Friday, 26 August 2016

ஆண்களே! உங்க கருவளம் மேம்பட வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...


      ஆசியா மற்றும் இந்தியாவில் சாப்பிடப்படும் பழங்களில் ஒன்று தான் அத்திப்பழம். இந்த அத்திப்பழம் உலர்ந்த வடிவில் நிறைய கடைகளில் விற்கப்படுகிறது. உலர்ந்த வடிவிலான அத்திப்பழம் மில்க் ஷேக் மற்றும் லஸ்ஸியாகவும் தயாரித்து கடைகளில் விற்கப்படுகிறது.
அத்திப்பழம் எந்த வடிவில் இருந்தாலும், ஒரே அளவிலான சத்துக்களைத் தான் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பழம் ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு மற்றும் பல் சொத்தை ஏற்படும். ஆனால் அளவாக உட்கொண்டு வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இங்கு அத்திப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அத்திப்பழத்தை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் செரிமான பிரச்சனையே வராது. மேலும் இது மலமிளக்கியாக செயல்படுவதால், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும்.
அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம், உடலில் இரத்த அழுத்தத்தின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
ஆய்வு ஒன்றில் அத்திப்பழத்தில் உள்ள உட்பொருட்கள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்திப்பழம் இரும்புச்சத்தை உடலுக்கு வழங்கி, ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, இரத்த சோகை வரும் அபாயத்தைத் தடுக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ஸ்நாக்ஸாக அத்திப்பழத்தை உட்கொண்டு வந்தால், அது வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, வேகமாக உடல் எடை குறைய உதவும்.

அத்திப்பழம் இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள பெக்டின் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும் மற்றும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கும்.

நிறைய ஆய்வுகள் அத்திப்பழம் பாலுணர்ச்சி மற்றும் கருவளத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றன. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள மக்னீசியம், ஜிங்க் மற்றும் மாங்கனீசு சத்து தான் காரணமாகவும் கூறுகின்றன.

அத்திப்பழத்தில் கால்சியமும் உள்ளது. ஆகவே இப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள் வலிமை அடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

No comments:

Post a Comment