரும் கல்விச் சேவையை மாணவர்கள் எளிதில் பெறும் பொருட்டும், நீண்ட தூரம் பயணம்
செய்வதைத் தவிர்க்கவும், இரண்டு புதிய மண்டல மையங்கள் விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
11. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த B.A.,B.Ed. / B.Sc.,B.Ed. பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
12. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாணவர்களுக்கு மழை கவசம் !விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட பள்ளி கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்.


மாணவர்களுக்கு மழை கவசம் !

விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட பள்ளி கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்..
1. நடப்பாண்டில் 5 புதிய தொடக்க பள்ளி, 3 தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், 19 நடுநிலைப்பளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
2. நடப்பாண்டில் ரூ. 60.79 கோடி மதிப்பில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்
3. சென்னை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் பகுதியில் தலா ஒரு தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்லி தொடங்கப்படும்
4. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , விழுப்புரம், வேலுற், கடலூர், நாகை, தஞ்சை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்படும்.
5.  மலைப்பகுதிகளில்  8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள் வழங்கப்படும்
6. மாணவர்களுக்கு வரைபட பயிற்சி தாள்,  கணித உபகரண பெட்டிகள் , அறிவியல் உபகரண பெட்டிகள், வாசிப்பு திறன் மேம்பாட்டு புத்தகங்கள் வழங்கப்படும்.
7. நடுநிலை பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினி வழி கற்றல் மையம் உருவாக்கப்படும்
8. அறிவியல், கணித பாடங்களை எளிமையாக பயில அசைவூட்ட காணொலி தொகுப்புகள் வழங்கப்படும்
9. மாணவர், ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி அறிமுகப்படுத்தப்படும்
10. மாணவர்கள் புதிய முறையில் கல்வி
கற்பதற்கு ஏதுவாக வகுப்பறையில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச்
சுவர் சித்திரங்கள் வரையப்படும்.
11. தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக்
கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக்
கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள்  ஏற்படுத்தப்படும்.
12.  நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

பித்தப்பை கற்கள் இருந்தால் மற்றொரு அபாயமும் உண்டாகும்! அது என்ன?


கல்லீரலுக்கு அடியில் இருக்கும் ஒரு சிறிய உறுப்புதான் பித்தப்பை, பித்தப்பையில் சுரக்கும் அடர்த்தி மிகுந்த மஞ்சள் மற்றும் பிரவுன் கலந்த நிறத்திலிருக்கும் பைல் என்ற என்சைம் உணவிலுள்ள கொழுப்பை பிரித்து ஜீரணத்தை உண்டாக்குகிறது.அதோடு அதனை கல்லீரலுக்கும் வளர்சிதை மாற்றம் நடக்க அனுப்புகிறது.
அதோடு கொழுப்பில் கரையும் விட்டமின்கள் பைல் மூலமாகத்தான் கல்லீரலுக்கு அனுப்பப்படுகிறது. சில சமயங்களில் அதிகப்படியான கொழுப்பு, பைல் உப்பு மற்றும் பிலிருபின் எல்லாம் கலந்து கெட்டியாக கற்களாக அங்கே மாறும். அதைத்தான் பித்தப்பை கற்கள் என கூறுவோம்.
சமீபத்திய ஆய்வில் பித்தப்பை கற்கள் இருந்தால், இதய நோய்கள் தாக்கும் அபாயமும் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
அதிகப்படியான உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் சர்க்கரை வியாதி ஆகியோருக்கு பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பித்தப்பை கற்கள் உண்டானால், அது பைல் சுரப்பையும் பாதிக்கின்றது. இதனால் கொழுப்பு ரத்தத்தில் அதிகரித்து இதயம் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
பித்தப்பையில் கற்கள் உருவாவதால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால் பலவித பிரச்சனைகள் உருவாகின்றன.
உடல்பருமன், ரத்தக் கொதிப்பு,கொலஸ்ட்ரால் ஆகியவையோடு பித்தப்பை கற்கள் இருக்கும் நோயாளிகளை விட, ஆரோக்கியமான வேறெந்த உடல் நிலை பிரச்சனைகளும் இல்லாமல், பித்தப்பை கற்கள் மட்டும் இருந்தால் அவர்களை இதய நோய்கள் அதிகம் தாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிகிறது.
பித்தப்பை கற்கள் மற்றும் இதய நோய்கள் தொடர்பாக மிகபரிய ஆராய்ச்சியை அமெரிக்காவிலுல்ள டுலானே பல்கலைக் கழகம் செய்து முடித்துள்ளது. கிட்டத்தட்ட 7 விதமான இதய நோய் மற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் பித்தப்பை மற்றும் இதயம் தொடர்பாக 3 விதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.

சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உடனே தாயகம் திரும்புமாறு சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள


      புதுடெல்லி, சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உடனடியாக இந்தியா திரும்பும் மாறு மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமே எண்ணெய் வளம்தான். கச்சா எண்ணெயின் விலை மதிப்பை வைத்தே இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால் இந்த நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவ்வாறு வேலையும், சம்பளத்தையும் இழந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர். உணவின்றிப் பரிதவித்த அவர்களுக்காக இந்திய தூதரகம் சார்பில் சவுதி முழுவதும் 20 முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பத்திரமாக இந்தியா அழைத்து வருவது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த மாத தொடக்கத்தில் சவுதி சென்றார். அவரது முயற்சியால் கடந்த 12-ம் தேதி 26 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்நிலையில் அமைச்சர் வி.கே.சிங் 2-வது முறையாக கடந்த புதன்கிழமை சவுதி சென்றார். ஆனால், பாதிக்கப்பட்டோர், ‘வெறும் கையுடன் நாங்கள் நாடு திரும்ப முடியாது. எங்கள் வேலைக்கான சம்பளத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதுவரை சவுதியில் இருந்து வெளியேறமாட்டோம்’ என்று தெரிவித்தனர். இந்நிலையில் டுவிட்டரில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: “உங்களது கோரிக்கைகளை தூதரகத்தில் பதிவு செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புங்கள். உங்கள் பயணச் செலவுகளை அரசு ஏற்கும்.. சவுதி அரசு உடனான நிறுவனங்களின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீண்டு கொண்டிருப்பதால் அங்கு காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மூடப்பட்ட நிறுவனங்களுடனான சவுதி அரசின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு உங்கள் அனைவரது சம்பள நிலுவை பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, 22 August 2016

250 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்குகிறது Aitel-Samsung பார்ட்னர்ஷிப்.


Samsung Galaxy J series ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 GB 4G டேட்டா வழங்குவதாக Airtel நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏர்டெல் ஃப்ரீபெய்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின்படி, Airtel வாடிக்கையாளர்கள் 10 ஜிபி 4ஜி டேட்டா பயன்படுத்த ரூ.250 செலுத்தினால் போதும்.
அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட Samsung Galaxy J series ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் Airtel நிலையங்களில் அல்லது www.offers.airtel.com என்ற இணைய முகவரியில் Log in செய்வதன் மூலம் சலுகையைப் பெற முடியும்.
இந்த சலுகையைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள Airtel மார்க்கெட்டிங் செயலக இயக்குநர் அஜய் புரி, “இந்த பார்ட்னர் ஷிப், ஏர்டெல்லின் 4G அனுபவத்தை மக்களிடத்தில் பரவலாக்கும் என நம்புகிறோம்”எனத் தெரிவித்துள்ளார். 
ஏர்டெல் 3G இண்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவோருக்கு 10 GB 3G டேட்டா வழங்கப்படுகிறது. இதில், 1 GB பகலிலும் 9 GB இரவிலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழுக்கு நீரை வெறும் 20 நிமிடங்களில் சுத்தமான நீராக்கும் அதி நவீன சாதனம்


சம காலத்தில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக விரைவில் உலக நாடுகளில் குடிநீருக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படியிருக்கையில் பூமியில் உள்ள நீரில் குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அளவு நீரானது வெறும் 3 சதவீதம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏனைய நீர் வகைகளை சுத்தம் செய்து குடி நீராகப் பயன்படுத்தும் அவசியம் எதிர்காலத்தில் உண்டாகும்.
இதனை செய்வதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ் ஆராய்ச்சிகளின் பயனாக தற்போது அதி நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இச் சாதனமானது வெறும் 20 நிமிடங்களில் பாக்டீரியாக்கள் உட்பட ஏனைய மாசுக்களையும் நீக்கி 99.99 சதவீதம் சுத்தமான குடி நீரை தரவல்லது.
இதனை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிறிய சதுர வடிவான கறுப்பு நிற குவளை போன்ற இந்த சாதனம் சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் கண்ணுக்கு புலப்படக்கூடிய ஒளிக் கதிர்களின் சக்தியைப் பயன்படுத்தி நீரை சுத்தம் செய்கின்றது.

இந்த அறிகுறிகள் உங்க சிறுநீரகம் மோசமான நிலையில் உள்ளதைத் தான் குறிக்கிறது என்று தெரியுமா?

   
   உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் சிறுநீரக ஆரோக்கியம் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் மற்றும் தினமும் 10-150 குவாட்ஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது.
மேலும் சிறுநீரகம் உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், எலக்டோலைட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்யும்.
இவ்வளவு முக்கிய பணிகளைச் செய்யும் சிறுநீரகம் சரியாக இயங்காமல், நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டால், அதனால் உயிரை இழக்கவும் நேரிடும்.
சரி, இப்போது சிறுநீரகம் மோசமான நிலையில் இருந்தால் தென்படும் அறிகுறிகள் குறித்து காண்போம்.
சிறுநீர் கழிக்கவே முடியாமல் தவிப்பது, நுரையுடனான சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது போன்றவை சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படாமல் தேங்கி, உடலில் ஆங்காங்கு வீக்கத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
சிறுநீரக கோளாறு இருந்தால், இரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, அதனால் வாய் துர்நாற்றம் அல்லது சுவையில் மாற்றத்தை உணரக்கூடும். சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், அவர்களால் உணவின் சுவையை உணர முடியாமல் இருப்பதோடு, பசியின்மையால் அவஸ்தைப்படுவார்கள்.

இன்னும் சில நேரங்களில், சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடலில் உள்ள செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடல் மிகுந்த சோர்வடையும். இது அப்படியே நீடித்தால், அதனால் இரத்த சோகையால் கூட பாதிக்கப்படக்கூடும்.
மேல் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதனால் மூச்சுவிடுவதில் கூட சிரமத்தை உணர நேரிடும்.
சிறுநீரகம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருந்தால், இரத்த சோகை முற்றி, அதனால் எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போய், தலை பாரம், தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.
சிறுநீரகம் சரியாக இயங்காமல் இருந்தால், சிறுநீரகங்களில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கக்கூடும். எனவே சருமத்தில் அரிப்பு கடுமையாக இருந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதை கவனியுங்கள்.

நலம் தரும் நிலவேம்பு

   
    சித்த மருத்துவத்தில் ஆண்டாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியபோது, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது நிலவேம்பு. சிறு செடி வகையைச் சேர்ந்த இதற்கு, காண்டம், காண்டகம், கோகனம், கிராதம் போன்ற பல பெயர்கள் உள்ளன.  நிலவேம்பில் சீமை நிலவேம்பு, நாட்டுநிலவேம்பு என இரண்டு வகைகள் உள்ளன. சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. 
*நிலவேம்பின் எல்லா பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையவைதான். எனினும், இலையும் தண்டும் அதிக அளவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 
*வாதசுரம் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல், நீர்க்கோவை, மூக்கடைப்பு ஆகியவற்றைப் போக்கும் ஆற்றல் நிலவேம்புக்கு உண்டு.  நிலவேம்பு  இலையைப் பொடித்து, 15 கிராம் எடுத்து, இதனுடன், கிச்சிலித்தோல், கொத்தமல்லி தலா சுமார் 200 மி.கி சேர்த்து, வெந்நீரில் கலக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து, வடிகட்டி 15  - 30 மி.லி அளவுக்கு நாள்தோறும் இரண்டு மூன்று முறை குடித்துவர, நிவாரணம் கிடைக்கும்.
*நிலவேம்புச் செடியை முதன்மை பொருளாகக்கொண்டு சித்தமருத்துவத்தில் தயாரிக்கப்படும் நிலவேம்புக் குடிநீர், டெங்கு காய்ச்சல் மற்றும் மூட்டுக்களைப் பாதித்து, தாங்கமுடியாத வலியை உண்டாக்கும் சிக்குன்குனியா ஆகிய இரண்டு காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து. 
*டெங்கு சுரம், சிக்குன்குனியா மற்றும் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு, அவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது நிலவேம்புக் குடிநீர் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 
*நிலவேம்பைப் பொடித்து, 34 கிராம் எடுத்து, 700 மி.லி வெந்நீரில் கலந்து, கிராம்புத்தூள், கருவாப்பட்டைத்தூள், ஏலப்பொடி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நான்கு கிராம் கலந்து, சுமார் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் 15-30 மி.லி அளவுக்கு தினமும் பருகிவர, முறைசுரம், குளிர்சுரம், மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பு, அஜீரணம், வயிற்றுப்புழுக்கள் நீங்கி, உடலுக்கு வலிமை கிடைக்கும்.
*நிலவேம்பு இலையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, குடிநீர் செய்து, குடித்துவர கல்லீரல் தளர்ச்சி, நரம்புவலி, அஜீரணம், குடல் பொருமல் நீங்கும்.