செப்டம்பர் 25-ந்தேதிக்குள் நாடு திரும்புங்கள் !
சவுதியில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள் செப்டம்பர் 25ந்தேதிக்குள் நாடு திரும்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்..
இந்தியர்களின் பயணச்செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பள பாக்கித்தொகையை பெற்றுத்தர அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும், பாக்கித்தொகை தொடர்பான விவரங்களை தூதரகத்தில் தெரியப்படுத்த சுஷ்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 25ந்தேதிக்கு முன்னதாக நாடு திரும்பாதவர்கள், இருப்பிடம், உணவு உள்ளிட்டவைகளை தங்கள் சொந்த செலவில் பார்த்துக்கொள்ளுமாறும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment