Tuesday, 23 August 2016

பித்தப்பை கற்கள் இருந்தால் மற்றொரு அபாயமும் உண்டாகும்! அது என்ன?


கல்லீரலுக்கு அடியில் இருக்கும் ஒரு சிறிய உறுப்புதான் பித்தப்பை, பித்தப்பையில் சுரக்கும் அடர்த்தி மிகுந்த மஞ்சள் மற்றும் பிரவுன் கலந்த நிறத்திலிருக்கும் பைல் என்ற என்சைம் உணவிலுள்ள கொழுப்பை பிரித்து ஜீரணத்தை உண்டாக்குகிறது.அதோடு அதனை கல்லீரலுக்கும் வளர்சிதை மாற்றம் நடக்க அனுப்புகிறது.
அதோடு கொழுப்பில் கரையும் விட்டமின்கள் பைல் மூலமாகத்தான் கல்லீரலுக்கு அனுப்பப்படுகிறது. சில சமயங்களில் அதிகப்படியான கொழுப்பு, பைல் உப்பு மற்றும் பிலிருபின் எல்லாம் கலந்து கெட்டியாக கற்களாக அங்கே மாறும். அதைத்தான் பித்தப்பை கற்கள் என கூறுவோம்.
சமீபத்திய ஆய்வில் பித்தப்பை கற்கள் இருந்தால், இதய நோய்கள் தாக்கும் அபாயமும் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
அதிகப்படியான உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் சர்க்கரை வியாதி ஆகியோருக்கு பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பித்தப்பை கற்கள் உண்டானால், அது பைல் சுரப்பையும் பாதிக்கின்றது. இதனால் கொழுப்பு ரத்தத்தில் அதிகரித்து இதயம் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
பித்தப்பையில் கற்கள் உருவாவதால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால் பலவித பிரச்சனைகள் உருவாகின்றன.
உடல்பருமன், ரத்தக் கொதிப்பு,கொலஸ்ட்ரால் ஆகியவையோடு பித்தப்பை கற்கள் இருக்கும் நோயாளிகளை விட, ஆரோக்கியமான வேறெந்த உடல் நிலை பிரச்சனைகளும் இல்லாமல், பித்தப்பை கற்கள் மட்டும் இருந்தால் அவர்களை இதய நோய்கள் அதிகம் தாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிகிறது.
பித்தப்பை கற்கள் மற்றும் இதய நோய்கள் தொடர்பாக மிகபரிய ஆராய்ச்சியை அமெரிக்காவிலுல்ள டுலானே பல்கலைக் கழகம் செய்து முடித்துள்ளது. கிட்டத்தட்ட 7 விதமான இதய நோய் மற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் பித்தப்பை மற்றும் இதயம் தொடர்பாக 3 விதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment