மும்பை:
இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்குவது பற்றி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆராய்ந்து வருகிறது. வட்டிக்கு வாங்குவதும் கொடுப்பதும் பாவச்செயல் என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு மதிப்பளித்து, இவர்களுக்கான வட்டியில்லா வங்கி தொடங்கப்பட வேண்டியது குறித்து ரிசர்வ் வங்கி தனது 2015-16 ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஜெட்டாவை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவில் தனது முதல் வங்கி கிளையை அகமதாபாத்தில் தொடங்குவதாக அறிவித்தது. இதற்கு சில அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
ஆனால், உலக அளவில் இஸ்லாமிய வங்கி குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், 2008ம் ஆண்டு இறுதியில் நிதித்துறை சீர்திருத்த குழு தலைவராக இருந்தபோது, வட்டியில்லா வங்கி தொடங்குவது பற்றி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி (ஷரியத் வங்கி) தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தற்போது ஆராய்ந்து வருகின்றன. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி செயல் இயக்குநர் தீபக் மொஹந்தி நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள், வட்டியில்லா வங்கிச்சேவை வழங்க முன்வரவேண்டும் என பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ல் 36 நாடுகளில் இயங்கிய இஸ்லாமிய வங்கிகள், தற்போது 70 நாடுகளுக்கு மேல் விரிவடைந்துள்ளன.
No comments:
Post a Comment