Saturday, 27 August 2016

கொழும்புவில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் சில விமானங்கள் மூன்று மாதங்கள் ரத்து மற்றும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

இலங்கை :

      கொழும்புவில் உள்ள பண்டார நாயகே சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் ஜனவரி மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு   சென்னை, திருச்சி,  கொச்சின், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக  இலங்கை ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
    சிங்கப்பூர், மாலே ஆகிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களும் இந்த மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஜனவரி 6_ஆம் தேதி முதல் ஏப்ரல் 6_ஆம் தேதி வரை இந்த ரத்து அறிவிப்பு நடைமுறையில் இருக்கும். அதேபோல், இந்த காலகட்டத்தில் காலை 8.30 மணி முதல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என்று இலங்கை ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    அதேபோல், கொழும்புவில் இருந்து பெய்ஜிங், ஷாங்காய், பான்க்காங்,கோலாலம்பூர், திருவனந்தபுரம், புதுடெல்லி, கராச்சி, லண்டன், ஜெட்டா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:
தினத்தந்தி நாளிதழ்
https://m.facebook.com/story.php?story_fbid=1428936567122952&id=630553376961279

No comments:

Post a Comment